மோகம் 14

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 545
Thread starter  

மோகம் - 14

அந்த வீடு அதிரும்படி கத்திக் கொண்டிருந்தான் விக்ரம்.. அவன் கண்களில் அவ்வளவு ரௌத்திரம் நிறைந்து இருந்தது..

"எப்படி மிஸ் ஆச்சு.. எப்படி நம்ம கைய விட்டு அந்த ப்ராஜெக்ட் போச்சு சொல்லுங்க??" என தன் எதிரே நிற்பது அவனுடைய தந்தையே என்றாலும் அவரை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் விக்ரம்..

"அவங்க வேற பேர்ல கம்பெனி ரிஜிஸ்டர் பண்ணி இருக்காங்க.. அதுல நம்மளை விட கம்மியா கோட் பண்ணி இருக்காங்க விக்ரம்.. அதுனால ப்ராஜெக்ட் மிஸ் ஆயிடுச்சு" என்று ரிஷிகேஷ் கூறினார்..

"டாட் இதை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்ல?? சொல்லுங்க?? ஊர் பெயர் தெரியாத நாலு பேரு.. அவங்க கிட்ட தோத்து போயிருக்கோம்..நீங்க பெருசா சொல்லுவீங்களே 30 வருஷமா இந்த தொழில்ல நான் தான் டாப்.. கிங் மேக்கர்.. அப்படின்னு சொல்லுவீங்களே.. இப்போ எங்க போச்சு?? ஆப்ட்ரால் ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் கம்பெனி கூட இல்லாத ஒருத்தன் கிட்ட தோத்துப் போய் இருக்கோம்.. அசிங்கமா இல்ல" என்று விக்ரம் கேட்டான்..

ரிஷிகேஷ் தன்னுடைய மகனை பார்த்து, "விக்ரம் நீ சொல்றதெல்லாம் புரியுது.. சரி சின்ன ப்ராஜெக்ட் தானே விடு.. நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்" என அவனை சமாதானம் செய்தார்..

"அப்பா உங்க கிட்ட எப்படி சொல்றது?? சின்ன ப்ராஜெக்டோ பெரிய ப்ராஜெக்டோ அவங்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது.. அதுவும் அந்த ஆதித்யா.. அவன் ஜெயிக்கவே கூடாது.. அது தான் எனக்கு வேணும்" என்று விக்ரம் கூறினான்..

விக்ரமுக்கு இந்த ப்ராஜெக்ட் போனதை விட அந்த ஆதித்யா முன் அவன் தோற்று விட்டோம் என்ற எண்ணம் தான் வெகுவாக அவனை தாக்கிக் கொண்டிருந்தது..அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

அப்படி ஆதிக்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் ஆதியும் கல்லூரியில் படிக்கும் போதே மோதிக்கொண்டவர்கள்..ஆதிக்கு விக்ரம் ஆகாது.. விக்ரமுக்கு ஆதி சுத்தமாக ஆகாது.. அப்படி இருவரும் பகை உணர்வை கொண்டவர்கள்.. அந்த பகை உணர்வு இன்று வரையிலும் இருக்கிறது..

ஆதி படித்து முடித்து ஒரு மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்.. விக்ரம் தன் தந்தை கட்டி வைத்த சாம்ராஜ்யத்தை பார்த்துக் கொள்ள தொடங்கினான்..

ஒரு கட்டத்தில் ஆதித்யா வேலை செய்து இருந்த ஐடி கம்பெனிக்கு நட்பின் அடிப்படையில் விக்ரம் ஒருமுறை வந்திருக்க, அந்த சமயம் தொழிலாளியாக இருந்த ஆதித்யாவை கண்ட விக்ரம் வேண்டுமென்று சீண்டும் விதமாக, "இங்கே தான் வேலை செய்யறியா?? இதுதான் உன்னோட நிலைமை.. நீ என்கிட்ட வேலை செய்யலைனாலும் என்னோட ஃப்ரெண்ட் கம்பெனியில் தான் நீ வேலை செய்ற.. அதுவும் ஒரு வேலைக்காரனா.. இது தான் உன்னோட தகுதி...

