நேசம் 42
நேசம் : 42
பின்னால் ஏதோ வண்டியை கவனித்த ஒருவன் , "டேய் போலீஸ் டா "...என கூறவும் ஒருவன் ஜெமியின் ஆடையின் மீது கை வைக்கவும் சரியாக இருக்க அவளோ பாவம் பயத்தில் கத்தி கொண்டு இருந்தாள்..."இப்போ என்ன டா பண்ணலாம்"... என தினேஷிடம் அவன் நண்பர்கள் கேக்க அவனும் டென்ஷனில் இருப்பான் போலும் ..."என்கிட்ட கேட்டா நீங்க தானே அவசரப்பட்டிங்க...இப்போ பாரு...அவ கத்திட்டு இருக்கா"..... என்று கூற அதற்குள் வெற்றியின் வாகனம் அவர்களின் காரை மீறி பாய்ந்து வந்து அவர்களின் காரை போக விடாமல் தடுத்து குறுக்காக வண்டியை நிறுத்தினான்...
வெற்றி இறங்கும் முன் பின் பக்கமாக அமர்ந்து இருந்த இருவரும் விட்டால் போதும் என்று ஆளுக்கொரு திசையில் தினேஷை விட்டு விட்டு அவர்கள் ஓடினர்... அவர்களை பிடிக்க வெற்றியின் கூட வந்த இருவரும் துரத்தி சென்றனர்...
தினேஷ் இறங்கும் முன் வெற்றியின் கைகளில் இருந்தான் உடனே தினேஷ், "சார் லவ்வர் சார் கல்யாணம் பண்ணிக்க கூட்டிட்டு போயிட்டு இருக்கேன்".. என்று வெற்றி கேக்கும் முன்னே பதில் கூற வேகமாக இறங்கிய ஜெமி அழுது கொண்டே வெற்றியின் பின்னால் போய் நின்று கொண்டாள்...
அடுத்த நொடி தினேஷின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு , "ஏன் டா லவ்வர் னா என் பின்னாடி வந்து நிக்குது இந்த பொண்ணு...கல்யாணம் பண்ணிக்க கார் ல ஏன் டா யாரும் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்க "...என கூறி அவன் கையை முறுக்கி வெற்றியின் ஜீப்பின் அருகே கொண்டு போய் அங்கே இருந்த கை விலங்கால் பூட்டி, "நீ கொஞ்ச என்னோட வண்டில இரு கல்யாணம் பண்ணாமலே விருந்துக்கு மாமியார் வீட்டுக்கு போகலாம் "...என்று கூறி அவனை இரண்டு உதை விட்டு ஜீப்பில் அடைத்தான் ...அதற்குள் மீதம் உள்ள இருவரும் வர , "எங்கே ராசா ஓடி போக பாக்கிறீங்க கல்யாணத்துக்கு வந்துட்டு விருந்து சாப்பிடாமல் போறீங்களே "...என கேட்டு கொண்டே அவர்களுக்கும் இரண்டு அறை கொடுத்து வண்டியில் அடைத்தான்...
அதன் பின் கையில் பையோடு அழுது கொண்டு நிற்பவளை பார்த்து , "உங்க வயசு பொண்ணுங்களுக்கு தான் அட்வைஸ் பண்ணினா பிடிக்காதே...கண்ணுக்கு முன்னாடி இருக்கிற நட்பு தெரியாது உங்களுக்கு...அவங்க மேல வைக்கும் நம்பிக்கையை விட கண்ணுக்கு தெரியாத நட்பை நம்பி உங்க எதிர்காலத்தை ஒப்படைச்சா இப்படி தான் இருக்கும் கண்ணை துடை உன்னோட வீட்டில கொண்டு போய் விடறேன்"..... என வெற்றி கடுமையுடன் கூற...
"இல்லை சார் வேணாம் எனக்கு பயமா இருக்கு எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுடும் என்னை வேற எங்கேயாவது கொண்டு போய் விட்டுடுங்க... அவங்க மாப்பிளை பார்த்து இருக்காங்க அது எனக்கு பிடிக்கலை இப்போ போனா இதை சாக்கா வைச்சு கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க நான் போக மாட்டேன் "..என அடம் பிடிக்க வெற்றியின் மூளையோ வேறு விதமாக கணக்கிட்டது...
"அப்போ ஒன்னு பண்ணு உனக்கு நான் ஒரு இடத்தில் பாதுகாப்பு தரேன் நிலைமை சரி ஆனதும் அழைச்சிட்டு போறேன் "...என கூறினான்... அவளும் பயந்து இருந்தவளுக்கு அப்போது அவன் என்ன கூறினாலும் சரி என்று கூற அவளை சம்பத்தின் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்து இருக்கிறான்...
சம்பத் ஒரு பத்திரிகையாளன் மட்டுமின்றி அவன் ஒரு முற்போக்குவாதியும் கூட அவனால் அவள் மனதில் இருக்கும் பயத்தை போக்க அவனே மிக சரியானவன் என நினைத்து அவளை அங்கே தங்க வைத்து இருக்கிறான்...
