மோகம் 12

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 545
Thread starter  

மோகம் 12

"ஆதி அண்ணா வீடு சூப்பரா இருக்கு.. இங்கே நீங்க மட்டும் தான் இருக்கீங்களா??" என கண்மணி வீட்டின் அழகை பார்த்து கேட்டாள்..

"ஆமாம்.. அதோ அந்த ரூம் சும்மா தான் இருக்கு.. நீ யூஸ் பண்ணிக்கோ.. சீக்கிரம் ரெப்ரெஷ் ஆகிட்டு வா" என்றவன் அவளிடம் பேச்சு கொடுக்காமல் அவனுடைய அறைக்குள் நுழைந்து கொள்ள, அவளோ மெல்லிய நடையில் அந்த வீட்டின் அழகை பார்த்துக் கொண்டே அவளுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்றாள்..

அவளுக்கான அறை மிக நேர்த்தியாக இருந்தது.. அவளுடைய பெட்டியை வைத்தவள்,"ஆதி அண்ணா எப்பவுமே ஒரு ஸ்பெஷல் தான் வீடு பாரு எவ்ளோ அழகா வச்சிருக்கார்" என அவனை மெச்சி கொண்டே, "ஐ இங்கு ஒரு பால்கனி இருக்கு" என பால்கனியின் கதவை திறக்காமலேயே சாரல் மழையை ஆசை தீர பார்த்துக் கொண்டு, அலுப்பு தீர ஒரு குளியலை போட்டு விடலாம் என கருதி, அவள் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்..

அவனோ இரவு சமயம் ஆகி விட்டதால் இருவருக்கும் தேவையான உணவை ஆர்டர் செய்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்ததும் உணவும் வந்து விட அதை வாங்கி வைத்தவன் சோபாவில் அமர்ந்து போன் பார்க்க துவங்கி விட்டான்..அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான்..

அப்படியே பால்கனியில் மிக பெரிய தூறல்களால் மழை பெய்து கொண்டு இருந்தது.. அப்படியே தூறல் மழை வலுப்பெற துவங்கியதும், மழையின் காரணமாக திடீரென கரண்ட் கட் ஆக குளிக்க சென்ற அவளோ இருட்டை கண்டதும், "ஐயோ அம்மா ஆதி அண்ணா சீக்கிரம் வாங்க.. இருட்டா இருக்கு" என கத்த துவங்கி விட்டாள்..

அவளின் சத்தத்தை கேட்டதுமே கரண்ட் போனதால் கத்துகிறாள் என்பதை புரிந்து கொண்ட அவன், "இவளை..." என முணுமுணுத்து கொண்டே, போனில் உள்ள பிளாஷ் லைட்டை ஆன் செய்து கொண்டு அவன் சென்றான்..

அதற்குள் அவளோ ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அவள் பயந்த படி பாத்ரூம் கதவுக்கு அருகிலேயே நின்றாள்...பயத்தால் அவளின் கைகால்கள் எல்லாம் நடுங்கி கொண்டு இருந்தது..

அவனோ அதற்குள் அவளுடைய முகத்துக்கு நேராக அவனின் ஃப்ளாஷ் லைட்டை காட்டியவன், "கரண்ட் போயிடுச்சு.. இப்போ வந்துரும்.. பயப்படாத" என கூறிக் கொண்டு மொபைல் போன் அவள் முகத்துக்கு நேராக காட்ட இப்போது கை கால்கள் நடுங்குவது அவனின் முறையாகிவிட்டது..

சுற்றிலும் இருட்டு மிக மந்தகாசமான காலநிலை... வெளியே இடியுடன் கூடிய மழை.. இங்கே இவள் ஒட்டு துணி இல்லாமல் அவளின் உடலை சுற்றி வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு நிற்கிறாள்..

அதைக் கண்ட அவனின் ரத்த நாளங்கள் எல்லாம் சுண்டி விட்டது போல சீறிப்பாய தயாராக இருக்க, அவன் முகம் சிவக்க துவங்கி விட்டது..

அவளோ கண்களை திறக்காமல், "எனக்கு இருட்டுனா பயம் ஆதி அண்ணா" என்று கூற அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..

அவன் பதில் சொல்லும் அளவிற்கு அவனுடைய மனம் பக்குவப்படவில்லை என்பது போல அவனுடைய கண்கள் முழுவதும் அவளுடைய மேனியில் ஊர்வலம் வர துவங்கியது..

அதுமட்டுமின்றி அவன் எப்போதும் அவளிடத்தில் விழுந்து போகும் அவளின் மார்பின் மீது உள்ள அந்த மச்சம் அவனை வா என சுண்டி இழுத்தது..

