மோகம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மோகம் - 10

"ஒரு 18 வயசு பொண்ணு உன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிட்டு இருக்கா" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் ஆதியின் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது.. காரை ஓட்டிக்கொண்டு எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தான் என்று கூட அவனுக்கு தெரியவில்லை அந்த அளவுக்கு அவன் எரிச்சலில் இருந்தான்..

விடியற்காலையில் ஆதி வீட்டுக்குள் நுழைந்தான்.. அவனுடைய அம்மா சொல்லி கூட கேட்காதவனை ஒரு சிறு பெண் வரவழைத்து விட்டாள் என்ற எண்ணம் அவனுக்கு எழாமல் இல்லை.. அதை சொல்லி தான் விக்கி வேறு ஆதியை வெகுவாக கிண்டல் செய்து இருந்தான்..அந்த கோபம் எல்லாம் கண்மணியிடம் அவனுக்கு உள்ளது..

இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் வீட்டுக்குள் நுழைய மனோன்மணி யோகா செய்வதற்காக எழுந்து இருந்தார்..

அப்போது அவன் உள்ளே நுழையவும் அவரை அவன் எதிர் கொள்ளவும் சரியாக இருக்க அம்மாவை இங்கு அவனின் அம்மாவை கண்டதும் இறுகிய முகத்தோடு எதுவும் பேசாமல் தனக்கு இன்னும் உங்கள் மீது கோபம் இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதத்தில் அவன் செல்ல முனைய அதை எல்லாம் கண்டு கொள்ளாத மனோன்மணி, "ஆதி ஒரு நிமிஷம்" என்றார்..

அவர் கூறவும் அவனோ இதுவரை அடக்கி வைத்து இருந்த கோபத்தை எல்லாம் அவன் முகத்தில் கொணர்ந்து, "எதுக்கு மா?? என்னை இப்படி படுத்திட்டு இருக்கீங்க?? இப்போ நான் வந்ததுக்கு காரணம் கூட நீங்க தான்..ஒரு பதினெட்டு வயசுல ஒருத்தியை கல்யாணம் பண்ணி வைச்சு என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க..

நான் தான் தெளிவா சொல்லிட்டு போனேன்ல.. அவள் இங்கே படிக்கட்டும்னு அதைப் புரிஞ்சுக்க கூட முடியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க..

இப்போ பாருங்க என்னை வர சொல்லி இருக்கா.. அவளை கூட்டிட்டு போகணுமாம்.. இவளை அங்கே கூட்டிட்டு போய் நான் என்ன பண்ண போறேன்??.. அங்கே போயும் இவளை காட்டி என்னுடைய பொண்டாட்டின்னு சொல்லி நான் அசிங்கப்படவா??" என அவன் கடுப்பாக கேட்டான்..

ஏனெனில் அந்த டென்ஷன் தான் அவனுள் வெகுவாக தாக்கிக் கொண்டிருந்தது... அவன் என்னவோ கண்மணியின் முட்டாள்தனமான கோபம் தான் இதெல்லாம் என எண்ணிக் கொண்டு இருக்கிறான்..

இது நாள் வரை வாழ்ந்த வீடு அவளுடைய வீடு அல்லவா அதில் போய் இருந்தால் என்ன?? இப்போது மட்டும் என்ன இவளுக்கு வந்து விட்டது?? புருஷன், வெண்டைக்காய் என அளந்து கொண்டிருக்கிறாள் அவள் பேச்சைக் கேட்டு என்னை இதுவரை அவள் வர வைத்திருக்கிறாள் என்ற கடுப்பு தான் அவனுக்கு வந்தது..

ஆனால் அவர் தான் இதற்கு பின்னால் இருக்கிறார் என்பது இன்னும் அவனுக்கு தெளிவாக புரியவில்லை என்பதை மனோன்மணி புரிந்து கொண்டார்..

அப்படி இருக்க, "என்ன பண்றது ஆதி?? நானும் சொல்லிப் பார்த்தேன்.. அவள் அவளுடைய வீட்டுக்கு போக மாட்டேன்னு சொல்றா.. அவளுக்கு இங்கே தான் இருக்கணுமாம்.. இங்கே இருக்க உன்னோட அத்தை விடல.. அப்போ நான் என் புருஷன் கூட போயிடுறேன்.. அங்க போய் படிக்கிறேன்னு சொல்றா.. என்னை கூட்டிட்டு போய் டீசி வரை அப்ளை பண்ணிட்டா..." என்று அவரும் எதுவுமே தெரியாது போல காய் நகர்த்தினார்..

