மோகம் 15
மோகம் - 15
ஈஸ்வரி அக்காவின் கைகளில் சமைத்த உணவை நன்றாக உண்டவள் எப்படியோ மதியம் உறங்கி போய் இருந்தாள்..
இங்கு வந்த இரண்டு மூன்று நாட்களில் அவள் வாழ்க்கையில் சொர்க்கம் என கூறலாம்.. அம்மாவின் தொல்லை இல்லை.. எதைப்பற்றியும் கவலை வேண்டாம்.. அவளை பொறுத்தவரை ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்று தான் கூற வேண்டும்..
மாலை ஆனதும் மெல்ல எழுந்தவள் பால்கனியில் நின்று கொண்டு அந்த எழிலை ரசித்துக் கொண்டு இருக்கவும் ஆதியின் கார் பிளாட்டின் முன் கேட்டுக்குள் நுழைவது தெரிய ஒரு சிறு புன்னகை அவள் முகத்தில் வந்து போனது..
வேகமாக வந்து தன் முகத்தை பார்த்தவள் உறங்கி எழுந்ததால் பொலிவிழந்து இருக்க, வேகமாக முகத்தை கழுவி, தலையை வாரி ஒரு பொட்டு வைத்து தன்னை அழகுப்படுத்தி கொண்டாள்..
அதற்குள் ஹாலில் பேச்சு சத்தம் கேட்க ஆதி, "கண்மணி.. கண்மணி.. உன்னை பார்க்க யாரு வந்து இருக்காங்க பாரு??" என ஆதி அழைக்கவும், "இதோ வந்துட்டேன் ஆதி அண்ணா" என்று கூறவும், "என்ன ஆதி அண்ணாவா??" என்று விக்கி கேட்டான்..
ஆம் விக்கி கண்மணியை காண வீட்டிற்கு வந்திருந்தான்..
அவன் காதுகளில் ஆதி அண்ணா என விழவும், "என்னடா அண்ணா வா??" என்று கேட்கவும் தான் ஆதி, 'அய்யோ என்னோட மானத்தை வாங்குறாளே.. இத முதல்ல நிறுத்தணும்' என்று எண்ணியவன், "அது சின்ன வயசுல இருந்து கூப்பிட்டு பழகிடுச்சுடா" என்று கூறவும், "சரிதான்" என்று நக்கலாக அவனைப் பார்த்து சிரித்தான் விக்கி..
அதற்குள் அவள் ஆகாய வண்ண நிற சுடிதார் அணிந்து தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டவள் ஹாலுக்கு வர, "கண்மணி இதுதான் என்னோட ஃபிரண்ட் விக்கி உன்னை பார்க்க வந்திருக்கான்' என்று ஆதி தன் நண்பனை அவளுக்கு அறிமுகம் செய்தான்..
"தெரியும் ஆதி அண்ணா உங்க கல்யாணத்துக்கு கூட வந்திருந்தாங்க இல்ல.. உங்க ரூம்ல போட்டோல பார்த்து இருக்கேன்" என்று அவள் கூற, "பாருங்க ஆதி அண்ணா உங்க பொண்டாட்டி எப்படி கற்பூரமா இருக்காங்க அப்படின்னு" என்று விக்கி தன் வேலையை செய்ய ஆரம்பிக்க, "விக்கி அடக்கி வாசி" என்று ஆதி சிரித்துக் கொண்டே தன் நண்பனை எச்சரிக்கை செய்தான்..
விக்கி தான் ஆதி அண்ணா என விழிப்பதை தான் கிண்டல் செய்கிறான் என புரியாமல் அவளோ சிரிக்க விக்கி சம்பிரதாயமாக அவளைப் பற்றி விசாரித்தவன், "இந்த ஊரெல்லாம் பிடிச்சிருக்கா??" என்று கேட்க, "ரொம்ப பிடிச்சிருக்கு" என்று அவள் கண்கள் விரிய கூறினாள்..
அதற்குள் ஈஸ்வரி அக்கா காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிய ஆதி, "அக்கா நீங்க கிளம்பிடுங்க அக்கா உங்களுக்கு டைம் ஆச்சுல்ல.."