"ஐயோ என்னால முடியலையே... தாலி கட்டியும் இதை எல்லாம் பார்த்து சாமியாரா இருக்கேனே" என அவளை அப்படி பார்த்து கொண்டு இருப்பதில் இருந்து ஆதியின் மூச்சு தடைப்பட்டு இருக்க அவனால் நிம்மதியாக மூச்சு விட கூட முடியாமல் அவனின் ஐம்பது கிலோ ஏஞ்சல் தொல்லை படுத்தினாள்..

அவளோ அவன் பேசாமல் இருக்கவும், "ஆதி அண்ணா இருக்கீங்களா??" என கேட்க, அவனோ அவளை பார்த்து கொண்டே மனதுக்குள், "இல்லாமல் எங்கே டி போக போறேன்.. என்னோட கண்ணியத்தை இவள் ரொம்ப சோதிக்கிறா.. இப்படியே போனா இவள் ஒழுங்கா படிச்சு முடிக்க மாட்டா போல" என மனதுக்குள் கூறிய அவன் அவளுடைய படிப்பு என்றதும் தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு, "கண்ணை திற.. இங்கே தான் இருக்கிறேன்" என தன்னை நிலைபடுத்திக் கொண்டு அவன் கூறினான்..

அதை கேட்டதும் அவள் கண்களை திறக்க, ஆதி அவளின் கண்களுக்கு தெரிந்தான்.. அப்போது கூட அவளின் நிலை அவளுக்கு விளங்கவில்லை.. அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. இவள் தெரிந்து இப்படி நிற்கிறாளா இல்லை தெரியாமல் நிற்கிறாளா என்ற கோணத்தில் கூட அவன் யோசித்தான்...

அவளுக்கு ஏதாவது தர்ம சங்கடமாக நிலை வந்து விடக் கூடாது என கருதி, "சரி நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா" என்று அவன் போனை படுக்கையின் மீது வைத்து விட்டு திரும்பும் நொடி மிகப் பெரிய இடி சத்தம் ஒன்று கேட்கவும், அவ்வளவு தான் கண்மணி, "ஐயோ அம்மா.. ஆதி அண்ணா போயிடாதீங்க" என திரும்பி நின்ற அவனை அணைத்து கொண்டாள் கண்மணி..

"என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க.. ஆதி அண்ணா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. நீங்க இங்கேயே இருங்க.. எனக்கு இடினா ரொம்ப பயம்.. நான் தனியா இருக்கவே மாட்டேன்" என்று அவள் அவனை அணைத்த படியே கூறினாள்.. அவள் இவனை அணைத்துக் கொண்டு பேச பேச இவனுக்குத்தான் நாடி நரம்புகள் எல்லாம் சரமாரியாக வேலை செய்ய துவங்கின..

இங்கு அவன் நின்றால் அடுத்த பத்தாவது மாசம் இவள் கையில் இவளுக்கு துணையாக ஒரு குழந்தை இருக்கும் என்பதை உணர்ந்தவன் அவனுக்கே கேட்காத குரலில் தன் உணர்வுகளை எல்லாம் அடக்கி கொண்டு, "கண்மணி நான் தான் இருக்கேன்ல" என ஆதி கூறினாலும் அந்த குரல் அவனுக்கே கேட்கவில்லை..

இவள் ஒவ்வொரு முறையும் தொடும் போது அவனுள் புது ரத்தம் பாய்வது போல இருப்பதை தடுக்கவும் அவனுக்கு வழி தெரியவில்லை.. இப்போது கூட அவளின் நனைந்த உடல் முழுவதும் அவனுடைய தேகத்தில் உரசி அவளின் ஒவ்வொரு அங்கங்களையும் வரி வரியாக அவனின் மனம் அளந்து கொண்டு இருக்க, அவனின் சூடான தேகத்தில் அவளின் ஈரமான உடல் பதமாக உணர்வுகளோடு விளையாட, ஒரு ஆணாக அனைத்து உணர்வுகளும் கொண்ட ஒருவனால் எப்படி அவனின் உணர்வுகளை அடக்க முடியும் அப்படிப்பட்ட நிலையில் தான் அவன் இருந்தான்..

அப்படி இருக்க, அவளோ அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல், "நீங்க எங்கேயும் போகாதீங்க ஆதி அண்ணா" என கூற

அவனோ, "நான் எங்கேயும் போகல கண்மணி.. நீ இன்னும் துணி மாத்தல.. போய் டிரஸ் சேஞ்ச் பண்ணனும்" என்று கூறினான்..

