Share:
Notifications
Clear all

நேசம் 44

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நேசம் : 44

ஆம் அவள் முக்கால் வாசி வேதனை கொடுத்த கையோடு அவளே இட்டு முடித்து இருந்தாள் அவன் வரும் போது அவள் இடை மட்டும் காட்சி அளித்து கொண்டு இருந்தது வந்தவன் சும்மா இருக்காமல் கிடைத்த சிறு இடத்தையும் தன் விரல்களால்  தீண்டி அவள் ஆடையை சரி செய்த பின்னரே அவன் அடங்கினான்...அவனின் தொடுகையில் தடுமாறியவள் பதறி விலகி தன் ஆடையை சரி செய்தாள்... வேறு எங்கேயாவது தெரிகிறதா என பார்க்க அவளின் செய்கைகளை கவனித்தவன்..

மேலும் சும்மா இருக்காமல், "ஆமாம் நான் பார்க்காததை கஷ்டப்பட்டு என்கிட்ட இருந்து மறைச்சிட்டியா  வந்து சாப்பிடு வா "..என அவன் நக்கல் குரலில் கூற அவளோ அவன் என்ன கூறினான் என்பது அவளுக்கு புரிய வேகமாக அவனை பார்த்து , செஞ்ச வேலை பத்தாது னு இப்போ பேசுறான் பாரு என நினைத்து முறைத்து கொண்டே வந்தாள்...

அதற்குள் அவனும் அவளை இடித்து கொண்டே உள்ளே சென்று வேகமாக அவனும் உடை மாற்றி விட்டு வந்தவன் பிறகு இருவரும் உணவு அருந்த போக அவளால் உணவை உட்கொள்ள முடியவில்லை...

அவனோ இப்போ என்ன செய்வ என்பது போல அவன் பார்க்க அவளோ வலியால் முகத்தை சுருக்கி உணவை உண்ண முயற்சி செய்து கொண்டு இருந்தாள்... அவள் வலியால் துன்புறுவதை கண்டு சகிக்காமல் வேகமாக அவள் உண்வு தட்டை அவன் புறம் நகர்த்தி அதில் இருந்து ஒரு வில்லை எடுத்து உணவை கொடுத்தான்...

அவளோ அதையும் மறுக்க போக வெற்றி முறைத்த முறைப்பில் தலை கவிழ்ந்தவள் வாயை மட்டும் திறந்து உணவை உட்கொண்டாள்... ஒருவழியாக இருவரும் உணவை உண்டு முடித்து இருந்தனர்...

இருவரும் படுக்க செல்ல அந்த படுக்கையை கண்டதும் கண்மணிக்கு மனக்கண்ணில் நேற்றைய இரவு வந்து போக அவளுக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது..ஆனால் அவனோ அவளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து கொண்டே இருந்தவன் அவளிடம் தன் மனதை வெளிப்படுத்த வேண்டிய சமயம் வந்துவிட்டது என புரிய அவளின் அமைதியின்மையை கண்டு அவளை அருகே அமர்த்தினான்... அவளோ எதிர்பாராமல் அவனின் இழுவையில்  அருகே அமர்ந்தவள் சிறிது நீங்கி அமர பார்க்க அவளால் இயலவில்லை...

இதை எல்லாம் கண்டவனோ, "இதோ பார் நீயோ நானோ நமக்கு பிடிச்சதோ பிடிக்கலையோ நாம இப்போ கணவன் மனைவி ஆகிட்டோம்...என அவன் தொடங்கும் போதே அவள் அவனை பார்க்க இப்போ நாம வாழ்க்கையை தொடங்கி இருக்கோம் அதுவும் கடமை என்று கூறி விடுவானோ காலை முதல் தான் உருகி கரைந்தது உண்மை ஆகி விடுமோ என்று அவளை அதிர்ச்சியோடு பார்க்க, " நேத்து ந்யட் நம்ம வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போனோம் நீ என் மனசுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் தான் நான் உன் பக்கத்தில் வந்தேன் "....என்று கூறும் போது அவனுக்கு தன்னை பிடித்து இருக்கிறது தான் அழுது கரைந்தது தேவை இல்லாத வேலை என அவளுக்கு புரிய அவள் முகம் மலர்ந்தது...

"ஆனால் உனக்கு என்னை பிடிக்குமா னு ஒரு சந்தேகம் என் மனசுக்குள்ள உறுத்திட்டு இருந்துச்சு ...இப்போ அந்த உறுத்தல் எனக்குல்ல இல்லை "..என்று அவன் கூற ...அவளோ நான் தான் வாய் திறந்து சொல்லவே இல்லையே இப்போ வரை அவன்கிட்ட பேசல யே என தன் முட்டை கண்களை விரிக்க அதை அவள் கண்களை பார்த்தே புரிந்து கொண்டவன் "நீ சொல்லனும் னு அவசியம் இல்லை... உன் கை சொல்லிடுச்சு"... என்று கூறி அவளின் அடிபட்ட கையை மெல்ல வருடி கொண்டே அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான்....

