மோகம் 13

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 545
Thread starter  

மோகம் - 13

அந்த பெரிய காலேஜை பார்த்து, "நான் இங்கேயா படிக்க போறேன்??" என கண்கள் விரிக்க கேட்டாள் கண்மணி..

அவனும் மெல்லிய புன்னகையோடு, "ஆமாம் காலேஜ் பிடிச்சு இருக்கா??" என ஆவலாக கேட்டான்..

"ரொம்ப நல்லா இருக்கு ஆதி அண்ணா.. நான் படிச்ச காலேஜ் விட சூப்பரா இருக்கு" என கூறியவள் கண்களில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக நடந்து செல்வதை எல்லாம் பார்த்து, "இவங்க வீட்ல எல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்களா??" என அவனிடம் கேட்க, அவனோ அவளை ஒரு மாதிரியாக பார்த்து, "உன் வீட்டை தவிர வேற எந்த வீட்டுலயும் ஆணும் பெண்ணும் ஒண்ணா நின்னா சந்தேகப்பட மாட்டாங்க" என்று கூறினான்..

அதை கேட்ட அவளோ மெல்லிய புன்னகையோடு அவனோடு வர அவன், "ஒரு வாரத்தில் உனக்கு காலேஜ்.. நல்ல வேளையா ஒரு செமஸ்டர் முடிச்ச.. அதுனால சீட் ஈசியா கிடைச்சது.. உன்னோட பேட்ச் பசங்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து தான் கிளாஸ்..

வீட்டில் இருந்து உனக்கு காலேஜ் நம்ம பிளாட்டில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தான்.. காலேஜ் நீ பஸ்லயே போய்க்கலாம்.. பிளாட் முன்னாடி தான் பஸ் ஸ்டாப் அங்கே இருந்து ஏறுனா இங்கே வந்துவிடலாம்.. அதே மாதிரி தான் புரியுதா??" என்று கூற,

அவளுக்கு எதுவும் புரிந்த மாதிரியும் இல்லை புரியாத மாதிரியும் இல்லை.. தலையை மட்டும் ஆட்ட, அவனும் அவளை பார்த்து, "இது நம்ம ஊர் மாதிரி கிடையாது.. இப்படி எதுவும் தெரியாமல் இருந்தா ஒன்னும் பண்ண முடியாது.. கொஞ்சம் போல்ட்டா இருக்க பழகிக்கோ புரியுதா??" என கூற அதை கேட்டு அவளும், "சரி ஆதி அண்ணா" என கூறியவள் பார்வை அங்கு மரத்தடியில் யாருக்கும் தெரியாமல், ஒரு ஆண் மற்றும் பெண் அந்த கல்லூரி மாணவர்கள் போலும் யாருக்கும் தெரியாமல் அந்த ஆண் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தம் வைப்பதை அவள் பார்த்து விட்டாள்.. அதை கண்டு அவள் மெல்லிய புன்னகை பூத்தாள்..

"சரி வா.." என அழைத்தவன் குரல் காதில் விழாமல், அவள் வராமல் அங்கே வேடிக்கை பார்க்கவும் எங்கே பார்க்கிறாள் என பார்க்க அந்த இடத்தில் ஒரு காதல் ஜோடி காதலித்து கொண்டு இருக்க, அதை கண்ட அவனோ வேகமாக அழுத்தமான பார்வையோடு, "அங்கே என்ன பார்வை??" என அதட்டி கேட்டான்..

"அது வந்து ஆதி அண்ணா.. இரண்டு பேர் முத்தம் கொடுத்திட்டு இருக்காங்க" என்று கூற அதை கேட்டதும் அவனது முகம் மாறி, "இதோ பாரு கண்மணி... இந்த மாதிரி பல விஷயத்தை நீ இங்கு பார்ப்ப.. நீ கல்யாணம் ஆனவள்.. அப்படின்னு இங்கே யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு சொல்றது உன்னோட சேப்டிக்காக தான்.. படிக்கிற பொண்ணு இப்படி இருக்கா அப்படின்னு யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது அப்படின்னு சொல்லித்தான் நான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.. அதே சமயம் நான் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்.. ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட அடி வாங்குன ஞாபகம் இருக்கா??" என கேட்டான் ஆதி..

