வர்ணம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

அத்தியாயம் : 5

"அம்மா என்னம்மா திடீர்னு நீங்க பாட்டுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேண்டாம் மா" என்றாள்..

ஏனெனில் அவள் மனதில் வேறு ஒருவன் இருந்தான்..படித்து முடித்து வேலைக்கு சென்று தன் தாயிடம் பொறுமையாக இதை பற்றி பேச வேண்டும் என தன் மனதை வெளிக்காட்டாமல் இருந்தாள்..அவளின் காதலன் பெயர் கிஷோர் அவன் அவள் படிக்கும் கல்லூரியில் தான் படிக்கிறான் அவளுக்கு சீனியர்..அவனுக்கு அவளை கண்டதும் பிடித்து விட்டது..அவள் பின்னால் சென்று அவளை வற்புறுத்தி அவனை காதலிக்க வைத்து விட்டான்...அவன் சற்று கோபக்காரன் வேறு கல்லூரியில் ரவுடி வேறு மாணவர்களுக்குள் எந்த பஞ்சாயத்து என்றாலும் அவனிடம் தான் வருவார்கள் அவனை இப்போது வரை யாராலும் அடக்க முடியாது..கொஞ்சம் பணம் இருக்கும் ஒருவன் அவன் பின்னால் சுற்ற பலர் இருந்தாலும் அவன் பார்வை விழுந்தது என்னவோ கயல் மீது தான் ஆரம்பத்தில் அவளுக்கு அவன் மீது பயம் இருந்தாலும் போக போக அவளுக்கு அவனை பிடித்து போய் விட்டது..

அதே போல இந்த எண்ணத்தால் தன் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்றும் அவள் அம்மா முன்னிலையில் அவள் படித்து நல்ல நிலைக்கு வந்த பின் இந்த விஷயத்தை கூற வேண்டும் என அவள் நினைத்துக் கொண்டிருந்தாள் அதற்குள் அக்காவின் திருமணமும் அவள் ஓடிப் போய்விட பிரச்சனை எல்லாம் வேறு ரூபத்தில் வந்துவிட்டது..

அவரோ  அவள் சொன்னதை கேட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு, "நான் சொன்னா கேட்பியா மாட்டியா??" என்று கேட்டார்..

"கேட்பேன் மா.. ஆனால் அவரை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்கிறது அவர் வயது என்ன என்னோட வயசு என்ன அவரு என்னோட காலேஜ்ல தான் வேலை செய்கிறார் உங்களுக்கு தெரியுமா??.." என்றாள்... அவள் மனமோ அம்மா இப்படி கூறியதில் இருந்து மிகவும் பாரமாக இருந்தது...

அதெல்லாம் சாந்தியின் காதுகளுக்கு விழவில்லை.. "அவர் என்னவாவோ இருந்துட்டு போகட்டும்.. எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை இப்போ இந்த கல்யாணம் நடக்கணும்.. அவங்க நல்ல குடும்பம் என்னால அவங்க பாதிக்கப்படக்கூடாது" என்றாள்..

"அம்மா அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு!!" என்க

"நான் உன்னோட அப்பாவுக்கு இரண்டாம் தாரம் தான் ஏன் உன்னை பெத்து நல்லபடியா வளர்க்கவில்லையா? உனக்கு கொடுக்கறதை விட அதிகமான அன்பை நான் உன்னோட அக்கா நிர்மலாவுக்கு கொடுத்தேன்.. உங்களுடைய அப்பா நீ பிறந்து மூணு மாசத்துல இருந்து நம்மளை விட்டு போயிட்டார்.. உன்னுடைய அப்பாவோட முகம் கூட உனக்கு தெரியாது.. என் கையில் இரண்டு பிள்ளைகள் நிர்மலா அப்புறம் நீ..

திக்கு தெரியாம நின்னேன்.. அப்போ ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் என்னோட வயசை பார்த்து என் மேல சபலப்பட்டாங்க எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்ல.. ஆனால் கருணையோடு உதவி செஞ்சவங்கதான் இந்த கருணை அம்மாள் அப்புறம் முத்தையன் ஐயா..

அவர்கள் வீட்டில் தான் நான் வேலை செஞ்சேன்.. உங்களை எல்லாம் படிக்க வச்சேன்.. அவங்க உதவி இல்லாமல் நீங்க வளர்ந்து ஆளாகி இருக்க மாட்டீங்க இப்போ அவங்க வருத்தப்பட்டு நிற்பதை நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன் உன்னோட அக்கா செஞ்சுட்டு போனதையே என்னால ஜீரணிக்க முடியாம இருக்கேன்.. பெத்தவங்க மனசு புரிஞ்சுக்காம காதல் கீதல்னா சுத்துற உங்களை எல்லாம் என்னன்னு சொல்றது?? இந்த சமயம் எதைப் பற்றியும் என்னால யோசிக்க முடியல.. கயல் ஒரு அம்மாவா உங்க கிட்ட கேட்கிறேன்.. என் மானத்தை காப்பாத்து.. நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ இல்ல அப்படின்னா என்னோட பொணத்தை தான் நீ பார்ப்ப" என்று எமோஷனல் பிளாக்மெயில் செய்தார் சாந்தி..

