மோகம் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மோகம் - 8

"ஆதி அண்ணா" என்ற பயந்த விழிகளில் சற்றே உயர்ந்த குரலில் நாற்காலியில் அமர்ந்த நிலையில் உறங்கி கொண்டு இருக்கும் அவனை அழைத்தாள் கண்மணி..

அவனோ அந்த விளியில் தான் திடுக்கிட்டு பார்க்க, அவள் கையில் பால் தம்ளரை நீட்டி நின்று கொண்டு இருக்கிறாள் கண்மணி..

அது மட்டுமின்றி அவளின் புடவை முதல் அவளின் அலங்காரம் வரை அப்படியே இருக்கிறது.. அவளின் ஆடை கசையவில்லை.. அவளின் மச்சம் அவளின் மாராப்புக்குள் ஒளிந்திருக்கிறது.. என்ன நடக்கிறது இங்கே என ஒரு நொடி ஆதியின் முகம் வியர்த்து விட்டது என்று தான் கூறவேண்டும்..

எப்படி அவளின் உடையை கோபத்தில் கலைத்தது நான் தானே?? அவளோடு கூடியது நான் தானே எப்படி அவள் பிரஷ் ஆக ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல நிற்கிறாள் என யோசிக்கும் போது தான் அவனுக்கு ஒரு விஷயம் விளங்கியது..

ஆம்.. இவர்களின் ஏற்பாடுகளை எல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தவன் அப்படியே மேசையில் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்தவன் மேசை மீது தலை வைத்து அமர்ந்திருந்தவன் எப்போது கண் அயர்ந்தான் என அவனுக்கு தெரியவில்லை.. ஏனோ அவனை உறக்கம் ஆட்கொண்டு இருந்தது..

கனவில் அவன் செய்த கோலம் தான் அது எல்லாம் அப்படி இருக்க, அவள் "ஆதி அண்ணா" என அழைக்கவும் தான் அவன் பார்த்தான்..

அப்போது தான் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தவன் தான் கனவு கண்டதின் கோலமது என்பதை அவன் உணர்ந்தான்..

அப்படி ஒரு கனவு உலகத்தில் இருந்து நிகழ் உலகிற்கு வந்தவன் கைகள் இன்னும் படபடப்பை அடக்க முடியாமல் தவித்தான்.. அதனால் அவனுடைய கைகளை மார்பின் குறுக்கே கட்டி அவளை பார்த்தான்.. கிட்டத்தட்ட அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு நான்கு அடி இடைவெளி இருந்தது..

அந்த இடைவெளி வேண்டும் என அவன் எண்ணினான்.. ஆம்.. அவனுக்கு அவள் மீது பயம் எல்லாம் இல்லை.. ஆனால் அவன் ஒரு கண்ணியவான்.. இந்த திருமணத்தை எதிர்ப்பவன்..

அப்படி இருக்கும் சூழலில் ஒரு பெண்ணை அடக்க அவளின் உடலை தீண்டும் அளவுக்கு அவனின் கண்ணியம் குறைந்து போய் விடவில்லை என்றாலும் ஏன் தனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது தான் ஏன் இப்படி ஒரு கனவை கண்டோம் என்பதே அவனது படபடப்பிற்கு காரணமாக இருக்கிறது..

அப்படி இருக்க அவளோ, "இந்தாங்க ஆதி அண்ணா பால்" என அவள் கூறினாள்..

அதை பார்த்தவன், "பால்லா மறுபடியுமா... ஆத்தாடி வேண்டவே வேண்டாம்" என எண்ணியவன், "அங்கே வை" என்றவன், அவளை ஆழமாக பார்த்தான்..மேலும் அவனின் உடல் மொழியில் சற்று கடினத்தையும், அழுத்தத்தையும் கொண்டு வந்தான்..
அவள் மீது உள்ள அவனின் கோபம் அப்படியே இருக்கிறது..

அப்படி இருக்க அவள் சாதாரணமாக இருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

அதனால் எடுத்ததும், "ஏன் டி இது எல்லாம் எதுக்கு பண்றாங்க தெரியுமா??" என கோபமாக கேட்டான்..

அவன் கேட்டதும் அவன் மீதான பயம் எழுந்தது.. இளைஞர் படையில் இவன் மூத்தவன் என்பதால் அனைவருக்கும் இவன் மீது பயம் உண்டு.. அப்படி இருக்க அதற்கு கண்மணி மட்டும் விதிவிலக்கு இல்லையே..

அதை கேட்டவள் பயந்த விழிகளோடு, "இல்லை ஆதி அண்ணா இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க.. கொடுக்கலைன்னா திட்டுவாங்க.."

அப்போது தான் அவனுக்கு அவளையும் மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அவனுக்கு புரிந்தது..