அதை கேட்டதும் கண்மணியின் அத்தனை மகிழ்ச்சியும் வடிந்தது போல, "அதை இன்னும் ஞாபகம் வச்சு இருக்காரா??" என்று எண்ணியவள் அவன் அடித்த கன்னத்தில் அவளின் கையை வைத்தாள்..அன்றைய நாளை அவளால் மறக்க இயலுமா?? இன்று வரை அவளால் மறக்க இயலாத ஒன்று அல்லவா??

அவளின் செய்கையை கண்டதும், "ம்ம்.. எதுக்கு வந்திருக்கியோ அந்த வேலையை மட்டும் பார்க்கணும் புரியுதா" என எச்சரித்தான்..

ஆம்.. ஒரு நாள் அவள் பள்ளி முடிந்து வந்து கொண்டு இருக்க, அவள் ஊரில் உள்ள ஒருவன் அவளிடம் அவனின் காதலை ஒரு கடிதமாக எழுதி அவளிடம் கொடுக்க, அதை வாங்கும் காட்சியை தான் ஆதி கண்டான்..அதோடு நில்லாமல் முட்டி போட்டு அவன் அவனுடைய காதலை கூற அவளும் இவன் என்ன கோமாளித்தனம் செய்கிறான் என மெல்லிய சிரிப்போடு பார்த்தாள்..

அந்த பக்கமாக வந்து கொண்டிருந்த ஆதியின் கண்களில் இந்த காட்சி தெளிவாகத் தெரிந்தது..அவ்வளவு தான், "இந்த வயசுல உனக்கு காதல் கேட்குதா??" என அந்த பையனுக்கும் ஒரு அறை விழுந்தது.. அதே நேரம் இவளுக்கும் பளார் என ஒரு அறை முகத்தில் விழுந்தது..

அந்த அடி வாங்கியதில் அந்தப் பையன் ஓடிவிட்டான்.. இவளோ அவனின் கோபத்தின் ஆளாகி விட்டாள்..

அதோடு இல்லாமல் அவன், "என்னடி இதெல்லாம்?? ஸ்கூல் போற உனக்கு காதல் கேக்குதா" என கடிந்து கேட்க அவளோ அவன் அடித்த அடியில் அவளின் கன்னத்தை பிடித்துக் கொண்டு, "அவன் தான் ஆதி அண்ணா வந்து இந்த பேப்பரை கொடுத்தான்" என கூற அதை வாங்கி கிழித்து போட்ட ஆதி, அவளை முறைக்க, "நிஜமா நான் எதுவும் செய்யல" அவள் கூறினாலும் அவன் விடுவதாக இல்லை..

அந்த நேரம் அந்த சிறு பெண்ணுக்கு இவன் எங்கேயாவது மாலதியிடம் விஷயத்தை கூறி விடுவானோ என்ற பயம் தோன்ற, "ஆதி அண்ணா.. தயவு செய்து என்னோட அம்மா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. இனிமேல் பண்ணவும் மாட்டேன்" என அவள் கெஞ்ச தொடங்கவும் தான் அவன் விட்டான்..

அன்றிலிருந்து இன்று வரை அந்த ஒரு விஷயத்தில் அவளுக்கு ஆதியிடம் பயம் இருக்கிறது.. அதை இப்போது அதை நினைவு கூறவும் அவள் முகம் வெளிர்த்து போனது..

ஆனால் அவனுக்கோ அந்த நொடியை ஏன் அதை ஞாபகப்படுத்தினான் என்றால் அவள் இப்பொழுது அவனுடைய மனைவியாக இருப்பவள் அவன் பெயருக்கு யாரிடமும் திருமணம் ஆன விஷயத்தை கூற வேண்டாம் எனக் கூறினாலும் தன் மனைவியை வேறொருவன் பார்ப்பதை அவ்வளவு எளிதாக அவன் விரும்ப மாட்டான் என்று எச்சரிக்கை செய்வதற்காகத்தான் அவன் அந்த நாளை பற்றி அவளிடம் பேசினான்..

அதைக் கேட்டதும் அவள் முகம் கூம்பி போக அதை பார்த்தவன் தேவையில்லாமல் அவளை பேசி விட்டோம் என எண்ணினாலும் அவளிடம், "கண்மணி இது நம்ம ஊர் கிடையாது.. நீ பார்த்து நடக்கல அப்படின்னா உன்னை ஏமாத்திடுவாங்க.. அதுக்காக தான் சொல்றேன் புரியுதா.. உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நீ என்கிட்ட கண்டிப்பா சொல்லி இருக்கணும் புரியுதா?? என்கூட இருக்கிறவரை, நீ எதையும் என்கிட்ட இருந்து மறைக்க கூடாது புரிஞ்சுதா??" என்று சமாதானமாக சிரித்த முகத்தோடு கூறவும் அவள் முகம் இயல்பானது..

