Share:
Notifications
Clear all

நேசம் 41

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 41

நேசமடி நேசம்

    ஜெமி டேனியலின் தங்கை சிறு வயதில் இருந்தே தனிமையில் வளர்ந்த பெண் வெளி உலகம் அறியாமல் வளர்ந்து இருந்தாள்... அவளுக்கு தெரிந்தது எல்லாம் அவள் வீடும் அவள் படிக்கும் பள்ளியும் ஆகி இருக்க ஜெமி கல்லூரி படிப்புக்கு மட்டும் ஹாஸ்டல் இல் படிக்க தன் மகளுக்கு வேண்டி ஒரு மொபைல் போனை வாங்கி கொடுத்து இருந்தார்கள் ஜெமி மற்றும் டேனியலின் பெற்றோர்கள்...அது தான் தன் மகளின் வாழ்க்கையை மாற்ற போவது என அறியாமல்...

வறுமையிலே ஊறி திளைத்த டேனியலுக்கு தாமும் எல்லோரை போல வாழ வேண்டும் என்ற வெறி அதும் நல்ல வழியில் சென்றால் பயன் இருக்காது என தன் தந்தையை கண்டு புரிந்தவன் தன் தந்தைக்கு எதிர் வழியில் நடந்தான்...அதனால் அவன் வழி எப்போதும் குறுக்கு தனமாக இருக்கும் ஆனால் சிறு வயது முதலே காக்கி உடை மீது மோகம் கொண்டு அதை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்... ஜெமியோ அவள் வீட்டில் பெற்றவர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்க ,டேனியலும் அவன் வழியில் செல்ல தனிமையை கூட்டு பிடித்து கொண்டு வளர்ந்தாள் ஜெமி...எல்லோருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு சிநேகம் இருந்தாலும் கூட அமர்ந்து பேசுவதற்கோ இல்லை சிறிது நேரம் அன்பை பொழிவதற்கோ சமயம் இல்லாமல் இருந்தனர்...

எந்த ஒரு தந்தையும் தாயும் தன்னை விட தன் மக்கள் கெட்டு போக வேண்டும் என்று எந்த செயலையும் செய்ய மாட்டார்கள் அது போல தான் ஜெமியின் பெற்றோர்களும் மகள் தூரத்தில் சென்று படிக்கிறாளே அவளை காணத் தான்  முடியாது... போனில் ஆவது அவளுடன் கதைப்போம் என மொபைல் வாங்கி கொடுத்து இருக்க அந்த போன் என்னும் சாத்தான் அவளின் தனிமையை அவளிடம் இருந்து பறித்து சதா எந்நேரமும் அதில் மூழ்கி போனாள்...

    கல்லூரி முடிந்து ஹாஸ்டல் வந்தால் போதும் ஏதாவது எடுத்து நோண்டும் பழக்கம் அவளுக்கு கிடைத்தது தான் சமுக வலைத்தளங்களில் எல்லாவற்றிலும் உலாவும் இன்றைய கால உலக பெண் தான் ஜெமி... வீட்டில் தனிமையை கொண்டு வளர்ந்ததால் அவளுக்கு அருகில் உள்ள தோழிகளிடமோ இல்லை அவளாக நட்பு பாராட்ட வேண்டும் என்ற நிலையோ அவளுக்கு தோன்ற வில்லை அதற்கு பதிலாக அவளுக்கு கிடைத்தன இணைய நட்புகள் அவர்களிடம் உரையாடுவது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது...அவளுக்கு அது தான் பிடித்து இருந்ததும் கூட..

அப்படி அவளுக்கு இணையத்தில் அறிமுகம் ஆனவன் தான் தினேஷ்...அழகிய முகத்துக்கு சொந்தக்காரன் மட்டுமின்றி தேன் போல ஒழுகி பெண்கள் மனதை கரைப்பதிலும் வல்லவன்...அவனிடம் வீழ்ந்த பெண்கள் ஏராளம் அப்படி வீழ்ந்த ஒருத்தி தான் ஜெமி...

தாம் வீழ்ந்து இருக்கிறோம் என அறியாமல் அவள் இருக்கிறாள்....ஆம் முதலில் நண்பன் என்ற போர்வையில் நுழைந்த அவன் பின் காதல் என்ற வார்த்தைக்குள் அந்த சிறு பெண்ணை மூச்சுடைக்க செய்தான்...

அவனுக்கு பல பெண்களை வீழ்த்திய அவனுக்கு ஜெமியை வீழ்த்துவது சாதாரணம் ...பேசி பேசியே அவள் மனதை கரைத்தவன் தன் அடுத்த கட்டமாக அவளின் கற்பை சூறையாட சதி திட்டம் தீட்டி இருந்தான்...இது அறியாத ஜெமி அவன் தன்னை காதலிக்கிறான் என்றே நினைத்து கொண்டு இருந்தாள்...

இது இப்படியே இரண்டு வருடம் நீடித்தது ஒவ்வொரு முறையும் அவன் அவளை காண வேண்டும் என்று கூற ,ஓரிரு முறை கண்டாலும் தனியாக அவர்களால் சந்திக்க முடியாமல் போனது...இருவரும் முயற்சி செய்ய அது இருவராலும் முடியாமல் போனது...