அவளுக்கு அப்போது தான் அவளுடைய நிலைமை புரிய அவள் வேகமாக அவனில் இருந்து விலகி ஒரு அடி தள்ளி நின்றவள் முகம் வெட்கம் முலாம் பூசி கொண்டது..

ஐயோ அவர் முன்னாடி இப்படியா நிற்கிறது என எண்ணி, "நீங்க என்னை பார்க்கலையே ஆதி அண்ணா??" என கேட்டாள்..

அதற்கு அவனும், "எதுவுமே பார்க்கல.." என்ற ஒரு மாதிரியான குரலில் கூறினான்..

அதை கேட்ட அவளோ ஒரு நொடி அமைதியாக இருக்க, "ஆதி அண்ணா.." என மெல்லிய குரலில் கூற

அவனோ, "என்ன" என கேட்டான்..

"என்னோட பெட்டி உள்ளே தான் ட்ரெஸ் இருக்கு அதை எடுக்க உங்களுக்கு முன்னாடி நான் வரணும்.. நான் வேற இப்படி இருக்கேன்" என இழுக்க

அதை கேட்ட அவனோ, "நான் வேணும்னா போகவா அது தான் போன் பிளாஷ் லைட் இருக்குல்ல.. நீ டிரஸ் மாத்திட்டு வா" என்றான்..

"வேண்டாம் ஐயோ.. எனக்கு பயம்.. இப்படியே இருந்தா கூட பரவாயில்லை... இருட்டுல அதுவும் மழையில் நான் தனியா இருக்க மாட்டேன்" என கூறவும் அவனோ கடுப்பாகி விட்டான்..

"இப்போ என்னை என்ன பண்ண சொல்ற கண்மணி?? நான் ஆல்ரெடி டயர்டா இருக்கேன்" என கேட்டான்..

"அது வந்து என்னோட ட்ரெஸ் எடுத்து தரீங்களா.. என்னை நீங்க பார்க்காமல் எடுத்து தர முடியுமா??" என கெஞ்சி கேட்டாள்..

அதை கேட்டு அவன், 'என்னை ரொம்ப டார்ச்சர் பண்ற நீ நான் சொல்ற வரைக்கும் கண்ணை மூடு டி" என்றான்..

அவளோ அவனின் அழுத்தமான குரலை கேட்டதும் நொடியில் அவன் மீது எழுந்த பயத்தில் அவள் கண்களை மூடி கொள்ள, அவளின் பெட்டியை தேடி அவளுக்கு உடுப்பு எடுத்து கொடுக்கும் அளவுக்கு அவனுக்கு பொறுமை இல்லாததால் அங்கு இருந்த அலமாரியை திறந்து அவனுடைய ஒரு பனியன் மற்றும் ஷார்ட்ஸ் எடுத்து கொண்டு வந்தவன் அவளை பார்க்க அவளோ கண்களை பொத்தி மூடி இருந்தவள் கோலத்தை கண்டவனுக்கு, "ஐயோ கடவுளே இவளை வைச்சு எப்படி என் வாழ்க்கையை ஓட்ட போறேன்னு தெரியல" என எண்ணிக் கொண்டே அவள் கூறியது போல திரும்பி நின்றவன், "இந்தா பிடி சீக்கிரம் எதுவும் பேசாமல் துணி மாத்திட்டு வர இல்லை விடியறதுக்குள்ள உன் வீட்டு வாசல் முன்னாடி நிப்ப" என மிரட்ட அவளோ துணியை வாங்கியவள் இது என்னோடது இல்லை என வாய் வரை வந்தும் இவன் எங்கே அவளை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவானோ என எண்ணி அவள் வாயை மூடி அவன் தந்த உடையை அணிந்து கொண்டு, "ஆதி அண்ணா நான் டிரஸ் மாத்திட்டேன்" என்று கூற, "அப்ப வா சாப்பிடலாம்" என்று அவன் நடந்தான்.

"இருந்தாலும் இந்த டிரஸ் ரொம்ப லூசா இருக்கு கொஞ்சம் சிரமம் பார்க்காமல் என்னோட டிரஸ் நீங்க எடுத்து தந்திருக்கலாம்" என்று அவள் கூறவும் திரும்பி பார்க்க அவள் சொல்லும் பொழுது உண்மைதான் என்பதுபோல அவளின் கோலம் இருந்தது.. அவளின் அங்கங்கள் எல்லாம் வரி வரியாக அந்த போனின் ஃப்ளாஷ் லைட் வெளிச்சத்தில் அவனுக்கு பிரகாசமாக தெரிந்தது.. உடையை உடுத்தினால் அவனுடைய உணர்வுகள் கட்டுப்படும் என அவன் எண்ணி இருக்க இப்பொழுது தான் பூதாகரமாக அவனுடைய உணர்வுகள் தறிகெட்டு ஓடியது.. அந்த உடைக்குள் அவளை எங்கே என தேட வேண்டி இருந்தது..