அப்போதுதான் ஒரு உண்மையும் அவனுக்கு விளங்கியது.. 28 வயது ஆன என்னையே மடக்கி இவள் கழுத்தில் தாலி கட்ட வைத்து இருக்கும் குடும்பம் அல்லவா அப்படி இருக்க அவனோ தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொண்டு இலேசான அழுத்தத்துடன் அவளைப் பார்த்து, "உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா??" என்று கேட்டான்..

அவன் கேட்டதில் அவளோ அதிர்ந்து கொஞ்சம் பயத்துடன், "எனக்கு விருப்பம் தான்" எனக் கூற, அதை கேட்ட அவனோ தன்னுடைய கோபத்தை கட்டுபடுத்தி, "உண்மையை சொல்லு விருப்பமா?? இல்லையா??" என அழுத்தமாக கேட்டான்.. ஏனெனில் வினோத் அவனிடம் கூறி விட்டு சென்றது வேறு அவனை உறுத்திக் கொண்டு இருந்தது..

அவளும் அவனுடைய முகத்தை பார்க்காமல், "விருப்பம் தான் ஆதி அண்ணா.." என தயங்கிய படி கூறினாள்.. அதற்கு மேல் பொறுமை இல்லாதவன், "அடிச்சேனா சொல்லு டி முதல்ல" என கையை ஓங்கி அடிக்க போகும் விதத்தில் கூறினான்..

அதை பார்த்தவள் டக்கென்று பயந்து, "ஆமாம்.. எனக்கு விருப்பம் இல்ல.. சுத்தமா விருப்பம் இல்ல.. அம்மா டார்ச்சர் பண்ணி தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. ஆதி அண்ணா அடிக்காதீங்க" என்று அவனும் எங்கே தன்னை அடித்து விடுவானோ என்று பயத்தில் அவள் கூறினாள்..அதை சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வந்தது..

அதை கண்டவன் ஓங்கிய கையை விட்டவன் ஆத்திரத்துடன், "இதை நான் கேட்கும் போது முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல" என கோபமாக கேட்டான்..

அதற்கு அவளோ எங்கே அவன் கோபத்தில் அடித்து விடுவானோ என எண்ணி, "இல்லை அப்படி சொல்லாட்டி அம்மா அடிப்பாங்க" என குழந்தை போல விசும்பி கொண்டு அவள் கூற அவனுக்கு ஏனோ அவளை கண்டதும் பாவமாக இருந்தது..

அதே நேரம் இவளை போய் நாசம் செய்தது போல கனவில் நினைத்து விட்டேனே என எண்ணினான்..

அதோடு நில்லாமல், "அப்போ உனக்கு என்னை பிடிக்கல அப்படி தானே??" என இறுக்கமாக கேட்டான்..

அதை கேட்டவள், "எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆதி அண்ணா.. ஆனால் இந்த கல்யாணம் தான் நான் எதிர்பார்க்கல" என அவள் பாவமாக கூறினாள்.. அதைக் கேட்டவனுக்கு மேலும் கொஞ்சம் சாந்தம் ஆகியது.. தன்னை யாருக்காவது பிடிக்கும் என அவர்கள் கூறினால் அவர்கள் மீது இனம் புரியாத ஒரு நேசம் வருமே அதுபோன்ற நேசத்தில் அவன் இருந்தான்..

அதுமட்டுமின்றி அவள் மாலதி அத்தையின் கைப்பிடிக்குள் இருக்கிறாள்.. சிறிது காலம் இப்படியே இருக்கட்டும் அதற்குள் விவாகரத்து வாங்கி விடலாம்.. அவளுடைய படிப்பும் முடிந்து விடும்.. அதற்குள் அவளுக்கு கொஞ்சம் பக்குவமும் வந்துவிடும் என எண்ணினான்.. ஆனால் அதற்கு இவள் சம்மதிக்க வேண்டுமே என எண்ணினான்

"அப்போ நான் நாளைக்கு உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லவா??" என கேட்டான்..

"ஐயோ ஆதி அண்ணா அப்படி மட்டும் சொல்லிடாதீங்க.. பிளீஸ் அண்ணா" என கெஞ்சினாள்.. தாலி கட்டி இருக்கிறான் தான் ஆனால் இன்றும் அவள் அழைப்பது என்னவோ எப்போதும் அவள் அழைத்துக் கொண்டிருப்பது போல ஆதி அண்ணா தான்..

அவனோ அவளுடைய பேச்சிலும், கெஞ்சலிலும் கடுப்பாகி, "நான் கேட்கும் போது சொல்லி இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது" என கடுப்பாகி கூற அவளோ அமைதியாக கண்ணீரோடு நிற்பதும் அவனுக்கு எரிச்சலை கொடுத்தது..

