நேசம் 38
நேசம் : 38
அவள் நேரம் அங்கே ஓரிரு நபர்கள் நிற்க மழை வேறு தூறல் போட்டு கொண்டு இருந்தது...இருபது நிமிடமாகியும் பஸ் ஒன்றும் வராமல் ஆடி அசைந்து ஒரு பஸ் வந்தது... சென்னை மக்கள் முழுவதும் ஒரே பஸ்சில் அடைத்தால் எப்படி இருக்குமோ அது போல மழையின் காரணமாக அனைவரும் கிடைத்த பஸ்சில் எல்லோரும் ஏறி இருக்க அவளுடன் நின்ற இருவரும் கூட்டத்தோடு கூட்டமாக அந்த பஸ்சில் ஏறி விட்டனர்...இவளால் பாவம் ஏற முடியவில்லை... கூட்ட மிகுதியில் இவளால் அந்த பஸ்சில் கால் வைக்க கூட முடியாத சூழலில் சரி அடுத்த பஸ்சில் சென்று கொள்ளலாம் என விட்டு விட்டாள்...
அதற்குள் அந்த ஆம்னி வர யாரும் இல்லா அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருப்பவளை கண்காணித்து கொண்டு இருந்தது...அவள் அங்கே நிற்பதை நோட்டம் விட்டு கொண்டு இருந்தவர்கள், "டேய் நீ அவ கூட நில்லு தப்பிச்சு போக விட்டுடாதே நீ அவளை சமயம் பார்த்து இழுத்து காருக்குள்ள தள்ளிடு "...என்று ஒருவன் கூற அவன் கூறிய பிளானை கேட்ட அவர்களில் ஒருவன் இறங்கினான்...
இவர்கள் வண்டி அந்த பேருந்து நிலையத்தில் இருந்து நாலு அடி தூரத்தில் இருக்க ஆம்னி யில் இருந்து இறங்கிய அவன் ஒன்றும் தெரியாதது போல அவளுடன் போய் நிற்க கண்மணி வேறு இதை கண்டு கொள்ளாமல் , "பஸ் வருகிறதா "....என அங்கே இங்கே என திரும்பி பார்த்து கொண்டு இருக்கும் போது மழை வலுத்தது...
தன் அருகில் ஒருவன் நின்று கொண்டு இருப்பதையும் அவன் வேறு அவளை உற்று பார்த்து கொண்டே இருக்க ஏதேக்சையாக திரும்பிய அவள் தன் அருகே நின்று கொண்டு இருப்பவரின் தோற்றம் ஒரு மாதிரி இருக்க அருகே எதிரே உள்ள கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு கொண்டு இருப்பதையும் ஒரு ஆம்னி மட்டும் மின்னி மின்னி எரிந்து கொண்டு இருப்பதை கண்ட கண்மணி ஏதோ நிலைமை சரி இல்லை என அவளின் உள் மனதிற்கு தோன்றியது...
அவனும் அந்த சூழலுக்கு எதிர்பார்த்து இருப்பது போலவே அவனும் ஆம்னியை பார்த்து கண் ஜாடை செய்ய கண்மணிக்கு மனதுக்குள் ஏதோ இனம் புரியா பயம் கொண்டு திரும்பி ஹாஸ்டல்க்கு சென்று விடலாமா என தோன்ற அதற்குள் அந்த ஆம்னியில் இருந்து இரண்டாவது ஒருவன் இறங்கி வந்தான்...
அவள் சந்தேகத்தை உறுதி செய்யும் விதத்தில் அந்த இருவரும் அவளுக்கு வல பக்கம் இட பக்கமாக நின்று அவளை சுற்றி வளைக்க அவளுக்கு வயிற்றுக்குள் கிலி ஆக மெல்ல அங்கே இருந்து ஒரு அடி கண்மணி எடுத்து வைக்க அவர்களும் அடி எடுத்து வைத்தனர்....
கண்மணிக்கு ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல் தன் கைப்பையை இறுக மூடி தன் கண்களை நிலை படுத்தியவள் அதற்குள் அவள் அருகில் நிற்பவர்கள் அந்த காரை ஸ்டார்ட் செய்ய கூற ஆம்னி வண்டி ஒரு அடி நகரவும் கண்மணி ஓட தொடங்கி விட்டாள்....
அவள் பின்னால் சென்றவர்கள் அவள் என்ன தான் வேகமாக ஓடினாலும் தின்று கொழுத்த ஆண்கள் பின்னால் வருகையில் அவளால் கொட்டும் அந்த மழையில் வேகமாக ஓட முடியவில்லை...
