வர்ணம் 4
வர்ணம் -;4
இந்த திருமணத்தில் ஐயரையும் சேர்த்து ஒரு பத்து பேர் கூட இருக்க மாட்டார்கள் அதுவும் நிர்மலாவையும் சேர்த்து அவள் வீட்டில் மூன்று பேர்.. நிரஞ்சன் வீட்டில் அவனையும் சேர்த்து ஐந்து பேர் அப்படி இருக்க, இவர்கள் கண்ணில் மண்ணை தூவி எப்படி தன் காதலன் அருகே செல்வது என யோசித்து கொண்டு இருந்தாள் நிர்மலா..
தன் அக்காவின் முகத்தில் உள்ள பதட்டத்தை பார்த்த கயல், "என்னக்கா ஒரு மாதிரியா இருக்க டென்ஷன் ஆகிட்டியா உனக்கு தான் டென்ஷனான பாத்ரூம் போகணும்னு தோணுமே பாத்ரூம் போகணுமா?? ஏன் ஒரு மாதிரி இருக்க??" என்று கேட்க,
' ஐயோ கடவுளே நல்ல வழி காட்டிட்ட என் தங்கச்சி வாயிலேயே இப்படி ஒரு வார்த்தை வர வெச்சிட்டியே' என மானசீகமாக வேண்டிய அவள், "ஆமாம் கயல் நீங்கே இரு நான் பாத்ரூம் போயிட்டு வரேன்" என்று கூற,
"இரு அக்கா நானும் வரேன் அம்மா உன்னை தனியா விட கூடாது உன் கூடவே இருக்க சொல்லி இருக்காங்க" என்று கூற,
"நான் தான் சொல்றேன் இல்ல பின்னாடி இருக்கிற பாத்ரூமுக்கு போக எனக்கு தெரியாதா?? இதுக்கு ஒரு துணை தேவையா? வேற ஏதாவது வேலை இருந்தா பாரு" என்று நிர்மலா கடிந்தாள்..
"இல்லக்கா வெளியே இருட்டா இருக்கு அதனால தான் சொன்னேன்" என்க,
அதற்குள் சாந்தி கயலை எதற்கோ அழைக்க, "போ அம்மா கூப்பிடுறாங்க நான் அதுக்குள்ள பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்" என்று கூறிவிட்டு சென்றவள் அப்படியே பின்பக்க வழியாக அவளின் காதலனுடன் சிட்டாக பறந்து விட்டாள்...
கயல், "அக்கா தயாரா??" என்க
"அக்கா தயார் மா பாத்ரூம் போய் இருக்கா" என்று கயல் கூறவும்
"சரி அவளை சீக்கிரம் வர சொல்லு.. இப்போ அக்காவை வர சொல்லிடுவாங்க" என கூற கயலும் நிர்மலாவை தேடிச் செல்ல அங்கு நிர்மலா இல்லை அவள் தான் எப்போதோ பறந்து போய்விட்டாலே
அக்காவை தேடி கலைத்துப் போன கயல் அக்காவை காணவில்லை என்றதும் பதட்டத்தோடு தன் அம்மாவின் காதுகளில் வந்து, "அக்காவை காணல" என்று கூற, சாந்தியின் முகம் பதட்டமானது.. வேகமாக சாந்தியும் கோவிலை இரு முறை சுற்றி பார்த்து விட்டார்.. எங்கேயும் மகள் இல்லை இடையே விழுந்தது போல ஆகிவிட்டது சாந்திக்கு..பின்ன இருக்காதா மணமகளான நிர்மலாவை காணவில்லை எங்கு சென்றால் என தெரியவில்லை..
மகள் எழுதி சுருட்டி ஒரு பேப்பரை அந்த இவளை தயார் செய்து கொண்டிருந்த அறையின் வாயிலில் போட்டு விட்டு சென்று இருக்க, அதை கவனித்த கயல் பிரித்து பார்க்கவும் அதில்,"சித்தி என்னை மன்னிச்சிடுங்க இந்த முறையும் நீங்க பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை.. எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ போறேன் இதை நேரடியா உங்க கிட்ட சொல்ல எனக்கு தைரியம் இல்ல அதனால தான் லெட்டர்ல சொல்லிட்டு போறேன்"என்று கூறிவிட்டு சென்றுவிட அந்த பேப்பரை கயல் பிடித்து தன் அம்மாவிற்கு விஷயத்தை கூற சாந்தி இடிந்து போனார்... கயலுக்கு பயம் தொற்றி கொண்டது..
