மோகம் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மோகம் - 11

ஆதியுடன் பயணம் செய்து கொண்டு இருக்கிறாள் கண்மணி.. இந்த இனிமையான பயணத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை.. இப்படி ஒரு பயணத்தை அவள் மேற்கொள்வாள் என அவள் கனவிலும் நினைத்து கூட பார்க்கவில்லை..அவள் மனதில் அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்து இருந்தது..

எப்போதும் அவள் குடும்பத்துடன் எங்கேயாவது பயணம் செய்தால் கிறுகிறு என ஏதாவது பேசி பேசி அந்த பயணத்தையே பாழாக்கி விடுவார் மாலதி.. அப்படி எந்த விதமான அலும்புகளும் இன்றி மென்மையாக இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் என அனைத்து இசையமைப்பாளர்களின் பாட்டுகளையும் வரிசையாக மெல்லிய சப்தத்தில் கேட்டுக்கொண்டே தூரல் மழையில் அவளின் டெடி பியரை கட்டிப்பிடித்துக் கொண்டு, ஆதி வாகனத்தில் கவனமாக இருக்க அதை கேட்டுக் கொண்டே வரும் சுகம் அவளுக்கு அலாதி இன்பத்தை கொடுத்தது..

ஆதி தீவிர யோசனையில் இருப்பதால் அவள் தான் பாட்டை அவள் இஷ்டத்துக்கு மாற்றி கேட்டுக்கொண்டே வந்தாள்.. அவனின் மௌனத்தை கூட அவள் கண்டு கொண்டால் இல்லை..

ஒரு சிறு பெண்ணின் அணைப்பில் உருகி அவள் கேட்டதற்கு இணங்கி அவளை அழைத்துக்கொண்டு வந்து விட்டேனா??? ஒரு சிறு பெண் உன்னை வைத்து செய்கிறாள்.. அவள் நினைத்ததை உன்னை வைத்து சாதிக்கிறாள் என உன் புத்திக்கு உரைக்கவில்லையா??

இவளை இனி என்ன செய்யப் போகிறாய்?? அங்கே போய் இவள் உன்னுடைய மனைவி என சொல்லப் போகிறாயா? அவளுக்கும் உனக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தை மறந்து விட்டாயா??? என அவனுடைய மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே வர ஆதிக்கு என்னவோ தலை பாரமாக இருந்தது... அவனால் சிந்திக்க கூட முடியவில்லை... அங்கே போனால் யாராவது கேள்வி கேட்டால் என்ன செய்ய போகிறோம் என்பதை நினைக்கும் போதே அவனுடைய தலை சுற்றியது..

ஆனால் அவளோ மிகவும் ஜாலியாக சந்தோஷமாக பயணம் செய்து கொண்டிருக்க, அதில் ஒரு கட்டத்தில், "கட்டி பிடி கட்டி பிடி டா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடி டா" என்ற பாட்டு ஒலிக்க அவளும் மெல்லிய குரலில் பாட்டை உதிர்க்க அதை கேட்டவனோ, " என்ன கட்டி பிடிக்கவா?? சிட்டுவேஷன் சாங்கா?? கட்டி பிடிக்கிறேன் இரு டி.. ஒரு தடவை நீ கட்டி பிடிச்சதுக்கே விடை இல்லாமல் உன்னோட ஆட்டத்துக்கு நான் ஆடிட்டு இருக்கேன்" என மனதுக்குள் குமைந்து கொண்டு, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன் வாகனத்தை ஓரமாக நிறுத்தினான்...

திடீரென வாகனம் நிற்கவும் அவளோ மெல்லிய சுரத்தில் பாடி கொண்டு வந்திருந்தவள் கார் நிறுத்தவும், "என்னாச்சு ஆதி அண்ணா" என கேட்டாள்..

அப்போது அந்த பாட்டில், " எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்

கண்டுபிடிப்பேன்..

கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்

அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்"

என வரிகள் வர அவனோ, "ஐயோ கடவுளே.. நண்டை கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவேன் போல" என எண்ணியவன் பாட்டை நிறுத்தினான்..

அவன் பாட்டை நிறுத்தவும், "என்னாச்சு ஆதி அண்ணா??" என அவள் ஒரு மாதிரியான குரலில் கேட்டாள்..

அவனோ அவளை ஒரு மாதிரியாக பார்த்து, ஒரு சிறு பெண் அணைத்ததும் இப்படி அவளை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்ற கடுப்பில் இருந்தவன் கொஞ்சம் அழுத்தமான குரலில், "லுக் கண்மணி.. உன்னால் அங்கு இருக்க முடியல.. அதனால மட்டும் தான் உன்னை நான் இங்க கூட்டிட்டு வரேன்.. புரியுதா??'