" சரிங்க தம்பி.. நைட்டுக்கு தேவையானதெல்லாம் சமைச்சு வச்சுட்டேன்" என்று கூறி அவர் கிளம்பி விட்டார்..
பிறகு அவளிடம் சிறிது நேரம் பேசிய விக்கிக்கு இவள் ஒரு அப்பாவி இவளுக்கு எதுவும் தெரியாது என்பதை புரிந்தவனுக்கு தன் நண்பனின் கோபத்துக்கு ஆவேசத்துக்கும் இவள் ஒருத்தி தான் சரியான ஆளாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்து அவன் விடை பெற்றான்..
அவன் சென்றதும் தன் உடையை மாற்ற ஆதி செல்லவும் அவன் பின்னாலேயே வந்த அவளைப் பார்த்து அப்போதுதான் ஞாபகம் வந்தவன் போல, "கண்மணி இனிமேல் ஆதி அண்ணான்னு சொல்லாத.. நான் உனக்கு என்ன முறை வேணும்??" என்று கேட்டான்
"நீங்க என்னோட புருஷன்" என்று அவள் கூற, "அப்போ என்னை என்னன்னு சொல்லணும்??" என அவன் கேட்கவும், "மாமா சொல்லணும்"
" அப்ப அதையே சொல்லு.. முறையை மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்காத.. முன்னாடி எப்படியோ இப்போ அப்படி கூப்பிடாத புரியுதா" என்று அவன் அழுத்தமாக கூறினான்.
அப்போதுதான் ஞாபகம் வந்தவள் போல, "சொன்னா என்ன தப்பு? நீங்க மட்டும் நான் உங்க பொண்டாட்டின்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டா இருக்கீங்க??" என்று அவள் கேட்கவும், அவனும் அவளை அதிசயமாகவும், அதே நேரம் அழுத்தமாகவும் பார்த்தான்.. ஆம் இவள் கேள்வி எல்லாம் கேட்பாளா என்பது போல அவன் பார்த்தான்..
"புரியல" என்று அவன் கூறவும், "ஆமாம் ஈஸ்வரி அக்கா கிட்ட நீங்க என்னை உங்க சொந்தக்கார பொண்ணு தானே சொல்லி இருக்கீங்க.. உங்க பொண்டாட்டி அப்படின்னு சொல்லல தானே.. நீங்க மட்டும் என்னை பொண்டாட்டின்னு சொல்ல மாட்டீங்க.. நான் மட்டும் உங்களை மாமா என்று சொல்லனுமா?? அதெல்லாம் சொல்ல முடியாது.. நீங்க எப்போ என்னை பொண்டாட்டின்னு சொல்றீங்களோ அப்பத்தான் நான் மாமான்னு சொல்லுவேன்" என்று அவளும் காலையில் முதல் சேமித்து வைத்த அவளுடைய கோபத்தை அவனிடம் கொட்டவும் அவனுக்கு என்னவோ சிறுபிள்ளை கோபம் போல அவள் மீது கோபம் கொள்ளவெல்லாம் தோன்றவில்லை.. மாறாக மெல்லிய சிரிப்பு தான் வந்தது..
அதனால் இவளை சிறிதாக விளையாட்டு காட்ட வேண்டும் என கருதிய அவன், "அப்போ நான் உன்னை பொண்டாட்டியாக ஏத்துக்கிட்டா.. நீ என்னை மாமா சொல்லுவியா??" என கேட்டான்.
அவளும் மார்பில் கையைக் கட்டி, "ஆமாம் நீங்க என்னை பொண்டாட்டின்னு சொன்னா தான் நான் உங்களை மாமானு சொல்லுவேன்.. அதுவரைக்கும் ஆதி அண்ணா தான்" என்று அவள் முகத்தை திருப்பிக் கொண்டு தான் இன்னும் கோபத்தோடு இருப்பதாக அவனுக்கு காட்டிக்கொண்டிருக்கும் நேரம் ஒவ்வொரு அடியாக அவளருகே வந்தவன் மார்பில் அவள் கையை கட்டி இருக்க அப்படியே அவளின் இடையை தன் ஒரு கையால் வளைத்தவன் கைகளுக்குள் பாந்தமாக அகப்பட்டவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க, "என்ன பார்க்கிற?? புருஷன் பொண்டாட்டி அப்படின்னா இப்படித்தான் இருப்பாங்க.. உனக்கு தெரியுமா??" என்று ஆதி அவளின் கண்களை பார்த்து கூறினான்..
