வர்ணம் 2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

வர்ணம் - 2

அதை கேட்டவர், "ஆமாமா அவன் தான் கல்யாணம் பண்றேன்னு சொன்னான்.. ஆனால் ஜோசியர் சொன்ன மாதிரி கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை நடந்து இவனே முன்கோபக்காரன் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டா என்ன பண்றது???" என்க

"அவன் செஞ்சாலும் செய்வான்.. ஆனால் என்ன ஆனாலும் அந்த கல்யாணம் நடக்கணும்..இதை விட்டா வேறு வழி நமக்கு இல்லை" என்று கருணை அம்மாள் கூற,

பாக்கியம், "ஆமாம் மா நானும் அதை தான் சொல்றேன்..  33 வயசு எல்லாம் தனியா வாழ வேண்டிய வயசா? ஏதோ அந்த மாரியாத்தா தான் இப்படி ஒரு நினைப்பை அவனுக்கு கொடுத்திருக்கிறார்" என கூறி தன் கண்களை துடைத்துக் கொண்டார் பாக்கியம்..

கருணை அம்மாளும், "நீ வீட்டுக்கு போய் உன் மகன் கிட்ட பேசு.. இப்பதானே அவன் சரின்னு சொல்லி இருக்கான் பொண்ணு பார்க்கவான்னு கேளு.. நாம பொண்ணு பார்க்க துவங்குவோம்" என்று கூற அதை கேட்டு சரி என கூறினார் அவர்..

ஆம் மகன், "எனக்கு இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் வேணும்" என பாக்கியத்திடம் கூறிவிட அதைக் கேட்டு இடியே விழுந்த மாதிரி இவன் உண்மையை தான் சொல்கிறானா இப்படி ஒரு எண்ணம் அவனுக்கு இருக்கிறதா என நினைத்து தன் அம்மாவை அழைத்துக் கொண்டு ஜோசியரிடம் போய் எல்லா விவரத்தையும் கேட்டுவிட்டு வீட்டிற்கு சென்றார் பாக்கியம்..

வீட்டுக்கு சென்றதும் மகனுக்காக காத்திருக்க இறுகிய முகத்தோடு கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தான் நிரஞ்சன் வயது 33... 33 வயதுக்கு காண உயரமும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் பலன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒருவன் அவன்..அவனின் அனைத்து விடயங்களிலும் ஒரு நேர்த்தி இருக்கும்..

முன் கோபம் அவனின் உறைவிடம் கடந்த ஒரு வருடமாக அவனுக்கு கோபம் மட்டும் தான் வாழ்க்கை என வாழ்ந்து வருகிறான் காரணம் அவன் மனைவி இறந்து ஒரு வருடம் தான் ஆகிறது.. அது தான் அவனின் அழுத்தத்துக்கு காரணம்..மனைவி இறந்த பின் புகை மற்றும் மதுபான பழக்கத்தை வம்படியாக பழகி கொண்டு இருக்கிறான்.. கேட்டால் அவனின் அழுத்தத்துகான மருந்து என கூறுகிறான்..

ஆனால் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லாததால் அவனின் வலிகளையும் வேதனைகளையும் வெளியே காட்டிக் கொள்வதில்லை..

ஏற்கனவே அவனிடம் பேச்சு குறைவு அப்படி இருக்க, இப்போது மேலும் இறுகி அவனுள் சுருண்டு கொண்டான்...

அவனின் இந்த நிலைமையை பார்த்து பெற்றவர்களுக்கு மிகவும் வருத்தம் அவன் தான் உலகம் என வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு அவனை எப்படி கரை ஏற்றுவது என்று தான் தெரியவில்லை..

அப்படி இருக்க அவன் தான் அவனுடைய அம்மாவிடம் கூறினான் திருமணம் செய்கிறேன் என அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவர் ஜாதகம் பார்க்க செல்ல ஜோசியர் குண்டை தூக்கி போடவும் மகனிடம் அதெல்லாம் கூறாமல்,"பெண் பார்க்க வா?" என கேட்க காத்திருக்க அவனும் வீட்டுக்கு வந்தான்..

