வர்ணம் 3

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

 

அத்தியாயம் : 3

   மகனின் கல்யாணத்தில் ஜோசியர் கூறியது போல எந்த பிரச்சனையும் நடக்காமல் திருமணம் நடக்க வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே பாக்கியம் மற்றும் கருணை அம்மாள் இருவருக்கும் இருந்தது..

ஏனெனில் அவன் சொன்ன விதத்தில் தான் அவனுக்கு பெண் பார்த்து இருக்கிறார்கள் அந்த வகையில் அவர்களுக்கு சமாதானம் இருந்தது.. அவர்களை விட வசதி குறைவாகவும் அவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளும் படியான உள்ள குடும்பத்தில் இருந்து தான் பெண் எடுத்திருக்கிறார்கள்..

பாக்கியம் மற்றும் கலையரசன் குடும்பத்துக்கு பணத்தைவிட தன் மகனுக்கு ஒரு வாழ்க்கை அமைந்தால் போதும் அவன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதுமே முழுமூச்சாக இறங்கி நிர்மலாவை தேடி கண்டுபிடித்து விட்டனர் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் திருமணம் நடக்க இருக்கிறது அதிகாலை நேரம் ஐந்து மணிக்கு தான் கல்யாணம் கடுகடுவென முகத்தோடு நிரஞ்சன் மணமேடையில் அமர்ந்திருந்தான் ஐயர் மந்திரங்கள் ஓதிக்கொண்டிருக்க இவனோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.. அவனுக்கு வந்து இருந்த மெசேஜ் அது போல இருந்தது அதுதான் அவனை மேலும் கடுப்பாகிக் கொண்டிருந்தது அவனே மனதால் மனுவை நினைத்துக் கொண்டு வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டுகிறோமே என்ற குற்ற உணர்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போது அவனது மொபைல் போனுக்கு வந்த மெசேஜ் அவனை மேலும் கடுப்பாகியது... ஐயர் கூறும் மந்திரங்கள் எதுவும் அவனின் தலைக்குள் ஏறவில்லை...

அந்த நேரம் முதன்முறையாக கயல் நிரஞ்சனை ஒளிந்து நின்று பார்த்தாள்.. அவனை கண்டதும் அவளுக்கு ஏனோ அடி வயிற்றில் பயம் வந்து போனது..இவரா மாப்பிள்ளை என அவள் அப்படியே பயந்து போனாள்..இவரா அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை அப்போ இவரோட  மனைவி தான் இறந்து போய்ட்டாங்களா?? என அவனுக்காக ஒரு நொடி வருந்தினாள்..

அவளுக்கு அவனை முன்பே தெரியும்..பார்த்து இருக்கிறாள்..ஏனெனில் அவன் அவளுடைய கல்லூரி பேராசிரியர்.. ஆம் அவன் புதிதாக கயல் பிடிக்கும் கல்லூரிக்கு தான் மாற்றலாகி வந்து இருந்தான்.. கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் ஆகியிருக்கும்.. அவனைப் பற்றி தான் கல்லூரியில் பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. அவளுக்கு அவனை தெரியும் ஆனால் அவனுக்கு அவளை அறிய வாய்ப்புகள் இல்லை..

அப்படி இருக்க தன் அக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சி அவளுக்கு இருந்தது..

அதனாலேயே தான் பகுதி நேரமாக செய்யும் தொழிலான பியூட்டிஷியன் தொழிலை பயன்படுத்தி தன் அக்கா நிர்மலாவை அழகாக தயார் செய்திருந்த கயல்விழி, "அக்கா பார்க்க ரொம்ப அழகா இருக்க" என்று கூற நிர்மலாவின் முகத்தில் பதட்டம் காணப்பட்டது..

அவளுக்கு இந்த கல்யாணத்தில் துளியும் விருப்பமில்லை சித்தியின் கட்டாயத்தின் பேரில் தான் அவள் இந்த திருமணத்திற்கு உடன்பட்டு இருக்கிறாள்.. அவள் அவளுடைய சித்தியிடமும் தன் மனதை வெளிப்படுத்த வில்லை அது வேறு விடயம்..

ஆம் முதல் திருமணம் சித்தி பார்த்து திருமணம் செய்து வைத்த பையன் தான்.. ஆனால் அவன் குடிக்க அடிமையாகி இப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம் எனும் நிலைக்கு அவளை தள்ள அப்போதும் கணவன் வீட்டில் தான் என்ன கஷ்டம் ஆனாலும் இருக்க வேண்டும் என சாந்தி கூறி விட, திக்கு தெரியாமல் முழித்த நிர்மலாவுக்கு கடவுளாக பார்த்து தான் அவளின் கணவனின் மரணம் அந்த கசப்பான வாழ்க்கையிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைக்க வழியாக இருந்தது.. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அவள் கணவனை இழந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்..

