வர்ணம் 7
அத்தியாயம் : 7
தாலி கட்டி முடித்ததும் அவள் கண்ணில் கண்ணீர் துளி அவன் கைகளில் பட்டு தெறிக்க அருகே அமர்ந்து இருந்த நிரஞ்சன் அந்த கண்ணீரை பார்த்து கொண்டே எழுந்தவன் அவன் கழுத்தில் அணிந்து இருந்த மாலையை கழட்டி எறிந்தான்..அவளின் அழுகையை பார்த்தவனுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்தது.. தான் தவறு செய்து விட்டோமோ என்று நூறாவது முறையாக யோசித்தான்.. இவர்களெல்லாம் பேசிப் பேசி என்னை இப்படி இழுத்து விட்டு விட்டார்களோ என நினைத்தான்...பிறகு கடுப்போடு தன் போனை எடுத்தவன் ஒரு எண்ணுக்கு அழைத்தான்..
நிரஞ்சன் தாலி கட்டி விட்டான் என ஒரு நொடியேனும் சமாதானம் அடைந்த பாக்கியம் பார்க்க, அவனோ மாலையை தூக்கி எறிந்து விட்டு நிற்க அதை பார்த்தவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சற்று பயமாக தான் இருந்தது.. "என்னப்பா ஆச்சு?" என அவன் கேட்க அவனோ அனைவரையும் பார்த்து முறைத்தான்..
கலையரசன் மற்றும் முத்தையன் இருவருக்கும் இந்த திருமணத்தில் பெரிய உடன்பாடு இல்லை என்றாலும் பெண்களின் எண்ணத்துக்கு அடங்கி அவர்கள் அமைதியாக இருந்தார்கள்..
அவன் அழைத்த நபர் வேறு யாருமில்லை அவனின் முதல் மனைவி ஜானகியின் தந்தை வெங்கடராமனுக்கு தான்.. அவன் முகம் கோபத்தில் சிவந்து இருக்க, போனை எடுத்த அவரிடம், "நான் கல்யாணம் பண்ணிட்டேன் போதுமா? வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்டிட்டேன் இப்போ எல்லாம் முடிஞ்சது தானே எப்போ என் குழந்தையை என்கிட்ட கொடுப்பீங்க??" என்று அவன் கேட்டான்.. அவனுடைய பிரச்சனையே இதுதான் அவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள் அவளை அவனின் முதல் மனைவியின் தந்தை வெங்கட்ராமன் காண சம்மதிக்கவில்லை மகளை அவன் அவரிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் அதற்காகத்தான் அவன் இந்த திருமணத்தை செய்து இருக்கிறான்.
மற்றபடி தன் வயதில் தேவைகளை தீர்க்கவோ இல்லை தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரு துணை தேவை என்றோ அவன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை...
அவனுடைய மகளுக்கு ஒரு வயது ஆகியிருக்கிறது குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை.. பார்க்கவில்லை என்பதை விட பார்க்க விடவில்லை என்பதுதான் உண்மை...
அவனால் அவர் மீது கேஸ் போட தெரியாமலோ இல்லை வீடு தேடிச் சென்று சண்டை போட்டு குழந்தையை தூக்கி வர தெரியாமலோ இல்லை எல்லாம் அவனுடைய மனைவிக்கு செய்து கொடுத்து சத்தியம் அதுதான் அவனை இந்த நிலையில் நிற்க வைத்து இருக்கிறது..
சாகும்போது அந்த புண்ணியவதி அவனிடம், "மாமா என்னோட ஆயுசு முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன்.. நான் செத்துடுவேன்.. அது எனக்கே தெரிஞ்சு போச்சு...மத்தவங்க மாதிரி நீங்க என்னை மட்டுமே நினைச்சு வாழனும் அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்.. என் இடத்துக்கு யாரும் வரக்கூடாதுன்னு சொல்ல மாட்டேன்.. நீங்க இப்படியே இருப்பீங்கன்னு தெரியும்.. ஆனால் எனக்கு அது வேண்டாம்.. நீங்க சந்தோஷமா இருக்கணும்.. நீங்க உங்களுக்கான வாழ்க்கையை கண்டிப்பா தேர்ந்தெடுக்கணும் அது தான் என்னோட கடைசி ஆசை.. சத்தியம் பண்ணுங்க நான் போனதுக்கு பிறகு நீங்க வேறொரு கல்யாணம் செய்துப்பீங்கன்னு எனக்கு சத்தியம் பண்ணுங்க.. நான் கேட்ட எல்லாத்தையும் நீங்க நிறைவேற்றி கொடுத்திருக்கீங்க இது என்னுடைய கடைசி ஆசை இதையும் நீங்க நிறைவேத்தனும்" என்று அவனிடம் சாகும் தருவாயில் சத்தியம் வாங்கிவிட்டு சென்றாள்..
அதேபோல அவளின் தந்தையிடம்,"அப்பா அவர் நான் இல்லாமல் இருக்க மாட்டார் கல்யாணம் பண்ணிக்க மாட்டார் அவர் கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் குழந்தையை அவர்கிட்ட கொடுக்க வேண்டாம்" என ஜானகி தான் சொல்லிவிட்டு இந்த உலகத்தை விட்டு சென்றாள்..
