மோகம் 17

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 545
Thread starter  

மோகம் - 17

விக்ரம் கண்களில் தன்னுடைய தங்கைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு தன்னை எட்டி பார்க்கும் அந்த சிறு பெண்ணை கண்ட போதே ஏனோ அவனுக்கு பிடித்து இருந்தது..

அவளின் மருண்ட விழியும், பயந்த முகமும், அவளின் அமைதியான அழகும், பயத்தில் வெளிறி கொண்டே அவள் அவனின் காரை பார்த்த பார்வையும் ஏனோ அவன் பார்வையில் அவள் அவனை வசிகரித்தாள்..

கண்மணிக்கு இன்னும் அந்த கார் தன்னை மோத வந்த படபடப்பு இன்னும் குறையவில்லை..அவள் உடல் நடுங்குவதை வினிதாவால் உணர முடிந்திருந்தது..

"ஹேய் ரிலாக்ஸ் கண்மணி.. இது எங்க கார் தான்.. அண்ணா எப்பவும் இந்த மாதிரி என்கிட்ட விளையாடுவார்.. நீ புதுசுல அதனால பயந்துட்ட.. அப்படி எல்லாம் உன் மேல ஏத்திட மாட்டாங்க.. என்னோட அண்ணா கார்ல செம எக்ஸ்பர்ட்" என்று வினிதா கண்மணியை இயல்பாக்க முயல சற்று நிதானத்திற்கு வந்த கண்மணி, "கார் திடீர்னு வரவும் நான் கொஞ்சம் பயந்துட்டேன்" என்று கூறியவள், அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், "சரி வினிதா நான் போகட்டுமா??" என்று பஸ் ஸ்டாப்புக்கு செல்ல முனைந்தாள்..

"சரி நாளைக்கு பார்க்கலாம்" என கூறி விட்டு வினிதா காரில் ஏறிக் கொள்ள அதுவரை விக்ரமின் விழிகள் அந்த எலுமிச்சை வண்ண நிற சுடிதார் அணிந்த பெண்ணின் மீது தான் படிந்தது..

அவன் பல பெண்களை பார்த்து இருக்கிறான்.. ஆனால் இவளை போல அம்சமான பெண்ணை அவன் இதுவரை கண்டதில்லை என விக்ரம் மனதுக்குள் வந்தது.. அவன் ஒன்றும் பெண் பின்னால் சுற்றும் ஆள் இல்லை என்றாலும் ஏனோ இந்த பெண்ணின் அழகு அவனை கொன்றது..

தன் தங்கை காரில் ஏறியதும், "யார் வினி அது??" என்று கேட்க, "அவள் கண்மணி நியூ அட்மிஷன் அண்ணா.. இந்த ஊருக்கு புதுசு.. எதுவுமே தெரியாது.. யூ நோ ஒன் திங்க் சி எஸ் சோ இன்அசன்ட்" என்றவள் அவள் அறிந்த வரையில் உள்ள கண்மணியின் முழு புராணத்தை பாடிக்கொண்டிருந்தாள்.. அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமுக்கு இப்படி ஒரு அப்பாவி பெண்ணா?? இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா?? இவள் எல்லாம் சென்னை போன்ற மாநகரத்தில் எப்படி இருக்கப் போகிறாளோ என்னவோ என மெல்லிய புன்னகையோடு அவன் காரை செலுத்தினான்..

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு..

எல்லாம் இயல்பாக சென்று கொண்டு இருந்தது.. கண்மணிக்கு அந்த கல்லூரி ரொம்ப பிடித்திருந்தது.. அதேபோல வினிதாவின் நட்பும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.. வினிதா எதையும் தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் கையாள்வதை கண்ட அவளுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது..

அதேநேரம் அவளின் ஆருயிர் தோழியான கல்பனாவையும் அவள் மறக்கவில்லை.. கல்பனாவிடம் தினமும் அன்று என்ன நடந்தது என மாலை கல்லூரி முடிந்து வந்ததும் ஒரு நேரம் பேசி முடிப்பாள்..

