மன்மதன் 9
.
அத்தியாயம் : 9
அதன் படி ஒரு நாள் வனிதாவும் வெண்ணிலாவும் அவர்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து அரக்கப்பறக்க வெளியே வந்து சேர் ஆட்டோ ஏதாவது கிடைக்கிறதா என பார்த்து கொண்டு இருந்தனர்...
அவர்களின் கல்லூரி பறந்து விரிந்து இருப்பதால் கல்லூரி நிறுவனமே ஒரு நூறு ஆட்டோக்களை வாங்கி அதற்க்கு டிரைவர்களையும் நியமித்து இருந்தனர்..அவளது கல்லூரிக்கும் ஹாஸ்டலுக்கும் ஒரு தொலைவு என்றால் அவளது கல்லூரி நுழைவாயிலில் இருந்து அவளது வகுப்பிற்கு மிக தொலைவு வேறு..
அதனால் ஆட்டோக்காரர்கள் கல்லூரி நுழைவாயிலில் வரும் மாணவிகளை அவர்கள் டிப்பார்ட்மெண்ட் இருக்கும் பகுதிக்கு கூட்டி கொண்டு செல்வர்..
அப்படி இருக்க இவர்களின் சமயம் பார்த்து எந்த வண்டியும் கிடைக்க வில்லை , "சோத்து மூட்டை அந்த பொங்கலை வளிச்சு நக்கிட்டு இருக்காத சீக்கிரம் வா ன்னு சொன்னேன் கேட்டியா இப்போ பாரு புள்ள காலேஜ்க்கு எப்படி போக"... என்று வனிதாவை லெப்ட் ரைட் வாங்கி கொண்டு இருந்தாள் வெண்ணிலா..
"சும்மா இரு புள்ள எப்போவாச்சும் தான் அவங்க முந்திரி பருப்பு போடுறாங்க அதை விட சொல்றியா"... என கவலை இல்லாமல் வனிதா பதில் கூற , "உன்கிட்ட மனுசன் பேசுவானா".. என்று கூறி முகத்தை திருப்ப அதே நேரம் பார்த்து மனுவின் பைக் இவர்களை கண்டும் காணாதது போல கடந்து சீறி பாய்ந்து கொண்டு சென்றது ..
"ஹே வா டி ஆட்டோ கிடைக்கிற மாதிரி தெரியல நாம நடந்தே போவோம்"... என கூறிய வெண்ணிலா கல்லூரியை நோக்கி நடக்க தொடங்கினார்கள்..நடந்து கல்லூரி நுழைவாயிலை அடைந்தனர்..அதற்குள் இருவரும் வியர்த்து வழிந்து இருந்தனர்..
இருவருக்கும் முடியவில்லை நடந்து நடந்து கால் கடுக்க இன்னும் செல்ல வேண்டிய தூரத்தை நினைத்து மலைப்பாக இருந்தது அந்த சமயம் பார்த்து காரில் வந்த அசோக் இவர்கள் இருவரும் நடந்து செல்வதை கண்டதும் , "வாங்க காரில் ஏறுங்க நான் அங்கே தான் போறேன் ட்ராப் பன்றேன்".. என்று ஸ்நேகமாக கூற வெண்ணிலாவும் கிளாஸ் ஆரம்பித்து விடுவார்கள் என்ற பதற்றத்தில் ஏறுவோமா வேணாமா என்று தயக்கத்தில் நின்று கொண்டு இருந்தாள்..
"எதுக்கு இவ்வளவு தயக்கம் "..என்று அசோக் கேட்டு காரின் கதவை திறந்து விட முதல் ஆளாக வனிதா ஏற அவளுடனே வெண்ணிலாவும் தயங்கியபடியே ஏறி கொண்டாள்..
இந்த அரிய காட்சியை மிக அருமையாக மனு தன் நண்பர்களுடன் மாயாவுக்காக கல்லூரி நுழைவாயிலில் இருந்து காத்து இருக்கும் போது கண்டு விட்டான்..அந்த காட்சி அவனது ரத்தத்தை சூடேற்றி அவனது நாடி நரம்புகளை எல்லாம் கொதிக்க செய்து இருந்தது..
"ஓ அந்த அளவுக்கு ஆகிட்டியா நீ முதல் நாள் பாவாடை தாவணியில் வந்தவளா நீ ..இரண்டே வாரத்தில் சுடிதார்,பாய் ப்ரெண்ட் பிக் அப் பன்றான் ..என்ன கேவலமான பொண்ணு நீ...ஒருத்தன் வசமா சிக்கினா போதுமே உங்களை மாதிரி பொண்ணுங்க எல்லாம் வெச்சு செஞ்சுடுவீங்களே ..இன்னிக்கு காலேஜில் கார் டிரைவ் நாளைக்கு பீச் ஆஹ்?? அடுத்த நாள் ஹோட்டல் ஆஹ்??"... என வெண்ணிலாவை ஏகத்தும் கேவலமாக நெனைத்தவன் அதே நேரம் அவன் ஒன்றை மறந்து விட்டான் அவனும் மாயாவுக்காக தான் காத்து இருக்கிறான் என்றும் மாயாவும் அந்த பிரிவில் சேருவாள் என மறந்து விட்டான்..
