நேசம் 36
நேசம் : 36
ஆம் இருவரும் ஒருவரை ஒருவர் கவனித்தாலும் வெற்றிக்கு அவள் தன்னை பார்க்க வில்லையே என்ற கவலை மனதை அரித்தது...ஒரு வேலை அவளுக்கு விருப்பம் இல்லாமல் இப்போது நம் மீது கோபத்தில் இருக்கிறாளோ என்று எல்லாம் அவன் எல்லாம் கலந்த உணர்வுடன் அவளை பார்க்க கண்மணி ஏறிட்டு அவனை பார்த்தால் தானே...
அவளின் பராமுகம் காலை எழுந்த இனிமையை முற்றிலும் அவன் துறந்து அவனுக்கும் கோப துளிர் விட முகம் கடுமையை தத்து எடுத்து கொண்டது...ரொம்ப தான் பண்றா என நினைத்த வெற்றி அதன் பின் அவள் முகம் காண முயற்சிக்க வில்லை...அந்த சமயம் பார்த்து கண்மணி நிமிர்ந்து அவனை பார்க்க அவனின் பாராமுகம் அவளுக்கு வேதனையை கொடுக்க தான் நினைத்தது சரி தான் என நினைத்து கொண்டாள்.... அது வேறு அவளை வாட்ட உணவை அளந்து கொண்டு இருந்தாள்...
அந்த தருணம் பார்த்து அன்னம் தாங்கள் ஊருக்கு செல்வதை பற்றிய பேச்சை எடுத்து விட்டார்...ஆம்...அன்னம் தன் மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என அவர் வேண்டாத கோவில் இல்லை அவர் நினைத்தது போல இறைவன் அவரின் பிராத்தனைக்கு செவி சாய்த்து இருக்க அதற்காக அவர் பல கோவில்களில் வேண்டுதல்கள் வைத்து இருக்க இன்று அவர் ஊருக்கு செல்ல வேண்டும் நாளை அவர்கள் ஊரின் அம்மன் கோவிலில் இவர் நேர்ந்த வேண்டுதல் இருக்க அதை நிறைவேற்ற அவர் ஊருக்கு செல்ல வேண்டும் அதுமட்டுமின்றி அவர் இங்கேயே செட்டில் ஆகும் எண்ணத்தில் அல்ல இங்கே வந்ததும் மகனையும் மருமகளையும் இணைக்கவே அவர் வந்து இருக்க அவர் இன்று ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ...
மெல்ல தன் மகன் உணவு அருந்தி கொண்டு இருக்கும் போது தாங்கள் ஊருக்கு செல்லும் விசயத்தை கூற வெற்றி அவளை பற்றிய எண்ணத்தில் இருந்ததால் மறுப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை...அவளும் குழம்பி கொண்டு இருப்பதால் மறுப்பு ஏதும் கூறாமல் இருக்க அவர்களும் காலை 10 மணிக்கு மேல் செல்ல இருப்பதாகவும் இருவரிடமும் பத்திரமாக இருக்கும் படியும் தாங்கள் இருவரும் ஒரு பத்து நாள் கழித்து வருவதாகவும் கூறினர்...
அன்னம் கூறும் அனைத்திற்கும் தலை ஆட்டி கொண்டு இருந்தவளை பார்த்த அன்னம் சந்தேகமாக பார்த்து , "என்ன மா ஆச்சு "...என்று கேட்க அவளோ அப்போது தான் போதம் வர பெற்றவள் , "ஒன்னும் இல்லை அத்தை நீங்க போயிட்டு வாங்க நான் பார்த்துக்கறேன் "...என்று கூறி விட்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்... செல்லும் அவளையே பார்த்தவனுக்கு யார் மீது தன் கோபத்தை காட்டுவது என அறியாமல் உணவின் மீது காட்டி விட்டு பாதி உணவிலே எழுந்து சென்றான்...