வாரத்துக்கு மூன்று நாட்கள் அவளின் அம்மாவையும் அழைத்து அவரின் திட்டு மழையை வாங்கி கொள்வாள்..

அப்படி சுமூகமாக கண்மணியின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது..

ஒரு கஃபே இல் விக்கி மற்றும் ஆதி அமர்ந்து இருந்தார்கள்.. "டேய் நமக்கு கிடைச்சிருக்க ப்ராஜெக்டை எவ்வளவு பெஸ்ட்டா பண்ணி கொடுக்க முடியுமோ அவ்வளவு பெஸ்டா பண்ணி கொடுக்கணும்.. இதுல ஏதாவது அந்த விக்ரம் தில்லு முல்லு வேலை செய்ய பார்ப்பான்.. அதற்கு விடக்கூடாது.. பி கேர் ஃபுல்" என்று ஆதி கூறிக் கொண்டிருக்க, "இப்ப வரை எல்லாம் பக்காவா போயிட்டு இருக்கு.. இதுல நான் வேலை செய்ற ஸ்டாப்ஸ் அவங்களை கூட நம்பல.. எல்லாம் பக்காவா போயிட்டு இருக்கு" என்று விக்கி கூறினான்..

"இத மட்டும் ஒழுங்கா பண்ணிட்டோம் நாம அடுத்த லெவலுக்கு போயிடலாம் இது நம்ம லைஃபோட க்ரூஷேல் மூவ்மெண்ட் விக்கி" என ஆதி டென்ஷனுடன் கூறினான்..

மேலும் சில அலுவல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி பேசிய அவர்கள் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்..

விக்கி இயல்பு நிலைக்கு திரும்பினாலும் ஆதி டென்ஷனாக இருக்கிறான் என்பதை உணர்ந்த விக்கி அவனை ரிலாக்ஸ் ஆக்க வேண்டும் என கருதி, "டேய் டிவோஸ் பெட்டிசன் வாங்கிட்டேன் எப்போ கையெழுத்து போட போற??" என்று கேட்டான்..

"என்ன புரியல??" என ஆதி கேட்டான்..

"அதுதாண்டா கண்மணிக்கு விவாகரத்து கொடுக்க போறேன்னு சொன்னல. எப்ப குடுக்க போற?? அதை பத்தி கேட்டேன்.. டிவர்ஸ் பெட்டிஷன் நான் வாங்கி வச்சிருக்கேன்.. கையெழுத்து போடுறியா??" என்று வேண்டுமென்று வம்பு செய்தான்..

அதைக் கேட்டதும் ஆதி தன்னுடைய கெத்து குறைந்து விடக்கூடாது என்பதற்காக, "லுக் விக்கி..இப்பவும் சொல்றேன்.. நான் அவளை விவாகரத்து தான் பண்ண போறேன்.. விவாகரத்து பண்ண போறேன் என்பதற்காக அவகிட்ட கோவமா இருக்கணும் இல்ல.. ஒன்னும் இல்லன்னாலும் அவ என்னோட மாமா பொண்ணு... அவளை பாதுகாக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு தானே.. எப்படி இருந்தாலும் நானும் அவளும் வாழ்க்கை முழுவதும் பார்த்துகிட்டு தான் இருக்கணும்.. அதுக்காக சண்டை கட்டணும்னு இல்ல..கண்மணி இப்போ வர என்னோட மாமா பொண்ணு தான்.. எனக்கு மாமா பொண்ணா தான் என் வீட்ல இருக்கா.. இன்னும் எனக்கு மனைவியாக கூட அவ ஆகல புரியுதா.. நான் கண்டிப்பா விவாகரத்து பண்ணுவேன்.. கொஞ்ச நாள் போகட்டும் நானே பண்ணிடுவேன்" என்று அவனும் லேசான கடுப்போடு பதில் அளிக்க, அதை கேட்ட விக்கி,"நீயா விவாகரத்த அதையும் பார்க்கலாம்" என மனதுக்குள் எண்ணிக்கொண்டு சின்ன சீண்டலோடு, "அதையும் பார்க்க நான் காத்துட்டு இருக்கேன் டா ஆதி" என்று நக்கலாக கூறினான்..

