மோகம் 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மோகம் - 9

விடியல் அழகாக விடிய வேண்டும் என்பது ஆதிக்கு நிர்பந்தமான விஷயம்... ஆம்.. அழகான அமைதியான காலையை அவன் வெகுவாக ரசிப்பான்.. இரவெல்லாம் வேலை செய்து கலைத்து போய் இருப்பவனுக்கு ஏனோ அமைதியான அழகிய காலை அவனுக்கு ஒரு விதமான எனர்ஜியை கொடுக்கும்.. அந்த உற்சாகத்தை வைத்து அவன் அந்த நாள் முழுவதும் ஓடுவான்..

ஆனால் அன்றைய தினம் இப்படி விடியும் என அவன் நினைத்து பார்த்து இருக்கவே மாட்டான்..

ஆம்.. அலாரம் அலறுவது போல போன் அலறிக் கொண்டே இருக்க, ஆதி விருப்பமே இல்லாமல் கண்களை திறந்து எரிச்சலாக பார்க்க அவனுடைய அம்மா தான் அழைத்து இருந்தார்..

முதலில் போனை கட் செய்து விட மீண்டும் மீண்டும் போன் அலறிக் கொண்டே இருக்கவும் போனை எடுத்து, "ஹலோ.. எதுக்கு இப்படி காலையிலேயே தொல்லை பண்றீங்க?? " என கடுப்பாக கூறினான்..

அவனின் கடுப்பான குரலை கேட்டதும் இப்போது அழுது விடுவேன் என்ற நிலையில், "ஆதி அண்ணா.. இது நான் கண்மணி.. அத்தை இல்லை.. என்கிட்ட போன் இல்லை.. உங்கிட்ட ஒரு விசயம் பேசணும்.." என பயந்த குரலில் கூறும் முன்னே அவளுக்கு கண்ணீர் வந்தது..

அவள் குரல் உடையவும் இவனுக்கு இலேசான பதற்றம் தொற்றிக் கொண்டது..

"என்னாச்சு கண்மணி" என அவனுடைய பாட்டி அல்லது அம்மாவுக்கு தான் ஏதாவது ஆகி விட்டதோ என்ற பதட்டத்தில் கேட்டான்.. அப்படி இருந்தாலும் விஷ்வா அங்க தானே இருக்கிறான் ஏன் அவன் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றெல்லாம் அவன் யோசித்தான்...

அவன் கேட்டதற்கு அவளிடம் பதில் இல்லை.. அவளின் மெல்லிய விசும்பலை அவனால் உணர முடிந்தது.. அவள் அழுகிறாள் என்பதை அவன் உணரும் நொடி அவனின் பதட்டம் அதிகம் ஆகியது..

"கண்மணி...என்னாச்சு சொல்லு.." என அவன் வினவினான்..

அவளோ அழுதுகொண்டே அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருக்க, "என்னனு கேட்கிறேன்ல அங்க ஏதாவது பிரச்சனையா??" என்றான்..

"ஆமாம்" என கூறினாள்..

"என்னாச்சு யாருக்கு என்னாச்சு??" என அவன் பதட்டதோடு கேட்டான்..

"எனக்கு தான் ஆதி அண்ணா.." என அவள் கூறினாள்..

"உனக்கா என்னாச்சு??" என கேட்க

"நீங்க தானே.. எனக்கு தாலி கட்டுனீங்க??" என கேட்கவும் அவனுக்கு கோபம் வந்தது..

விஷயத்தை சொல்லாமல் இப்படி தேவை இல்லாத கேள்வி கேட்கிறாளே என கடுப்போடு எண்ணி, "அங்க என்ன நடக்குதுன்னு சொல்லு கண்மணி என்ன தேவையில்லாம டென்ஷன் ஆகிட்டு இருக்காத சொல்ல வந்ததை சொல்லு " என்றான் கடுப்பாக

அவனுடைய குரலில் உள்ள அழுத்தம் அவளுக்கு பயத்தை கொடுத்தாலும், அவனிடம் பேசுவது அவளின் தேவை என்பதாலும், அவன் அருகே இல்லாதது வேறு அவளுக்கு குணமாக இருக்க அவனிடம் பேசியே ஆக வேண்டும் என எண்ணி, அவனின் கோபத்தை பொருட்படுத்தாமல், "நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லுங்க.. நீங்க தானே எனக்கு தாலி கட்டுனீங்க.. அப்ப நான் உங்க பொண்டாட்டி தானே" என கேட்டாள்..

