Share:
Notifications
Clear all

நேசம் 40

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நேசம் : 40

இன்னும் இருவர் கீழ் இறங்கி அதில் ஒருத்தன் கையில் ஒரு கத்தியை காட்டி கொண்டே வெற்றியிடம் செல்ல வெற்றி கத்தியை லாவகமாக அவனிடம் இருந்து பிடுங்கி , "என்ன குத்தனுமா குத்து டா ராஸ்கல் குத்து "...என்று அந்த கத்தியை வாங்கி சற்று முன் அந்த கத்தி தானே அவனின் மனைவியின் கழுத்தில் வைக்க பட்டு இருந்தது என்பதை உணர்ந்தவன் அந்த கத்தியை பிடிங்கி அதை கொண்டு வந்தவன் முகத்தில் அந்த கத்தியாலே அங்கே இங்கே என கீறல் இட அவனும் வலியால் துடித்தான்...அது ஒன்றும் வெற்றியின் கண்களுக்கு தெரியவில்லை.....

கடைசியாக ஒருத்தன் சீட்டின் அடியில் வைத்து இருந்த பெரிய கத்தியை எடுத்து வெற்றி திரும்பி நின்று அவன் முகத்தில் கோடு போட்டு கொண்டு இருக்கும் போது இவன் பூனை போல வெற்றியை குத்த வர , கண்மணியோ அந்த கடத்தல்காரர்கள் வெற்றியிடம் அடி வாங்குவதையும் வெற்றி வேறு கோப முகமாய் மாறி அவனின் ஆவேசத்தையும் ஆக்ரோஷத்தை கண்டும் பயந்தவள் இதுவரை காணாத வெற்றியை அங்கு கண்டவள் தன்னவனுக்கு ஆபத்து வருகிறது என்று தெரிய வர , "வெற்றி"... என கத்தி ஓடி வந்தவள்.. அந்த கயவன் கையில் இருக்கும் கத்தியை பிடித்தாள் தன்னவனுக்கு ஒன்றும் ஆக கூடாது என்று ஆனால் மனிதனை அறுக்கும் அந்த கத்தியோ கண்மணியின் இரு கைகளையும் பதம் பார்த்தது...

வெற்றி திரும்பும் அவள் அந்த கத்தியை பிடித்து இருப்பதை பார்த்து, " நீ ஏன் டி  இங்கே வந்த "..என அவள் கையில் ஒழுகும் ரத்தத்தை கண்டவன் அதிர்ந்து அந்த கத்தியை அவளிடம் இருந்து பிடிங்கி தூர எறிந்தான்...அவள் கையில் இருக்கும் ரத்தத்தை கண்டவன் தன் முன்னால் தன்னை அடிக்க கை ஓங்கும் நிற்கும் அவனது கையை பிடித்து முறுக்கி அந்த கையை இனி வேலை செய்ய முடியாதபடி செய்து விட்டான்...அவனின் எலும்பு உடை படும் சத்தம் அவனுக்கே கேக்க அடி வாங்கியவன் கதறி துடிப்பது ஒன்றும் அவன் கண்களுக்கு தெரிய வில்லை...அங்கே அவனின் உடலின் மறுபாதி துடிப்பது மட்டுமே கண்களுக்கு தெரிய அங்கே வலியில் துடிப்பவன் கீழே விழுந்து கதற அவன் ஓடி சென்று கண்மணியை தாங்கினான்...அவளோ அவனை துடிக்கும் இதழோடு பார்க்க அவனோ அவளை அணைத்தான்...ஆம் அவனுக்கு ஒன்றும் யோசிக்க தோன்ற வில்லை...இந்த சமயம் இருவருக்கும் அந்த அணைப்பு தேவையாக இருந்ததோ ஒரு நொடி அணைத்தவன் அவள் கைகளை பார்த்தான் ...

அதற்குள் இதை எல்லாம் கண்ட கையில் குண்டு பட்டவன் விட்டால் போதும் உயிர் போதும் இனியும் அவனிடம் அடி வாங்க என் உடலில் தெம்பு இல்லை என நினைத்து அவன் இறங்கி ஓட முற்பட பாவம் அதுவும் அவனுக்கு நடக்க வில்லை மழையின் வீரியத்தில் தார் ரோடு பள்ளம் ஆகி இருக்க அதில் மேல் எழும்பி நின்ற கல் ஒன்று அவன் காலை இடறி விட அந்த பள்ளத்தில் வீழ்ந்தான்...

கண்மணியில் கைகள் இரண்டும் ஆழத்தில் காயம் ஏற்பட்டு இருக்க  கண்மணி வலியால் தன் உதட்டை தன் முன் இரு பற்களுக்கு கிடையில் அழுத்தம் கொடுத்து வலியை தங்கி நிற்க அவளின் கண்ணீர் மட்டும் மழையோடு மழையாக கலந்தது...

கண்மணியை தாங்கியவன் அவள் கையில் ஒழுகி வழியும் ரத்தத்தையும் அவளின் வேதனையையும் கண்டவன் கண்கள் துடித்து வெளியே தன் கம்பீரம் குறையாமல் காத்தவன் , "அழாத டி இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம் அழாத"... என்று அவளை சமாதானம் படுத்தி கொண்டு இருக்க அதே போல தான் அங்கே நால்வரும் துடித்து கொண்டு இருந்தனர்...அவர்களின் வேதனை ஒன்றும் அவன் கண்களுக்கு தெரியவில்லை போலும்... அவனுக்கு அவனவள் துடிப்பது மட்டுமே தெரிந்தது...