"புரியுது ஆதி அண்ணா.." என்றதும் ஏனோ அவனுக்கு அவள் அவனை கிண்டல் செய்கிறாளோ என்ற எண்ணம் எழாமல் இல்லை..

அதனால், "கண்மணி நான் பேசி முடிக்கும் வரை வாயை மூடிட்டு இரு" என்று கூறினான்... அவளும் அவனுடைய கோபத்தைக் கண்டு லேசான பதட்டம் அடைந்தவள் அமைதியாக இருந்தாள்..

" நான் உனக்கு ஒரு காலேஜ் விசாரிச்சு வச்சிருக்கேன்... நாளைக்கு உன்னை கூட்டிட்டு போய் அட்மிஷன் போட்டு விடுவேன்.. எல்லோரும் உன் வயசுல இருக்கவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு எல்லாம் காலேஜ் வந்துட்டு இருக்க மாட்டாங்க.. இது ஒன்னும் கிராமம் கிடையாது.. இது சிட்டி.. இங்கே நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து படிச்சுட்டு இருக்கேன் அப்படின்னு சொன்னா உன்னை கிண்டல் பண்ணுவாங்க.. கேவலமா பார்ப்பாங்க.. புரியுதா?? அதனால உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆன விஷயத்தை நான் சொல்லாமல் நீ வெளியே சொல்லவே கூடாது புரியுதா??? என்னோட வேலை பிசில உன்னை கண்காணிச்சுட்டு இருக்க வேலையெல்லாம் என்னால பண்ணிட்டு இருக்க முடியாது... உனக்கு காலேஜ்ல இருந்து வீட்டுக்கு எப்படி வரணும்னு சொல்லி கொடுத்துடுவேன்.. எப்படி போகணும்னு சொல்லி கொடுத்துடுவேன்.. நீ உன்னுடைய வேலையை பார்த்துக்கணும் புரியுதா?? என்னை தொல்லை பண்ணிட்டு இருக்க கூடாது.. உன்னுடைய படிப்பு முடிந்ததும் நான் சொன்ன மாதிரி உன்னை டிவோஸ் பண்ணிடுவேன் புரிஞ்சுதா??" என்று அவன் மீண்டும் உன்னை விவாகரத்து செய்து விடுவேன் என அவன் அவள் மனதுக்குள் பதிய வைத்தாலும் அது ஒன்றும் அவள் தலைக்குள் ஏறவில்லை..

மாறாக அவனிடம், "கல்யாணம் பண்ணின பொண்ணு படிக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?? என்ன?? ஏன் என்னை கேவலமா நினைப்பாங்க??" என்று அதி முக்கியமான கேள்வியை அவனிடம் கேட்க, அதைக் கேட்டதும் அவனுக்கே பதில் தெரியவில்லை..

இவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என அவனுக்கு விளங்கவில்லை.. ஏனெனில் அவளுக்கும் அவனுக்கும் இடையே 10 வயது வித்தியாசம் அதுதான் அவனுடைய பிரச்சனை...

அப்படி இருக்க, இந்த சிறு பெண்ணை கல்யாணம் செய்து வந்திருக்கிறேன் என யாராவது ஏதாவது சொல்லி கேலி செய்து விடுவார்களோ என்ற பதட்டத்தில் தான் அவளிடம் அவன் இப்படி ஒரு காரியத்தை கூறினான்..

ஆனால் அவள் இப்படி எதிர்த்து கேள்வி கேட்பாள் என அவனுக்கு தெரியாது அல்லவா???

அப்படி இருக்க, "உனக்கு கொஞ்சம் வாய் அதிகமாயிடுச்சு கண்மணி.. இதோ பாரு.. நான் சொல்றதை எதிர்த்து கேள்வி கேட்காமல் உன்னால கேட்க முடிஞ்சா கேளு... இல்லாட்டி நீ உன்னோட வீட்டுக்கு கிளம்பு.. நான் இப்பவே காரை திருப்பி உன் வீட்டில கொண்டு போய் விட்டுடறேன்.. உங்க அம்மா கிட்ட அடி வாங்கி சாவு" என கூறவும்,

அதை கேட்ட அவளோ எங்கே இவன் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவானோ என்ற எண்ணத்தில், "வேண்டாம் ஆதி அண்ணா தயவு செஞ்சு அப்படி மட்டும் செஞ்சிடாதீங்க.. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்.. நான் யார்கிட்டயும் எனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்ல மாட்டேன்" என கூற, அப்போது தான் அவனுக்கு சமாதானம் ஆனது..

அவளுடைய வாயை அடக்க இதை தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.. ஒரு வழியாக அவள் வாய் வழியாகவே வாய்மொழி பத்திரத்தை வாங்கியவன் மீண்டும் பயணத்தை துவங்கினான்..