அவனுக்கு காலையிலேயே கடுப்பை கிளப்பிக் கொண்டு இருக்கிறாள் என உணர்ந்தாலும், "ஆமாம்.. நான் தாலி கட்டின என்னோட பொண்டாட்டி நீ தான்.. அதுல எந்த சந்தேகமும் எனக்கு இல்ல.. தயவு செஞ்சு அங்க என்ன நடக்குதுன்னு சொல்லி தொலை" என அவனும் கடுப்போடு கூறினான்..

"நீங்க எவ்வளவு சீக்கிரம் இங்கு வர முடியுமோ.. வாங்க.. கல்யாணம் பண்ணிட்டு கிட்டத்தட்ட மூணு வாரம் ஆச்சு.. நீங்க இங்க வீட்டுக்கு வரவே இல்லை.. என்னை பார்க்கவும் இல்லை.. என் கூட பேசவும் இல்லை நீங்க வாங்க.. என்னை இங்கே இருந்து கூட்டிட்டு போங்க.. இனிமேல் நான் உங்க கூட தான் இருக்க போறேன்.. என்னால இங்கே நீங்க இல்லாமல் இருக்க முடியாது.. இனிமே நான் உங்க கூடத்தான் இருக்க போறேன்.. உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.. ஒரு புருஷன் கூட இருக்கிறது தான் பொண்டாட்டிக்கு அழகு.. அதை நான் இந்த மூன்று வாரத்தில் பபுரிஞ்சுகிட்டேன்.. நாளைக்கு நீங்க வரிங்களா?? இல்ல நான் பஸ் ஏறி நீங்க இருக்கிற இடம் தேடி வரவா??? எனக்கு உங்களை பார்க்கணும் ஆதி அண்ணா.. நாளைக்கே வாங்க.." என்று அழுது கொண்டே அவள் கூறினாள்..

அவளால் ஒரேடியாக வார்த்தைகளை விடவும் முடியவில்லை..அதனால் மெல்லிய குரலில், "வராமல் மட்டும் இருந்திடாதீங்க ஆதி அண்ணா.. நான் காத்துகிட்டு இருப்பேன்.." என மீண்டும் கூறியவள் அவனின் பதிலுக்கு காத்திராமல் போனை வைத்து விட்டாள்.. அவன் எங்கேயாவது முடியாது என கூறி விடுவானோ என்ற பயமும் அந்த சிறு பெண் மனதுக்குள் இருந்தது..

ஆம்..அதை விட ஒரு பக்கம் மனோன்மணி மறுபக்கம் காளியம்மாள் என அனைவரும் இவள் அவனிடம் பேசுவதை கூடி நின்று கேட்டுக் கொண்டு இருப்பதை கண்ட அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.. அதனால் தான் அவனிடம் விஷயத்தை கூறி விட்டாள்..

போன் துண்டிக்க படவும்,"அப்படி என்னதான் நடந்தது??"என அவனும் தன் சிகையை அழுத்தமாக கோதிவிட்டு செய்வதறியாது நின்றான்.. நொடி பொழுதில் அங்கு என்ன நடந்தது என தன் தம்பி விஷ்வாவை கேட்டு தெரிந்து கொண்டான்..

என்ன தான் இருந்தாலும் கண்மணி மீது ஆதிக்கு எரிச்சலும், கோபமும் வந்தாலும் அந்தக் கலங்கிய குரல் அவனை என்னவோ செய்தது.. அவன் மனதை அவளின் அழுகுரல் தாக்கியது என்னவோ உண்மை தான்...

அப்படி என்ன தான் கண்மணி வாழ்க்கையில் நடந்தது??..

கிட்டத்தட்ட ஆதி மற்றும் கண்மணிக்கு திருமணம் ஆகி மூன்று வாரங்களுக்கு பிறகு..