அவள் நார்மலாகவும் தான் அவனுக்கு கொஞ்சம் இயல்பாக அவளை அழைத்து கொண்டு நேராக மாலுக்கு சென்றவன் அவளுக்கு தேவையான உடைகளை எல்லாம் வாங்கிக் கொடுக்க அவளுக்கோ ஏகத்துக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.. சற்று முன் அவன் திட்டியது எல்லாம் அவள் மறந்து விட்டாள்..

அதாவது ஒரு சிறு பெண்ணின் சந்தோஷத்தில் அவள் மூழ்கி இருந்தாள்..

அவளுக்கு அவளின் ஆதி அண்ணாவோடு இருப்பதில் பெரு மகிழ்ச்சி.. அவளை வெளியே அழைத்து செல்கிறான்.. அவளுக்கு வேண்டியதை வாங்கி தருகிறான்.. அவளுக்காக எல்லாம் செய்கிறான்.. கொஞ்சம் கோபக்காரனாக இருந்தாலும் அவளின் தேவைகளை செய்யும் அவளின் ஆதி அண்ணா அந்த சிறு பெண்ணின் மனதில் கால் பதிக்க துவங்கினான்..

அந்த மாலில் சுற்றுவது அவளுக்கு பிடித்து இருக்க அங்கு கலர் கலராக ஐஸ் கிரீம் வைத்து இருப்பதை கண்டு அவனுடைய கையை அழுத்தத்தோடு பிடிக்க அவனும் என்ன என அவளை பார்க்கவும், "ஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி தரீங்களா??" அவள் கண்ணை சுருக்கி கேட்ட விதத்தில் வீழ்ந்தவன் சரியென அவளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்க, "உங்களுக்கு??" என அவள் கேட்டாள்..

"எனக்கு வேண்டாம்.. எனக்கு இனிப்பு பிடிக்காது" என கூறும் முன்னே, " அண்ணா இன்னொரு ஐஸ் கிரீம்" என்றவள் அதை வாங்கி அவனுடைய கையில் கொடுத்த அவள், "ஆதி அண்ணா இனிப்பு பிடிக்காதுன்னு சொல்லாதீங்க.. எனக்கு இனிப்புனா அவ்ளோ பிடிக்கும்.. அம்மா தான் நான் குண்டு ஆயிடுவேன்னு சொல்லி குடுக்க மாட்டாங்க.. இந்த ஃப்ளேவர் சூப்பரா இருக்கும் சாப்பிட்டு பாருங்க.. எனக்காக" என்று அவள் கையில் இருந்த ஐஸ்கிரீமை அவனுடைய கைகளில் கொடுக்க அவனுக்கு பொதுவாக இனிப்பு பிடிக்காது.. உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க வேண்டும் என்று கொள்கை உடையவன்..

ஆனால் ஏனோ அந்த நொடி அவள் கூறவும், அதை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுள் எழுந்தது...

மெல்ல அவளும் ஐஸ்கிரீமை சாப்பிட அவனும் ஐஸ்கிரீமை வாயில் வைத்தான்... பெரிதாக அதன் சுவை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் எதிரே அமர்ந்திருப்பவள் அதை ரசித்து உண்பதை காணும்போது அவனுக்கு அந்த ஐஸ்கிரீமின் தருணம் பிடித்திருந்தது..

அந்த சமயம் பார்த்து ஆதிக்கு ஆபீஸிலிருந்து ராம் போன் மேல் போன் செய்து கொண்டிருக்க அந்த போனை எல்லாம் கட் செய்தான்.. பிறகு மெசேஜில், "எனக்கு உடம்பு சரியில்ல நான் நாளைக்கு வந்துடுவேன்" என்று மெசேஜ் அனுப்பி விட ராமுக்கு பதட்டம் ஆகிவிட்டது.. உடனே விக்கிக்கு அழைத்தான் ராம்..

அப்போது தான் இருவரும் ஐஸ்கிரீம் உண்டு கொண்டிருக்கும் காட்சியை ஆதியின் உற்ற நண்பன் விக்கி பார்த்து விட்டான்..அந்த தருணத்தில் விக்கியின் போன் அலறவும் போனை ஆன் செய்து காதில் வைத்த விக்கி, "சொல்லு டா ராம்" என்றான்..

