மோகம் 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 545
Thread starter  

மோகம் - 16

"ஹலோ அம்மா" என கண்மணி சொல்லவில்லை.. அதற்குள் அவளின் குரலை கேட்ட மாலதி, "நீயெல்லாம் ஒரு பொண்ணா டி?? போனவ அப்படியே இருந்துப்பியா?? நாங்க தான் உனக்கு போன் பண்ணி பேசணுமா?? நீ கூப்பிட மாட்டியா??

நாங்க எல்லாம் இருக்கோமா இல்லை செத்துட்டோமான்னு கூட கேட்க மாட்டியா? எங்களை மொத்தமா மறந்துட்ட அப்படி தானே??" என எடுத்ததுமே கரித்து கொட்டினார்..

அதை கேட்டதும் அவளுக்கு பயம் தொற்றிக் கொள்ள மெல்லிய குரலில், "இல்லமா அது வந்து போன் நேத்து தான் ஆதி அண்ணா வாங்கி தந்தாங்க" என்றதும் அவ்வளவு தான்..

"என்ன போனா?? உனக்கு எதுக்கு போன்??" என்று கோபமாக கேட்டார்..அவரை பொறுத்தவரை மகள் மகா பாவம் செய்து இருக்கிறாள்..

"ஆதி அண்ணா தான் வந்தாங்க.." என்றதும், "நீ அவன் கிட்ட கேட்டியா??" என்று கொந்தளித்து கேட்டார்..

"சத்தியமா நான் இல்லம்மா.. அவரா தான் வாங்கிட்டு வந்து கொடுத்தார்.. அவர் இது புது ஊரு.. போன் இல்லாமல் இருக்க முடியாது அப்படின்னு சொல்லி கொடுத்தார்" என்றதும் அதற்கு மாலதியால் அவளை திட்ட முடியாமல் போனது..

"அது என்னடி ஆதி அண்ணா?? அவன் என்ன உனக்கு அண்ணனா?? தாலி கட்டின புருஷன் ஆகிட்டான்.. அவனை போய் அண்ணான்னு சொல்லிட்டு இருக்க?? அசிங்கமா இல்ல??" என்று கூறியதும் கண்மணி தன் நாக்கை இலேசாக கடித்து, "இப்பதான் அவரு சொன்னாரு.. நான் அவர்கிட்ட சண்டை போட்டேன்.. இப்ப அம்மா கிட்ட மாட்டிகிட்டேன் என்ன சொல்றதுன்னு தெரியலையே??" என்று அமைதியாக இருந்தாள்..

"என்ன டி அமைதியா இருக்க??"

"இல்லை மா அது வந்து.." என இழுத்தாள்..

"ஏதாவது ஒன்னுனா பேசுறாளா பாரு" என்று முணுமுணுத்த மாலதி, "நான் சொல்லிக்கொடுத்த மாதிரி காலைல நேரமா எந்திரிக்கிரியா?? அவனுக்கு சமைச்சு கொடுக்கிறியா?? அவனுக்கு தேவையான வேலையெல்லாம் செஞ்சு கொடுக்கிறியா?? அவன் என்ன பண்ணினாலும் கத்தக்கூடாது அழகூடாது.. " என டிபிக்கல் மனைவி என்னென்ன வேலை செய்வாரோ அதையெல்லாம் மாலதி அடுக்கினார்..

ஆனால் அதில் ஒன்றைக் கூட கண்மணி இன்னும் செய்ய துவங்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை..

"ஐயோ மாட்டிக்கிட்டோமே.. இப்ப என்ன சொல்றது??" என மீண்டும் அமைதியாக இருக்க, "என்னடி அமைதியா இருக்க சமைக்கிறியா இல்லையா?? நான் சொல்லிக் கொடுத்த மாதிரி செய்யணும் புரியுதா??? அடுத்தவங்க நம்மளை பேசுற மாதிரி வச்சுக்க கூடாது புரியுதா??" என்று அவர் கூறினார்..

அவர் மீண்டும் மீண்டும் கேட்கவும், "அம்மா இங்க சமைக்க வேண்டிய வேலை எல்லாம் இல்ல.. வேலைக்கார அக்கா இருக்காங்க.. அவங்க சமைச்சுடு வாங்க" என்று கூறியதும் அவ்வளவுதான் மாலதி பொங்கிவிட்டார்..