திருமணம் முடிந்த மறுநாள் வீட்டை விட்டு சென்ற ஆதி அதன் பிறகு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.. அது மனோன்மணிக்கு பிரச்சனையாக இருந்தாலும் கண்மணிக்கு ஒரு பிரச்சினையாகவே இல்லை..

அவள் சிட்டாக அந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருந்தாள்.. அவளுக்காக தனி அறை, அவளுக்கு பிடித்த உணவு, யாரும் அவளை திட்டவில்லை கிட்டத்தட்ட அவளை ஒரு பறவை போல பறக்க விட்டிருந்தார்கள்.. உண்மையில் அவளுக்கு சுதந்திரம் கிடைத்தது போல அவள் உணர்ந்தாள்..

பிறகு என்ன அவளுக்கு கஷ்டம் என கேட்டால் மனோன்மணி மற்றும் காளியம்மாவை கூட அவளால் சமாளிக்க முடியும்.. ஆம் இரண்டு வாரமாக அவர்கள் அவளை நன்றாக தான் பார்த்து கொண்டார்கள்..

எந்த விதமான பிரச்சனையும் இல்லை.. உண்மையில் அவளுக்கு இந்த இரண்டு வாரமும் சொர்க்கமாக தான் இருந்தது..

ஆனால் எப்போது திருமணம் முடிந்து பத்து நாள் கழித்து மாலதி மற்றும் சதாசிவம் வந்து விட்டார்கள்..

மாலதி தன் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு மகளை காண அங்கு வந்து இருந்தார்....அது தான் அவளுடைய அதி முக்கிய பிரச்சனை..

ஆம்.. மாலதி வீட்டுக்குள் வந்ததும் அவர் கண்ணில் பட்டது என்னவோ விஷ்வா மற்றும் கண்மணி இருவரும் பேசி கொண்டு இருந்தது தான்.. அதுவும் விஷ்வா ஏதோ கண்மணியின் கல்லூரியில் நடந்த விடயத்தை பற்றி கேட்க அவளும் சிரித்தபடி அதை கூறினாள்..

அந்த சமயத்தில் தான் அவளுடைய அம்மாவும், அப்பாவும் வீட்டுக்குள் வர மாலதி அவ்வளவு தான் அவருக்கு மகளின் சிரிப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

அதை விட விஷ்வாவோடு பேசி கொண்டு இருந்ததை அதை விட எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை..புசுபுசுவென கோபம் வந்து விட்டது..

அவருக்கு இன்னும் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற எண்ணம் இல்லை போல.."ஓ இது தான் இவளோட வேலையா??? அவன் கூட என்ன இழிப்பு வேண்டி இருக்கு??' என அவளை அடிக்கும் விதத்தில் முறைத்து கொண்டே வந்தவர், "கண்மணி..என்ன இது??" என வீடே அதிரும் படி கத்த அந்த குரலை கேட்டதும் அதிர்ந்த கண்மணி திரும்பி பார்க்கவும் அவளின் அம்மாவை கண்டதும் அவள் அரண்டு விட்டாள்..

" என்ன டி பண்ணிட்டு இருக்க?? இங்கே வா டி" என உருட்டி கூறினார்..

அதை கேட்டதும் அவள் பயந்து போய் அவள் ஏதாவது தவறு செய்து விட்டாளோ என எண்ணி நடுங்க, "வா டி இங்கே??" என எகிறவும் அந்த குரலை கேட்டு வெளியே வந்த மனோன்மணி மற்றும் காளியம்மாள் இருவரும், "என்னாச்சு மாலதி எதுக்கு வந்ததும் வராததுமா அவளை திட்டிட்டு இருக்க??" என சற்றே அழுத்தமான குரலில் கேட்டார்..

ஏனெனில் கண்மணி மாலதி விழித்த அழகிலேயே கண்ணில் கண்ணீரை திறந்து விட்டு இருந்தாள்.. அதை கண்ட மனோன்மணிக்கு மாலதி மீது கோபம் வந்தது..

வந்ததும் வராததுமாக அவளை எதற்கு கடிய வேண்டும் என கோபத்தோடு அவர் கேட்டார்..