தன் மகளை இழந்த அவரும் மகள் இறுதியாக தன்னிடம் கேட்டதற்காக குழந்தையை கொடுக்கவில்லை அவனும் எத்தனையோ முறை கேட்டு பார்த்து விட்டான்.. ஆனால் அவர் ஜானகியை போல பிடிவாத குணத்தை கொண்டவர் முடியாது என கூறி குழந்தையின் முகத்தைக் கூட காட்ட மறுத்துவிட்டார்.. இப்பொழுது அவனுக்கு அவனுடைய குழந்தை வேண்டும் அதற்காகத்தான் அவன் திருமணம் செய்கிறான் அவ்வளவுதான் அவனுக்கென ஒரு வாழ்க்கை அதெல்லாம் அவனுக்கு முக்கியமில்லை அவனுக்கு அவனுடைய குழந்தை வேண்டும்..
வெங்கட்ராமன் எதற்கும் சமையாமல் இருக்க, அதற்காக தான் அவன் முக்கியமாக திருமணம் அவன் செய்து கொண்டான்..
தாலி கட்டியதும் அவனுக்கு தன்னிடம் சாகும் பொழுது சத்தியம் வாங்கிச் சென்ற அவனின் மனைவி மீதும் அவனின் மாமனார் மீதும் கொலைவெறி ஆத்திரம் வந்தது..
அந்த ஆத்திரத்தை அவனின் மனைவியிடம் காட்ட முடியாது அதனால் மாமனாரிடம் காட்டினான்... "நீங்களும் உங்க பொண்ணும் சொன்ன மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இப்பவாது என் குழந்தையை என்கிட்ட குடுப்பீங்களா??" என்று அவன் கேட்க,
"அப்புறம் தம்பி பொம்மையா ஒரு பொண்ணுக்கு தாலி கட்டினா போதுமா வாழ வேண்டாமா இந்த நாடக கல்யாணத்துக்கு பேரு கல்யாணமா??" என்று கேட்டார்..
அவர் கூறியதை கேட்டதும் அவனுக்கு ஆத்திரம் வந்தது.. "என்னங்க உங்க பிரச்சனை? நீங்களும் உங்க பொண்ணும் சேர்ந்து கல்யாணம் பண்ண சொன்னீங்க கல்யாணம் பண்ணிட்டேன்.. இப்போ எதுக்குங்க பிரச்சினை பண்றீங்க? அதுதான் நான் கல்யாணம் பண்ணிட்டேனே! அப்புறம் என்ன உங்களுக்கு நான் வாழ்ந்தால் என்ன வாழலைனா என்ன? அது எனக்கும் நான் தாலி கட்டின அந்த பொண்ணுக்கும் இருக்கிற பிரச்சினை அதுக்கு எதுக்கு நீங்க இடையில வர்றீங்க?" என கேட்க
அவரோ, "நான் கேட்காம வேற யார் கேட்பா? என் பொண்ணு என்கிட்ட ஒரு கடமையை கடைசியாக ஒப்படைச்சிட்டு போயிருக்கா அதை சரியா நிறைவேத்தாம நான் விடமாட்டேன் என்றார் மேலும் இது பாருங்க நிரஞ்சன் எனக்கு நல்லா உங்களை பத்தி தெரியும் நீங்க அவ்வளவு சீக்கிரம் ஜானகியை மறந்திருக்க மாட்டீங்க! " என்க
"அதுதான் தெரியுதுல அப்புறம் ஏன் சார் இப்படி பிரச்சனை பண்றீங்க? போனவ போய்ட்டா! அவ சொன்னான்னு சொல்லி குழந்தையை பிடித்து வைக்கிறது எல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? என்னால உங்க கிட்ட சண்டை கட்டி குழந்தையை வாங்க முடியாதுன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? தாராளமா வாங்க முடியும் ஆனால் நான் உங்க மேல வச்சிருக்க மரியாதை என்னை அது செய்ய வைக்காமல் தடுக்குது" என்று கூறினான்..
அதைக் கேட்ட அவரும், "எனக்கும் அதே மரியாதை இருக்கறதுனால தான் நான் இதைப் பற்றி மறுபடியும் பேசுறேன் என் மகள் போயிட்டா எனக்கு உங்க மேல இருக்கிற உரிமையெல்லாம் போயிடுச்சுன்னு நீங்க நினைக்கிறீங்க என் மகள் இல்லை என்றாலும் நீங்க எனக்கு மருமகன் தானே அதில் எந்த மாற்றமும் இல்லையே? நீங்க என்னை பத்தி என்ன நினைச்சாலும் சரி நான் உங்க மேல இருக்கிற அன்பால சொல்றேன் நீங்க இப்ப கல்யாணம் பண்ணி இருக்கீங்க அந்த பொண்ணை குழந்தை கிடைச்சதும் விரட்டி விட மாட்டிங்க என்று என்ன நிச்சயம்?" என்று அவர் கேட்க
"நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேங்க" என்று கூறினாலும் மனதளவில் அதற்குத்தான் அவன் தயாராக இருந்தான் என்பது வேறு விஷயம் அதை அவர் சரியாக கணிக்கவும் அவன் முகம் வெளிறியது..