"ரெண்டு பேருக்கு சமைக்க வேலைக்காரியா?? இது எந்த ஊரு நியாயம்??" என்றவருக்கு தாங்கிக் கொள்ள முடியவில்லை.. கிராமத்தில் வளர்ந்த ஒரு பெண்ணான மாலதிக்கு இதை அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியவில்லை..

"அப்ப நீ எந்த வேலையும் செய்யாமல் ஜடம் மாதிரி தான் இருக்கியா?? அப்போ ஆதி வீட்ல என்னை என்ன நினைப்பாங்க?? சும்மாவே அவர்களுக்கு வாய் அதிகம் எங்கே கிடைக்கும் என்று இருப்பாங்க.. இப்ப இது வேறயா?? ஏதாவது கம்ப்ளைன்ட் உன்னை பத்தி வந்துச்சு அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என அதற்கும் ஒரு மூச்சு கரித்துக் கொட்ட அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. ஒரு கட்டத்தில் அழுகை வந்துவிட்டது..

ஆதியோடு அவள் இருக்கும் பொழுது அவள் கண்ணில் கண்ணீர் வந்ததில்லை.. ஆனால் மாலதியின் குரலைக் கேட்டு விட்டால் போதும் கண்மணி அவளாகவே இருக்க மாட்டாள்..அவளுக்குள் சொல்ல முடியாத வண்ணம் ஒரு அழுத்தம் வந்துவிடும்...

ஆம்.. கண்மணியை அடக்கி அடக்கி வைத்திருந்தார் மாலதி.. ஆம் எங்கேயும் விட மாட்டார்.. நண்பர்களோடு கூட்டு சேர விட மாட்டார்.. நண்பர்களோடு பேசக்கூடாது.. பழகக் கூடாது.. வெளியே செல்லக்கூடாது..

சினிமா பார்க்கக்கூடாது.. மொபைல் உபயோகிக்க கூடாது.. கதை புத்தகங்கள் படிக்க கூடாது.. இப்படி பல பல விதிமுறைகள் மாலதி கண்மணிக்காக வகுத்திருந்தார்..

அதனால் கண்மணிக்கு எதுவுமே தெரியாது என்று தான் கூற வேண்டும்..

அவள் வயதும் 18 வயது ஏழு மாதங்கள் என்றாலும், அவளுக்கு வீட்டு வேலை செய்தல், பெரியவர்களுக்கு அடங்கி போகுதல், அனுசரித்துப் போகுதல் என்பதை தாண்டி கண்மணிக்கு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை...

மாலதி அடக்கி அடக்கி மாலதி உடன் இருக்கும் பொழுது அவள் பேசுவதே ஒரு குற்றம் என்று தான் இருந்தாள்..

அவள் மூச்சு விடுவது என்றால் அவளின் அப்பாவின் குடும்ப வீட்டிலும், பள்ளி, கல்லூரியிலும் இதோ இப்போது ஆதியிடம் அவளால் இயல்பாக பேச முடிகிறது.. பொதுவாக கண்மணி அப்பாவியாக இருந்தாலும் வெகுளியாக இருந்தாலும் கலகலப்பாக பேசக்கூடிய பெண்தான்... ஆனால் மாலதி முன்னால் அவள் பொட்டிப் பாம்பாக அடங்கி விடுவாள்..

அவளுக்கு ஏதாவது கஷ்டம் மற்றும் அவளுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அவளுடைய உற்ற தோழியான கல்பனா அவளிடம் தான் அறிவுரை கேட்பாள்..

கல்பனாவும் அவளுக்கு தெரிந்ததையும் தெரியாததையும் எல்லாம் தெரிந்தவள் போல அவளுக்கு தோன்றியது எல்லாம் இவளிடம் கூறுவாள்..

அதில் சில விஷயங்கள் கண்மணி வாழ்க்கையில் சரியாகி இருக்கிறது.. அதனால் கண்மணியின் மனதுக்குள் கல்பனா தான் உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவாளி..

அப்படி முத்தம் கொடுத்தால் குழந்தை வரும் என்ற அறிவுபூர்வமான விஷயத்தை போதித்ததும் கல்பனா தான்..