அவனுடைய நெருக்கம் அவளுக்குள் என்னவோ செய்ய, உள்ளம் படபடக்க இதயம் வாய் வழியே வெளியே வருவது போல அவளுக்கு தோன்றவும், அவனின் இதயத்தின் ஓசை அவளுக்கு படபடவென கேட்கும் பொழுது அவள் இதயம் மேலும் ரயில் வேகத்தில் துடித்துக் கொண்டே இருந்தது..
"புருஷன் பொண்டாட்டி அப்படின்னா என்ன பண்ணுவாங்க தெரியுமா??" என்றவன் அவளின் இடையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தவன் இதயம் அவளிடம் விளையாட தான் அவள் அருகே அவன் வந்து இருந்தாலும், அவளின் இதயத்தின் ஓசையை காட்டிலும் சீராக அவனின் இதயம் துடிக்க சுண்டி இழுக்கும் அவளின் காந்த விழிகளுக்குள் நுழைந்து விட மாட்டோமா ஏங்கியது..
அவளின் ஈர உதடு அவனை வா என அழைப்பது போல இருந்தது... முத்தமிடு முத்தமிடு என அவன் காதுக்குள் அவனுடைய மனசாட்சி கூறுவது போல அவன் மூளை அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்க, அந்த நொடி அவன் பொண்டாட்டி தானே அப்புறம் என்ன என்ற கேள்வியும் அவனைக் குடைய, எப்போதும் அவளை காணும் பொழுது அவனுள் எழும் மாயாஜாலம் இப்பொழுதும் அதிவேகமாக வேலை செய்ய, அவனின் நாடி நரம்புகள் எல்லாம் அதிவேகமாக துடிக்க அவளின் முகம் நோக்கி குனிந்தவன் அவனின் சூடான மூச்சுக்காற்றை அவளின் கன்னத்தில் விட அவளுக்கு கூச்சமாக இருந்தது..
அதே நேரம் அவனின் நெருக்கத்தில் அவளுக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் எழுந்து அவளை தொல்லை செய்தது.. அது என்ன என அவளால் பிரித்தறிய முடியவில்லை..
அவன் கன்னத்தை நோக்கி குனியும் பொழுது அவள் கன்னம் சூடாகி உடலெல்லாம் சிவப்பது போன்ற எண்ணத்தை கொடுக்க, அவளின் மூளையோ கண்களை மூடு என்று அறிவுரை செய்யவும் கண்களை மூடி கொண்டாள்..
பிறகு அவள் கன்னத்தில் தன் இதழ்களை பதித்த ஆதி நொடிப்பொழுதில் அவளை இறுக்கமாக காற்று கூட போக முடியாத அளவிற்கு அணைத்து விடுவித்தவன் கைகள் நடுங்க துவங்கியது..
அவன் மூளை மேலும் முன்னேறு என்று கூற அது செய்வது தவறு என அவனுடைய மனசாட்சி கூற அவன் விலகி நின்று கொண்டான்..
அதன் பிறகு கண்களை மூடி நிற்கும் கண்மணியின் முகத்தை பார்க்க ஆதிக்கு என்னவோ போல இருக்க, 'என்ன காரியம் செய்துவிட்டேன் அவ என்னை என்ன நினைப்பா??' என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, தன்னைத்தானே நிலை படுத்திக் கொள்ளும் பொருட்டு, "புருஷன் பொண்டாட்டி அப்படின்னா எப்படி எல்லாம் இருப்பாங்கன்னு உன்னோட அம்மா சொல்லி கொடுக்கலையா?? இப்ப சொல்லு நான் என்ன பண்ணட்டும்?? நான் சொல்றதை நீ கேக்குறியா?? இல்ல ஒரு புருஷனா நான் செய்வதை செய்யட்டுமா??" என கேட்கவும், அவன் முத்தம் வைத்ததும் இவளுக்கோ படப்படவென அடிக்க துவங்கியது..