அவர் கேட்கவும் தான் மாலதிக்கு அவர் எங்கு இருக்கிறார் என்ற உணர்வு வர உடனே தன் குரலில் உள்ள கடுமையை மாற்றி, "ஒன்னும் இல்லை அண்ணி.. அது வந்து ஒண்ணுமில்லை.. ஹ ஹா.. என சிரித்து தன்னை நிதானபடுத்தி, "அண்ணி வீட்டுக்கு வரவங்களை வாங்கன்னு கூட கேட்காமல் கண்டுக்காம இருக்கா பாருங்க.. அப்படி என்ன விஷ்வா தம்பி கூட பேச்சு வேண்டி கிடக்கு??

நீங்க நாளைக்கு நாங்க வளர்த்த லட்சணம் பாரு அப்படின்னு சொல்லிட கூடாது பாருங்க.. அதுக்காகத்தான் சத்தம் போட்டேன்" என கண்மணி மீது பழியை போட அதை நம்பும் அளவுக்கு மனோன்மணி ஒன்றும் முட்டாள் இல்லை..

அப்படி இருக்க அவரோ முறைக்க காளியம்மாள், "அதுக்கு நீ என்ன விருந்தாளியா இந்த வீட்டில் ஒருத்தி தான டி.. நீ உள்ளே நுழையும் போதே இப்படி தான் கத்திட்டு வருவியா?? இதுதான் நீ வளர்ந்த லட்சணமா??" என அந்த வீட்டில் மூத்தவர் மட்டுமின்றி மாலதிக்கும் நான் மாமியார் என்ற முறையில் எகிறி கேட்டார் காளியம்மாள்..

அதை கேட்டதும் மாலதிக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், "போங்க அத்தை உங்களுக்கு எப்போவும் தமாசு தான்.. நானே கைக்குள்ள வைச்சு இருந்த பிள்ளையை சீக்கிரம் கட்டிக் கொடுத்த சங்கடத்தில் அவளை பார்க்க வந்தா ஏதாவது சொல்லுங்க" என்றவர் உடனே மனோன்மணியிடம், "ஆதி வரலையா அண்ணி??" என கேட்டார்..

"இல்லை வரல.. அவனுக்கு வேலை இருக்கு" என கூற அப்போது ஆதி திருமணம் ஆனதும் சென்றவன் தான் அதன் பிறகு வரவே இல்லை என்பதை கணித்தவர் கண்களில் விஷ்வா மற்றும் கண்மணி ஒன்றாக இருப்பது சரியாக இல்லை..

அதனால் உடனே மாலதி மனோன்மணியை பார்த்து, "அண்ணி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க .. ஆதி தான் கண்மணி இங்கே இருந்து படிக்கட்டும் படிப்பு முடிச்சதும் நான் கூட்டிட்டு போறேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டானே.. அப்போ பேசாமல் நான் வேணும்னா அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போகவா?? அவளுக்கும் எங்க கூட இல்லாமல் ஏக்கமா இருக்கும்.." என்றதும் மனோன்மணி அதிர்ந்தாரோ இல்லையோ கண்மணி அதிர்ந்து விட்டாள்..

ஆம்.. என்ன அவளோட வீட்டுக்கு செல்வதா என்ற கலக்கம் அவளுக்கு வர அவளோ மனோன்மணியை பாவமாக பார்க்கவும், அவரோ அதை உணர்ந்து கொண்டாரோ என்னவோ, "ஏன் கல்யாணம் பண்ணின பொண்ணு புருஷன் வீட்டுல இருக்கிறது தானே நியாயம்?? அதுவும் இது அவளோட அப்பன் பிறந்த வீடு, அவளோட பாட்டி வீடு இங்கே நாங்க எல்லாரும் இருக்கோம் அவளுக்கு காலேஜ் எங்கிருந்துதான் பக்கம் எல்லா வசதிகளும் இருக்கும்போது ஏன் கூட்டிட்டு போகணும்னு சொல்ற?? அவள் நல்ல சந்தோஷமா தான் இருக்கா நீ கவலைப்படாத?? அவளுக்கு அங்கே வரணும்னா நானே கொண்டு வந்து விடுறேன்.. இப்ப எதுக்கு கூட்டிட்டு போகணும்னு சொல்ற??"

