நேசம் 39
அத்தியாயம் : 39
நேசமடி நேசம்
வெற்றி விரைவாக செலுத்தியும் மழையின் காரணமாக அரைமணி நேரம் கழிந்து தான் அவளின் ஹாஸ்டலை அடைந்தவன் நேரே வரவேற்பில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் விசாரித்தான் ...ஷிப்ட் மாறி அமர்ந்து இருந்த அந்த பெண்ணுக்கு அவள் போய் விட்டாளா என தெரியவில்லை... அந்த பெண்ணோ மெல்ல அசைந்து மேலே போய் பார்க்க போகும் முன் , "எந்த அறை அறை எண் "...என கேட்ட வெற்றி அந்த பெண்ணிற்கு முன் அங்கே சென்று இருந்தான்....ஏனெனில் அவனின் தவிப்பை அவனின் வேகம் உணர்த்தியது...நீ விரைவாக செல் என ஒரு உந்து விசை அவனை உந்தியது...உன்னவள் அங்கே துன்ப பட்டு கொண்டு இருக்கிறாள் என அவனின் ஆழ் மனம் அவனுக்கு உணர்த்தியது...
வேகமாக மேலே சென்றவன் பாயல் மற்றும் ஏஞ்சலின் அறை கதவை பட படவென தட்டினான்... யார் இந்த நேரத்தில் என கதவை திறந்த பாயலுக்கு வெற்றியை கண்டதும் என்ன இவர் இங்கே என அவள் முழிக்கும் முன் வெற்றி , "கண்மணி எங்கே "என கேட்டான்...
அவனின் படபடப்பை கண்ட பாயல் ஏதோ சரி இல்லை என நினைத்து வேகமாக , "கண்மணி சென்று விட்டாள் அரை மணி நேரம் ஆகி விட்டது..இந்நேரம் வீட்டுக்கு போய் இருப்பா அண்ணா"....என அவள் சமாதானமாக கூற அதை கேட்க வெற்றி அங்கே இல்லை...
நேரே வந்தவன் அவன் பைக்கை ஆன் செய்தவன் கொட்டும் மழையில் பறந்தான்... அந்த பேருந்து நிறுத்ததின் அருகே ஒரு பெண்ணின் குரல் "காப்பாத்துங்க "...என்று கத்துவதை கேட்ட வெற்றிக்கு அது தன் மனைவி தான் என்பது புரிப்பட அத்தனை நேரம் அவன் தவித்த தவிப்பிற்கு விடை கிடைத்தது..
அவளின் குரலை கேட்டு விட்டேன்...என உத்வேகம் வந்து வேகமாக , அவர்கள் வண்டியை எடுப்பதற்கு முன் தன் வண்டியை விளி வந்த திசைக்கு திருப்பினான்....இதோ அந்த ஆம்னியை ஸ்டார்ட் செய்து திரும்பும் போது அங்கே வெற்றி....
ஆம் ஆஜானுபாகுவான உயரத்தில் அந்த கொட்டும் மழையில் அவனின் பைக்கின் ஒளி எதிரே உள்ளவன் கண்ணை பறிக்க "யார் அது".. என அவர்கள் உற்று பார்க்க..
அங்கே எமன் அவர்களுக்கு எமன் வெற்றி இதோ வந்து விட்டான்...வெற்றி அங்கு இன்னும் உயிரோடு இருக்க அவ்வளவு எளிதில் அவனவளை அவனிடம் இருந்து பிரித்து செல்ல முடியுமா இல்லை கடத்த தான் விட்டு விடுவானா.." டேய் வெற்றி டா "...என அவர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க , அதில் ஒரு சிலர் பயத்தில், " சீக்கிரம் வண்டியை எடு டா "என கூறினார்...
சற்று முன் கண்மணியை அடித்தவன் கை நடுங்கியது..."வெற்றி". என்ற ஒரு வார்த்தை அவளுக்கு எங்கே சக்தியை கொடுத்தது என அவள் அறியவில்லை...ஆம் தன்னவனை கண்டு விட்டாள்... அது வரை உயிர் இருந்தும் மடந்தையாக இருந்த அவள் இப்போது தான் அவள் கண்களில் உயிர் வந்தது...
"வெற்றி, வெற்றி".... என முதல் முறையாக தன்னவனை அழைத்து அவள் கத்த அவள் விளி அவனுக்கு கேட்டதோ என்னவோ தன்னவள் அந்த கயவர்களிடம் பெரும் பாடு அடைந்து கொண்டு இருக்கிறாள் என அவனுக்கு புரிய அவன் கண்களில் துப்பாக்கி யின் தோட்டா இருந்து இருந்தால் கண்களாலேயே சுட்டு பொசுக்கி இருப்பான் இது போன்ற கயவர்களை....
ஆம் அவர்களின்(அந்த கயவர்களின்) கைகள் நடங்கி கொண்டு இருக்கும் வேளை வெற்றி அவர்களை அளவிட்டு கொண்டே முறுக்கிய வண்டியை அணைத்து விட்டு வெற்றி கீழ் இறங்கி தன் கையில் இருக்கும் துப்பாக்கியை எடுக்க, " டேய் துப்பாக்கி எடுத்துட்டான் டா ..சீக்கிரம் வண்டியை எடு "...அருகில் உள்ளவர்கள் கூற வண்டியை எடுத்தான் ஆனால் முடியவில்லை...டமார் என சத்தமும் கூடவே ஒரு அலறலும் மட்டுமே கேட்டது....அடுத்த நொடி வெற்றி அந்த ஆம்னியின் கார் அருகே நெருங்கி இருந்தான்...