வண்டியில் பயணப்பட்டு கொண்டு இருக்கும் வெற்றியின் மனதில் முழுவதும் கண்மணியின் நினைவுகள் மட்டுமே...முதன் முறையாக நேற்றைய இரவை கழித்து இருக்க வேண்டாமோ என்று எல்லாம் சிந்தித்து பயணித்து கொண்டு இருந்தான் என்றாலும் அலுவலகம் வந்ததும் அவனது கடமை நினைவு வர அவனது குடும்ப விஷயத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு அவனுக்கு உண்டான கடமையை பற்றி நினைத்தான்..
அன்று அவனுக்கு ஒரு கட்சி கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணி கொடுக்க பட்டு இருக்க அவன் அதை மேற்பார்வை இட்டு கொண்டு இருந்தான்...அன்னம் மற்றும் வேல்முருகன் சொன்னது போல அவர்கள் திருநெல்வேலிக்கு கிளம்பி சென்றனர்....
தங்கபுஷ்பத்தை வேறு காலை மற்றும் மாலை அவன் எல்லோர் கல்லூரி வாயிலிலும் நிற்க சொல்லி மாணவிகளோடு மாணவியாக கலக்க விட்டு இருந்தான் ...ஆம் கல்லூரி விடும் வேலையில் தான் கல்லூரி மாணவர்களை அவர்கள் அவர்கள் வலையில் வீழ்த்த ஆள்கள் வந்து நிற்பதாகவும், அவர்களின் பணியே மிக சாதாரணமாக உரையாடுவது போல பேசி பேசியே பெண்களை மயக்கி அவர்களுடன் அழைத்து செல்வதாகவும் வெற்றிக்கு தகவல் கிடைத்து இருந்தது..
அதன் படி தான் அவன் தங்கபுஷ்பத்தை நிற்க வைத்து யாரேனும் சந்தேகப்படும் நபர் நிற்கின்றனரா என கண்காணித்து வந்தான்...வெற்றி ஊரில் உள்ள பெண்களுக்கு எல்லாம் பாதுகாப்பு அளித்தும் ஒவ்வொரு கல்லூரியாக சென்று பெண்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் எல்லாம் மேற்கொண்டு வர இங்கே டேனியலோ வெற்றியின் மனைவியை தூக்க கட்டம் கட்டி விட்டான்...
ஆம் அவள் எத்தனை மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வருகிறாள் என்பது முதல் எந்த நேரம் என்ன வேலை செய்கிறாள் என்பது வரை எல்லாம் அவன் கணக்கிட்டு வைத்து இருந்தான்...
ஊரறிய சாமியார் ஒரு மாநாடு நடத்த ஏற்பாடு செய்து இருக்க அதும் மலர் வேந்தன் தலைமையில் நடக்க அதை கவனிக்க வேண்டிய பொறுப்பு டேனியலுக்கு கொடுக்க பட்டு இருப்பதாலும் வெற்றி வேறு சும்மா இருக்காமல் எல்லா மடங்கள் , ஹாஸ்பிடல் என ஆய்வு நடத்தி வருவதாலும் டேனியலுக்கு மேலிடத்தில் இருந்து குடைச்சல் வந்து கொண்டே இருந்தது...
வெற்றியின் அதிரடியான ஆட்டத்தை கண்டு எல்லோரும் ஆடி தான் போயினர்...ஆனால் வெற்றியின் ஒவ்வொரு அசைவும் மிக துல்லியமாக கணக்கிட்டு தான் நகர்த்தி வருகிறான்...அவனுக்கும் தெரியும் தான் மிக பெரிய ஆட்களோடு தான் மோத போகிறோம் என்று அவர்கள் முதலில் தன் குடும்பத்தினரை குறி வைத்து விடுவார்களோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை....இருந்தும் அதற்கு எல்லாம் வெற்றி தயாராக தான் இருக்கிறான் தன் முறுக்கு மீசையை முறுக்கிய படி....
அவனை போட்டு தள்ளவோ ஆள் வைத்து அடிக்கவோ, இல்லை நரசிம்மனை மூலையில் அமர வைத்தது போல வெற்றியை அமர வைக்கவோ முடியாது...