எப்போதும் போல அவரை கண்டு கொள்ளாமல் அவனுடைய அறைக்கு செல்ல அவரோ, "தம்பி" என்க

அவனோ அப்படியே நின்றான்.. "பொண்ணு பார்க்க தரகர் கிட்ட சொல்லட்டுமா??" என தயங்கி தயங்கி கேட்க,

தன்னுடைய அம்மாவை பார்த்து இறுகிய முகத்தோடு, "பாருங்க" என்று கூறும் பொழுதே அவன் கண்களில் வலியை பாக்கியம் உணர்ந்தார்.. அவருக்கு பெரிய சமாதானம் ஆகியது.. அவர் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் முன் மகன், "ஆனால் ஒரு கண்டிஷன்" என்றான்..

"ஐயோ கண்டிஷனா என்ன சொல்ல போறான்னு தெரியலையே.. இவன் எனக்கு தான் பிறந்தானா இல்ல கண்டிஷனுக்கு பிறந்தானா" என புலம்பி கொண்டு தன் மனதில் மகனை பற்றி நினைத்ததை பற்றி வெளியே சொல்லாமல், "சொல்லுப்பா" என கூற, "என்னை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு என்னை மாதிரி இருக்கணும்.. அந்த பொண்ணுகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுங்க" என்க,

அவரோ, "உன்னை மாதிரி நீ மட்டும் தான ப்பா இருக்க முடியும்" என வாய் வரை வந்ததை அடக்கி கொண்டு மகனை புரியாத பார்வை பார்க்க, "அந்த பொண்ணுக்கும் இது இரண்டாவது கல்யாணமா இருக்கணும் விவாகரத்து ஆன பொண்ணு இல்லை புருஷனை இழந்த பெண்.. கை, கால் சுகம் இல்ல யாரா இருந்தாலும் எனக்கு ஓகே தான் கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு வேணும் அவ்வளவுதான்.. ஆனால் என்னை பற்றி எனக்கு நடந்ததை பற்றி எனக்கு நடக்கப்போறதை பற்றி எல்லாமே அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கணும்" என்று அவன் கூறிவிட்டு, தன் வேலை முடிந்தது என்பது போல சென்று விட, அவன் சென்றதும் மூச்சை இழுத்து விட்டு இதுக்கெல்லாம் யார் சம்மதிக்க போறாங்களோ தெரியல என எண்ணி இப்படியாவது சம்மதம் சொன்னானே அது வரையில் போதும் என எண்ணி அவர்கள் பெண் தேட துவங்க அவ்வளவு எளிதாக பாக்கியம் மற்றும் கலையரசன் தம்பதிகளுக்கு பெண் கிடைக்கவில்லை.. அவர்களும் நாலா பக்கமும் தேடி கலைத்து போய் கிட்டத்தட்ட மூன்று மாதம் ஓடி விட்டது..

இந்த காலத்தில் முதல் திருமணம் என்றாலே பெண் கிடைப்பதே கஷ்டம் அப்படி இருக்கையில் இரண்டாம் திருமணம் என்றால் யார் தான் அவ்வளவு எளிதாக சம்மதம் தெரிவிப்பார்கள் அதுவும் முதலில் இவர்கள் அவர்களின் தரத்திற்கு ஏற்ற பெண்ணை தேடி கலைத்து போனார்கள்..இவன் விவாகரத்து ஆன பெண் வேண்டும் இல்லையென்றால் அவனை போல மனைவியை இழந்த பெண் தான் வேண்டும் என கூற அதுபோல பெண்ணை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை..

அப்படி இருக்க, மீண்டும் பாக்கியத்தின் அம்மாவின் பெற்றோரான கருணை அம்மாள், முத்தையன் அவர்கள் முன் சென்றார்கள் அவர்களிடம் விசயத்தை கூறி, வசதி குறைந்த பெண் ஆனாலும் பரவாயில்லை  என கூறி விட
அவர்களும் பெண் தேடுவதாக கூறி தேட துவங்க இறுதியில் நிரஞ்சன் சொன்னது போல கிடைத்த பெண் தான் நிர்மலா ..

நிர்மலா வேறு யாருமில்லை கருணை அம்மாள் மற்றும் முத்தையன் இருக்கும் கிராமத்தில் ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்த பெண் தான் நிர்மலா கணவன் குடிக்கு அடிமையாகி திருமணம் ஆகி ஒரு வருடத்தில் அவனும் இறந்துவிட அந்த பெண் டவுனில் ஒரு சிறிய வேலை செய்து கொண்டு தன் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தாள்..