நண்பனின் சீண்டலை புரிந்து கொண்ட ஆதி, "நீ ஏதாவது இப்படி தான் பேசிட்டே இருப்ப ஆளை விடு.. நான் கிளம்புறேன்" என்று கூறி அவ்விடம் விட்டு வீட்டுக்கு சென்றான் ஆதி.. அப்போதும் விக்கி அவனை விடாமல், "முன்ன எல்லாம் ஆபிஸை வீடா நினைத்து ஆபீஸ்லயே இருப்ப.. இப்ப எல்லாம் டைமுக்கு போற ஆதி.. கிளம்பு கிளம்பு" என்று அப்போதும் தன் நண்பனை சீண்டி விட்டே வழி அனுப்பினான்..

நண்பனிடம் இருந்து தப்பித்து காரில் ஏறியதும் அவனுக்கு ஒரே கேள்வியாக இருந்தது..

கண்மணியை என்ன செய்வது?? விவாகரத்து செய்வதால் இல்லை கூட சேர்ந்து வாழ்வதா?? என்று யோசித்துப் பார்த்தாலே அவன் தலை விண் விண் என வலிக்கும்.. அப்போதெல்லாம் கண்மணி மீது அறியாமல் அவனுக்கு கோபம் வரும்.. அன்று மட்டும் அவள் தன்னிடம் உண்மையைக் கூறி இருந்தால் இந்த திருமணம் நடந்திருக்காது இந்த பேச்சுக்கே இடமில்லை.. விக்கி விளையாட்டுக்கு தான் சொல்கிறான் என்றாலும் இது போன்ற பேச்சுகளை எல்லாம் தவிர்த்திருக்கலாமே என்று அவன் நினைத்துக் கொண்டே வாகனத்தை செலுத்தி வந்தாலும் வழியோரத்தில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் அவளுக்கு பிடித்த பிளேவர் ஐஸ்கிரீம் இருக்க அதை கண்டதும் அவன் கார் அவனே அறியாமல் நின்றது.. அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கிவிட்டு வந்தான்..

இதை காதல் என்பதா?? இல்லை வேறு ஏதாவது சொல்வதா?? இவன் அவளை விவாகரத்து செய்வானா?? இல்லை கூட சேர்ந்து வாழ்வானா?? இதை யோசிக்க வேண்டியது கண்மணி அல்லவே.. ஆதி தான் அல்லவா???

வீட்டுக்கு சென்ற ஆதியை சோகமே உருவான முகத்தில் வரவேற்றாள் கண்மணி..

அவள் முகத்தை கண்டதுமே அவனுக்கு அவளின் அம்மாவோடு பேசி இருப்பாள் அது தான் அவளுடைய முகம் இப்படி இருக்கிறது என தெளிவாக புரிந்தது..

அதனால் அவள் முன்னே அவன் அவளுக்காக வாங்கும் ஐஸ்க்ரீம் கப்பை வைத்தவன் உடைமாற்ற சென்றான்.. எப்போதும் உடை மாற்றி விட்டு வருவதற்குள் அவள் அந்த ஐஸ்கிரீமை உண்டு இருப்பாள்..

ஆனால் இன்று அவள் அதை கண்டு கொள்ளாமல் இருக்கவும், "என்ன ஆச்சு??" என புரியாமல் அவள் அருகே அமர்ந்து, "என்ன மேடம்?? என்ன ஆச்சு?? எதுவும் பேசாமல் இருக்க?? நான் வந்த போது ஹாய் கூட சொல்லாம இருக்கீங்க?? என்ன ஆச்சு??" என்று அவன் கேட்டான்..

