நேசம் 37
அத்தியாயம் : 37
நேசமடி நேசம்
வெற்றியின் மனது முழுதும் ரயில் வண்டி போல பயணப்பட அவனுக்கு அவளை காண வேண்டும் என்ற உந்து சக்தியில் யாரையும் எதிர்பார்க்காமல் வண்டியை கிளப்பி விட்டான்...அவனுக்கு தவிப்பும் அதே சமயம் வீட்டுக்கு வர தாமதம் ஆகும் என்றால் அழைத்து சொல்ல வேண்டாமா என்ற கோபம் கூட அவள் மேல் எழ இருந்தும் அவளை நேரே போய் ஹாஸ்டலில் இழுத்து வருகிறேன் பார் என அவனது பைக்கை விரைவாக செலுத்தி கொண்டு இருந்தான்...அவன் மனதை விட வேகமாக அவனது பைக் விரைந்தது...
ஆனால் மழை வலுக்க வெற்றி செல்லும் வழிகள் எல்லாம் வெள்ள காடாக ஆக மாறி இருக்க இருந்தும் அவனது வேகம் குறைந்த பாடில்லை...சில இடங்களில் மழையின் உபயத்தால் மரங்கள் எல்லாம் வீழ்ந்து இருக்க அங்கே சாலை இடையூறு வேறு ஏற்பட்டு இருந்தது...அதை எல்லாம் பொருட்டுப்படுத்தாமல் விரைவாக செல்கிறான் தன்னவளை காண அதும் ஒரு போன் வேறு அணைத்து இருப்பது அவனுக்குள் ஒரு தவிப்பை ஏற்படுத்தி இருப்பது உண்மையே...
கண்மணி அவள் தோழிகள் லூட்டி அடித்து கொண்டே சமயத்தை போக்கியவள்.. சமயம் ஆனதும் ஏஞ்சலின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது...எப்போதும் போல் அவர்கள் மூவர் மட்டுமே...கண்மணி மற்றும் பாயல் பாட்டு பாட ஏஞ்சல் கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்கி வைத்தனர்...
கேக் அபிஷேகம், ஜூஸ் அபிஷேகம் எல்லாம் முடிந்து உடுத்தி இருந்த உடை எல்லாம் நனைந்து ஒரு விதம் ஆகி இருக்க அப்போதும் மூவரின் விளையாட்டும் நின்ற பாடில்லை இறுதியில் ஹாஸ்டல் வார்டன் வந்து அவர்கள் அறை கதவை தட்டி, " இனி சத்தம் வந்துச்சு தொலைஞ்சிங்க "...என மிரட்டி அறையை பார்க்க அதன் கோலத்தை கண்ட அவர் வெகுண்டு எழுந்து , அவர்கள் மூவரை பார்த்து முறைத்து விட்டு , "இன்னும் 10 நிமிசத்தில் ரூம் நீட்டா இருக்கணும்"... என எச்சரித்து விட்டு ,கண்மணியை கண்டவர் "உனக்கு வீட்டுக்கு போக டயம் ஆகலையா ...சீக்கிரம் கிளம்பு "...என்று கண்மணியிடமும் கூறி விட்டு சென்றார்...
இவர்கள் மூவரும் நல்ல பிள்ளைகள் போல அவர் கூறும் அனைத்திற்கும் தலை ஆட்டி விட்டு கதவை அடைத்து மீதம் உள்ள கேக்கை வாரி இறைத்து விளையாடி விட்டே அடங்கினர்....விளையாட்டு எல்லாம் மட்டுப்பட அறை எல்லாம் ஒதுக்கி கண்மணி மற்றும் தோழிகள் அணிந்து இருந்த உடை வேறு கேக், ஜூஸ் ஆல் அவர்களின் உடை கந்தல் ஆகி இருந்தது..இதோடு எப்படி கண்மணிக்கு வீட்டுக்கு செல்வது என்று நினைத்தவள்...
வேகமாக தன்னை சுத்தப்படுத்தியவள் ஏஞ்சலின் வேறு குர்தா அணிந்தாள்... சிறிது நேரம் தன் நண்பர்களுடன் உரையாடி விட்டு அலங்கோலமாக இருந்த அறையை சுத்தம் செய்து விட்டு அவள் கிளம்ப தயாரானாள்...
அந்த சமயம் பார்த்து அவள் அன்னை அழைக்க சிறிது நேரம் அவரிடம் உரையாடிய கண்மணி நல விசாரிப்புகள் எல்லாம் கழிந்து , "வெற்றி எங்கே "... ஊர் திருவிழா விற்கு வரும் படி அழைக்க வேண்டும் என கூறினார் ஜானகி...கண்மணியோ அன்னம் மற்றும் வேல்முருகன் ஊருக்கு சென்று இருப்பதையும் அதே சமயம் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பதாக கூறி தான் இன்னும் வீட்டிற்கு செல்ல வில்லை என்றும் இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்று விடுவதாக கூற அதை கேட்ட ஜானகி பொரிய தொடங்கி விட்டார்...