அவனோ அதை எல்லாம் கேட்டு, "யாரைக் கேட்டு அவள் டிசி அப்ளை பண்ணினா?? எல்லாரும் சேர்ந்து என்னை நல்லா வெச்சு செய்யறீங்க?? நீங்க கொஞ்சம் நல்ல புத்தி சொல்லி கொடுக்க வேணாமா?? ஒரு நாள் எதுவுமே வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு போக போறேன்.. அப்ப நீங்க எல்லாம் வருத்தப்பட போறீங்க.. அவளுக்கு இருக்கு" என்று புலம்பினாலும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவன் அங்கிருந்து அவனுடைய அறைக்கு சென்றான்.. அவரும் அதையெல்லாம் பார்த்து மெல்லிய புன்னகையோடு, "போடா உன்னோட அப்பனையே நான் பார்த்து இருக்கேன் நீ வேற.. எப்படி உன்னையும் அவளையும் சேர்த்து வச்சு இந்த கல்யாணத்தை பண்ணினேனோ எப்படி உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு நல்ல படியா வாழ வைக்கணும்னு எனக்கு நல்லா தெரியும் கிளம்பு கிளம்பு" என்று முனகிக் கொண்டு அவர் அவருடைய வேலைகளில் மூழ்கினார்..

அங்கு அவனுடைய அறையின் கதவை மெல்ல திறக்க அங்கு அவள் உறங்கி கொண்டு இருந்தாள்.. அவள் மீது அத்தனை ஆத்திரத்தில் வந்தவன் முகம் அவளை கண்டதும் மெல்லிய புன்னகையை சிந்தியது..

ஆம்.. அழகாக உறங்கி கொண்டு இருந்தாள்..அதுவும் ஒரு டெடி பியரை கட்டிப்பிடித்து அவளின் ஒரு பக்கம் ஒரு தலையணை மறுபக்கம் டெடி பியர் நடுவில் அவள் என உறங்கி கொண்டு இருந்தாள்..

அவனோ அறையை சுற்றி பார்க்க அவனுடைய அறையை முழுவதுமாக அவள் ஆக்கிரமித்து, அவனுடைய படுக்கையை அவளுடைய படுக்கையாக்கி துயில் உறங்கிக் கொண்டே இருந்தாள்..

அதை கண்டவனுக்கு ஏனோ அத்தனை நேரம் அவள் மீது இருந்த கோபம் நொடியில் போனது போல இருந்தது..

அவள் உறக்கம் கலையா வண்ணம் கதவை அடைத்தவன் அவளைப் பார்த்துக் கொண்டு வர அவனுடைய அறை இந்த மூன்று வாரத்தில் அவளுடைய அறையாக மாறி இருந்தது..

எதிலும் நேர்த்தியை கடைபிடிக்கும் அவனுக்கு ஆங்காங்கே முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி இருக்கும் பொட்டுகள், அவளின் சிதறி கிடக்கும் உடைகள், அவள் பாதி தின்று வைத்த சாக்கெட்டுகள், அவளின் புத்தகங்கள், அவள் நேற்று வைத்த மல்லிகை பூ பாதி கசங்கிய நிலையிலும் அந்த அறையை அதன் வாசனையால் நிறைக்க இது எல்லாமே அவனுக்கு என்னவோ போல இருந்தது.. இதெல்லாம் என்ன என அவனுக்கு புரியாமல் இல்லை..

பெண் வாசனையை நுகர துடிக்கும் ஆணின் உணர்ச்சி விளிம்பு என்பதை அவனால் உணர முடிந்தது..

அப்படியே அவள் முகம் பார்க்க, அவன் காட்டிய தாலி அவளுக்கு அரணாக அவள் கழுத்தை சுற்றி இருக்க அவள் அணிந்து இருந்த நைட்டியின் ஜீப் பாதி அவிழ்ந்து இருக்க, அவளின் உள்ளடைகளுக்கு நடுவில் முட்டி மோதி அவனுடைய கண்களுக்கு விருந்தாக அமைந்த அவளின் பெண்மையும், அவனை எப்போதும் தொல்லை செய்யும் அவளின் மார்பில் இருக்கும் அந்த பளீர் மச்சம் அவனை உருக்குலைக்க அதிலும் அவளின் உடை கால் முட்டி வரை தூக்கி இருக்க, அவளின் வெண் பளிங்கு கால் வேறு அவனின் உணர்வுகளுக்கு மேலும் விருந்தளிக்க, அவனால் சத்தியமாக முடியவில்லை. அவனின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.. அவனின் முகம் குப்பென சிவந்து விட்டது..ஆம் உணர்வுகளின் வீரியத்தில் அவன் சிவந்து விட்டான்..