எத்தனை வேகத்திலும் அவள் ஓட முயற்சி செய்தாலும் அவள் பின்னால் வந்த கயவர்கள் துரத்தினர்... பாவம் கண்மணி பயத்தில் அவளுக்கு மூளை வேலை செய்யாமல் போக ஹாஸ்டல் செல்லும் வழிக்கு பதில் கிடைத்த வேறு சாலையில் ஓடினாள்....அதிகம் வாகனம் இல்லா அந்த சாலையில் ஓட தொடங்க பாவம் அவள் கத்தி கொண்டே ஓடுவது யாருக்கும் கேக்க வில்லை போலும்....அந்த மழை வேறு உன் அழுகுரலை விட என் அழுகுரல் அதிகம் என கருதி அவளுக்கு ஆதரவாக ஓ என தன் சங்கடத்தை வாரி தூற்ற அவள் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை...கேட்டாலும் யாரும் வர போவது இல்லை அது வேறு விஷயம்...
அதற்குள் ஆம்னி வண்டி ஒட்டி கொண்டு இருப்பவன் அவள் பின்னால் ஓடி வந்து கொண்டு இருப்பவர்களிடம் , "ஹே என்ன டா பார்த்துட்டு இருக்கீங்க அவளை பிடிச்சு வண்டில தள்ளுங்க டா "...என கத்தினான் வண்டியை ஒட்டி கொண்டு இருந்தவன்....
அதற்குள் ஆம்னி அவள் அருகில் வர கண்மணி தன் ஓட்டத்தின் வேகத்தை கூட்டி தனக்கு கிடைத்த சிறு சந்துகளில் ஓட துவங்கி விட்டாள்... அந்த சந்துக்குள் நடந்து செல்லவோ பைக் மற்றும் சைக்கிள் மட்டுமே நுழைய கூடிய சிறு சந்தில் அவள் ஓட அங்கேயே வண்டியை நிறுத்திய அந்த கடத்தல்க்காரன் அவனும் அந்த குறுகலான சாலைக்குள் வண்டியை நிறுத்தி விட்டு நால்வரும் அவள் பின்னால் ஓட கண்மணியும் அன்றைய தினம் எப்படி ஓடினாலோ அதே போல தான் பாவம் இன்றும் ஓடினாள் அவள் ஆனால் அவளால் முடியவில்லை....
அதற்குள் அவர்கள் அவளை பிடித்து விட்டனர்...."ஹே எங்கே டி ஓடுற"... என அவளை பிடித்து விட்டனர்... அவளின் இரு கைகளை இவன் பிடித்து இழுத்து வர அவளோ திமிறி , "ஹே விடுங்க டா ...யாரு டா நீங்க எதுக்கு இப்படி பண்றீங்க"... என அவள் அவர்களிடம் இருந்து திமிறி கொண்டே கத்தினாள்....
"ஹே சும்மா கத்தாம இரு".. ...என அவள் வாயை ஒருவன் பொத்த போக அவளோ விடாமல்
"என்னை விடுங்க நான் யாரு னு தெரியாம என்கிட்ட மோதுறீங்க"..
....என கண்மணி தன் கையை முறுக்க பிடித்து இருப்பவனிடம் கத்தியபடி வெறிக்கொண்டவள் , "என் கையை விடு டா..என் புருஷன் யாரு தெரியாம நீங்க என்கிட்ட இந்த மாதிரி நடந்துகிறீங்க".. ...என அவள் மீண்டும் மீண்டும் கத்தி தன்னை விடு விக்க அவள் போராட அவளை பிடித்த கூட்டத்தில் இருந்த ஒருத்தன் அவளை ஒரு அறை அறைந்தான்...
" உன் புருஷன் யாரு னு தெரியும் கம்முன்னு இரு...ஒரு பிரச்னை ல எனக்கு அவனுக்கு திருப்பி கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு ".. என கூறிய அந்த கயவன் வேறு பழைய பகையை மனதில் வைத்து கூறியவன் மேலும் நிறுத்தாமல்..."பரவாயில்லை வெற்றி குட்டி நல்லா சோக்காத்தான் இருக்கு...இன்னிக்கு முடிஞ்ச டி எங்ககிட்ட நீ ..உன் புருஷன் என்னை அடிச்ச அடி இன்னும் எனக்கு நியாபகம் இருக்கு...உன்னை வெச்சு அவனை நான் பழி வாங்க போறேன்"... என அந்த கயவன் மீண்டும் தன் கோபத்தை வார்த்தையால் அவள் மீது இறக்கி அவளுக்கு தன் வாழ்க்கை நாசம் ஆக போகிறது என பய பந்தை அவளுள் விதைத்து அவளை தளர செய்ய அந்த கொட்டும் மழையில் அவர்களின் குரல் யாருக்கும் கேட்கவில்லை அதற்குள் அவளை இழுத்து கொண்டு ஆம்னி அருகே வந்து விட்டனர்..."என்ன டா பாக்குறீங்க அவளை உள்ள தள்ளுங்க டா"... என கூறியவன் வண்டியை எடுக்க போகும் முன் டேனியலின் மொபைலிற்கு அழைத்த அந்த கயவன், " சார் அவளை தூக்கி ஆச்சு"...... என கூறி போனை அணைத்தான்....
அவள் கடத்தப்பட்டாள்......
நேசம் தொடரும்....
