வர்ணம் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 545
Thread starter  

அத்தியாயம் : 8

"உங்களை எப்படிங்க நம்புறது நீங்க இனி குழந்தையை பார்க்க வரலாம் ஆனால் உங்க மனைவியோட  வீட்டுக்கு வாங்க வந்து பார்த்திட்டு போங்க ஒரு மாசம் கழித்து உங்க குழந்தையை நீங்க கூட்டிட்டு போகலாம் நீங்க என் பேத்தியை வெளியே அனுப்ப மாட்டீங்க ஆனால் வந்த பொண்ணு எப்படி என்னுடைய பேத்தியை நல்லா பார்த்துப்பாங்களா இல்லையான்னு எனக்கு தெரிய வேண்டாமா?" என்று அவர் கேள்வி கேட்டார்..

அவர் கேள்வியிலும் நியாயம் உள்ளது.. அவருக்கு உண்மையில் தன் பேரக் குழந்தையை அவனிடம் கொடுக்க விருப்பமில்லை இறந்த மகளே தன் கையில் கிடைத்தது போல தான் அவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார் அப்படி இருக்க, அவருக்கும் அவனின் இரண்டாவது திருமணம் தன் மகளின் விருப்பத்தின் பேரில் நடக்க வேண்டும் என நினைத்தாலும் திருமணத்திற்கு பிறகு அவனுடைய வாழ்க்கையும் சரி அவனுக்காக வரும் மனைவியும் சரி எப்படி தன் பேர பிள்ளையை பார்த்துக் கொள்வார்கள் என்ற தவிப்பு அவருக்கு இருக்கிறது அதனால் வேண்டுமென்று அவனையும் அவனின் இரண்டாவது மனைவியையும் பார்க்க வேண்டும் என கூறுகிறார் அவ்வளவுதான் ஆனால் அவனுக்கோ அவரின் இந்த பிடிவாதம் பிடிக்கவில்லை..

"ஏங்க உங்க பொண்ணு கல்யாணம் தானே பண்ணிக்க சொன்னா?? மத்தபடி நாங்க எப்படி இருந்தா உங்களுக்கு என்ன அதை நாங்க பார்த்துக்கிறோம் உங்க வேலை என்னவோ அதை பாருங்க" என்று நிரஞ்சன் கூற,

அதைக் கேட்ட வெங்கட்ராமன், "என் வேலையே இதுதான் சொன்னதை செய்ங்க" என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்..

கயல் ஒரு பக்கம் எதிர்பாராத திருமணத்தில் அழுது கொண்டிருக்க குடும்பத்தாரும் எப்படியோ கல்யாணம் ஆகிவிட்டதே என நினைக்க, அந்த ஆத்திரத்தில் தன் கையில் இருக்கும் போனை வெங்கட்ராமனை அடிக்க முடியாத ஆத்திரத்தில் ஓங்கி கீழே வீசினான்.. பிறகு தன் கோபத்தை அடக்க அங்கும் இங்கும் நடந்து தன் தலை முடியை கோதி இடுப்பில் கையை கட்டி நின்று தன் கோபத்தை அடக்க அவன் பெரும்பாடு பட திடீரென கீழே சிதறிய அந்த போனை பார்த்தான்..

அந்த போன் துண்டு துண்டாக போய் இருந்தது.. அதைக் கண்டவன் ஓடிச்சென்று அந்த போனை எடுத்து அதன் ஒவ்வொரு சிதறிய பாகத்தையும் எடுத்தவன் தான் நொடியில் செய்த தவறை எண்ணி தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்,"ஐயோ அவசரப்பட்டுட்டேன்" என நினைத்தான் அதில் தான் ஜானகி அவனும் எடுத்த பல புகைப்படங்கள் இருந்தது அதையெல்லாம் தொலைத்து விட்டேனா என மீண்டும் அவன் வருத்தத்துக்குள் சென்றான்.. அவனுக்கு இந்த நொடி அந்த போனை ரெடி செய்ய வேண்டும் இல்லை என்றால் அவன் மனம் அவனை உடைந்து எடுத்து விடும்...

அவனின் செயல்களை பார்த்த கலையரசன் தன் மகன் அருகே வந்து மகனின் தோளை தொட, "எனக்கு மட்டும் ஏன் பா இப்படி எல்லாம் நடக்குது அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?" என்று கேட்டான்..

"கண்ணா எல்லாருக்கும் எல்லாம் நடந்ததில்லை நாம ஆசைப்பட்டதெல்லாம் நடந்தா வாழ்க்கையில் என்ன இருக்கு இன்பமும் துன்பமும் தான் வாழ்க்கை எல்லாம் சரியாகும்.. இப்போ உனக்கு நான் ஒரு வாழ்க்கை தொடங்கி இருக்கு அதை பாருப்பா" என்று அவர் ஒருவழியாக அவனை சமாதானம் செய்து அழைத்து சென்றார்..