அவன் ஒன்றும் சாமியாராக வாழ வேண்டும் என விரும்பிய ஒருத்தன் அல்லவே.. அவனுக்கும் இயல்பான சம்சார வாழ்க்கை விருப்பம் உள்ள ஒருவன் தான்..

ஆனால் சைந்தவி அவன் வாழ்க்கையில் வேண்டாம்.. அவளுக்கும் அவனுக்கும் சேராது என்ற நிலைப்பாடு மட்டும்தான் அவனுக்கு பிரச்சனையாக இருந்ததே ஒழிய வேறொன்றும் பிரச்சினையாக இல்லை..

இதோ இப்பொழுது இவள் பார்க்க பெரிய பெண் போல தான் காட்சியளிக்கிறாள்..

ஆனால் வயதோ பத்தொன்பதை கூட தொடவில்லை... அது அவனை குத்துகிறது.. அவளைக் காணும் பொழுது இதெல்லாம் அவனுக்கு உரைக்கிறது.. நன்றாகவே தெரிகிறது.. அவளுக்கு அவன் சரியான ஆள் இல்லை என்பதை உணர்கிறான்.. அவளுக்கும் அவனுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் அவனை மூச்சுவிட முடியாமல் தடுக்கிறது..

அதே நேரம் அவளோடு அவன் தனியாக இருக்கும் பொழுது ஒரு கணவனாக இவள் என்னவள் என்ற உணர்வு மேலிடுகிறது.. அந்த உணர்வை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை..அதனால் தான் திருமணம் ஆன அன்று அத்தனை ஆத்திரத்திலும் அவன் கண்ட கனவு இன்று வரை அவனை விட்டு மாய வில்லை..

அதனால் மட்டும்தான் இவளிலிருந்து அகன்று நிற்க வேண்டும்.. அதுதான் தனக்கு சரியான முடிவாக இருக்கும் என கருதி அவன் விலகி நிற்கிறான்..

ஆனால் மீண்டும் இயற்கை அவனை அவள் அருகே கொண்டு வந்து இருக்க என்ன செய்வது என அவனுக்கு தெரியவில்லை..

உறங்கும் அவளையே வைத்த கண் வாங்காமல் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.. சில நிமிடம் பரிவாகவும், சில நிமிடங்கள் உணர்வின் விளிம்பிலும், சில நிமிடங்கள் குற்ற உணர்ச்சியிலும், சில நிமிடங்கள் அவள் மீது உள்ள அக்கறையிலும், சில நிமிடங்கள் தான் எந்த தவறும் செய்து விடக்கூடாது என்ற நிதானத்திலும், சில நிமிடங்கள் ஒரு கணவனின் பார்வையாகவும், அவள் மீது நிலைத்து இருக்க, இந்த தருணத்தில் அவள் அருகே போய் அவன் படுத்தால் அவனையே அவனால் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த அவன் ஒரு மேசையின் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து விட்டவன் ஒருக்களித்து அவளை பார்த்து கொண்டே பயண அலுப்பில் உறங்கி விட்டான்...

எப்போது உறங்கினான் என அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் அவன் நன்றாக உறங்கி கொண்டு இருக்கும் போது, "ஆதி அண்ணா... ஆதி அண்ணா" என கண்மணி அவனின் தோளை தொட்டு எழுப்ப டக்கென்று உறக்கம் கலைந்த அவனின் முகத்தின் அருகே அவள் அவ்வளவு நெருக்கமாக அவள் கையில் காபி கப்போடு நின்று கொண்டு இருந்தாள்..

தீடிரென அவ்வளவு நெருக்கத்தில் அவளை கண்டதும் அவனோ பொங்கி எழுந்த உணர்வை அவனுக்குள் அடக்கி, "என்ன??" என பதட்டத்தோடு கேட்டான்..