கருணை அம்மாள் மற்றும் முத்தையன் இருவருக்கும் அந்த குடும்பத்தை பற்றி நன்றாக தெரியும் பல சூழ்நிலையில் அவர்களே இந்த குடும்பத்திற்கு உதவி இருக்கிறார்கள் நிர்மலாவை படிக்கவும் வைத்திருக்கிறார்கள்..மேலும் அவளுடைய தங்கைக்கு கூட படிக்க உதவி செய்து இருக்கிறார்கள்..

அந்த பெண்ணை பார்த்து கருணை அம்மாள் மற்றும் முத்தையன் இருவருக்கும் பிடித்து போய்விட விஷயத்தை பாக்கியம் மற்றும் கலையரசன் இருவருக்கும் கூற, அவர்களும் பெண்ணை பார்க்க வந்தார்கள்.. நிர்மலாவின் குடும்பமோ மிகவும் வசதி குறைந்த குடும்பம்.. நிர்மலா மற்றும் கணவனை இழந்த நிர்மலாவின் தந்தையின் இரண்டாவது மனைவி அதாவது அவளின் சித்தியான சாந்தி இருவரும் வேலைக்கு போய் தான் அந்த குடும்பம் வண்டி ஓடி கொண்டு இருந்தது.. சாந்திக்கு ஒரு மகள் இருக்கிறாள் அவள் மட்டும் கல்லூரியில் படித்து வருகிறாள்.. அவளுடைய பெயர் கயல்விழி..

இவர்களின் வசதிக்கு ஏணி வைத்தாலும் எட்டாது என்றாலும் அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் நிர்மலாவை நிரஞ்சனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என ஏற்பாடு செய்யப்பட்டது..

சாந்திக்கு தான் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. பெரிய சம்பந்தம் என்றவுடன் அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியவில்லை.. ஆனால் இந்த சம்பந்தம் அமைந்துவிட்டால் தன் குடும்பத்தின் கஷ்டம் மாறிவிடும் என்ற நம்பிக்கையும் சாந்திக்கு இருந்தது.. அதன்படி நிர்மலாவுக்கு நிரஞ்சனின் புகைப்படத்தை காட்டியவர்கள் அவர்களிடம் விசயத்தை எல்லாம் கூறி சம்மதம் பெற்ற பின் மகனிடம் புகைப்படத்தை காட்ட போக அவனோ புகைப்படத்தை கூட பார்க்காமல், "எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை வைக்க முடியுமோ வைங்க" என்றான்..

அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் முடிவு செய்யப்பட்டு பாக்கியத்தின் சொந்த ஊரில் உள்ள கோவிலில் திருமணம் வைத்து கொள்ளலாம் என முடிவு செய்து அதோ இதோ என திருமண நாளும் வந்து விட்டது..

மணமகன் இதோ மணமேடையில் அமர்ந்து இருக்கிறான்.. அவன் கண்ணில் தாங்க முடியா வலி இருந்தது.. அதை பிறர் அறியா மறைத்து கொள்ள இறுகி போய் அமர்ந்து இருந்தான்.. அவன் மனம் முழுவதும் அவனின் ஜானகி மட்டுமே நிறைந்து இருக்க விருப்பமே இல்லாத இந்த திருமணத்தில் அவனால் சம்மதம் தெரிவிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் அவனின் பூரண சம்மதத்தோடு அவன் அமர்ந்து இருக்கிறான்... ஆனால் அவனுக்கு அவனின் உடலை இப்போதே யாராவது வெட்டி போட்டால் என்ன எனும் அளவுக்கு வலி நிறைந்து இருந்தது..தான் ஜானகிக்கு துரோகம் செய்வதாக நினைத்தான்..

அவன் மனதில் ஜானகி மட்டும்தான் இந்த நொடி வரை நிறைந்து இருக்க பிறகு எதற்காக இந்த திருமணம் விருப்பம் இல்லா திருமணத்திற்கு அவன் ஏன் விருப்பம் கொண்டான்??? இப்படி அவசரப்பட்டான்??? அப்படி என்ன தான் நிரஞ்சனின் வாழ்கையில் நடந்தது?..

ஆனால் அவன் அப்படி இருக்க, கருணை அம்மாள் மற்றும் பாக்கியம் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்தார்கள்..

குறிப்பு :

Like and comments மூலம் உங்களின் விருப்பங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top