இருந்தாலும் இதை சொல்லி மீண்டும் ஒரு அரை மணி நேரத்தை கடத்த அவனுக்கு விருப்பம் இல்லை..

அதனால், "எல்லாம் நல்லா தான் இருக்கு.. இல்லாட்டி நீயே போய் தேடி போட்டுட்டு வா" என்றவன் உணவு அருந்த அமர்ந்து விட மீண்டும் பெரிய இடி சத்தம் ஒன்று கேட்கவும், அவளோ பயந்து போய் அவன் அருகே டக்கென்று அமர்ந்தவள், "நைட்டுதான யார் பார்க்கப் போறா?? எனக்கு இதுவே போதும்" என்றவள் அவனருகே அமர்ந்து அவளுக்கு தேவையான உணவை எடுத்து வைத்து உணவு உண்ண துவங்கினாள்..

அவளின் பேச்சையும் அவளின் பாவத்தையும் கண்ட அவனுக்கு சிரிப்புதான் வந்தது... உண்மையில் இவள் மீது அவனுக்கு கொலை செய்யும் ஆத்திரம் வந்தாலும் அவள் அருகே வந்துவிட்டால் அந்த கோபம் எல்லாம் எங்கு செல்கிறது என அவனுக்கே தெரியவில்லை.. ஏதோ ஒரு மேஜிக் இவள் அவன் உள்ளே செய்கிறாள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை..

உணவெல்லாம் உண்டு முடித்தும் கரண்ட் வராத காரணத்தினால் அவன், "சரி தூங்கு காலைல காலேஜ்ல அட்மிஷன் எடுக்க போகணும்" என்று கூறி அவனுடைய அறைக்கு செல்ல அவளோ அவளுடைய டெடி பியரை தூக்கிக் கொண்டு, "எங்க போறீங்க நான் உங்க கூட வரேன்" என்றாள்..

"உனக்கு தான் தனியா ரூம் இருக்குல்ல.. ஐ நீட் மை பிரைவசி" என்று அவன் மறுத்தான்..

ஏனெனில் அவள் அருகே வந்து படுத்தால் அவனை அவனால் காப்பாற்ற இயலாது என்ற எண்ணத்தில் அவன் கூறவும் அவளோ, "என்னால தனியா படுக்க முடியாது.. என்னோட அம்மா சொல்லி இருக்காங்க.. புருஷன் கூட தான் படுக்கணும்.. புருஷன் இருக்கும் போது தனியா படுக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. நான் மட்டும் உங்க கூட தூங்கல.. என்னோட அம்மா அவ்வளவுதான்.. இதெல்லாம் சொல்லி தான் அனுப்பி இருக்காங்க.." என்று தனியாக படுக்க பயந்து அவள் அவனோடு படுக்க தயாராக அவனுடைய அறையில் படுக்கை ஊரில் உள்ளது போல பெரிய படுக்கை அல்ல.. இரண்டு பேர் படுக்கலாம் ஆனாலும் உரசி கொண்டே படுக்க நேரிடும்..

அப்படி இருக்க, அவளோ அவளின் கரடி பொம்மையும் கட்டிப்பிடித்து படுத்துக்கொள்ள அவனும் அவள் அருகே படுத்துக்கொண்டான்..

அவனுக்கு படுக்க இடமில்லை என்றாலும் லேசாக உரசிக்கொண்டு படுக்க நேரிட்டது.. அவனுள்ளே அவளுடன் படுக்கையை பகிர்வது மிக பெரிய டாஸ்காக இருக்க, அவளோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவன் அருகே உள்ள தைரியத்தில் மிக நிம்மதியாக உறங்கி விட்டாள்... அவனுக்குத்தான் உறக்கம் தொலைந்தது... விடியும் வரை அவள் துயில் உறங்கும் அழகை பார்த்துக்கொண்டே எப்போது உறங்கினான் என அவன் அறியான்..

இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எந்த பாதையில் பயணிக்கிறோம் என தெரியாமல் பயணிக்க துவங்கினாலும் இவர்களின் பயணத்தை மேலும் வலுப்படுத்த வலிமையான ஒருவன் வருவான்.. அவனால் இவர்களின் வாழ்க்கையே தலை கீழாக மாறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top