அந்த கேள்வியை கேட்டதும் மாலதிக்கு பெரிதாக பதில் இல்லை என்றாலும் தன்னோடு துணை நிற்காத தன் கணவரை பார்த்து முறைத்தவர், மனோன்மணியை பார்த்து, "எல்லாரும் இருந்தாலும் அவளோட புருஷன் கூட இருக்கிறது மாதிரி வராது இல்லை அண்ணி.. ஆதி தான் இல்ல இல்ல.. அப்போ அவ எங்க இருந்தா என்ன???" என்றவர்,

"என்னங்க வாயை பார்த்திட்டு இருக்கீங்க.. ஏதாவது சொல்லுங்க.. நீங்க தானே என்னோட பொண்ணை பார்க்க முடியாமல் இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குன்னு புலம்பிட்டு இருந்தீங்க.. இப்போ என்ன உங்க அக்கா கிட்ட எதுவும் பேசாமல் இருக்கீங்க??" என அவர் கேட்டார்..

அவரோ நான் எப்போ சொன்னேன் என்ற டோனில் இருந்தாலும் இப்போது அவர் ஆமாம் என சொல்லவில்லை என்றால் அவருடைய சோற்றில் அவருடைய மனைவி விஷம் வைப்பது உறுதி அதனால், "ஆமாம் அக்கா அது தான் ஆதி இல்லை தானே.. கொஞ்ச நாள் இங்கேயும் அங்கேயுமா இருக்கட்டும் எங்களுக்கும் அவளை பிரிஞ்சி இருக்கிற மாதிரி இருக்காது" என கூற மனோன்மணிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை..

அந்த சமயம் தன்னுடைய மகன் மீதும் அவருக்கு கோபம் வந்தது.. திருமணம் ஆனதும் அவளை அழைத்துக்கொண்டு செல்வதை விட்டுவிட்டு தன் மீது உள்ள கோபத்தில் இங்கேயே விட்டு சென்று விட்டான்..

இவர்கள் மட்டும் அந்த நேரத்தில் கண்மணியே ஆதிக்கு திருமணம் செய்து கொடுத்து உதவாவிடில் இந்நேரம் என்ன ஆகியிருக்கும் என்றெல்லாம் யோசித்தவர் மனதில் வேறு எந்த யோசனையும் எழவில்லை..

"ஒரு வாரம் கழிச்சு கூட்டிட்டு போங்க இங்கே ஊர்ல கோவில் விசேஷம் உங்களுக்கே தெரியும் இல்ல அது முடிஞ்சு கூட்டிட்டு போங்க" என்று மனோன்மணி கூறிவிட்டார்.. அதைக் கேட்டு மாலதிக்கு சமாதானம் ஆகிவிட்டது..

இவளுக்கோ அதைக்கேட்டு இதையே விழுந்தது போல ஆகிவிட்டது...

அவளால் சத்தியமாக அவளுடைய வீட்டுக்கு செல்ல முடியாது.. போனால் இந்த மூன்று வாரம் அவள் நிம்மதியாக இருந்ததற்கு வைத்து செய்து விடுவார் மாலதி என்பது நன்றாக கண்மணிக்கு தெரியும்..

அப்படி இருக்க கலங்கிய நிலையில் அவள் நிற்கும் பொழுது அவள் அருகே வந்த பாசம் காட்டுவது போல, "அம்மா சாப்பாடு சாப்பிடாமல் இப்படி இளைச்சு போயிட்டியே டி கண்மணி" என்று கூறிக்கொண்டே கண்மணியின் கையைப் பிடித்து யாரும் இல்லாத இடத்தில் அழைத்துச் சென்ற மாலதி அவளின் கையை அழுத்ததோடு பிடித்து, "என்னடி இங்க வந்த உடனே கொழுப்பு அதிகம் ஆயிடுச்சா?? ஒரு கல்யாணமான பொண்ணு அடுத்த ஆம்பளைகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்க?? இதுதான் நான் சொல்லிக் கொடுத்தேனா??? எவ்வளவு நாளா இது நடக்குது??" என்று கடுப்போடு பேசியவர், "இங்க பாரு ஆதி வரும் வரை நீ நம்ம வீட்ல தான் இருக்கணும் புரியுதா?? உன்னோட அத்தை கேட்டா நான் என் வீட்டிலேயே இருக்கேன்னு சொல்லணும்.. உன் புருஷன் வந்தா மட்டும் தான் இங்கே வரணும் புரியுதா???" என கூறினார்..