சில நேர அர்ச்சனைக்கு பிறகு போனை வைத்த மாலதிக்கு அப்போதுதான் நிம்மதியே வந்தது... எப்போதும் கல்பனாவை திட்டி திட்டி திட்டாமல் இருக்க அவரால் முடியவில்லை..அதனால் திட்டி விட்டு அவர் சென்று விட அவளால் தான் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை.. இங்கே வந்ததிலிருந்து வராத கண்ணீர் வர துவங்கியது..

போன் பேச சென்றவள் வெகு நேரமாகியும் வராததால், "என்ன பண்ணிட்டு இருக்கா??" என ஆதி வந்து பார்க்க அம்மா திட்டியதில் அழுது கொண்டு இருந்தாள் கண்மணி..

அவள் அழுவதை கண்டதும் பதறிய ஆதி, "ஏய் என்ன ஆச்சு எதுக்கு அழுதுட்டு இருக்க??" என்று கேட்டான்.

"அம்மா திட்டிட்டாங்க" என்று குழந்தை போல கூறவும் அவனுக்கு ஏனோ மாலதி அத்தையின் மீது கோபம் வந்தது..

"ஏன் திட்டினாங்க??' என அவன் கடுப்பாக கேட்க, "நான் இங்கே வந்ததில் இருந்து அவங்க கிட்ட பேசவே இல்லைனும்.. இந்த வீட்ல நான் எந்த வேலையும் செய்யல அப்படின்னு திட்டினாங்க" என கூற அதை கேட்ட அவனோ அத்தைக்கு வேற வேலையில்லை.. இவளை பெத்த அம்மா நிர்மலா அத்தை ஓடி போனதுக்கு இவளை போட்டு படுத்தி எடுத்துக்கிட்டு இருக்காங்க.. இவள் எதுவும் தெரியாமல் இப்படி அப்பாவியா ஆனதுக்கு காரணம் கூட மாலதி அத்தை தான் என எண்ணியவன், "இதோ பாரு கண்மணி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. இனி நான் சொல்றதை நீ கேட்டா போதும்.. உனக்கு என்ன தேவையோ அதை செய்ய நான் இருக்கேன்.. அதுனால உன் அம்மாவே சொன்னாலும் நீ நான் சொல்றத மட்டும் கேட்டா போதும் புரியுதா?? உன் அம்மா என்ன சொன்னாலும் நான் தான் செய்ய சொன்னேன்னு சொல்லு.. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்" என கூறவும் கண்மணி கொஞ்சம் தெளிவு அடைந்தாள்.. ஆம் ஆதியின் பெயரை சொன்னால் மாலதி அடங்கி விடுவார் என கண்மணிக்கும் தெரியும்.. அதனால் அவள் முகத்தில் சந்தோஷம் வந்தது..

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு, "இதோ உன்னோட காலேஜ் வந்தாச்சு" என்றவன் அவள் கையில் சில நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து, "இதை செலவுக்கு வைச்சுக்கோ.. சாயந்திரம் நீயே பஸ் பிடிச்சிட்டு வந்துரு" என பஸ் நம்பரை சொல்லிக் கொடுக்க, அவளும் தலையை ஆட்டிக் கொண்டு புத்துணர்ச்சியோடு கல்லூரிக்கு செல்ல தயாராகும் போது ஆதி கட்டிய தாலி அவனுடைய கண்ணை உறுத்த, "கண்மணி உன்கிட்ட எத்தன தடவ சொல்றது?? நீ தாலி போடணும்னு இல்லைன்னு தாலியை வேணும்னா கழட்டி என்கிட்ட கொடு.. இதை மாட்டிட்டு போனா உன்னை பட்டிக்காடு என்று கிண்டல் பண்ணி சாகடித்து விடுவாங்க" என கூறியவனுக்கு அந்த நொடி அவளுடைய வயதும், அவனுடைய வயதும் ஞாபகத்துக்கு வந்து போக அதனால் இருந்த தாழ்வு மனப்பான்மையில், "சீக்கிரம் கழட்டு" என்று கூறினான்..

அவளோ, "தாலி யாருக்கும் தெரியக்கூடாது தானே சொன்னீங்க நான் மறைச்சு வைச்சுக்கிறேன் இதோ டிரஸ்குள்ள பின் பண்ணினா போதும்.. அதுக்காக தாலி கழட்ட வேண்டிய அவசியமில்லை" என்று காரில் வைத்து பின் குத்திக் கொண்டாள்..