"கல்யாணம் ஆன பெண் விரைவாக வீட்டிக்கு செல்ல வேண்டாமா இது தான் நான் உனக்கு சொல்லி கொடுத்தேனா"... என அவர் காய அந்த சமயம் பார்த்து இத்தனை நேரம் அவனை பற்றிய நினைப்பை மறந்து இருந்த கண்மணி தன் தாய் வெற்றியை பற்றி நினைவு படுத்த வீட்டிற்கு சென்றால் அவனுடன் இருக்க வேண்டும் என தோன்ற ,நேற்றைய இரவும் அதனால் அவள் தன்னையே குழப்பி கொண்டது எல்லாம் நினைவு வர அந்த நினைப்பே அவளுக்கு கசந்தது....
இவள் வேறு காடு கடந்து சிந்தித்து கொண்டு இருப்பதை தடை செய்யும் பொருட்டு அவளின் தாய் ஜானகி, "வீட்டுக்கு போயிட்டு கூப்பிடு "...என கூறி முடிப்பதற்குள் கண்மணியின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது...
வெளியே வேறு காலநிலை இருட்டி மழை வரும் அறிகுறி தென்பட மழை வருவதற்குள் வீட்டிற்கு செல்லலாம் என நினைத்து அவள் தோழிகளிடம் இருந்து விடை பெற்றாள்...
மஞ்சள் நிற குர்தா மற்றும் கருநீல பாண்ட் அணிந்து ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தவள் அங்கிருந்து பஸ் ஸ்டாப்ற்கு நடக்க தொடங்கினாள்...
அவள் வெளியே வருவாள் என ஆம்னியில் காத்து கொண்டு இருப்பவர்களுக்கு நான்கு கட்டிடம் தூரே நிற்பவர்களுக்கு இவள் வேறு உடை அணிந்து தலையை வேறு விதமாக கட்டி இருக்க பின்னால் இருந்து அவளை கவனித்து வந்த அந்த ஆம்னியில் இருப்பவர்களுக்கு யாரோ ஒரு பெண் வருவது போல தான் இருக்க அவர்களும் வெளியே வருபவளை விட்டு விட்டனர்...
ஹாஸ்டல் இருக்கும் சாலையில் நடந்து கொண்டு இருப்பவளுக்கு அந்த வீதியை கடந்து வலப்பக்கமாக ஒரு நூறு மீட்டர் நடந்தால் அங்கே ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கும் ....அங்கே தான் அவள் வீடு இருக்கும் வழிக்கு செல்லும் பேருந்து எல்லாம் வரும் அதற்காக வேகமாக அவள் நடந்து கொண்டு இருக்க வண்டியில் வந்த ஒருவர் அவளிடம் ஒரு முகவரியை காட்டி கேட்டார்...
அவர்களுக்கு முகம் காட்டாமல் திரும்பி நடந்து வந்ததால் அவர்கள் கவனிக்காமல் போக அவர்களும் உடையை வைத்து குழம்பி விட்டு விட்டனர்.... ஆனால் அவள் திரும்பி தன் முகத்தை தெளிவாக காட்டி அந்த முகவரி கேட்ட நபருக்கு தகவல் அளிக்க அதை பார்த்த அவர்கள், "ஹே அந்த பொண்ணு தான் டா அங்கே பார் அந்த தெரு முனையில் நின்னுட்டு இருக்கா எப்படி நம்ம கண்ணை விட்டு மறைஞ்சா "....என அவர்கள் புரியாமல் பார்க்க வழி கேட்டவர் செல்லட்டும் என அமைதியாக நின்றனர்...
கடத்தும் போது நாம் எதிர் பார்த்தது போல வேகமாக பயணப்பட முடியாதே ...அதிலும் அந்த தெருவில் அங்கேயும் இங்கேயும் வண்டிகள் பறந்து கொண்டு இருப்பதால் யாரும் இல்லா சமயம் வரும் போது தானே கடத்த முடியும் என நினைத்து அவளை நோக்கி செல்ல இருந்தவனை வேண்டாம் என மற்றவன் கூறி மறுத்து விட்டான்...
அந்த முகவரி கேட்ட நபரும் சென்று விட கண்மணி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினாள்...மழை வேறு இப்போ பெய்து விடுவேன் என பயம் காட்ட வேகமாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என நினைத்து கொண்டே நடந்தாள் கண்மணி...
அவள் பின்னாலே மெல்ல அந்த ஆம்னி ஊர்ந்து செல்ல கண்மணி அதற்குள் பேருந்து நிலையத்தை எட்ட அங்கே போய் நின்று கொண்டாள்...