சாந்திக்கு உயிரே இல்லை முத்தையன் ஐயாவுக்கு என்ன பதில் கூற போகிறோம் என அவருக்கு தெரியவில்லை.. ஏனெனில் நிர்மலாவையும், கயல்விழியையும் படிக்க வைத்தது அவர்தான்..
அதற்கு கைமாறாகத்தான் நிர்மலாவை அவர் கேட்கவும், கல்யாணம் செய்து கொடுக்கலாம் என முடிவு செய்திருந்தார்.. அதுவும் இரண்டாம் தாரமாக இவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கை நிர்மலாவுக்கு கிடைப்பதில் உண்மையில் சாந்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்..
ஆனால் அதில் எல்லாம் மண்ணை அள்ளிப் போட்டது போல அவள் சென்றது அவருக்கு இடியை இறக்கியது போல இருந்தது.. பாக்கியமோ மகனுக்கு திருமணமாக வேண்டும் எந்த பிரச்சனையும் நடக்க கூடாது என மகனை சுற்றியே நடந்து கொண்டிருந்தார்..
ஏனெனில் அவனுக்கு தான் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்கிறானே.. திடீரென அவன் மூளை குழம்பி கல்யாணம் வேண்டாம் என இருந்து சென்று விடுவானோ என்ற பயம் எல்லாம் பாக்கியத்துக்கு இருந்தது.. அதைவிட ஜோசியர் சொன்னது வேறு அவர் தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.. அதனால் மகனை சுற்றி அவர் நின்று கொண்டிருக்க," அய்யர் பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என கூற இங்கு பெண் இருந்தால் தானே!!
இரு நிமிடம் கடந்தும் அவள் வராததை கண்டு பாக்கியம் சென்று பார்க்க அங்கு சாந்தியும், கயலும் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.."எங்கே நிர்மலா??" என அவர் கேட்க,
"நிர்மலாவை காணோம் அம்மா நாங்க தேடிக்கிட்டு இருக்கோம்" என்று அவர் கண்களில் கண்ணீர் வழிய கூற பாக்கியத்துக்கு இடியே விழுந்தது போல இருந்தது..
அந்த ஜோசியர் கூறியது போல ஆப்பு வந்துவிட்டதே என்று தான் முதலில் நினைத்தார்.. "என்னம்மா அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி கூட இங்கதான் இருந்தா" என்று கூற, "ஆமாம் பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு போனவ ஆளை காணோம் நானும் எல்லா பக்கமும் தேடி பார்த்துட்டேன்.. லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போய்ட்டா" என்று சாந்தி கூற, என்ன செய்வது என தெரியாமல் முழிக்க அதற்குள் கருணை அம்மாள் பின்னாலே வர பாக்கியம் கருணை அம்மாளிடம், "அம்மா நிர்மலாவை காணோம்" என்று கூற அதை கேட்ட பெரியவர் அதிர்ந்தார்..
"அம்மா ஜோசியர் சொன்னது போலவே நடந்துச்சுமா இப்ப என்னம்மா செய்யறது??" என்று பாக்கியம் தளர்ந்து போய் தன் அம்மாவிடம் கேட்க,
சாந்தி தன்னை ஏதாவது தவறாக நினைத்து விடுவார்களோ என நினைத்து, "அம்மா மன்னிச்சிடுங்க அவ இப்படி ஒரு தப்பை செய்வான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை" என்க
"அவளுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?? இதை முதலயே சொல்லி இருக்கலாமே நாங்க வேற பொண்ணு பார்த்து இருப்போமே" என்க
"இல்லம்மா விருப்பம் தான் சொன்னா நல்ல பொறுப்பான பொண்ணு இப்படி பண்ணுவா என்று எதிர்பார்க்கவே இல்லை குடும்ப கஷ்டத்துக்காக வாழ்ந்துட்டு இருந்தவ" என்று நிர்மலாவை விட்டுக் கொடுக்காமல் சாந்தி பேசினார் அது எதுவும் அம்மா, மகள் இருவரின் காதிலும் விழவில்லை..
