Share:
Notifications
Clear all

நேசம் 45

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 45

நேசமடி நேசம்

     கண்மணிக்கு அவன் கூறுவதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தவளுக்கு  என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆனாலும் அவள் மனதில் உள்ளதை கூறி விடலாம் என நெனைத்தவள், " எனக்கு"... என்று தொடங்கியவள் உன்னை னு இனி சொல்லலாமா என்று யோசிக்க அவளின் தடுமாற்றத்தை உணர்ந்த அவனோ  ,"நான் தான் முன்னமே சொல்லிட்டேனே... நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு "..என்று கூற கண்மணி தொடர்ந்தாள் ...

"எனக்கு உன்னை முதல் பார்வையில் ஈர்க்க எல்லாம் இல்லை ஏன் னா நான் இருந்த மனநிலை வேற எனக்கு அப்போ திருமணம் வேண்டாம் எங்கே நீ சரி னு சொல்லிடுவியோ பயந்து கோபமா பேசினேன் ஆனா நீ என்னோட எண்ணத்தை உடைச்சு எரிஞ்சுட்டு பிடிச்சு இருக்கு னு  பிடிச்சு இருக்கு னு சொல்லிட்டு போயிட்ட ..உன் மேல கொலை காண்டுல்ல இருந்தேன் "...என்று அவள்  தன் கண்களை உருட்டி பழைய கண்மணியாக கூறியதை பார்க்கும் போது வெற்றிக்கு சிரிப்பு வர இதழ் விரித்தான் வெற்றி..

அவனோ விடாமல் ," இப்போ பிடிச்சு இருக்கா "..என்று தன் உள் மனது கேள்வியை முன் வைக்க ,இந்த நிமிஷம் பிடிச்சு இருக்கு...ஆனால் நேத்து வரை இருந்துச்சு".. என்று கூறியவள்...

"அப்போ இன்னிக்கு இல்லை".. என்று கூறி கொண்டே அவன் சிரிப்பதை பார்த்து அவளுக்கும் சிரிப்பு வர அவனுக்கு உண்டான பதில் அவனுக்கு அந்த நொடி கிடைத்து இருந்தது அவள் எடுத்து கூறாமலே ....

அவளின் கை கட்டை மறுபடியும் பார்த்து , "ஆமா அவங்க எல்லாம் யாரு என்னை எதுக்கு கடத்தப் பார்த்தாங்க"... என்று இலகுவாக அவனிடம் உரையாடிய படி கேட்க

அன்றும் ,"இது போல தானே என்னை கடத்த பார்த்தாங்க "...என்று கேக்க அவனோ அந்த சம்பவத்தை நினைத்து முகம் இறுகி , "இப்போ அவங்க என்னை பழி வாங்கணும் னு தான் உன்னை கடத்த  பார்த்தாங்க "..என்று கூற

அவளோ அவனை முறைத்தாள் எதுக்கு சம்பந்தம் இல்லாமல் இவ முறைக்கிறா என அவன் அவளை பார்க்க , "முதல நான் ஏன் உன்னை பிடிக்கல னு சொன்னேன் தெரியுமா உன்னோட இந்த வேலை தான் காரணம் "...என்று கூறினாள் கண்மணி...

அவன் முகம் இறுகியது அவனுக்கு விருப்பமான ஒன்றை அவளுக்கு விருப்பம் இல்லை என்று கூறும் போது அவனுக்கு அது உட்கொள்ள இயலவில்லை...அவள் என்ன சொல்ல வருகிறாள் என பார்ப்போம் என பொறுமை காத்தான்... ஒரு முறை இருவரும்  இதற்கு வேண்டி சண்டை கட்டி கொண்டு இருந்துள்ளனர்...அது போல இல்லாமல் இப்போது அமைதியாக அவள் கூற வருவதை கேட்க இருந்தான் வெற்றி...