இந்த தகுதிக்கு மேல உன்னால வளரவே முடியாது" என்று வேண்டுமென்று ஆதித்யாவின் ஈகோவை சீண்டி விட நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்த, அதன் பிறகு வேலையை விட்ட ஆதித்யா மற்றும் அவனுடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து துவங்கியது தான் இந்த சிறிய கம்பெனி..

அன்றிலிருந்து ஆதி மற்றும் விக்கியின் அயராத உழைப்பில் உருவான கம்பெனி தான் இது.. அதன் பிறகு வந்து இணைந்து கொண்டவர்கள் தான் ராம் மற்றும் மணி..

கீழே இருப்பவன் கீழேதான் இருக்க வேண்டுமா?? மேலே ஏறக்கூடாதா?? என்ற நிலைப்பாட்டில் ஆதி துவங்கிய இந்த நிறுவனத்தை கண்டு விக்ரமுக்கு ஏளனம் தான்..

இவர்கள் எப்படி முன்னேறி விடுகிறார்கள் என பார்ப்போம் என்பதுதான் அவனுடைய வேலை..அவர்களும் கஷ்டப்பட்டு முன்னேற துவங்கினர்.. அதை விக்ரம் எதிர் பார்க்கவில்லை..

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா ப்ராஜெக்டுகளையும் தன் கைக்குள்ளே அகப்படுத்தி விடுவான் விக்ரம்.. இவர்கள் ஜெயிக்கவே கூடாது என்ற எண்ணத்தில் தான் இதையெல்லாம் செய்கிறான்..

அவனுக்கு இருக்கும் பணத்திற்கும், வேலைகளுக்கும் இடையே இதையெல்லாம் சிந்திக்க நேரம் இருக்காது தான்.. இது எல்லாம் தேவை இல்லாத ஆணி தான் என்றாலும் விக்ரமை பொருத்தவரை இதைத் தவிர வேறு வேலை இல்லை என்பதை தான் அவன் செய்து கொண்டு இருக்கிறான்..

இந்த ப்ராஜெக்ட் கூட விக்ரம் கைக்கு செல்வதாக தான் இருந்தது.. இடையில் எப்படி ஆதித்யாவின் கைகளுக்கு மாறியது என புரியாமல் தான் இப்பொழுது விழிப் பிதுங்கி நின்று கொண்டிருக்கிறான் விக்ரம்.. அந்த கோபத்தில் தான் வீடு முழுவதும் கேட்கும் அளவுக்கு கத்திக் கொண்டு இருக்கிறான்..

"அம்மா என்ன கீழே ஒரே சத்தமா இருக்கு?? என்ன ஆச்சு அண்ணாக்கு??" என்று வினிதா தன் அம்மாவிடம் கேட்டாள்..

"அவன் கைக்கு வர வேண்டிய ப்ராஜெக்ட் கிடைக்கலையாம்..அந்த கோபம் அவனுக்கு" என்று அவளுடைய அம்மா கூற, அதை கேட்ட அவளோ, "அண்ணனுக்கு வேற வேலை இல்ல.. இதுக்கு எல்லாமா டென்ஷன் ஆவாங்க??" என்றபடி வினிதா தன் வேலைகளில் மூழ்கினாள்..

ஆனால் ஆதிக்கு விக்ரமை ஆகாது.. ஆனால் சம்மந்தமே இல்லாமல் வினிதாவும் இவர்கள் பகையில் அவள் அறியாமல் இணைந்து கண்மணியை படாத பாடுபடுத்தப் போகிறாள் என இந்நேரம் வினிதா அறிந்திருக்க வாய்ப்பில்லை..

அதே நேரம் இரவு உணவு எல்லாம் உண்டு முடித்த கண்மணி என்ன செய்வது என தெரியாமல் டிவி முன் அமர்ந்து இருந்தாள்..