அவளின் செய்கை அவனுக்கு ஒரு பக்கம் விருப்பத்தை கொடுத்தாலும் அப்போதும் அவனுடைய மனதில் அந்த தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்க, "கண்மணி நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல.. யார்கிட்டயும் நீ கல்யாணம் பண்ணின பொண்ணுன்னு சொல்லக்கூடாது புரியுதா??" என்று அவன் கூறினான்..

"சரி ஆதி அண்ணா.." என கூறி விட்டு அவள் செல்லவும் அவனும் அவன் வேலையை பார்க்க சென்று விட்டான்..

அந்த பெரிய காலேஜ் அவளுக்கு பிடித்து இருந்தது.. ஆண்களும் பெண்களும் ஜோடி ஜோடியாக சென்று கொண்டு இருக்க அதை பார்த்த அவளுக்கு ஆதியின் அன்றைய கோபம் ஞாபகத்துக்கு வந்து போக அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், அவளுடைய வகுப்பு எது என தேடி பிடித்து யாரும் அமராத ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

அந்த வகுப்பில் அனைவரும் அவளை திரும்பி திரும்பி பார்க்க ஒரு பெண் மட்டும் அவள் அருகே வந்து அமர்ந்தாள்..

"ஹாய் புதுசா இந்த காலேஜுக்கு??" என்று கேட்க, "ஆமாம்" என்று கண்மணியும் பதிலளிக்க, "பெயர் என்ன??"

"என்னோட பெயர் கண்மணி.. உங்க பெயர்??"

"என் பெயர் வினிதா.. வினிதா ரிஷிகேஷ்" என்றாள் ஆதியின் எதிரியான விக்ரமின் தங்கை வினிதா..

கண்மணி அவளை பார்த்து, "நீங்க ரொம்ப மாடர்னா அழகா இருக்கீங்க" என்று கூற அதை கேட்டதும் வினிதா மெல்லிய சிரிப்போடு, "நீயும் தான் பார்க்க ரொம்ப அழகா இருக்க.." என்று பேச ஆரம்பித்த இருவரும் சிறிது நேரத்தில் இருவரும் நண்பர்கள் ஆகி விட்டனர்..

ஆடு பகை குட்டி உறவு என்ற கதை தான் இது.. எந்த இருவர் கல்லூரி முதல் தொழில் வரை மோதிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களின் குடும்பத்து பெண்கள் இப்போது நட்பாகி இருக்க, இது யாருக்கு நன்மையாக முடியும்?? யாருக்கு கெடுதலாக முடியும்?? என்பதை நாம் பொறுத்து இருந்து தான் காண வேண்டுமோ??

மாலை ஆகியது.. வினிதா கண்மணியிடம், "நீ எப்படி போவ வீட்டுக்கு??" என கேட்க, "நான் பஸ்ல போயிடுவேன்" என கண்மணி கூற

"ஊருக்கு புதுசுன்னு தானே சொல்ற?? இப்போ என்னோட அண்ணா பிக் பண்ண வருவார்.. எங்க கூட வரியா உன் வீட்டுல விட்டுட்டு போறேன்" என வினிதா சினேகத்தோடு வினவ,

அவளோ, "வேண்டாம் வினிதா.. நான் பஸ்ல போய்க்கிறேன்" என்று மறுத்தவள் அவளோடு கல்லூரி வாயில் வரை ஒன்றாக செல்ல, அப்போது கருப்பு நிற பீ எம் டபிள்யூ கார் ஒன்று கண்மணியை மோதுவது போல அவள் முன்னாள் சீறி பாய்ந்து வந்து நின்றது..

அதை கண்டதும் பதட்டம் கொண்ட கண்மணி வினிதாவின் பின்னால் போய் பயந்து நிற்க, வினிதா ஒரு கையால் தன் தோழியை பிடித்துக் கொண்டு நின்றவள் அந்த காரை பார்க்க, கார் கதவை திறந்த விக்ரமை பார்த்த வினிதா, "அண்ணா இப்படியா விளையாடுவ பாரு எப்படி பயந்துட்டான்னு??" என்றவள், "ஹே கண்மணி இது என்னோட அண்ணன்" என்று விக்ரமை கண்மணிக்கு அறிமுகம் செய்து வைக்க அவனோ சிட்டிகளுக்கு நடுவே வாழ்ந்த அவனுடைய கண்கள் கிராமத்து பைங்கிளி ஆன கண்மணியின் மீது விழுந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top