அனைவருக்கும் அவனுடைய வருத்தம் வருத்தத்தை கொடுத்தாலும் அவளுக்கோ அவனின் செயல் பயத்தை கொடுத்தது..

அவனின் குணாதிசயங்களை பார்த்து அவனுக்கு இந்த திருமணம் விருப்பமில்லா திருமணம் என்றும் மேலும் கருணை அம்மாள் பேசியதை வைத்து கயல் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் எப்படியாவது அவனிடம் விஷயத்தை கூறி இந்த இக்கட்டில் இருந்து தப்பித்து விட வேண்டும் அவளுடைய அம்மாவுக்காக இதை செய்திருந்தாலும் அவள் மனதில் கிஷோர் இருக்க அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என கயல் நினைத்திருந்தாள்..

அவனும் படித்தவன் தானே ஒரு பேராசிரியர் வேறு அதனால் அவனிடம் உண்மையை கூறினால் அவன் புரிந்து கொள்வான் என அவள் அப்போது நினைத்திருந்தாள் ஆனால் அது நடக்க இயலாத காரியம் என அவளுக்கு அந்த நொடி அறிய வாய்ப்புகள் இல்லை...

ஆனால் அவன் மீது வருத்தத்தை வைக்கவே கூடாது என்பது போல அவனின் செயல்கள் பின்னாளில் இருக்க போகிறது என யாரும் அறிய போவது இல்லை..

ஆம் போன் உடைந்த ஆத்திரமும் தன் மாமனார் பேசிய ஆத்திரத்தையும் மனதில் வைத்துக் கொண்டு தனக்கு இப்பொழுது தான் திருமணம் நடந்திருக்கிறது தனக்காக தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வேறொரு பெண் இரண்டாம் முறையாக வந்திருக்கிறாள் என்ற உணர்வு கூட இல்லாமல் அவளை முகத்தை கூட சரியாக பார்க்காமல் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தான்..

அவன் வெளியே செல்லவும் அவன் பின்னால் ஓடிய பாக்கியம், "எங்க அப்பா போற?" என்க

"நான் ஊருக்கு போறேன்" என்க

"அப்போ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ மிச்சம் சடங்குகள் எல்லாம் இருக்குப்பா எல்லாம் முடிஞ்சிட்டு எல்லோரும் ஒண்ணாவே போகலாம்" என்று கூற

"அதுதான் தாலி கட்டிட்டேனே இனி என்ன சடங்கு இருக்கு?? இங்கேயே இந்த இடத்திலேயே போன்ல பேசின அவரை மாதிரி அவள் கூட சாந்தி முகூர்த்தம் நடத்த சொல்றீங்களா? கூட வாழ்ந்தால் தான் பிள்ளையை கொடுப்பேன்னு சொல்றாரு" என்க,

"அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் பா" என்றவர்,

"இப்போ நடக்க வேண்டியதை பார்க்கலாம்" என்க

தன் மனதை யாருமே புரிந்து கொள்ளவில்லையே என கருதி அனைவரும் மீது இருக்கும் ஆத்திரத்தில் அவளை அப்போது தான் பார்ப்பவன் போல பார்த்து, வெங்கட்ராமன் பேசியதற்கு அவளை ஒரு முறை முறைத்து விட்டு ,"ஹே இங்கே வா?"  என்க

அவளோ கருணை அம்மாள் அவளை போ என்பது போல இடிக்கவும் அவளும் அவன் அருகே செல்ல, "என்ன உனக்கு இப்பவே என்கூட வாழணுமா??" என்க

"இவங்க சொல்ற மாதிரி இதே இடத்தில் உனக்கு சாந்தி முகூர்த்தம் வேணுமா?" என்க

அவளோ அவன் கேட்டதில் பயந்து போய்,"இல்லை என தலையாட்ட,

" மா பார்த்தீங்களா? நான் தாலி கட்டின பொண்ணே அமைதியா இருக்கு உங்களுக்கு என்ன? நீங்களும் அவரை மாதிரி பேசாதீங்க வேற ஏதாவது சொல்லிட போறேன்! நான் தாலி கட்டின பொண்ணுக்கு பிசிகல் ரிலேஷன்ஷிப் வேணும்னா நான் அப்போ சேட்டிஸ்ஃபை பண்ணிக்கிறேன் இப்போ நீங்க கொஞ்சம் வழியை விடுறீங்களா?" என்றான்..அதை கேட்டு அனைவரும் அதிர,

அவனோ யாரையும் கண்டு கொள்ளாமல் அவனுடைய காரை எடுத்துவிட்டு அவன் யாரிடமும் எதுவும் கூறாமல் சென்னைக்கு சென்று விட்டான்.. அவளோ அவனின் இந்த செயலில்  மேலும் அதிர்ந்து போய் இருந்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top