Share:
Notifications
Clear all

நேசம் 43

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 43

நேசமடி நேசம்

    வெற்றி அவர்களது அறைக்குள் நுழையும் போது அவள் ஆடையை கையில் பிடித்த படி அமர்ந்து கனவு கண்டு கொண்டு இருக்க ஒன்றும் கூறாமல் அவளின் கனவை கலைக்கும் பொருட்டு கதவை தாழ் இட்டான்...

வெற்றி அவளை பார்க்க கலைந்த கேசத்தில் இருந்து ஒவ்வொரு துளியாக நீர் வடிந்து இனி துளிர்க்க நீர் இல்லை என்றாலும் இன்னும் நனைவு இருந்தது அவள் கேசத்தில்...இன்னும் உடை மாறாமல் மாற்றமுடியாமல் நனைந்த கோழி குஞ்சாய் தன் கைகளையே பார்த்து கொண்டு இருந்தாள்...அவளையே பார்த்து கொண்டே அவள் அருகில் வந்தான் வெற்றி...

மெல்ல அவள் அருகே அவனின் அழுத்தமான காலடி ஓசையும், கதவு தாழ் இடும் ஓசையும் கேட்டவள் வெடுக்கென நிமிர்ந்து பார்த்தவளோ படபடப்புடன் எழுந்து நிற்க அவள் அருகே வந்தவன் நெருங்கி வர அவள் கால்கள் பின்னால் சென்றது...ஆம் சற்று முன் நடந்த முத்த ஊர்வலம் மிக சரியாக வேலை செய்தது...

அங்கே கட்டிலில் அவள் வைத்து இருந்து டவலை எடுத்தவன் மெல்ல அவள் அருகே நெருங்கி வர அவளோ பீதியில் கண்களை அடைக்க போனாள் மாறாக அவன் மென்மையாக அவள் கேசத்தை துடைத்தான்...அவளோ அவனை பார்த்து, "வேணாம் நானே செய்துக்கறேன்"... என்று கூறி மறுக்க அவனோ, " சரி செய்துக்கோ "...என்று மறுப்பு தெரிவிக்காமல் கண்களில் குறும்போடு கூற அவளோ அவன் தன் அருகில் நிற்கும் போது தான் ஏன் பலம் இழக்கிறோம் என்றே விளங்காமல் நிலத்தை பார்த்து கொண்டு இருந்தவள் தன் கையை மட்டும் மேலே உயர்த்தி அந்த டவலை பிடித்து துடைக்க போக அவளால்  அவளால் அழுத்தமாக துடைக்க கூட முடியவில்லை...

அவனோ அதற்குள் தன் நனைந்த சட்டையை அவிழ்த்து வெற்று உடலுடன் அவளின் செய்கைகளை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தவன் அவள் அப்படியே இருப்பதை பார்த்து , "இவ எப்போ துடைச்சு எப்போ தூங்க".. என மனதில் நினைத்தவன் , "உன்னால தான் முடில ல அப்புறம் என்ன இங்கே தா "..என அவளிடம் இருந்து டவலை வெடுக்கென பிடுங்கி அவன் அவளுக்கு உடைத்தவன் இருந்த கொஞ்ச நஞ்சம் நீரையும் வடித்து விட்டான்...

ஆனால் அவளுக்கு தான் வியர்க்க தொடங்கி இருந்தது தன் அருகே நிற்க அவள் கண்கள் நிலத்தை பார்த்தாலும் அவனின் அருகாமை அவளுக்கு கிலியை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான்...

அதும் அவனின் உடல் வேறு அவளை உரச அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் தான் வந்தது...அவனின் அருகாமையில் அவள் தவிப்பதை அவளுக்கே தாங்க முடியாமல் கண்மணி தடுமாற அவனோ அவளை கவனித்தாலும் கவனிக்காதது போல அவள் வேலையில் கண்ணாக இருந்தான்..அவனுக்கு அவளின் அருகாமை ஒன்றும் செய்யவில்லை போலும் மேலும் மேலும் நெருங்கி தான் நின்று கொண்டு தான் இருந்தான்...