அவளோ பெரிய சோகமாக அவனுக்கும், அவளுக்கும் இடையே ஒரு அடி இடைவெளி இருந்தது.. அந்த இடைவெளியை குறைத்து அவனோடு நெருங்கி அமர்ந்த கண்மணி, "அது வந்து ஆதி அண்ணா... ஐயோ ஐயோ இனி அதை சொல்லக்கூடாது... ஆதி மாமா இதோ பாருங்க... நான் ஆதி மாமா சொல்றது வேறொரு விஷயத்துக்காக தான்.. நமக்கு இடையில் இருக்கிற டீல் படி இன்னும் நான் ஆதி மாமா அப்படின்னு சொல்ல கிடையாது ஓகே" என்று கூற அதை கேட்ட அவனும் மெல்லிய புன்னகையோடு சரி என்றான்..

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா??" என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூறினாள்..

"சொன்னாதானே தெரியும்"

"நாளைக்கு அம்மாவும் அப்பாவும் அகிலும் வராங்க.. அகிலுக்கு ஒரு வாரம் ஸ்கூல் லீவு.. இங்கே தான் இருக்க போறாங்களாம்.. இப்பதான் சொன்னாங்க.. வாரம் மூன்று தடவை திட்டு வாங்குவேன்.. இப்போ ஒரு வாரத்துக்கு தினமும் திட்டு வாங்கணும்.. இந்த ஒரு வாரம் மட்டும் நான் உங்கள ஆதி மாமான்னு சொல்லுவேன்.. நீங்களும் கேட்டுக்கணும் புரியுதா" என்று பாவமாக வைத்துக் கொண்டு அவனிடம் கூறினாள் அவனின் கண்மணி..

அதை கேட்ட அவனுக்கு அவளின் பேச்சில் எழுந்த மையலில் விழுந்தாலும் நாளை மாலதி அத்தை வந்தால் இவளை என்ன செய்வாரோ என்று தான் இருந்தது..

அதே நேரம் சரி அது தான் நான் இருக்கேனல பார்த்துக்கலாம் என்று எண்ணியவன், "சரி வரட்டும் அவங்களுக்கும் அவங்க பொண்ணை பார்க்கணும்னு இருக்கும் பார்த்துட்டு போகட்டும் அதனால் என்ன??" என்று அவளுக்கு சமாதான வார்த்தை கூறினான்..

"இல்லை ஆதி அண்ணா.. ஐயோ இல்லை ஆதி மாமா... அம்மா எதுக்கெடுத்தாலும் திட்டுவாங்க எனக்கு அதுதான் பயமா இருக்கு"

"நீ வாங்காத திட்டா??" என்று அவளை சீண்டும் பொருட்டு அவன் கூறினாலும் அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், "அம்மா ஏதாவது திட்டுனா??" என்றவள் அம்மா எதுக்கு எல்லாம் திட்டுவாங்க என யோசித்து, "ஆதி மாமா ஈஸ்வரி அக்காவை நாளையில் இருந்து அம்மா போற வரை வர வேண்டாம்னு சொல்லிடுங்க.. நானே எல்லாம் பார்த்துக்கிறேன்.. உங்களோட வேலையெல்லாம் நானே செய்யறேன்.. தயவு செய்து நீங்க.." என மேலும் லிஸ்ட் போட அவள் தாயாராக,அவனுடைய காதை குடைந்து கொண்டு எதிரே உள்ள ஐஸ்கிரீம் உருகுவதை பார்த்த அவன் அதை எடுத்து, "அதெல்லாம் அவங்க வந்த அப்புறம் பாத்துக்கலாம் நீ இப்போ இதை சாப்பிடு" அவள் வாயில் எதிர்பாராத தருணத்தில் திணித்து விட்டான்..

அந்த ஈரமான ஐஸ்கிரீம் இவள் புலம்பலில் ஏற்கனவே கரைந்து இருக்க, இவன் எதிர்பாராத விதமாக அவள் வாயில் வைக்கவும் அவள் வாயில் இருந்து ஒழுகி அப்படியே கழுத்து வரை வழிந்து மார்பை நிறைக்க, "என்ன மாமா இதெல்லாம்" என வாயில் அடக்க முடியாமல் அவள் மேலும் ஒழுக்கி கொண்டே அவள் கேட்டாள்..

