நேசம் 47
அத்தியாயம் : 47
நேசமடி நேசம்
டேனியலுக்கு இது வரை யார் காப்பாற்றினார்கள் என தெரியவில்லை..ஏன் அவனுக்கு ஒன்றும் நினைவு இல்லை.... அந்த அளவுக்கு அடி பட்டு இருக்க மருத்துவமனையில் அவனுக்கு முதலுதவி செய்யப்பட்டது...எல்லாம் கழிந்து வெற்றி மருத்துவமனைக்கு செல்ல தலையில் அடி பலமாக பட்டு உள்ளதால் அவன் எழுந்து நடப்பது கொஞ்சம் சிரமம் என்றும் தலையில் ஒரு ஆப்ரேஷன் வேண்டும் என்றும் மருத்துவர்கள் வெற்றியிடம் தெரிவித்தனர்...அதே போல இது எல்லாம் சரியாகி அவன் எழுந்து நடக்க சில காலம் பிடிக்கும் என்று கூற வெற்றிக்கும் டேனியலை காணும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என்னவோ உண்மை தான்...
அவன் இந்த அளவுக்கு ஆகும் என்று வெற்றி எதிர் பார்க்கவில்லை...ஒரு சைடில் மலர்வேந்தன் கேஸ்ஸும் மறுபுறம் டேனியல் விவகாரம் வர இடையில் ஜெமி வேறு வர எல்லாம் சேர்ந்து ஒரு நாளில் வர அவனால் சத்தியமாக முடியவில்லை...எதையும் அவனால் விட முடியவில்லை... இருந்தும் ஜெமியை பிடித்து வைத்து டேனியலை மிரட்டி காரியம் சாதிக்கலாம் என்று தான் நினைத்து இருந்தான்...
அதற்காக தான் ஜெமியிடம் கூறி அந்த வீடியோ டேனியலின் மொபைலிற்கு அனுப்பியது எல்லாம் ஆனால் இந்த கும்பல் தீடீர் தாக்குதல் நடத்த டேனியலின் நிலைமை படு மோசம் ஆகியது...இந்த தாக்குதலை வெற்றியே எதிர்பார்க்க வில்லை...
இருந்தும் பல பெண்களின் வீட்டு சாபம் இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்ற விதி இருக்க கூட்டு இருந்த பாவத்திற்கு அவனுக்கு தண்டனை அதிகம் தான் இருந்தாலும் விதி யாரை விட்டது... அவன் செய்த வினைக்கு உண்டான தண்டனை அல்லவா என்று மனதை தேற்றியவன் வீட்டுக்கு செல்ல ஆயத்தம் ஆனான்...
அவன் வரும் போது இரவு ஆகி இருந்தது அவன் வரும் வரை வீட்டில் காத்து இருந்த காவலாளி, செவிலி, அந்த வயதான பெண்மணி எல்லாரும் அவன் வந்ததும் கிளம்ப அவனின் அவளை கண்டதும் அவனது கடமை வெளியே சென்று வெற்றியின் உள்ளே இருக்கும் ரோமியோ வெளியே வந்தான்...
இது தான் வெற்றி அவள் அவன் வாழ்க்கையில் நுழைந்தது முதல் கடமை என்று வரும் போது வீட்டை மறந்து விடுவான்...வீட்டுக்குள் நுழைந்தால் கடமையை கழட்டி காக்கியோடு காக்கியாக ஹாங்கரில் மாட்டி விடுவான்..
தன்னவனுக்கு வேண்டி காலை முதல் அவள் காத்து இருந்த கண்மணி கை கட்டை அவிழ்த்து வேறு கட்டு இட்டு விட்டு இருந்தார் நர்ஸ்...அவன் வீட்டுக்குள் செல்லும் நேரம் உலக மகா அதிசயம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது...ஆம் கண்மணியின் அருகே மணி அமர்ந்து கொண்டு இருந்தது...கண்மணி டிவி பார்த்து கொண்டே இருந்தவள் இவனின் நிழல் ஆட வேகமாக எழ வேண்டாம் போகாதே என்பது போல மணி அவளிடம் செல்லம் கொஞ்சியது...அவளுக்கு பதிலுக்கு செல்லம் கொஞ்ச இந்த கூத்தை எல்லாம் கண்ட வெற்றிக்கு தலை சுற்றியது என்னவோ உண்மை தான் ..பின்ன எலியும் பூனையும் ஆக இருந்தவர்கள் இப்போது ஒரே இடத்தில் அதும் மடியில் என்றால் அவன் விழி விரிக்காமல் என்ன செய்வான்...