பிறகு முடிவாக அவன் யோசித்த முடிவை அவளிடம் கூற தயாராகினான்.. "இதோ பார் எனக்கும் இந்த தீடிர் கல்யாணத்தில் விருப்பம் இல்லை.. உனக்கும் விருப்பம் இல்லை.. நம்ம இரண்டு பேரையும் பிளான் பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க என்னால இப்படி எல்லாம் வாழ முடியாது.. உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு..

அதுனால நாம இப்போதைக்கு கணவன், மனைவியா இருப்போம்.. அப்படி இருக்கிற மாதிரி நடிப்போம்.. அதுக்கப்புறம் விவாகரத்து வாங்கிட்டு நீ உன் வழியில் போ.. நான் என்னோட வழியில் போறேன்.. அதுவரைக்கும் இப்படியே இருப்போம் நான் நாளைக்கு காலையில் இங்கே இருந்து போயிடுவேன்.. இனி உன்னோட வீட்டுக்கு போ உன்னோட படிப்பை கண்டினியூ பண்ணு" என கூறவும்,

அவளோ அவன் பேசியது எல்லாம் கேட்டாலோ என்னவோ தெரியவில்லை.. கடைசியாக பேசிய வார்த்தையை மட்டும் மனதுக்குள் வைத்துவிட்டு அவளுடைய வீடு என்றதும் முழிக்க துவங்கினாள்..

ஏனெனில் இப்போது அவளுக்கு அவளுடைய வீட்டுக்கு செல்ல விருப்பம் இல்லை.. ஆம் அங்கு போனால் தான் அவளின் அம்மா கொடுமை செய்வாரே.. இங்கே அத்தை, பெரியம்மா அனைவரும் பாசமாக இருப்பார்கள்.. இங்கே இருந்தால் என்ன என்று கூட அவளுக்கு தோன்றியது..ஏனெனில் இந்த வீடும் இந்த சுற்றமும் அவளுக்கு மிகவும் பிடித்த இடம் அம்மாவின் நிர்பந்தத்தால் தான் அவள் இங்கே வந்து தங்குவதில்லை..

அப்படி இருக்க, "எனக்கு படிக்கணும் ஆதி அண்ணா.." என கூறினாள்..

அதை கேட்ட அவனோ, "இப்போவும் படிச்சிட்டு தானே இருக்க?? அப்புறம் என்ன??" என கடுப்பாக கேட்டான்..

"வீட்டுக்கு போனா அம்மா கல்யாணம் ஆன பொண்ணு படிக்க வேண்டாம் அப்படின்னு சொன்னாலும் சொல்லுவாங்க.. நான் வேணும்னா இங்கேயே இருக்கட்டுமா..?? அதுதான் பாட்டி, அத்தை, பெரியம்மா எல்லோரும் இருக்காங்க தானே" என பாவமாக கேட்டாள்..

அதை கேட்ட அவனோ சிறிது யோசித்தவன், "அது உன்னோட இஷ்டம்.. என்னை தொல்லை பண்ணாமல் இருந்தா சரி" என்றவனுக்கு அவளுடன் உள்ள பேச்சு முடிந்தாலும் அவன் கட்டிய தாலி வேறு அவனை உறுத்திக் கொண்டே இருந்தது..

அதனால் தானோ அவனுக்கு அந்த அத்து மீறிய எண்ணங்கள் வந்தன என்று எண்ணி, "தாலியை வேணும்ன்னா கழட்டி வைச்சிடு.. போட்டுட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல" என கூறினான்..

அதை கேட்ட அவளோ, என்னவோ ஆகாத விஷயத்தை அவன் பேசியது போல, அவளின் முட்டைக் கண்களை பெரிதாக்கி "கல்யாணமான பொண்ணு யாராவது புருஷன் கட்டின தாலியை அவிழ்த்து வைப்பாங்களா ஆதி அண்ணா?? நான் போட்டு தான் இருப்பேன்.. அதெல்லாம் தப்பு ஆதி அண்ணா.. இதை மட்டும் பாட்டி கேட்டாங்க அவ்வளவுதான்..

நான் சாகுற வரையும் இந்த தாலி என்னோட கழுத்தில் இருக்கணும்" என கூற அதைக் கேட்டு அவனும் பேய் அறைந்தது போல அவளைப் பார்த்தான்..

ஆம்.. இத்தனை நேரம் அவளிடம் பேசிய எதுவுமே அவளுக்கு விளங்கவில்லையா என்பது போல அவன் பார்த்தான்..

அவன் பொறுமையாக அவளிடம் விவாகரத்து வாங்கலாம் என்றெல்லாம் அவன் பேசி இருக்க இவளோ சாகும்வரை தாலியை கழட்ட மாட்டேன் என்று கூறுகிறாளே இவள் என்ன மேக் என்று தெரியவில்லையே என அவன் முழித்தான்..

ஆதி சிக்கியது அவனின் குடும்பத்திடம் அல்ல.. இதோ அவன் தாலி கட்டிய மனைவியிடம் தான் என்பதை புரியும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top