அப்போது அவள் முன்னே ஒரு போனை நீட்டிய ஆதி, "இதை வாங்கிக்கோ" என்க

அவளோ போனை பார்த்ததும், "எனக்கா ஆதி அண்ணா??" என்றாள் ஆசையாக..

அந்த விரிந்த விழியில் விழுந்தால் தான் என்ன?? என அவன் யோசித்தாலும் தன் அழுத்தமான குரலில், "ஆமாம் உனக்கு தான்" என்றவன் கையில் இருந்து போனை அவள் வாங்கி பார்க்க, அது விலை உயர்ந்த போனாக இருக்க, அவளுக்கு அதை உபயோகிக்க ஆசை இருந்தாலும் சட்டென்று ஏனோ இந்த நொடி அவளின் அம்மாவின் நினைவு வந்து போக, "வேண்டாம் ஆதி அண்ணா.. நீங்களே வைச்சுக்கோங்க" என்று போனை அவனிடம் நீட்டினாள்..

அவனோ அவளின் தீடிர் செய்கையில் ஒன்றும் புரியாமல், "என்ன ஆச்சு??" என கேட்க, "பொண்ணுங்க போன் யூஸ் பண்ணுனா கெட்டு போயிடுவாங்க.. அப்படின்னு அம்மா சொல்லுவாங்க.. போன் யூஸ் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. இப்போ இந்த போனை நான் யூஸ் பண்றது தெரிஞ்சா அம்மா என்னை திட்டுவாங்க இல்ல" என்று அவள் அவளின் மனதில் உள்ளதை அவனிடம் கூறினாள்..

அதைக்கேட்ட அவனும் மாலதியின் குணத்தை உணர்ந்து, "நான் தான வாங்கி தரேன்.. நான் யார் உனக்கு??" என்று அவளிடம் கேள்வி கேட்டான் ..

"ஆதி அண்ணா "

"அது இல்லை நான் உனக்கு இப்போ என்ன முறை வேணும்??" என்று கேட்டான்..

"அது நீங்க என்னோட புருஷன்"

"அப்போ புருஷன் சொன்னா கேட்கணும்ல" என கேட்க

"ஆமாம்" என்றவள் விழிகள் உடனே விரிந்து, "அப்போ நான் இதை யூஸ் பண்ணிக்க வா?? அம்மா கேட்டா ஆதி அண்ணா தான் யூஸ் பண்ண சொன்னாங்கன்னு சொல்லிடட்டுமா??" என்று அவனிடமே கேட்க, "தைரியமா சொல்லிக்கோ.. என்னோட புருஷன் இந்த போனை வாங்கி தந்தார்.. அவர் யூஸ் பண்ண சொன்னார் என்று சொல்லு" என்று கூற, அதை கேட்டு மெல்லிய புன்னகை சிந்திய அவள், "தேங்க்யூ ஆதி அண்ணா" என்று கூறியவள் அந்த போனை வாங்கிக் கொண்டு அதை நோண்ட துவங்கினாள்..

அந்த சமயம் பார்த்து ஆதி இன்று முழுவதும் அவனுடைய லேப்டாப்பை திறக்கவே இல்லை.. அதனால் போனை ஆன் செய்து லேப்டாப்பை திறந்து சிறிது வேலை செய்யலாம் என அவனும் சோபாவில் அவள் அருகே அமர்ந்து விட்டான்...

போனை ஆன் செய்யவும் தொடர்ந்து அவனுடைய எண்ணுக்கு குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்க அந்தக் குறுஞ்செய்திகள் எல்லாம் வாசித்த அவனுக்கு சந்தோஷம் தாளவில்லை..

அவனுக்கு அவன் எதிர்பார்த்த ப்ராஜெக்ட் அவனுடைய கம்பெனிக்கு கிடைத்துவிட்டது.. இதற்காக அவன் போராட்டம் பெரிது எனலாம்..