"என்ன டி இது எல்லாம் ...நம்ம வீட்டுக்குள்ள தான் வந்து இருக்கேனோ"... என்று கேலியுடன் கேக்க
"ஏன் உன்கிட்டேயே சேர்ந்துட்டேன் மணி கூட சேர மாட்டேன்னா "...என்று கேலியாக கூறி சிரித்தவள் மணி இங்கே வா என்று கூற அதுவும் அவனை விட்டு அவள் அருகில் வந்து நின்றது...அவனோ அதை பார்த்துவிட்டு சில நாட்கள் ஆக வெற்றி இருந்த பிஸி யில் மணியை சிறிது நேரம் கொஞ்ச மணி சமாதானம் ஆனது...அதை பார்த்து கண்மணி சிரித்து கொண்டு இருந்தாள்..பின் வெற்றி உடை மாற்ற செல்ல "கண்மணி".. என்று அழைக்க அவள் ஓடினாள்...
ஆம் இப்போது தான் கண்மணியும் மணியும் சேர்ந்து விட்டனரே ...காலை வெற்றி சென்றது முதல் இருவரும் ஒன்று சேர்ந்து அன்யோனியம் ஆகி விட்டனர்...அது வெகு சுலபமே கண்மணியின் மனதில் வெற்றி இருக்க வெற்றிக்கு பிடித்தது எல்லாம் அவளுக்கும் பிடிக்க தொடங்கி இருந்தது அதன் முதல் படி தான் இந்த மணி vs மணியின் சேர்க்கை ...
மணிக்கும் அவளின் கட்டை பார்த்தும் கால்லை முதல் அவர்கள் வீட்டில் புதியவர்கள் இருக்க அவர்களிடம் இருந்து கண்மணியை பாதுகாக்க கண்மணியை நிழலாக சுற்றி கொண்டு இருந்தது...அதுவே இருவர் இடையிலும் ஒரு பந்தத்தை கொடுத்து இருக்க வெற்றியை கண்டதும் வேகமாக சென்றவளை பார்த்து மணி குரைக்க "வரேன் மணி" ..என்று கூறியவளை பார்த்து வெற்றியின் விழி இன்னும் ஆச்சரியத்தில் இருந்து மீள வில்லை என்று கூறியது...
அதுக்கு அவளோ மென் குரலில், "உன்னையே பிடிக்கும் இந்த கண்கள் வழியா நான் எதை பார்கிறேனோ அந்த கண்களுக்கு உனக்கு பிடிச்ச விஷயங்கள் மட்டும் தான் பிடிக்குது "......என்று கூற அவனோ காதலோடு அவளை பார்க்க அவள் கண்களில் வழிந்த காதலில் உருகி கரைந்தவன் அவளின் உதட்டில் கண்டு அவளின் செந்நிற அதரத்தை சுவைக்க அவன் தயாராக இருக்க மணி இவர்கள் இருவரும் நிற்பதை வைத்தே கண்டு பிடித்து விட்டது... அடுத்து என்ன நடக்கும் என்று...வேகமாக போய் தன் இருப்பிடம் சென்று கண்ணை அடைத்து படுத்து கொண்டது...மணிக்கு தான் இருமுறை நல்ல அனுபவங்கள் உண்டே...
அவளின் விழி வழி தன் மேல் எழும் காதலை கண்டவன் அவள் மேல் உள்ள தாப உணர்வை கட்டு படுத்த முடியாமல் அவளை தூக்கி கொண்டு அறைக்குள் நுழைந்தான்...