அதை கேட்ட அவளுக்கு சரி என தலையை ஆட்டுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை..

அப்படி ஒரு வாரமும் முடிந்து விட்டது நாளை அவள் அவளுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும்.. மனோன்மணிக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை.. அதைவிட கண்மணிக்கு சுத்தமாக விருப்பமில்லை...

மாலதி வந்து போனது முதல் கண்மணியின் முகம் வாடி இருப்பதை கண்டவருக்கு தன்னுடைய மகன் மீது தான் கோபம் வந்தது..

இவளும் அவனோடு பேசியது போல மனோன்மணிக்கு தெரியவில்லை.. அதுபோல அவனும் வீடு என்ற ஒன்று இருப்பதையே மறந்து விட்டான்..

அப்படி இருக்க, இவர்களை இப்படியே விட்டால் வேலைக்காகாது என எண்ணிய அவர், கண்மணியிடம், "நாளைக்கு உன்னோட அம்மா வீட்டுக்கு போகணும் உனக்கு தேவையானதெல்லாம் எடுத்து வச்சுக்கோ கண்மணி" என்று கூறினார்..

அதை கேட்டதும் அவளும் வாடிய முகத்தோடு, "அத்தை நான் இங்கேயே இருக்கட்டுமா?? எனக்கு இங்கே இருந்து காலேஜ் போறது தான் பக்கம் அம்மா கிட்ட சொல்றீங்களா??" என்று பாவமாக கேட்கவும்,

அவரோ, "எனக்கு நீங்க இருக்கிறதுல சந்தோஷம்தான்.. ஆனால் உன்னோட அம்மா சொல்றதிலும் நியாயம் இருக்கு தானே.. உன்னை கல்யாணம் பண்ணினவன் ஆதி.. அவன் கூட இருந்தா யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க.. இங்கே இரு அங்கே இரு என்று சொல்ல மாட்டாங்க.. இப்ப நீ அவன் கூட இல்ல. இங்க படிச்சிட்டு இருக்க.. அவனும் தாலி கட்டினதும் ஓடிவிட்டான்... உன்னை பார்க்க கூட வரல.. அப்போ உன்னோட அம்மா சொல்றதுல நியாயம் இருக்கு தானே.. நீ வேணும்னா ஒன்னும் பண்ணு.. உன்னோட புருஷன் கிட்ட வந்து உன்னை கூட்டிட்டு போக சொல்லு.. அங்கேயே ஒரு காலேஜ் பார்த்து படி.. உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க.. திட்ட மாட்டாங்க.. நீ சந்தோஷமா இருக்கலாம்.. அப்படியே யாராவது பேசினாலும் ஆதி முகத்தை பார்த்தா யாராவது பேசுவாங்களா என்ன?? ஆதியோட பொண்டாட்டியை பேச இங்க யாருக்கு தைரியம் இருக்கு??" என்று மனோன்மணி அவள் தலையில் அலுங்காமல் ஒரு இடியை இறக்கவும் அந்த பதினெட்டு வயது பெண்ணுக்கு கணவனோடு இருந்தால் தான் எந்த பிரச்சனையும் வராது என்பதை தெளிவாக அவர் அவளின் தலையில் இறக்கி விட அப்போது தான் தனக்கு ஒரு கணவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த அவளும் அவனுக்கு போன் செய்து அவனின் தலையில் இடியை இறக்கினாள்..

ஆதியோ அங்கு என்ன நடந்தது என அவனுக்கு விளங்கவில்லை என்றாலும் அவன் நண்பன் விக்கியிடம் புலம்பி கொண்டே அவன் வீட்டுக்கு செல்ல தயாராகினான்..

கண்மணி அந்த வீட்டு பெண்கள் அனைவரும் ஆட்டி வைத்தாலும் கண்மணி என்னவோ ஆதியைத்தான் அவள் அறியாமல் ஆட்டி வைக்கிறாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top