"அம்மா எல்லாமே முடிஞ்சு போச்சு மா இப்ப என்னம்மா பண்றது அவன் வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு எனக்கு பயமா இருக்கு?? அந்த ஜோசியர் சொன்ன மாதிரி அவனுக்கு கல்யாணமே நடக்காது மா இனி அவன் வாழ்க்கை தனி மரம் தான் போல" என்று கூற அதற்குள் முத்தையன் மற்றும் கலையரசன் வந்து,"இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க ஐயர் பெண்ணை கூட்டிட்டு வர சொல்றார்" என்று கூறவும் அதற்குள் அவர்கள் விசயத்தை கூற அதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்..
அவர்களுக்கு இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இருந்தார்கள்..
அப்படி இருக்க, "அப்பவே இந்த கல்யாணத்துல விருப்பமில்லை அப்படின்னா சொல்லி இருக்கலாமே அம்மா இப்போ கல்யாணம் நின்னு போச்சுன்னா என்ன ஆகும் தெரியுமா அவனுக்கு இது இரண்டாவது கல்யாணம் கல்யாணத்துல விருப்பம் இல்லாம தான் இருக்கான் அப்படி இருக்கும்போது இந்த கல்யாணம் நடக்கல அப்படின்னா அவன் வாழ்க்கை முழுவதும் இப்படியே போயிடும் எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு பேர குழந்தை அவன் வாழ்க்கை நாசமா போக போகுது" என அவர் கூற அதை கேட்ட சாந்திக்கு என்ன செய்வது என தெரியவில்லை..
அதற்குள் சாந்தி கண் முன்னே கயல் வருத்தப்பட்டு கொண்டு இருக்க கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டு, "ஐயா நீங்க எங்களுக்கு எவ்வளவோ உதவி செஞ்சி இருக்கீங்க நாங்க உங்களுக்கு உதவியாக தான் இருக்கணுமே தவிர உபத்திரவமா இருக்கக் கூடாது நான் மனசார சொல்றேன் நீங்க எவ்வளவோ எனக்கு செஞ்சிருக்கீங்க அதுக்கெல்லாம் நான் ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கேன் அவ போய்ட்டா என் வயித்துல பிறக்காததால் தான் இப்படி ஒரு வேலை அவ செஞ்சுட்டு போயிருக்கா என்று நினைக்கிறேன் கல்யாணத்தை நீங்க நிறுத்த வேண்டாம் அவளுக்கு பதில் கயலை உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கோங்க" என்று சாந்தி கூற அதைக் கேட்டு அனைவருமே அதிர்ந்தனர் அதைவிட அதிர்ச்சியானது என்னவோ கயல்விழி தான்..
அவளுடைய அம்மா கூறியதுமே, "அம்மா" என்க
அவரோ அவளை பார்த்து முறைக்க, "எனக்கு உங்ககிட்ட பேசணும் மா" என்றாள் தயங்கியபடி.. இன்னும் அவளுடைய அம்மா சொன்னதை ஜீரணிக்க முடியாமல் அவள் இருக்கிறாள்... அவளை படிப்பிக்கவில்லை என்றாலும் அவள் கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியரான அவன் அவளுக்கு கணவனாக வருவதா என்று எண்ணமே அவளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது...
அவரும் ,"ஐயா ஒரு பத்து நிமிஷம் சமயம் கொடுங்க நான் இவளை தயார் பண்ணி கூட்டிட்டு வரேன்.. கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் என்னை நம்புங்க" என்று சாந்தி செல்ல பாக்கியம் மற்றும் கருணை அம்மாளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ..
இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்வதா இல்லை வேண்டாம் என விடுவதா என எதுவுமே தெரியாமல் குழம்பி போய் இருந்தார் பாக்கியம்…