அப்படி இருக்க, மீண்டும் இரண்டாவது திருமணம் அவளால் யோசித்துப் பார்க்கவே முடியாது.. அதுவும் சித்தி சம்மதம் சொன்ன திருமணம் அதை விட கொடுமை என்று தான் கூற வேண்டும்..என்ன தான் பணம் உள்ளவர்கள் என்றாலும் அவளை படிக்க வைத்த ஆட்கள் என்றாலும் அவளுக்கு அந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை.. சித்திக்காக அவள் சம்மதம் சொன்னால் அவள் மனதில் அவளுக்கு பிடித்தமான ஒருவனை அவள் இழக்க நேரிடும்..ஆம் அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறான் அவன்.. அவன் தான் அவள் மனதில் நிறைந்திருக்க அவள் எப்படியாவது இந்த திருமணத்திலிருந்து விடுபட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறாள்..

விஷயத்தை ஏற்கனவே அவளின் காதலனிடம் கூறி விட, அவன் கோயிலின் பின்பக்கம் வழியில் காத்து இருப்பதாக கூறி விட்டான்..இவள் மட்டும் சென்றால் போதும் என்ற நிலையில் கயல் வேறு நேரம் காலம் பார்க்காமல் பேசி கொண்டு இருக்கவும், அதை கேட்கும் மனநிலையில் இல்லாத நிர்மலா அமர்ந்து இருக்க அந்த சமயம் பார்த்து, "எல்லாம் தயாரா??" என பார்க்க வந்த பாக்கியம் நிர்மலாவின் முகத்தை பார்த்தும் அவளின் அழகை பார்த்து, "அழகா இருக்க மா யார் உன்னை தயார் செய்தா??" என்க

"நான் தான் மா" என கயல் சிரித்து கூறினாலும் மனதுக்குள் ஏனோ நிரஞ்சனின் முகம் தான் ஓடிக்கொண்டிருந்தது.. "ஓ நீ தான் இவளோட தங்கச்சியா?? சாரிமா எனக்கு உன்னை தெரியல.. எல்லாம் சீக்கிரம் முடிவு செய்யணும்னு அன்னைக்கு உன் அக்காவை பார்த்துட்டு போனதோடு சரி அதுக்கு பிறகு இப்போ தான் உன் அக்காவையே பார்க்கிறேன்.. நீ அன்னிக்கு இல்லை தானே" என்க

"இல்லம்மா நான் அன்னைக்கு காலேஜ் போயிருந்தேன்" என்று கயல் கூற,

"எங்க படிக்கிற??"

"நான் சென்னையில படிக்கிறேன்"

"ஓ அப்படியா?? நல்லா படி மா.. அக்காவும், அம்மாவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க நல்லா படிக்கணும் என்ன??.. இனி பிரச்சனை இல்லை அக்காவும் கல்யாணம் ஆகி சென்னை வந்துடுவா. இனி நம்ம வீட்டில் இருந்தே நீ காலேஜ் போகலாம்" என அவளின் குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து பாக்கியம் கூற,

பாக்கியம் கூறியதைக் கேட்டு என்ன ஒரே வீட்டில் இருந்து வரவா அதெல்லாம் நடக்கவே நடக்காது என எண்ணிக்கொண்டு,"இல்லம்மா ஹாஸ்டல்ல தான் நான் இருக்கேன் அப்படி எல்லாம் விட மாட்டாங்க.எனக்கு மெரிட்ல சீட் கிடைத்தது மா.. இப்போ இன்ஜினியரிங் இரண்டாவது வருஷம் படிக்கிறேன் பார்ட் டைமா பியூட்டிஷியனா இருக்கேன்" என கூற,

அதை கேட்ட அவரோ பல சிரமங்களுக்கு இடையில் கல்வி முக்கியம் என அவள் படிக்கிறாள் அவள் வீட்டு நிலையை புரிந்து நடந்து கொள்கிறாள் என நினைத்து கொண்ட பாக்கியம், "சரி மா ஐயர் வர சொன்னதும் உன் அக்காவை அழைச்சுட்டு வா" என கூறி விட்டு செல்ல அப்போது தான் நிர்மலாவுக்கு மேலும் பதட்டம் ஆகியது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top