வெற்றியின் கையில் இருந்த துப்பாக்கி மிக சரியாக டிரைவர் சீட்டின் முன் அமர்ந்து இருப்பவனின் கையை பதம் பார்க்க கண்ணாடி வழியே தோட்டா பாய்ந்ததில் முன்பக்க கண்ணாடி சிதற ஒரு நொடி ஒன்றும் ஆகி விட கூடாதே என கண் மூடிய தருணம் வெற்றி அங்கே வந்து விட்டான்...
தோட்டா பாய்ந்தவன் வழியால் கத்த கண்மணி கண் முன்னே ஒருவனின் துடிப்பதை அவளால் பொறுத்து கொள்ள முடியாமல் கண்களை மூடினாள்... உயிரை காக்கும் பணியில் இருப்பவர்களுக்கு தங்கள் கண் முன் ஒரு உயிர் துடிப்பதை கண்டு பொறுத்து கொள்ள முடியாது...
காரின் கதவு ஆட்டோ லாக் செய்ய படாமல் இருக்க வேகமாக கதவை திறக்க வெற்றி முயற்சி செய்ய ஒரு நொடியில் ஒருவனை வீழ்த்தி இருக்க மீதம் இருந்த மூவரும் இவனை இந்த நொடி இந்த தாக்குதலை எதிர்பார்க்க வில்லை என்றாலும் வெற்றியின் மீது பழி வெறியில் இருப்பவன் உடனே தன் பாக்கெட்டில் இருக்கும் கத்தியை எடுத்து கண்மணியின் கழுத்தில் வைத்து , "வெற்றி நீ இன்னும் ஒரு அடி எடுத்து வைச்ச அவ கழுத்துல நான் இதை இறக்கிடுவேன் "...என மிரட்டினான் அந்த கயவன்...
மிரட்டியதோடு நிற்காமல் அவள் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்த கண்மணிக்கு ஜீவன் போனது என்று கூறலாம்...ஒருவன் வலியால் துடித்த கொண்டு இருக்க மற்ற இருவரும் அவளை பிணைத்து பிடித்து வைத்து இருக்க வெற்றி கண்மணியை அப்போது கண் கூடாக கண்டான் வெட்டும் மின்னல் ஒளி கீற்றில் தன்னவளின் முகம் பயத்தில் வெளிறி இருக்க அன்று எப்படி பயத்தால் நடுங்கி இருந்தாலோ அதே போல இன்றும் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு அவளின் வெளிறிய முகம் தாக்க அவள் வீங்கிய கன்னம் கூறியது அவள் பட்ட துன்பத்தை...அவள் கண்கள் கூறியது என்னை காப்பாற்று என்று எங்கிருந்து தான் அவனுக்கு கோபம் வந்ததோ, " அப்படி என்ன டா உங்களுக்கு பொண்ணுங்களை கடத்தனும் "...என்று அவள் கத்தியை பிடித்து மிரட்டி கொண்டு இருந்தவனை காரின் கதவு வேறு திறந்து இருக்க ஒரு எட்டி ஒரு உதை விட்டான்... வெற்றி பயந்து பின் வாங்குவான் என்று நினைத்த அவனுக்கு அவன் உதைப்பான் என அவன் கனவிலும் நினைக்கவில்லை...அவனால் (அந்த கயவனால்)இனி தந்தையாக ஆக முடியாது அது மட்டும் நிதர்சனம்அவன் உதைத்ததில் அவள் கழுத்தில் இருந்த கத்தி கீழே போய் விழ உதைத்தவனை பிடித்து வெளியே இழுத்து அடித்து நொறுக்க அதற்குள் கண்மணி வேகமாக கீழ் இறங்கினாள்... இறங்கியவள் வேகமாக வெற்றி என அவன் அருகே ஓடி வர அவளை தன்னவளை ஒரு நொடி மட்டும் காதலாக பார்த்து நான் இருக்கேன் உனக்கு உன்னை அப்படி விட்டு விடுவேனா என கண்களாலேயே அவளுக்கு ஆறுதல் கூறியவன் இதற்கு எல்லாம் காரணம் இவன் தானே இவளை அடித்தவனும் இவன் தானே என நினைத்தவன் அவளை அறைந்த கையை எடுத்து முறுக்கி அங்கேயே ஒரு உதை விட அந்த கயவன் மரணப்பட்டு இருக்கலாம் என நினைத்து கொண்டான் அந்த அளவு வேதனையை அவன் அடைந்தான்....பின் அவளை கை பிடித்து இழுத்து தன் பைக்கின் அருகே நிறுத்தியவன் பின் வர அதற்குள் ஒருவன் இறங்கி வந்தான்...
மீதம் இருந்த ஒருத்தன் கைகளில் கத்தி கிடைக்க அதை எடுத்து கொண்டு அவனும் கீழ் இறங்க அங்கே அடி வாங்கி கொண்டு இருப்பவனுக்கு மட்டுமே தெரியும் இனி அவன் வாழ்க்கையில் எழுந்து நடமாட போவது இல்லை என்று ஆம்..வெற்றி அடித்தது அப்படி...உயிர் மட்டுமே அவன் உடலில் இனி இருக்கும் அது போல மரண அடி அடித்து கொண்டே, "ஓ என்னை பழி வாங்க என் பொண்டாட்டியை நீ தூக்குவியா...வெளில நடந்தாலே உங்களை அடிச்சு தூக்கி இருப்பேன்...நீ என் வீட்டில் இருக்கிற பெண்ணையே தூக்குவியோ ...சொல்லு டா யார் சொல்லி இதை செஞ்சிங்க "...என்று கேட்டு கொண்டு இருக்க...அவன் அடி வாங்க முடியாமல் எல்லாம் உளறி கொட்டினான்...