அவள் நீங்க முடியாத படி அலமாரி தடுக்க துடைக்கும் சாக்கில் அவன் அவளை உரசுவதை அவள் பொறுத்து கொள்ள தான் வேண்டி இருந்தது...ஆனால் அதோடு அவன் நிற்கவில்லையே....சீறும் காவல் துறை அதிகாரி க்கு இன்று என்ன ஆகிற்று என்று தெரியவில்லை மயக்கும் கண்ணனின் அவதாரம் எடுத்து விட்டானோ என்னவோ அவளிடம் தன் சில்மிஷத்தை தொடங்கி இருந்தான் வெற்றி...அதிலும் என்றும் இல்லாமல் அவன் குரலில் குழைவு வேறு...

"அப்புறம் அடுத்த ஸ்டெப் "...என்று இலகுவாக கூறி அவள் உடையை எடுக்க அவளோ பேஜாராகி, "ஹே என்ன பண்ற விடு விடு ...என் ட்ரெசை தா".....என்று வார்த்தைகள் தடுமாறி நீ செஞ்ச வரைக்கும் போதும் டா சாமி என மனதுக்குள் நெனைத்தவள்  அவனிடம் இருந்து விலக பார்த்தாள்...

ஆம் தலையை துடைத்தான் என்றால் இப்போது துணியை எடுக்கிறானே என அவள் பேய் முழி முழிக்க அவனோ அவளை பார்த்து அவள் வெட்டு பட்டு இருக்கும் அவளின் கையை பார்த்து எப்படி இவள் உடை அணிவாள்  என்று யோசித்தவன் மேலும் அவள் காதல் கசிந்து உருகி நிற்கும் சமயம் அதில் வேறு இவன் தனக்காக தானே அவளுக்கு அடி பட்டு இருக்கு என அவன் இறங்கி வந்து இருக்கும் சமயம் இவள் விலக பார்க்க விடுவானா வெற்றி ...அவளின் முட்டியை பிடித்து தன் அருகே இழுத்து நிறுத்தியவன், " இந்த கையை வெச்சிட்டு எப்படி ட்ரெஸ் பண்ணுவ "...என்று கேட்க

"நான் எப்படியோ பண்ணிக்கிறேன் நீ போ"... என்று அவள் அவன் கண்ணை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தபடி கூறினாள் அவளுக்கு எப்படியாவது அவன் சென்றால் போதும் என்று இருந்தது...அவனை விரட்டுவதிலே குறியாக இருந்தாள் கண்மணி அது எல்லாம் அவன் தலையில் நுழைந்தால் தானே...

"எப்படி  மாத்துவ சொல்லு".. என்று அவனும் அதே குரலில் அவளை பார்த்தபடியே கேக்க

விட மாட்டான் போலயே என நினைத்த அவளோ இவன் தெரிஞ்சு கேக்குறானா இல்லை தெரியாமல் கேக்குறானா ...என்று அவன் விழிகளை பார்க்க அவனோ எல்லாம் தெரிஞ்சு புரிஞ்சு தான் கேக்குறேன் என்று அவள் கண்களோடு கண்களை கலக்க விட்டு இருந்தான்...

அவளுக்கு தான் அவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் நாணம் வந்து கட்டி போட தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் அவன் மீது எனக்கு கோபம் இல்லையா இல்லை நடந்த அனைத்தையும் என் மூளை என் சுய அறிவு இல்லாமல் மலுங்கடிக்க செய்து விட்டதா..என புரியாமல் குழம்பி நிற்க  அதற்குள் அவன் வீட்டின் அழைப்பு மணி அடித்தது...

அவனோ அவன் கையில் இருக்கும் அவள் துணியை அங்கே வைத்து விட்டு வெளியே சென்றான் வெற்றி...அவன் சென்றதும் அவளுக்கு மூச்சு வர வேகமாக தன் விரல்கள் சிறிது வேதனையை கொடுத்தாலும் பரவாயில்லை என கருதி வேகமாக உடை மாற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தாள்...

அவன் ஆர்டர் கொடுத்து இருந்த உணவு வந்து இருந்தது உணவை வாங்கி அதை வாங்கி வைத்தவன் அவள் என்ன செய்கிறாள் என சென்று பார்க்கும் போது அங்கே அவள் உடை மாற்ற முயற்சி செய்து கொண்டு இருப்பதை பார்த்து இவனோ வேகமாக அவள் அருகே வந்தவன் அவள் முயற்சி செய்து கொண்டு இருக்கும் உடையை சரி செய்து விட.." ஹே என்ன பண்ற விடு..நானே "...இவன் எப்போ வந்தான் என பதறி விட்டாள் கண்மணி...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top