"டேய் நம்ம ட்ரை பண்ண ப்ராஜெக்ட் நமக்கு கிடைச்சிருச்சு' என்று கூற விக்கி, "என்னடா சொல்ற?? எப்படிடா அந்த ஆள் விட்டான்??" என்று கேட்க,

"அதுதான் ஆதி அவன் பெயர்ல வேறொரு கம்பெனி ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருந்தான் இல்ல.. அதுல இருந்து கோட் பண்ணி இருந்தான்.. அது அந்த ரிஷிகேஷ்க்கு தெரியல போல.. அதனால அந்த கம்பெனி பேர்ல நமக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைச்சிடுச்சுடா" என்று சந்தோஷமாக ராம் கூறினான்..

"டேய் சூப்பர்டா.. ஆதிக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவான்" என்று விக்கி கூற, "இதை சொல்லத்தான் ஆதிக்கு கூப்பிட்டேன்.. அவன் போனை எடுக்கவே மாட்டேங்குறான்.. என்னமோ உடம்பு சரி இல்லையாம்.." என கூறினான்..

அதை கேட்ட விக்கி உள்ளுக்குள் சிரித்து தன் நண்பன் ஆதி ஐஸ் கிரீம் சாப்பிடும் அழகை தூரமாக இருந்து பார்த்தவன், "ஆமாம் டா அவனுக்கு உடம்பு சரியில்லை தான்.. அவனை டிஸ்டர்ப் பண்ணாத.. அவன் வந்ததும் இந்த விஷயத்தை சொல்லிக்கலாம்" என்று ஒரு நமட்டு சிரிப்போடு கூறினான்..

அதை கேட்ட அவனோ, "சரி டா" என கூறி வைத்து விட, ஆதி ஐஸ் கிரீம் சாப்பிடும் அழகை தன் போனில் வீடியோ எடுத்த விக்கி, "இது தான் காரணமா என்னோட போனை கட் பண்ணி விட" என மனதுக்குள் தன் நண்பனை கரித்து கொட்டினாலும், உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்க விக்கி தன் நண்பனை வேண்டும் என்றே சீண்ட மீண்டும் ஆதியின் எண்ணுக்கு அழைத்தான்..

ஆதியோ விக்கியின் எண்ணை பார்த்ததும் போனை கட் செய்தவன், "ஐயம் இன் ஹாஸ்பிடல்" இன்று குறுஞ்செய்தி அனுப்ப,

"ஓ இதுதான் உன்னோட ஹாஸ்பிடல் இருடா.. மவனே.? உனக்கு இருக்கு" என்று எண்ணிய விக்கிக்கு மட்டும் தான் ஆதிக்கு திருமணம் ஆன விஷயம் தெரியும் மற்ற இரு நண்பர்களுக்கு தெரியாது..

விக்கி ஆதியின் பால்ய கால சிநேகிதன் என்பதால் ஆதியின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விசயங்களும் விக்கிக்கு தெரியும்..மற்றவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போதுள்ள பழக்கம் என்பதாலும் சைந்தவி உடனான திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தனக்கு திருமணம் நடக்கிறது என்பதையே நண்பர்களிடம் கூறாமல் இருந்தான் ஆதி..

அதனால் ராம் மற்றும் மணிக்கு இவனுக்கு திருமணம் நடந்த விஷயம் தெரியாது.. விக்கிக்கு மட்டும் தான் தெரியும்.. விக்கியிடமும் திருமணம் மாறி கண்மணி உடன் நடந்ததால் யாரிடமும் கூற வேண்டாம்.. இந்த அசிங்கத்தை வெளியில வர சொல்லுவாங்களா.. நானே காதும் காதும் வச்ச மாதிரி டிவோர்ஸ் வாங்க போறேன்.. என்றெல்லாம் அளந்து தள்ளி இருந்தான்..

விக்கி கூட எங்கே தன் நண்பன் வாழ்க்கையை தொலைத்து விடுவானோ என்று எண்ணியிருக்க, இப்பொழுது வெளியே விரைப்பாக இருந்தாலும் தன் நண்பனின் உள்ளுக்குள் மன்மதன் எங்கோ இருக்கிறான்.. என்பதை புரிந்து கொண்ட விக்கி அவர்களை அந்த நேரத்தில் தொல்லை செய்ய விரும்பாமல் சென்று விட்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top