அவனுக்கு அவளின் கையில் காயம் ஏற்பட்டதும் தனக்கு வேண்டி தானே அவளுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் அவளை காணாமல் அவன் தவித்த தவிப்பு மற்றும் அவளின் கையின் காயம் எல்லாம் சேர்த்து அவளிடம் ஒரு இணக்கம் அவனுக்கு ஏற்படுத்தி இருக்க தன் மனதை திறக்க அவன் முடிவு செய்து விட்டான்...

"கண்மணி இப்போ சொல்றேன் கேட்டுக்கோ உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு ...எப்போ உன்னை பார்த்தேனோ அப்போ இருந்து அதான் உன்னை விட மனசு இல்லாமல் தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டேன்...

நான் கொஞ்சம் முரடன் தான் எனக்கு தெரிஞ்சது எல்லாம் இந்த காக்கி உடை மட்டுமே...கல்யாணம் எல்லாம் நான் நெனைச்சு பார்க்காத விஷயம் ஆனால் உன்னை பார்த்து விட முடில  னு  சொல்ல மாட்டேன் அதுக்கு பேர் ஏன் னு எனக்கு சொல்ல தெரில...அதும் நீ படப்பட னு பேச உனக்கு எதிரா பேச தான் தோணுச்சே தவிர வேறு ஒன்னும் எனக்கு தோணல ... அதுக்கு சாட்சி தான் நம்ம கல்யாணம்...எப்போ என் மனசில வந்த னு எனக்கு சரியா சொல்ல தெரில ஆனால் நீ இருக்க னு மட்டும் எனக்கு தெரியும்.....அதை நான் உணர்ந்தேன் உணர்ந்துட்டு இருக்கேன்".....என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவன் கூற கண்மணிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை...அவனோ அணை திறந்து வெள்ளம் மடமடவென விழுவது போல ஒரே நாளில் எல்லாம் கூற விழைகிறான்...

மேலும் தொடர்ந்தவன் , "நீ இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சு இருக்கு அதும் கொஞ்சம் கோபம், கொஞ்சம் வெக்கம் கலந்தது தான் நீ...எனக்கு நீ இப்படியே வேணும்"...என்று உருகி உருகி பேசினால் யார் தான் விழ மாட்டார்கள் ...அவள் மனைவியும் விழுந்து விட்டாள்...ஆம் எப்போதும் திமிராக முரட்டு தனமாக இருப்பவன் இன்று காதல் ரோமியோ வாக மாறி இருக்கிறான்...

ஒரு பெண்ணுக்கு இதை தவிர வேறு என்ன வேண்டும் அதும் கண்மணி போன்ற அடாவடி பெண்களுக்கு அன்பை அதாவது காதலை அள்ளி தெளித்தால் அவள் எல்லாம் மூச்சு முட்டி செத்து விட மாட்டாளா அது போல தான் அவன் தன்னை பிடித்து இருக்கிறது அதும் நீ இப்படி இருப்பது தான் எனக்கு பிடித்து இருக்கிறது என்று கூறும் போது உன்னை பிடித்து தான் திருமணம் செய்தேன் என்று எல்லாம் அவன் கூறினால் அவளால் தாக்கு பிடிக்க முடியுமா மொத்த காதலையும் ஒரே நாளில் கொடுக்க நினைத்தால்...அவள் என்ன தான் செய்வாள்...ஆனால் அவனுக்கு அது எல்லாம் இல்லை இனியும் நாள் கடத்த அவன் விரும்பவில்லை..அவனுக்கு அவள் வேண்டும்...அவளுடன் சண்டை இட்டு அவனின் வாழ்நாளை கழிக்க துடிக்கிறான் வெற்றி... அதை அவளுக்கு உணர்த்தி கொண்டு இருக்கிறான்...தொடர்ந்து பேசி கொண்டே இருந்தவன் அவளை பார்க்க,

எப்போதும் படபடக்கும் பட்டாசாக இருப்பவள் இப்போது அமைதியாக இருப்பதை பார்த்து, "உனக்கு இது மாதிரி என்கிட்ட ஏதாவது சொல்லனுமா "...என அவன் கேக்க அவளோ ஆமாம் என தலை ஆட்டினாள்...

நேசம் தொடரும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top