சாந்தியின் நிலைமை அப்படித்தான் இருந்தது சாந்தியால் எதையும் யோசிக்க முடியவில்லை எனக்கு உதவி செய்தவர்களை நான் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் மட்டும்தான் அவருக்கு இருந்தது.. அதனால் எந்த கஷ்டத்தையும் அவர் தாங்கிக் கொள்ள தயாராக இருந்தார்..

கயலுக்கு இதை எப்படி ஒப்புக் கொள்வது என்று பயம் பதட்டம் தயக்கம் என எல்லாமே சேர்ந்து அவளை ஒரு வழி செய்தது அவளோ அழுது கொண்டே," அம்மா வேண்டாம் மா நான் உங்க கால்ல வேணா விழறேன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்றாள்.. மனதில் ஒருத்தனை வைத்து கொண்டு வேறொருவருக்கு கழுத்தை நீட்டுவது பாவம் என அவள் நினைத்தாள்..

ஏற்கனவே அக்கா மீது கோபத்தில் இருக்கும் அவரிடம் அவள் எப்படி நானும் காதலிக்கிறேன் என கூறுவாள்..

அதை கேட்ட அவரோ, "ஒருத்தி நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டு போயிட்டா...நீயும் என்னை அப்படி செய்ய பாக்குற எல்லாமே நீங்க தான் உலகம்னு சொல்லி வாழ்ந்தேன் பாரு.. எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும் இந்த கல்யாணம் மட்டும் நடக்கல இதே இடத்தில் என் பிணம்  தான் விழும் " என அவர் கூற அதைக் கேட்டு அவளுக்கு மேலும் வருத்தமாகி போனது..

அவளும் இயன்றவரை அம்மாவிடம் போராடி பார்க்க ஆனால் எதுவும் வேலைக்காகவில்லை சாந்தி பிடித்த பிடியிலேயே பிடிவாதமாக இருந்தார் பிறகு அம்மாவுக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க முடிவு செய்தாள் கயல்..

அவளுடைய மனம் முழுவதும் நரக வேதனையாக இருந்தது இந்த கல்யாணம் சுத்தமாக அவளுக்கு பிடிக்கவில்லை இந்த எதிர்பாராத திருமணத்தை அவள் அறவே வெறுத்தாள்.. அவள் மனதில் கிஷோர் மட்டும்தான் இருந்தான்.. ஆனால் தாயின் மீது உள்ள பாசம் அந்த தடைகளை உடைத்து எறிய அவளுக்கு தடையாக இருந்தது.. கிஷோரா அவருடைய தாயா என பார்க்கும்போது அவளின் மனமெனும் தராசில் அவருடைய தாய் தான் முன்னாடி நின்றார்..

"சரிமா உங்களுக்காக நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்" என ஒரு வழியாக கயல் தன் மனதை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு ஒப்புக் கொள்ளவும் கண்களை துடைத்துக் கொண்டு, "என் கண்ணு நீ நல்லா இருக்கணும்" என்று வாழ்த்தினாலும் உள்ளுக்குள் சாந்திக்கும் வருத்தமாக தான் இருந்தது..ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்..

பிறகு நேராக முத்தையனிடம் வந்தவர், "ஐயா கயல் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா" என்று கூற அவருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவர் கருணை அம்மாளை பார்த்தார்..பாக்கியமும் அவரை பார்த்து,"இப்போ என்னம்மா செய்யறது??" என்று கேட்க,

கருணை அம்மாள் கயலை பார்த்து, "உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா??" என்க

கயல் சாந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையை மட்டும் ஆட்ட, "நம்ம நிரஞ்சனுக்கு இவளை கல்யாணம் பண்ணி வைக்கலாம்" என்று கருணை அம்மாள் தன் மகளை பார்த்து கூறவும், "என்னமா சொல்றீங்க?? பொண்ணு மாறின விஷயம் அவனுக்கு தெரிஞ்சா என்ன ஆகிறது?? அதுவும் இந்த பொண்ணு படிக்கிற பொண்ணு கல்யாணம் கூட ஆகல அவனுக்கு இது இரண்டாவது கல்யாணம்" என்று தயக்கத்தோடு தன் அம்மாவை பார்த்து பாக்கியம் கேட்க,

"அதையெல்லாம் யோசிச்சிட்டு இருந்தா வேலைக்காகாது அதுதான் சாந்தியே மனதார ஏத்துக்கிறேன்னு சொல்றாலே அப்புறம் என்ன?" என்க இருந்தாலும், "அம்மா" என பாக்கியம் இழுத்தார்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top