காரில் ஏறியது முதல் ஏதோ துளைத்தெடுக்கும் பார்வை அவளை ஊசி போல குத்த கார் கதவை அடைக்கும் போது எதிரே பைக்கில் அமர்ந்து கொண்டு வண்டியை முறுக்கி விட அந்த சத்தம் சொன்னது மனு அங்கே தான் நிற்கிறான் என்று வெண்ணிலாவின் மனம் தடக் தடக் என அடித்து கொள்ள மெல்ல ஏறிட்டு அவனை காருக்குள் தானே இருக்கிறோம் என்ற தைரியத்தில் நிமிர்ந்து பார்க்க அங்கே அவனது இறுகிய முகம் கடுமையை பிரதிபலித்து கொண்டு இருந்தது..
"இவன் எதுக்கு நம்மல எப்போ பார்க்கும் போது இப்படியே முறைக்கிறான் ??"..என்று நினைக்க தோன்றினாலும் இதுவரை அவளது வீட்டார் அல்லாமல் வேறு ஆண்களுடன் இவ்வாறு தனியே பயணம் செய்தது இல்லை என்பதாலும் எதிரே பைக்கில் இருப்பவன் ஏதோ இவள் ஒரு அற்ப புழு போல பார்த்து வைக்க வெண்ணிலாவுக்கு உடல் கூசியது...ஏனோ அந்த நொடி அவளது மனம் வலித்தது...இதை பற்றி எல்லாம் கவலைப்பட்டு கொண்டு இருக்காதே என்பது போல விஷயமே அவனுக்கு தெரியவில்லை என்றாலும் அசோக் காரை எடுத்தும் விட்டான்...
ஆனால் அந்த காட்சி மனுவின் மனதை விட்டு இம்மியளவும் நகரவில்லை...கார் எடுத்ததும் அஷோக் ஏதோ சொல்ல வெண்ணிலா தலை குனிந்து சிரித்த காட்சியும் அவன் மனதில் இருந்து மறையாமல் அவனை அரித்து கொண்டு இருக்க அந்த காட்சிக்கு வெண்ணிலாவுக்கு வெகுமதி கொடுக்க காத்து இருந்தான் அதற்கு தகுந்தபடி ஒரு நாள் வெண்ணிலா சிக்கினாள்..
அன்று ஒரு நாள் மாயாவுடன் ஏதோ பேசி அவளது கழுத்தை வளைத்து பிடித்து சிரித்து கொண்டு இருந்தான்..அந்நேரம் பார்த்து வெண்ணிலா இவர்களை தாண்டி செல்பவள் கண்களுக்கு இந்த காட்சி பட அவள் முகம் அஷ்டகோனாலாக மாறியது அதுவும் மனுவின் கண்களுக்கு பட்டது...உடனே அவனுக்கு எங்கிருந்து தான் கோபம் வந்ததோ தெரியவில்லை ..
"ஹே இங்கே வா".. என்று அழைத்தவன் எழுந்து நிற்க நண்பர்கள் வேணாம் என்று மறுத்தும் அவர்களை பார்வையாலே தூர நிறுத்தியவன் அவளை பார்க்க அவளோ காதில் விழுந்தாலும் விழாதது போல செல்ல நினைக்க அடுத்த நொடி அவள் எதிரே வந்து நின்றவன் அவளை தலை முதல் கால் வரை அளவிட்டவன், " திமிரு.. கூப்பிட்டா காதில விழாத மாதிரி போற???"..
வெண்ணிலாவுக்கோ அவனது பார்வை அவளது உடலில் ஊறுவது நன்றாகவே விளங்க அவள் நிமிர்ந்து கூட அவனை பார்க்கவும் இல்லை அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறவும் இல்லை அப்படியே நின்று கொண்டு இருந்தாள்..
வழியை விட்டால் சென்று விடுவேன் என்பது போல அவள் நிற்க அவளின் செய்கை அவனுக்கு மேலும் கோபத்தை கிளற கூடவே அவள் அசோக்கின் கூட சென்றதும் வந்து மனதில் முட்டி கொண்டு நிற்க, " என்ன தலை குனிஞ்சு இருந்தா நீ நல்லவ ன்னு எல்லோரும் நினைப்பாங்க பசங்க உன் பின்னாடி சுத்துவாங்கன்னு நினைப்பா??? நடிக்காத டி மூஞ்சியை அப்படி வெச்சிட்டு போற..அப்படி நாங்க என்ன பண்ணிட்டோம்.. உன்னை விட நாங்க எந்த அளவுக்கும் குறைஞ்சு போயிடல பார்க்க ஒன்னும் தெரியாதவ மாதிரி இருந்துட்டு அவன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு போறியா?? இன்னிக்கு யார் கூட??? யாரும் இல்லாட்டி சொல்லு நான் வரேன் " ...என்று வார்த்தைகளில் விஷத்தை தடவி அவளை வேதனைப்படுத்த வேண்டும் என்றே வார்த்தைகளை விட அவள் சற்றும் நிமிர்ந்து பார்த்தாள் இல்லை..