அதனால் உடனே விக்கியை அழைத்த ஆதி, "ஹே ப்ராஜெக்ட் கிடைச்சிடுச்சா?? ஏன்டா சொல்லவே இல்ல??" என்று ஆதங்கத்தோடு ஆதி கேட்டான்..

"உனக்கு தான் உடம்பு சரி இல்லையே டா.. நாங்க கூப்பிட்டாலும் போனை நீ எடுக்கலையே?? என்ன பண்றது??" என்று விக்கி ஒரு பொடி வைத்து கூறவும் அதை கேட்ட ஆதிக்கு அப்போது தான் பொய் சொன்னது நினைவு வந்தாலும், "ஆமாம் டா இரண்டு நாளா அலைஞ்சிட்டு வந்ததில் கொஞ்சம் சரியில்லை" என்று அவனும் அவன் சொன்ன பொய்யை உண்மை ஆக்க முயல, அப்படியா மவனே ஒரு என எண்ணிய விக்கி, "சரி நான் கொஞ்சம் பைல்ஸ் உன்னோட வாட்ஸ்அப் அனுப்புறேன் அதெல்லாம் கொஞ்சம் சரியா இருக்கான்னு செக் பண்ணு" என்றவன் காலையில் கண்மணி மற்றும் ஆதி இருவரும் ஐஸ்கிரீம் சுவைத்துக் கொண்டிருந்த வீடியோவை அனுப்ப,

அதை பார்த்த ஆதி அடப்பாவிகளா இத எப்படா எடுத்தீங்க என்று எண்ணி அமைதியாக மெல்லிய புன்னகையோடு இருக்க, "என்னடா பேச்சையே காணோம்.. மாத்திரை ஏதாவது முழுங்கிட்டியா.. இல்லை உடம்பு முடியாமல் செத்து போயிட்டியா??" என்று விக்கி மேலும் சீண்டினான்..

படுபாவி பார்த்துட்டான் போல என்று எண்ணினாலும் ஆதி சமாளிக்கும் விதமாக, "அது தான் தெரிஞ்சிடுச்சு இல்ல அவளோட அட்மிஷனுக்காக போயிருந்தேன்" என்றவன், "மிச்சத்தை நாளைக்கு வந்து பேசிக்கலாம் வை போனை" என்றவன் மெல்லிய புன்னகையோடு இப்படி சிக்கிட்டோமே என எண்ணி தனக்கு வந்த மெயில்களை கவனிக்க துவங்கினான்..

இரவு ஆனதும் அவன் அருகே வந்து படுத்தவளிடம், "நாளையிலிருந்து எனக்கு ஆபீஸ் போகணும்.. நான் கிளம்பிடுவேன் நீ தனியா இருந்துப்ப தானே??" என்றான்..

அவளோ, "நானா தனியாவா??" என்று பயந்த விழிகளில் கேட்கவும், "அதுனால என்ன நீ ஸ்ட்ராங் தானே??" என கேட்டான்..

"ஆமாம்" என அவள் இழுக்க, "பேசாம உன்னோட அம்மாவை உன்னோட துணைக்கு வர சொல்லவா??" என அவன் நக்கலாக கேட்டான்..

"போங்க ஆதி அண்ணா.. விளையாடிதீங்க" என்றவள், "நான் தனியா இருந்துப்பேன்" என கூறியவள் சிறிது நேரத்தில் உறங்கி போனாள்..

விடியல் அழகாக விடிந்தது.. காலை கண்மணி துயில் கலையும் போது குளித்து தயாராக இருந்தான் ஆதி..

அலுவலகம் செல்வதற்காக தயாராகி கொண்டு இருந்தவனை பார்த்து கொண்டே எழுந்தவள், "ஆதி அண்ணா எங்கே போறீங்க" என்றாள் பதட்டத்தோடு,

"ஆபிசுக்கு போகணும் முக்கியமான மீட்டிங் இருக்கு" என கூறினான்..

"இவ்ளோ நேரமாவா போவீங்க??" என கேட்டாள்..