அவள் கூற ஆரம்பித்தாள் , "தனக்கு ஏன் இந்த வேலை பிடிக்காது னு தெரியுமா காரணம் என்னோட அப்பா அவர் கூட நான் இருந்ததே இல்லை தெரியுமா எனக்கு ஐந்து வயசா இருக்கும் போதே அவர் இறந்து விட்டார்...வருஷத்துல ஒரு மாசம் கூட இருப்பார் அந்த நாட்கள் ரொம்ப அழகானது... நான் அதையே நெனைச்சு ஏங்கி இருக்கேன்... தீடீர்னு ஒரு நாள் அவர் இறந்துட்டார் னு சொன்னாங்க ...எங்க அம்மா பொட்டு எல்லாம் அழிச்சாங்க... எங்க அம்மா ரொம்ப அழுத்துட்டே இனி உங்க அப்பா வர மாட்டாரு னு சொன்னாங்க என்னால ஏத்துக்க முடில நாட்டுக்காக உயிரை விட்ட தியாகி னு சொல்லி கொஞ்ச நாள் கழிச்சு எங்க அப்பா க்கு ஒரு மெடல் கிடைச்சது...ஆனால் நான் எங்கே தேடியும் எங்க அப்பா கிடைக்கல ...எல்லோருக்கும் அப்பாவோட அரவணைப்பு இருக்கும் போது எனக்கு மட்டும் கிடைக்கலை யே நான் தவிச்சு இருக்கேன் தெரியுமா

இந்த வேலை இல்லாமல் வேற எந்த வேலை செஞ்சு இருந்தா எங்க அப்பா என் கூடவே இருந்து இருப்பாங்க ல"... என்று அவள் அழுகையோடு  கூற அவனோ அவளை தன் மார்பில் சேர்த்து அழ விட்டான்...

அவளோ விசும்பி கொண்டே ,"எங்க அம்மா மாதிரி யாரும் ஆக கூடாது னு தான் நான் அந்த துறையே வெறுக்கிறேன் "...என்று கூற...அந்த நொடி அவன் கண்களுக்கு அவள் ஒரு வளர்ந்த குழந்தை போல தான் தெரிந்தாள்...

அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... அழுத முகத்தோடு  அவனை ஏறிட்டவள், " நீயும் இந்த வேலையை விட்டுடு நாம வேற ஏதாவது தொழில் செஞ்சுக்கலாம் "...என்று எல்லாம் அவன் அணிந்து இருக்கும் பனியனை பிடித்து கொண்டு அழுது கொண்டே கூற

அவளுக்கு தந்தையின் இழப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என அவன் உணர்ந்தாலும் அதே சமயம் அவளுக்கு தெளிவு படுத்தி வைத்து இருக்க வேண்டியது அவனது கடமை என நினைத்த வெற்றி , "கண்மணி எந்த வேலை ல தான் பிரச்சனை இல்லை ...இந்த வேலை ல தான் பிரச்சனை னு இல்ல ...நாட்டில எந்த தொழில் எடுத்தாலும் பிரச்சனை இருக்கு...

நாட்டுக்காக போராடி உன் அப்பா இறந்தார்...கஷ்டமான விஷயம் தான் அதே நேரம் அவர் நாட்டுக்காக போராடி தான் தன்னோட உயிரை கொடுத்தார்"....அவள் மேலும் அழுது கொண்டு இருக்க அவள் கண்களை துடைத்தவன், "இவ்வளவு ஏன்  உன்னை இரண்டு தடவை கடத்த முயற்சி செஞ்சு இருக்காங்க ...முதல் தடவை உன்னை கடத்தி விற்க "..என்று கூறும் போதே அவள் அதிர , "ஆமாம் இதுல உன்னை மட்டும் கடத்த பார்த்தாங்க னு நினைக்காதே உன்னை மாதிரி 19 பேரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து அடைச்சி வெச்சு இருந்தாங்க அவங்களை எல்லாம் காப்பாத்தினோம் ...இன்னிக்கு கூட லைவ் ஆஹ் நீ அனுபவிச்சியே அந்த தவிப்பு , பயம் எல்லாம்...அது மாதிரி நம்ம நாட்டில எத்தனையோ பெண்கள் பாதிக்க படுறாங்க எல்லோரையும் நம்ம னால காப்பாத்த முடியல னா கூட நம்மனால முடிஞ்ச அளவு போராடலாம்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top