"ஆதி அண்ணா.. என்ன இது?? இங்க படுத்து இருக்கீங்க?? கட்டில்ல படுத்து இருக்கலாம் இல்ல??" என பரிவாகவும் அதே சமயம் அவளுக்கு எழுந்த குற்ற உணர்ச்சியோடும் கண்மணி கேட்டாள்..

அதற்குள் மெல்ல எழுந்த ஆதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, "அதுக்கு எனக்கு படுக்க இடம் வேணும்ல" என்று கூறவும், அவளோ நாக்கை கடித்துக் கொண்டு, "அது தனியா படுக்க ஒரு மாதிரியா இருந்துச்சு.. எப்பவும் அம்மா கூடவோ இல்ல தம்பி கூடவோ படுத்து தூங்கி பழக்கம்.. தனியா தூங்குறதுனால தான் உங்க தலையணையை என் பக்கத்துல வச்சுட்டு என்னோட பொம்மையை இந்த பக்கம் வச்சு படுத்தேன்.. நீங்க வந்தது கூட எனக்கு தெரியல" என அவன் முகத்துக்கு நேராக காபியை நீட்ட அவனுக்கோ அவனின் கனவு ஏனோ அந்த நொடி ஞாபகத்துக்கு வந்து போக தன் தலையை கோதி விட்டுக் கொண்டே தன் உணர்வுகளை அடக்கி, "அங்க வை நான் எடுத்துக்கிறேன்" என்று அவளிடம் இருந்து விலகும் படி கூறினான்..

அவள் முகத்தை பார்க்கும் போது என்னவோ அவனுக்கு இருந்த கோபம் அந்த நொடி இல்லை... ஆனால் அவளோ அவனை வெறுப்பேற்றும் விதமாக கீழே மாலதி மற்றும் சாதாசிவத்தின் குரலை கேட்டதும் பதட்டம் அடைந்தவள், "ஆதி அண்ணா அம்மா, அப்பா வந்துட்டாங்க.. என்னை கூட்டிட்டு போகத்தான் வந்திருக்காங்க.. நான் அங்க போக மாட்டேன்.. ஆதி அண்ணா... என்னை நீங்க கூட்டிட்டு போயிடுங்க.. நான் உங்க கூட வரேன்.. நீங்க சொன்னா தான் கேட்பாங்க" என்று மெல்லிய குரலில் கூறினாள்..

அதை கேட்டதும் அவனுக்கு கோபம் வர அவ்வளவு நேரம் இருந்த அவனுடைய மென்மையான பக்கம் போய் அழுத்தமாக மாறி, "உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு கண்மணி.. நீ படிச்சிட்டு இருக்க.. அங்க வந்து நீ என்ன பண்ண போற?? நான் வேலை வேலைன்னு இருப்பேன் உன்னை என்னால் கவனிச்சுட்டு இருக்க முடியாது.. பாதியில் காலேஜ்ல சீட் கிடைக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம்.. நான் வேணும்னா உன்னோட அம்மா, அப்பா கிட்ட பேசுறேன்... நீ இங்கே இருந்து படி அவ்வளவுதான்.. என்னால சொல்ல முடியும்.. நீ நெனச்ச மாதிரியெல்லாம் என்னால ஆட முடியாது கண்மணி" என்று அவன் கோபத்தோடு கூற அவளோ எங்கே அவன் ஏதாவது பேச போய் மாலதி சம்மதிக்காமல் அவளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவாரோ என்ற பீதியில் அவள் என்ன செய்கிறாள் என்ற நினைவே இல்லாமல் அவனே எதிர்பார்க்காத தருணத்தில் அவனை அணைத்தவள் கட்டி பிடித்து கொண்டு, "நீங்க என்னோட புருஷன் தானே.. நான் உங்களை விட்டு போக மாட்டேன்.. நான் உங்க கூட தான் இருப்பேன்.. தயவு செய்து அம்மாகிட்ட பேசாதீங்க.. என்னை அழைச்சிட்டு போங்க.. பிளீஸ் ஆதி அண்ணா" என அவனை ஒரு ஆவேசத்தில் இறுக்கமாக அணைத்து கொண்டு அவள் கிசுகிசுப்பான குரலில் கூற அவ்வளவு வீராப்பாக பேசியவன் இவள் அணைக்கவும் அவனின் சர்வ நாளங்களும் தாண்டவம் ஆடிக் கொண்டு இருந்தது.. இனி ஆதி என்ன செய்வானோ???



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top