அவனோ, "இதுவே லேட் தான்" என்றவனிடம், "நான் உங்களுக்கு எதுவும் சமைக்கலையே??' என படபடவென எழுந்தவள் சமயம் பார்க்க எட்டை தொட்டு இருந்தது..

இவ்வளவு நேரம் உறங்கியதை மகா பாவமாக கருதியவள் மிகவும் குற்ற உணர்ச்சியோடு, "ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்றீங்களா?? நான் ஏதாவது செஞ்சு தரேன்??" என்று கூறினாள்..

ஏனெனில் வந்ததிலிருந்து இரண்டு நாட்கள் வெளியே இருந்து தான் உணவு உண்டார்கள்..

இன்று முதல் சமைக்கலாம் என எண்ணி இருந்தாள் கண்மணி.. அவளை பார்த்து அவனோ, "திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு குக் அக்கா வருவாங்க.. அவங்க சமைத்து வைத்து வீட்டை கிளீன் பண்ணிட்டு போயிடுவாங்க.. அதனால நீ டென்ஷனாக வேண்டாம் ஓகே" என்று அவன் அவளுடைய கன்னத்தை தட்டி விட்டு தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்..

அவளோ வீட்டின் வாயில் வரை வந்து அவனை வழி அனுப்பி வைத்தவள் முன்னால் ஈஸ்வரி அக்கா இன்முகமாக சிரித்து, "வா பாப்பா சாப்பிடு சூடா இட்லி இருக்கு" என்று கூறினார்..

அதை கேட்டதும் அவள் சிரித்தபடி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் உணவு உண்ண அமர அந்த அக்கா பக்குவமாக எல்லாம் பரிமாறியவரிடம், "அக்கா என் பேரு கண்மணி" என அவளே அறிமுகம் செய்து கொண்டாள்..

அவரும் மெல்லிய புன்னகையோடு, "நல்ல பேரு பாப்பா" என்க

"எத்தனை வருஷமா அக்கா இங்க வேலை செய்றீங்க??" என்று அவள் கேட்கவும், "தம்பி இந்த பிளாட் வாங்கினதிலிருந்து நான் இங்கே வேலை செய்றேன் பாப்பா" என்று அவரும் பதில் கூறினார்..

"அக்கா நான் யாருன்னு சொன்னாரா??" என்று அவள் கேட்டாள்.. ஏனோ அவளும் அந்த கேள்வி கேட்க தோன்றவும் கேட்டாள்..

அவரோ, "அதெல்லாம் சொல்ல பாப்பா.. ஏன் கேக்குறீங்க??" என அவர் கேட்டார்.. "இல்ல சும்மாதான் கேட்டேன்" என்று கூறிய அவளிடம், "ஊர்ல இருந்து சொந்தக்கார பொண்ணு வந்து இருக்கா.. அவ தனியா இருக்க பயப்படுவா? அதனால நீங்க கூட இருங்க.. நான் வந்ததும் போங்க அப்படின்னு சொன்னாரு" என்று வேலைக்கார அக்காவும் தனக்கு தெரிந்ததை கூறினார்..

அதைக் கேட்டதும் அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.. நேற்று தான் மனைவி என்று கூறினான்.. இன்று சொந்தக்கார பொண்ணு என்று கூறி இருக்கிறாரே என முதன்முறையாக ஆதி மீது கோபம் கொண்டாள் கண்மணி..

அதுவும் அவன் வந்ததும் அவனுடன் சண்டை போட்டே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு அவள் ஆளாகி இருந்தாள் கண்மணி..ஆம் இந்த அக்காவிடம் மனைவி என்று கூறினால் குறைந்தா போயிடும்.. அந்த அக்கா தன்னை பற்றி என்ன நினைப்பார் என்ற கேள்வி அவளை குடைந்து அவளின் கோபத்திற்கு வடிகால் இட்டு காலை சென்ற அவளின் மாலை எப்போது வருவான் என காத்து இருக்க துவங்கினாள் கண்மணி..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top