இதோ கிராமத்தில் இருந்து அவளை சென்னைக்கு அழைத்து வந்து விட்டான் ஆதி..

அவனுக்கு எல்லாமே இவள் அவனுடைய மனைவி என்பது யாருக்கும் தெரிந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறான்..

அப்படி இருக்க, அவளும் தெரிந்தும், தெரியாமலும் இந்த விஷயத்தை வெளியே தெரிய கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறான்.. ஆனால் அதுவே அவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையை கொடுக்க போகிறது என்பதை அவன் அறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை..

அப்படி இருக்க, ஒரு மிக பிரம்மாண்டமான கம்யூனிட்டி அபார்ட்மெண்ட் உள்ளே அவனுடைய வாகனம் சென்றது.. அந்த அப்பார்ட்மெண்ட்டின் பிரம்மாண்டத்தை பார்த்த அவள் வாயைப் பிளந்தாள்..

அவனின் இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட் அவனுடைய சொந்த வீடு அங்கு தான் அவளை அவன் அழைத்து வந்தான்.. அவர்கள் வந்த நேரம் இரவு என்பதால் அந்த குடியிருப்பு விளக்குகளால் மிளிர்ந்து கொண்டு இருக்க அந்த அழகை அமைதியாக ரசித்தவளுக்கு ஏனோ அந்த இடம் மிகவும் பிடித்து போனது..

அதை விட அவளால் எப்படி இயல்பாக அவளின் ஆதி அண்ணாவிடம் இப்படி பேச முடிகிறது என்பது அவளுக்கு இன்னும் விளங்கவே இல்லை..

ஆதியை கண்டாலே பயக்கும் அவளுக்கு இப்போது அவனிடம் அவளுக்கு தேவையானதை கேட்கும் அளவுக்கு தைரியம் வந்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கல்பனா சொன்னது போல அவர் கட்டிய தாலி தான்.. மஞ்சள் கயிறு மேஜிக் என்று சொல்வார்களே அது அவளுக்கு வேலை செய்து இருக்கிறதோ என்னவோ??

"இந்த தாலி என்னுடைய கழுத்தில் இருக்கும் வரை யாராலும் என்னை திட்ட முடியாது தேங்க்ஸ் டி கல்பனா உன்னோட ஐடியா மூலமா தான் இப்போ நான் அவர் கூட சென்னை வந்து இருக்கேன்.. என்னோட அம்மா தொல்லையில் இருந்து தப்பிச்சிட்டேன்" என மானசீகமாக தன் தோழிக்கு நன்றி கூறிய அவளுக்கு இந்த விஷயத்தில் உறுதுணையாக இருந்தது என்னவோ அவருடைய தோழி கல்பனா தான்..

ஆம் கல்பனாவின் அறிவுரைப்படி தான் அவள் நடந்து கொண்டிருக்கிறாள்.. மாலதி வந்து அழைத்ததும் அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை... ஒரு பக்கம் மனோன்மணி அவளுக்கு அறிவுரை கூற, அவளுடைய சோகத்தை அவளுடைய தோழி கல்பனாவிடம் கூற கல்பனாவும் மனோன்மணிக்கு கூறியது போல, "அவர் உன்னோட புருஷன் தானே.. அவர் கூட போயிடு.. யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க.. அடிக்க மாட்டாங்க.." என்க

"அப்போ ஆதி அண்ணா மறுத்துட்டார்ன்னா என்ன பண்றது??" என்ன கண்மணி பாவமாக கேட்க,

"அவர் மறுத்தார் வை உன்னோட புருஷன் தானே கட்டி பிடிச்சிடு.. முடிஞ்சா ஒரு முத்தம் கொடுத்திடு.. அப்போ பார் எப்படி உன் காரியம் எல்லாம் நடக்கும்னு.. நான் எவ்வளவு ரொமான்டிக் படம் பார்த்திருப்பேன்.. அதுல எல்லாம் பொண்ணுங்க ஏதாவது காரியம் சாதிக்கணும்னா புருஷன் கிட்ட இப்படித்தான் நடந்துப்பாங்க" என அவள் கூறியதன் விளைவாகவே, அவள் அவனை கட்டி பிடித்து தன்னுடைய காரியத்தை சாதித்து இருக்க, அந்த சந்தோஷத்தில் தன் தோழியை நினைத்துப் பார்க்க, "கல்பனா உன்னோட ஐடியா செம.. சூப்பர் இதை வச்சுட்டு நான் வாழ்க்கையை ஓட்டிடுவேன் டி" என்று மனதுக்குள் தன் தோழிக்கு புகழ்மாலையை சூட்டிக்கொண்டு வரும் அவளுக்கு தெரியவில்லை..

இதே வேலையை தொடர்ந்தால் இதனால் அவள் அடைய போகும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top