அவளோ அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவனின் இதய துடிப்பு அவளுக்கு மட்டும் மிக அருகில் கேக்க அவனின் சூடான மூச்சு காற்று அவளின் செவி மடலை தீண்டியது...அந்த சமயம் கூச்சம் தாளாமல் அவள் உடலை குறுக்க அவளின் கை அவனது சட்டையை பிடித்தது... அந்த சட்டையை பிடிக்கும் போது அவளுக்கு வலி எடுக்க அவள் முகம் சுணுங்கியது...
சுணுங்கிய அவளது பூ முகத்தை கண்டவன் அவள் செவியில், " வலிக்குதா".. என்று கேட்க அவளும் "ஹ்ம்ம் "..என்று முனகினாள்... அந்த ஹ்ம்ம் என்பது எதற்கு என்று இருவரும் அறியர்...ஆம் கேட்டதற்கு முன் அவள் இதழை அவனின் இதழ் கொண்டு மூடி இருந்தான் வெற்றி அதற்கு தான் அவளது முனகல் என்று இருவருமே அறியர்..
வெற்றி மெல்ல படுக்கை அருகே வந்தவன் அவளை படுக்கையில் கிடத்தி, "உன் கைக்கு வலிக்காமல் இருக்க உன் உதட்டுக்கு மருந்து தரேன் அப்போ உன் கை வலிக்காது "...என்று கூறினான்...அவன் கூறிய விஷயத்தை எங்கே அவள் கேட்டாள்... அவள் தான் அவன் மீது மயக்கத்தில் இருக்கிறாளே...
அவனின் பார்வையே ஆளை விழுங்குவது போல இருக்க மெல்ல அவளின் பனியனை இறுக பற்ற அவள் கையை விலக்கியவன், " உன் கையை கொஞ்ச நேரம் அடக்கி வை "...என்று கூறி அவள் கைகளை அவன் கைக்குள் அடக்கியவன் விழி முதலில் அவள் மேல் படர்ந்து பின் அவள் மேல் சரிந்தவன் தன் மொத்த உடலையும் அவள் மேல் இறக்கி அவள் நெற்றியில் முத்த ஊர்வலத்தை தொடங்கியவன் பின் கண்கள்,கன்னம்,மூக்கு,செவி அவளின் இதழ் என்று எல்லாம் பாகத்திலும் ஆழ்ந்து கொண்டு இருந்தவன் முத்ததாலே அவளை திக்கு முக்காட செய்தவன் , "இப்போ முத்த கிளாஸ் மட்டும் போதும் ஆனால் எனக்கு போதாது நீயும் வேணும் ஆனால் இப்போ உனக்கு ரெஸ்ட் அதுனால விடறேன்... என்று கூறி கொண்டே அவள் அருகில் சரிந்தவன் , "உன் கை சரி ஆனதும் மீதி ...அப்போ நான் உன்னை விட மாட்டேன் "...என்று கூறியவன் கண்களில் மீண்டும் காதல் மயக்கம் இருக்க மீண்டும் அவளுக்கு அவனின் முத்த ஊர்வலத்தை தொடங்க அவளோ அவனுக்கு தன்னை கொடுத்து விட்டு அமைதியானவள் அதில் லயித்து இருக்க அப்போது அவள் போனில் அழைப்பு வர வேகமாக இருவரும் பதறி விலகினர்...அங்கே அவளின் போனில் அவளது தாத்தா தான் அழைத்து இருந்தார்...இதுவரை இரண்டு முறை அழைத்து விட்டார்...
அவள் கேட்டால் அவளிடம் ஊர் திருவிழா விற்கு அழைப்பு என்றே கூறி வர வெற்றியின் போனிற்கு அழைத்தவர் அவனுக்கு கிடைக்காமல் கண்மணியை அழைத்து கொண்டு இருந்தார்...
போன் எடுக்கும் முன் கண்மணி சுருக்கமாக நடந்ததை கூற அவனுக்கும் அழைத்து இருப்பார் போலும் ஆனால் எடுக்க முடியாமல் தான் அவன் சுற்றி கொண்டு இருந்தானே...
அவள் போனை கொண்டு வந்து அவனிடம் கொடுக்க போனை வாங்கிய வெற்றி அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து அப்போதும் கூட அவளை விட மனம் இல்லாமல் ,"ஹலோ".. என்றான்...