இறுதியில் ஜெமியின் வீட்டில் அவள் பெற்றோர் மற்றும் டேனியல் மாப்பிளை பார்க்க ஆரம்பிக்க அவளோ இனியும் காலம் கடத்தினால் தன் காதலை இழக்க வேண்டும் என நினைத்த ஜெமி அந்த நினைவே அவளுக்கு கசக்க தினேஷிடம் அவளை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினாள்...

இவ்வளவு நாள் அவன் எத்தனை முறை முட்டியும்  அவளை பிடிக்க முடியாமல் இனி அவள் தேவை இல்லை வேறு தேடுவோம் என அவன் இருக்க அந்த சமயம் பார்த்து தானாக விழுந்தாள் ஜெமி...

ஆம் இன்று காலை தன் காதலனை கோயம்பேடு பேருந்து நிலையம் முன் காத்து இருப்பதாக கூறி அவனை வர சொல்லி இருந்தாள் ஜெமி...

இயல்பிலே யாரிடமும் பேசி பழகாதவளுக்கு தெரியவில்லை மனிதன் போர்வையில் இருக்கும் மிருகங்களின் குணங்கள்...வீட்டிலும் தன் மனதை வெளிப்படுத்தாமல் அவள் இருக்க யாருக்கும் துளி சந்தேகம் கூட வராமல் தான் டேனியலின் தங்கை என நிரூபித்து கொண்டு இருந்தாள் ஜெமி...

இப்படி அவள் அங்கே நின்று கொண்டு இருக்கும் போது தான் ஒரு ஊர்வலத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த வெற்றியின் கண்களுக்கு அவள் பட்டாள்...

    டேனியலால் தன் குடும்பத்துக்கு ஆபத்து வரும் என முன் கூட்டியே தீர்மானித்து வைத்து இருந்த வெற்றி அவனின் பின்புலத்தை அறிந்து கொண்டு இருக்கும் போது தான் அவனுக்கு ஜெமியின் விஷயம் தெரிய வந்தது...அதன் படி அவளை அவன் கண்காணித்து கொண்டு இருக்க அவன் எதிர்பார்த்தது போல அவள் ஒரு கையில் பெட்டியோடு நிற்பதை பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவன் அவளை கண்காணிக்க அவன் எதிர்பார்த்தது போல ஒரு கார் வந்தது...

அவசர அவசரமாக அவள் சுற்றியும் முற்றியும் பார்த்து கொண்டே அந்த வண்டியில் ஏறிய ஜெமி, அந்த காரில் தினேஷ் உடன் அவனின் நண்பர்கள் இருக்க அவளோ புரியாமல் இவர்கள் எதற்கு வந்து இருக்கிறார்கள் அவனை பார்க்க, "பொய்யிலே பிறந்தவனுக்கு பொய் சொல்ல முடியாதா என்ன ...அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்து , "திருமணம் செய்ய இரண்டு சாட்சி வேணுமே அதான் இவங்க"... "என்னோட பிரெண்ட்ஸ் வந்து இருக்காங்க பயம் வேண்டாம் "...என நல்ல விதமாக கூற அதையே நம்பிய ஜெமி எங்கோ செல்கிறோம் என்ற அறிவு கூட இல்லாமல் காதலன் மேல் உள்ள நம்பிக்கையில் அவர்களுடன் செல்ல ஊரடந்த சாலையில் அவர்களது கார் பயணிக்கவும் நிலைமை சரி இல்லை என அப்போதும் அவள் தலையில் உரைக்க வில்லை...அவளுக்கு தான் தன் பெற்றோர், எப்போதும் திட்டும் தன் அண்ணனை விட அவளின் கனவு உலகம் பெரிதாகி விட்டதே...முகம் அறியா நட்பில் என்ன பாதகம் இருக்க போகிறது என அவள் வயது அவள் மூளையை மழுங்கடித்து வைத்து இருக்கிறதே...இது போல நம் நாட்டில் இனியும் சுற்றி கொண்டு இருப்பவர்கள் ஏராளம்....

ஆனால் பின்னால் அமர்ந்து இருக்கும் அவர்கள் அவளை கண்டது முதல் அவளை புசிக்க வெறி எழுந்து கட்டுப்படுத்த முடியாமல் மெல்ல அவளிடம் அத்துமீற தொடங்க அவளுக்கு ஏதோ சரி இல்லை என தோன்றியது...அவளோ அவனை பார்க்க அவன் தன் காமிராவை ஆன் செய்து அங்கே நடக்கும் லீலைகளை படம் பிடிக்க ஏதுவாக ஒரு இடம் நோக்கி கொண்டு இருந்தான் அந்த கள்வன் ...அவளோ "என்ன பண்றீங்க என்னை விடுங்க ப்ளீஸ் "...என்று கெஞ்சி கொண்டு இருக்கும் போது தான் வெற்றி யும் அவனுடன் துணைக்கு இரு போலீஸ் சேர்ந்த படை அந்த வண்டியை பின் துரத்தி வந்து கொண்டு இருந்தது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top