வேகமாக தன் கைபேசியை எடுத்து  ஆம்புலன்ஸ் வரவழைத்து பின் அருகில் உள்ள இரண்டு போலீஸ்கார்களை வரவழைத்து அவர்களுடன் இந்த கடத்தல்காரர்களை அனுப்பி வைத்து தன் அனுமதி இல்லாமல் இவர்களை யாரும் சந்திக்க கூடாது என்று அவர்களை எச்சரிக்கை செய்தான்... அவனின் முகத்தின் கடுமையை உணர்ந்த அவர்களும் தலை ஆட்டி விட்டு சென்றனர்...

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது....ஆம் இப்போது கண்மணி சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கிளினிக்கில் வெட்டு பட்ட இடத்திற்கு மருந்து இட்டு கொண்டு இருக்கிறாள்...கத்தி ஊரையே கூட்டி கொண்டு இருக்க அங்கே உள்ளவர்கள் அதிசயமாக பார்க்க வெற்றியும் ,"இவ எப்படி டாக்டருக்கு படிச்சா "...என தோன்றினாலும் தனக்கு வேண்டி தானே அவள் இந்த வலிகளை சுமக்கிறாள் என நினைக்கும் போது அவனுக்கு உள்ளுக்குள் அவள் மேல் காதல் பொங்கி வழிந்தது என்று கூறினால் மிகையாகாது...ஆம் வெற்றி தான் தன் காதலை எப்போதே உணர்ந்து விட்டானே...இந்த ராங்கியிடம் கூறாமல் அவளிடம் எப்போது அவளிடம் வெளிப்படுத்தும் தன் திமிரை வெளிப்படுத்தினால் அவள் எவ்வாறு உணர்வாள்...

அவள் உணரவும் இல்லை ...அவளின் ஆழ் மனது நேசத்தை உணர்ந்தவன் அவளுக்கு உணர்த்தவும் இல்லை தன் காதலை  இவளுக்கு வெளிப்படுத்தவும் இல்லை ...

கண்களில் நீர் திரையிட அவனை அவள் வேதனை பொறுக்க முடியாமல் பார்த்த ஒரு பார்வையில் சத்தியமாக அவன் வீழ்ந்து விட்டான் ...அதும் அவள் கண்கள் அவனை பார்க்கும் கண்கள் அவனுக்கு மட்டுமே உரிமையான விழிகள் நீர் திரையிட அந்த செவிலி அவள் கைகளில் மருந்து இடும் போதே அவள் கண்களில் வழிந்த நீரை அவன் கைகள் துடைத்தன... அவளும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை...

அவளுக்கும் அவனின் ஆறுதல் அந்த சமயத்தில் தேவையாக இருந்தது...அவளின் இரு கைகளிலும் கட்டு இட்ட பின் அவள் எழ அவன் கைகள் அவளை அணைப்பது போல அழுத்தத்துடன் அவள் தோளில் ஆதரவாக தான் இருக்கிறேன் என்பது போல அணைத்தது.... மனம் முழுவதும் பயந்த அவளுக்கு அந்த அணைப்பும் தேவையாக இருக்க அவளும் வாகாக அவன் மீது ஒன்றினாள்....அவனும் அவள் மீது இருக்கும் தன் கையை எடுக்கவில்லை...மௌனமாக அங்கே ஒரு அழகிய காதல் உருவானது....யாருக்கும் தெரியாமலேயே...

கைகள் அவளை அணைத்தாலும் அவன் எண்ணங்கள் வேறு இடத்தில் படிந்து இருந்தது ஆம் இதற்கு எல்லாம் காரணமான ஆன டேனியலை ஒன்றும் செய்யா விட்டால் எப்படி...டேனியலின் இறுதிக்கு எப்போதே நாள் குறித்து விட்டானே வெற்றி...

ஆம்  இப்போதும் அவள் கடத்தப்பட்டு இருக்கிறாள்.... கடத்தப்பட்டது கண்மணி அல்ல ஜெமி....கண்மணியை கடத்த இவர்கள் முயற்சி செய்த அன்று அதாவது இன்று காலையே டேனியலின் தங்கை ஜெமி கடத்தப்பட்டாள்...

கடத்தியது யார் என நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லையே ஆம் வெற்றி வேல்....கடத்தப்பட்டாள் என்பதை விட வெற்றியால் காப்பற்ற பட்டாள் என்ற வார்த்தை பொருத்தமான வார்த்தை ....விதியை வெற்றி தன் மதியால் மாற்றி தனக்கு வழங்கப்பட இருந்த சாட்டை அடியை அவனுக்கே திருப்பி கொடுத்து அதை டேனியலுக்கு தெரியாமல் பார்த்து கொண்டான்..இந்த சமயம் வரை கண்மணி கடத்தப்பட்டாள் என குதுகலித்து கொண்டு இருக்கும் டேனியல் வெற்றியை எப்படி தோற்கடிக்கலாம் என நினைத்து கொண்டு இருக்கும் டேனியல் இந்த விஷயத்தை அறிந்தால் என்ன செய்வான்...அவன் அறிவானா ....வெற்றி யின் அடுத்த யுக்தி என்ன???ஜெமி எப்படி அவனிடம் சிக்கினாள்.. அவள் எங்கே இப்போது??...இனியாவது கண்மணி மற்றும் வெற்றி தங்கள் மனதை பறி மாறி கொள்வார்களா??

நேசம் தொடரும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top