நேசம் 46
நேசம் :46
நான் ஒன்னும் கடவுள் கிடையாது எல்லோரையும் அழிக்க ஆனால் கண்ணால பார்கிறதை பார்த்துட்டு என்னால தட்டி கேக்காம இருக்க முடியாது அதுக்கு தான் நான் இந்த துறையே எடுத்தேன் "...என்று கூற...
அவன் கூறிய விஷயத்தை கேட்டதும் தானும் அந்த வேதனையை அனுபவித்தோமே ஒரு அரை மணி நேரம் கூட நம்மால் தாக்கு பிடிக்க முடியவில்லை இதில் அந்த நொடியை நினைத்தால் இப்போதும் அவளது கை பதற ஆதரவாக அவளின் கையை பிடித்து அழுத்தினான் வெற்றி...
"என்னை பொறுத்தவரை உன்னோட அப்பா ரியல் ஹீரோ...அவரை நெனைச்சு நீ பெருமை படனுமே தவிர அவர் செஞ்ச வேலை சரி இல்லை னு நீ நினைக்கறது தப்பு என்று கூறியவன் மேலும் தொடர்ந்தான்... உங்க அப்பா இறந்ததால் வருத்தம் இருக்கும் ஆனால் அந்த துறையை பத்தி உங்க அம்மா ஏதாவது குறை சொல்லி இருக்காங்களா "...என்று கேக்க அவளோ, " இல்லை "....என்று கூறினாள்...,
"சொல்ல மாட்டாங்க எந்த ராணுவ வீரனோட மனைவியும் சொல்ல மாட்டாங்க அவங்களுக்கு தெரியும் தன் கணவன் எதற்காக உயிர் இழந்தான் னு"... என்று கூறியவன் , "என்ன புரிஞ்சதா"... என்று கேட்க அவளோ அவன் கூறிய சில விஷயங்களை கேட்டவள் தன்னுடைய நினைப்பை கொஞ்சம் மாற்றினாள்....அவனின் கேள்விக்கு தலையை ஆட்ட,
மேலும் அவளிடம் தொடர்ந்தான் இந்த கடத்தல் விஷயத்தை பற்றி யாரிடமும் கூற கூடாது என்றும்...சில நாட்கள் வீட்டை வீட்டு தன் அனுமதி இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கூறினான்...பெரியவர்கள் முதலில் இவளை கடத்த முயற்சி செய்த போதே அவளுடைய அன்னைக்கு முடியாமல் போய் இருக்க இப்போது மீண்டும் என்றால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயந்து தான் அவள் வேண்டாம் என கூறியது அவன் கூறும் விஷயத்தை புரிந்தவலும் சரி என்பது போல தலை ஆட்டினாள்...
அவளை இலகு வாக்கும் நோக்கோடு, "அதுனால என் பொண்டாட்டியும் தைரியமா இருப்பீங்களாம்...கொஞ்ச நாள் எல்லோராட பல்லையும் பிடுங்குவீங்கலாம் அதுக்கு அப்புறம் இப்படியே கொஞ்ச நாள் கழிச்சு "...என்று நிறுத்தியவன் அவளின் மூக்கின் நுனியை உரசி கொண்டே , "எனக்கு ஒரு பையனை பெத்து தருவீங்கலாம் அவனையும் போலீஸ் ஆக்க போறோம் ஆமா "...என்று தனது மனைவியை சமாதானம் செய்யும் நோக்கோடு அவனின் எதிர்கால பிளானை தெளிவாக கூற , அவளோ அவன் கூறுவதும் அவனின் செய்கையும் அவளுக்கு குறுகுறுப்பை கொடுத்தாலும் அவளும் அவள் காரியத்தில் தெளிவாக, "பையனை எல்லாம் போலீஸ் ஆக்க முடியாது டாக்டர் தான் ஆக்க போறேன்"... என்று வீம்பு பேச அவள் சரி ஆகி விட்டாள் என்பதை உணர்ந்தவன் ...
அவளை மேலும் தன் கை வளைவில் வைத்து கொண்டே இருக்க வெற்றி , "நீ என்கிட்ட எதை செய்ய கூடாது னு சொல்றியோ அதை மட்டும் தான் டி எனக்கு செய்ய தோணுது...அதுனால பையன் தான் போலீஸ் தான் "...என்று கூறி அவளின் நெற்றியின் மீது முட்டியபடி கூற அவளோ அவனை செல்லமாக அடி வைக்க கையை ஓங்க அது முடியாமல் முறைத்தாள்...