பிடிபட்ட தினேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள்
போலீஸ் ஸ்டேஷன் இல் கொண்டு செல்ல பட்டு வெற்றி மற்றும் அவனது குழுவால் மிக சிறப்பாக கவனிக்க பட அவர்கள் இனி வாழ்க்கையில் பெண் என்ற பெயரே அவர்கள் நாவில் நுழையாது...எந்த இடத்திலும் ஜெமியின் பெயர் துளியும் வராமல் வேறு கேஸ் அவர்கள் மீது இட்டு வெற்றி அவர்களை சிறப்பித்து ஜெயிலில் அடைத்து விட்டான்...அவர்களால் ஜாமீன் கூட எடுக்க முடியாத படி...
இந்த சூழ்நிலையில் தான் வெற்றி வீட்டுக்கு வந்து இருக்கும் போது தான் கண்மணியின் தாமதம் அவனுக்கு சந்தேகத்தை கொடுத்தது...அவன் எதிர் பார்த்தது போல அவளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்க இதோ அவளை காப்பாற்றி , அவளுக்கு முதலுதவி அளித்து இதோ இருவரும் பைக்கில் வந்து கொண்டு இருக்கின்றனர்...அவளோ அவனை ஒட்டியே அமர்ந்து இருக்க இன்னும் பயம் விட்டு போகவில்லை என்பதை அறிந்தான்...
அவர்களின் குடி இருப்பு வந்ததும் அவள் அப்படியே அமர்ந்து இருக்க , "வா போகலாம் "..என அவன் அழைத்து அவளை கூட்டி செல்ல உள்ளே சென்றவளையும் அவள் கையையும் கண்டவன் வேறு எதுவும் யோசிக்காமல் அவளை இழுத்து அணைத்து இருந்தான்....அவளுக்கும் ஆதரவாக அந்த அணைப்பு அந்த நேரம் தேவைப் பட்டு இருந்தது...மௌனமே ஆட்சி செய்ய எலும்புகள் நொறுங்கி போகும் அளவுக்கு அவளை அணைத்து இருந்தான் அவனின் அணைப்பு கூறியது அவனின் தவிப்பை...கடந்த மூன்று மணி நேரமாக அவளை காணாமல் அவன் தவித்த தவிப்பு அப்பப்பா சொல்லி மாளாது...அவள் கண்களை அவன் சந்திக்கும் வரை ,அவனின் ஜீவன் துடித்த துடிப்பு அவளுக்கும் தான் இன்று பயத்தால் மரணித்து விடுவோம் என்று அவள் நினைத்து இருக்க அங்கே வெற்றி என்ற குரல் கேட்கவும் தான் ,தான் அந்த நொடி அவள் எப்படி உணர்ந்தாள் என அவள் அறியாள்....
வெற்றி என்ற பெயர் தன் மனதிற்கு எத்தனை தைரியத்தை கொடுக்கிறது என்பதை அப்போது தான் அவள் உணர்ந்தாள்...அந்த சமயத்தில் அவன் வர மாட்டானா என அவள் மனம் ஏங்கியது உண்மை அந்த நொடி அவன் அவள் முன் வந்து விட்டானே ,இழுத்து அணைத்தவன் அவள் விலக பார்க்க அவனோ விடாமல் பயந்து வெளிறிய அவளின் இதழ்களுக்கு தன் இதழ்களை கொண்டு மூடினான்....அவளும் அந்த நொடி தன்னை மறந்து இருந்தவள் அவனின் இதழ் ஒற்றலில் லயித்து இருந்தாள் கண்மணி மறுப்பு ஏதும் சொல்லாமலே...
அந்த நேரம் ஹாலில் இவர்கள் செய்யும் வேலையை பார்த்து மதியம் முதல் கொலை பட்டினியில் இருக்கும் மணி குரைக்க அவளும் அவனிடம் இருந்து விலக முடியாமல் தடுமாறியவள் வேகமாக அவனை விட்டு விலகினாள்...
வெற்றி மணியை திரும்பி பார்க்க அவன் பசியில் இருப்பது அவனுக்கு விளங்கியது...அவளும் தானும் அவனிடம் என்ன வேலை பார்த்து கொண்டு இருந்தேன் என நினைத்து வேகமாக தன் நனைந்த ஆடைகளை மாற்ற உள்ளே சென்றாள்...
மாலை அவன் இருக்க அந்த வீட்டுக்குள் எப்படி செல்வது என அவள் நினைத்து இருந்தவள் இரவு அவனுடன் கட்டி பிடித்து நிற்பதை எண்ணியவள் உள்ளுக்குள் ஒரு ஒரு குறுகுறுப்பு தோன்றி அது வெக்கமாக மாறி வேகமாக அவர்கள் அறைக்குள் புகுந்து கொண்டாள்...
அவனோ இரவு உணவாக இருவருக்கும் ஆர்டர் செய்து விட்டு மணிக்கு அதனுடைய உணவை எடுத்து கொடுத்து விட்டு அவர்கள் அறைக்கு சென்றான்...
அங்கே அவளோ உடையை கையில் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டு இருந்தாள் கண்மணி...
நேசம் தொடரும்...