"அய்யய்யோ முத்தம் வச்சுட்டார் அப்போ நமக்கு குழந்தை வந்துடுமா??" என்று அவள் வேறு திசையில் யோசிக்க துவங்கி சூடான கன்னத்தை தேய்த்து கொண்டே இருந்தாள்..
அவனோ, 'என்ன இவள் அமைதியா இருக்கா.. ஒருவேளை நம்மளை தப்பா நினைச்சுட்டாளா??' என யோசித்து திரும்பி பார்க்க அவளோ கன்னத்தை தேய்த்துக் கொண்டிருக்கவும், 'ஐயோ சரியான மாங்கா மடையன் டா.. ஒரு பொண்ணு கிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும் கூட உனக்கு தெரியாதா?? அவ பாரு கரண்ட்ல ஷாக் அடிச்ச மாதிரி நின்னுட்டு இருக்கா??" என்று யோசித்தவன் அவளின் அதிர்ச்சியை மாற்றும் பொருட்டு அவளருகே வந்தவன், "கண்மணி.." என தோளை தொட அவளுக்கே தெரியாமல், "அது வந்து நீங்க முத்தம் தந்தீங்கல எனக்கு குழந்தை வந்துடுமா??" என அதி முக்கியமான கேள்வி அவனிடம் கேட்க, அதைக் கேட்டதும் அவனுடைய குற்ற உணர்ச்சி எல்லை கடந்து சிரிக்க துவங்கி விட்டான்..
'என்ன ஒரு முத்தத்துக்கு குழந்தையா??' ஐயையோ என்ன எண்ணியவன், "குழந்தை எல்லாம் வராது கண்மணி" என பதில் சொல்லும்போதே சிரித்தான்..
"கண்டிப்பா.." என ஆச்சரியமாக கண்மணி வினவினாள்..
"ஆமாம் கண்டிப்பா.. இந்த முத்தத்துக்கு எல்லாம் குழந்தை வராது.."
" அப்போ எந்த முத்ததுக்கு குழந்தை வரும்??" என அவனிடமே கேள்வி கேட்டாள் அவனின் மனைவி..
அவனோ இந்தப் பெண் கூடிய சீக்கிரத்தில் அவனை பைத்தியக்காரி ஆக்கி விடுவாள் போல என எண்ணிக்கொண்டு, "அது வேற முத்தம் நான் தரும் போது உனக்கே புரியும்" என்று கூறினான்..
அவளோ அப்போதுதான் பெரிய நிம்மதி பெரும் மூச்சைவிட்டவள், "நான் கூட பயந்துட்டேன் குழந்தை வந்துடுமோ அப்படின்னு" என்றவளை பார்க்கும் பொழுதும் அவள் பேசும்போதும் அவள் அருகே நிற்கும் பொழுதும் எழும் உணர்வுகளை அடக்க முடியாமல், "சரி உன்னோட அம்மா உன்கிட்ட பேச முடியலன்னு சொல்லி எனக்கு கால் பண்ணி இருந்தாங்க.. வீட்டுக்கு கூப்பிட்டு பேசலையா நீ?? நீ வந்ததிலிருந்து கூப்பிடலைன்னு சொல்லிட்டு இருக்காங்க.. இன்னைக்கு பேசிடு" என்று கூறியவன் அதற்கு மேல் அங்க நின்றால் அவ்வளவுதான் என கருதி அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டான்..
அவளும், "முத்தம் கொடுத்தா குழந்தை வரும் அப்படின்னு தானே கல்பனா சொன்னா.. வேற முத்தமா இருக்குமோ?? அது என்ன முத்தமோ தெரியலையே?? கண்டிப்பா ஆதி அண்ணா கிட்ட கேட்கணும்??" என அது என்ன முத்தம் என அறியும் ஆவலில் மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டு தன் போனை எடுத்தாள் கண்மணி..