அவனுடன் இத்தனை இயல்பாக நாம் உரையாடுவோம் என்றோ அவன் தன்னிடம் உரிமையோடு இருப்பான் என்றோ கனவிலும் நினைக்காதவள் அவனோடு உரிமையாய் தோள் சாய்ந்தாள்...அந்த உரிமை கூறியது அவளது காதலை அவனுக்கு...அவளும் உணர்ந்து விட்டால் தன்னவனின் காதலை...
அவனும் அவளை தன்னோடு சாய்த்து கொண்டு என்ன ஆனாலும் அவளை எப்போதும் விட மாட்டேன் என அணைத்து அவள் உச்சியில் இதழ் பதித்தான்...
இங்கே இவர்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருக்க ஆனால் இதற்கு எல்லாம் காரணம் ஆனவனோ தெரு தெருவாக அலைந்து கொண்டு இருந்தான்...
ஆம் டேனியல் வெற்றிக்கு கெடுதல் செய்ய நினைத்து அதும் மலர் வேந்தனின் ஆட்கள் டேனியலை அழைத்து அவளை தூக்கி விட்டேன் என்று கூற அந்த செய்தியை கேட்டதும் டேனியல் கொக்கரித்தான்...
" வெற்றி உன்னை விட மாட்டேன் இப்போ என்ன பண்ணுவ டா உன் பொண்டாட்டியை கடத்திட்டாங்க எப்போதும் நீதி நேர்மை னு பேசிட்டு...
இதுனால என்ன சாதிச்ச சஸ்பெண்ட் ஆன இதோ இப்போ குடும்பமும் போச்சு".. என்று நினைத்து சிரித்தவன் இப்போது வெற்றி தெரு தெருவாக அலைந்து கொண்டு இருப்பது போல கனவு கொண்டு இருக்கும் போது அவனுடைய போன் ஒலித்தது...
யார் என்று பார்க்க வீட்டில் இருந்து என்று வர வேண்டா வெறுப்பாக , "ஹலோ".. சொல்லுங்க என்று கூறினான்...
"தம்பி ஜெமி இன்னும் ஹாஸ்டல் வரல னு அவங்க ஹாஸ்டலில் இருந்து சொல்றாங்க என்ன னு கேளுப்பா "..என்று டேனியலின் தாய் பதட்டத்தோடு கூற அவனோ "என்ன".. என்று கேட்டான் அதிர்ச்சியாக வேகமாக தாயின் போனை அணைத்தவன் ...
ஜெமியின் ஹாஸ்டலுக்கு அழைக்க தாய் கூறியது உண்மை தான் என்று அவர்கள் கூற டேனியலின் தலை சுற்றியது...எங்கே தேடுவது என்று புரியாமல் இருக்க தலையில் கை வைத்து அமர்ந்தவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினான்...அவனால் வெளியேயும் கூற முடியாது அவளுக்கு என்று அவன் பார்த்து இருக்கும் மாப்பிளை முக்கிய புள்ளியின் குடும்பத்தார் என்பதால் விஷயம் வெளியில் சிறிது கசிந்தாலும் அவனால் மாப்பிளை குடும்பத்தாரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது...அவனை தூக்கினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை...
எங்கோ ஜெமியை கண்ட அந்த மாப்பிளை பையன் கட்டினால் அவளை தான் கட்டுவேன் என்று கூற அவன் கையில் இருக்கும் பணத்தை கண்டு அவனின் வயசை கூட கவனிக்காமல் பதினைந்து வயது மூப்பு உள்ள அவனுக்கு இருபது வயது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க பார்க்கும் டேனியலை என்ன தான் செய்ய...
எங்கே போனாலும் பணம் எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்று அதன் பின்னால் சுற்றும் இவனை என்ன தான் செய்வது...பணம்,பதவி என்று இரண்டிலும் ஆசை இருக்கும் இவனை போன்ற ஆட்களுக்கு வெற்றி என்ன செய்ய காத்து இருக்கிறான்....டேனியல் போன்ற ஆட்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒரு கேடு தான்...
ஆனால் டேனியலை பொறுத்தவரை கண்மணி கடத்தப்பட்டவள் தானே அந்த ஆட்களை அழைத்து தங்கையை தேட சொல்லலாம் என அழைக்க அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை... அவர்கள் பல கட்டுகளோடு வெற்றியின் உதவியால் மருத்துவமனையில் படுத்து படுத்து கொண்டு இருக்கின்றனரே...அவனால் கூடுதல் வேறு யாரிடமும் கூறவும் முடியாது விஷயம் கசிந்து விடுமோ என்ற பயம் வேறு அவனுக்கு...உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் தன்னந்தனியாக அவளின் தங்கையை தேடி அலைந்து கொண்டு இருக்கிறான் டேனியல்...
நேசம் தொடரும்...
Currently viewing this thread 1 guest.