அவன் எங்கே கேட்டான் அவன் சிந்தனை வேறு பக்கம் அல்லவா சென்று இருந்தது..

அந்த உருகிய ஐஸ்கிரீம் மெல்ல மெல்ல அவளின் கழுத்து வழியே அவள் மார்பை நனைக்க, அவன் கண்கள் அப்படியே கணவனின் பார்வையாக மாறியது..

அவனால் எவ்வளவு முயன்றும் அவனுடைய பார்வையை அவள் மீதிருந்து அகற்ற முடியவில்லை.

அவளோ அவன் பார்வை மாறி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல், "என் மேல ஐஸ்கிரீம் ஆக்கிட்டீங்க இல்ல.. பாருங்க என்னோட டிரஸ் எல்லாம் ஐஸ்கிரீம் ஆயிடுச்சு" என அவள் மார்பில் துடைத்துக் கொண்டு, "இப்ப பாருங்க" என்று கூறி அவள் கையில் இருந்த மிச்ச ஐஸ்கிரீமை எடுத்து அவனின் முகத்தில் உடலில் எல்லாம் பூச துவங்கி விட்டாள்..

அவனின் கன்னத்தில் அவளின் கைபட்டதில் அவன் தன்னிலை பெற்றவன் கவனிப்பதற்குள் அவள் ஐஸ்கிரிமை அவன் மீது பூசி இருக்க அவளின் நெருக்கமும், ஐஸ்கிரீமால் நனைந்த அவளின் ஆடைக்குள் இருந்து தெரியும் அழகு பதுமைகளும் அவனை முட்டி மோதி அழைப்பது போல அவனுக்கு இருக்க, அதற்கு மேல் அவனை அவனாலேயே கட்டுப்படுத்த முடியாமல் போனது..

அதற்கு ஈடாக இவளும் அவன் மீது ஐஸ்கிரீமை எல்லாம் எடுத்து ஆங்காங்கே பூசிக் கொண்டிருக்க அவளின் கை அவனுடைய தேகத்தில் படும் இடமெல்லாம் அவனுக்கு ரத்தம் சுண்டி இழுத்தது..

அந்த நொடி அவன் எதை பற்றியும் யோசிக்காமல், அவள் மீது பாயும் அவனுடைய உணர்வுகளை அடக்க முடியாமல் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் மடியில் அமர்ந்தவளை, அதே வேகத்தில் சேர்த்து அணைத்து அவளின் மூச்சு கூட அவனை விட்டு விலகி போக விடாமல் அவளை அவ்வளவு நெருக்கத்தில் வைத்து இருந்தவன் அவளின் கன்னங்களில் அழுத்தமாக தன் இதழ்களை பதித்தான்..

மீண்டும் அவன் முத்தமிடவும் அவளுக்கு அதே உணர்வு அவளை ஆட்கொண்டது.. ஆம்.. அன்று தோன்றிய அதே உணர்வில் அவள் படபடக்கும் விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்க்க அவனும் அவளை மறுக் கன்னத்தில் முத்தமிடவும் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவள் அரணாக அவனின் உடையை பற்றி இழுத்து கொண்டாள்..ஆம் அவளுள் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்தது..

அதில் வீழ்ந்த அவனின் மோக கரையில் இருக்க அவள் அமைதியாக இருக்கவும் மேலும் அவன் முன்னேற துடித்து அவளின் இதழ் நோக்கி குனியும் போது கண்மணி கண்களை மூடிக் கொள்ள அதற்குள் ஒரு போன் வரவும் அவனின் மோக நிலை எல்லை கடந்தது..ஆம் போன் அலறவும் மோகம் தடைபட்டு போக, அப்போதுதான் என்ன காரியம் செய்ய இருந்தேன் என தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் ஆதி.. அவளும் அவன் தன்னை தீண்டவில்லை என்றதும் ஏக்கத்துடன் ஒரு பார்வையை அவன் பக்கம் வீசினாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top