அதற்கு பதில் அவனின் உயிர் நாடியான அவனின் புது மனைவியை தூக்கினால் அவன் அடங்குவான் என நினைத்து தான் டேனியல் இது போல செய்து கொண்டு இருந்தான்...
அதன்படி அமைச்சர் டெல்லி சென்று இருக்க சாமியாரும் வெளிநாட்டில் அழகிகளோடு உல்லாசம் இட்டு இருக்க வெற்றியின் மனைவியை கடத்தும் பணியில் மலர்வேந்தனின் ஆட்களை ஏவி விட்டு இருந்தான் டேனியல்..அதன் படி அவளை கண்காணித்து வந்த அந்த கூலி படையினர் இன்று அவளை கடத்த நாள் குறித்து விட்டனர்
ஆம் தன் மனைவிக்கு ஆபத்து வர போவதை அறியாமல் இங்கே வெற்றி ஒரு கட்சி கும்பலுக்கு பாதுகாப்பு அளித்து கொண்டு இருக்க, அங்கே கண்மணி ஏனோ மனம் சரி இல்லாமல் மருத்துவமனையில் அமர்ந்து இருந்தாள்..அதற்கு காரணம் என வெற்றிக்கு அல்லாது எல்லோருக்கும் தெரியுமே....சோகமே உருவாக அமர்ந்து இருந்தாள் கண்மணி...
அந்த சமயம் பார்த்து ஒரு பெரியவர் வந்து தனக்கு பல் வேதனை அளிப்பதாக கூறி அவளிடம் வந்தார்...
அவளும் அவனின் நினைவுகள் எழுந்தாலும் , எழும்பும் மனதை அடக்கி அந்த பெரியவரை பரிசோதித்தாள்...
அவரோ அவளை தொட கூட அனுமதிக்கவில்லை...தொட போவதற்கு முன் காச் மூச் என கத்த தொடங்கி விட்டார்...அவளும் அது இது என்று பொறுமையாக சொல்லி பார்க்க அந்த வயதான மனிதர் பார்க்க தான் பெரிதாக இருந்தாலும் மனதளவில் குழந்தை போலும்...
அவளுக்கு இருக்கும் சிறு பொறுமையை சோதித்த அந்த பெரியவர் முன் தன் கையில் இருக்கும் பல் பிடுங்கும் கருவியை காட்டி, " இது என்ன தெரியுமா ...ரொம்ப கத்திட்டு இருந்தீங்கனா இதை வெச்சு ஒரே குத்து... மொத்த பல்லும் என் கையில் வந்திடும்"... என்று அவருக்கு இருக்கும் நாலு பல்லை காட்டி அவள் மிரட்ட அவரோ டாக்டர் பேர் சொல்லி ஒரு ரவுடி கிட்ட மாட்டிட்டேன் னா என அவர் அவள் முகத்தை பேய் அறைந்தது போல பார்க்க அவளோ தன் முட்டை கண்ணை விரித்து அவள் கையில் பிடித்து இருக்கும் அந்த கருவியை அவரை பார்த்து குத்துவது போல காட்ட
அந்த பெரியவர் அதன் பிறகு மறந்தும் மூச்சு கூட விட வில்லை...
அவள் அவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி களை எல்லாம் செய்தவள் அவருக்கு தேவையான நிவாரிணிகளை எல்லாம் செய்தாள்... அவள் அவரை விடுவிக்கவும் அவரின் வலி சற்று மட்டு பட்டு இருக்க அவளை பார்த்து சிரித்தார்...அவளும் சிரித்து என்ன மறுபடியும் குத்தட்டா என போலியாக மிரட்ட அவளை பார்த்ததும் அவருக்கு சிரிப்பு தான் வந்தது....
பின் அவருக்கு தேவையான மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு எந்த நோயாளியும் யாரும் வராமல் இருக்க , மீண்டும் அவன் நினைவுகளில் மூண்டாள்...
அவனோடு இருந்த தருணம் மனதிற்கு இதத்தை தந்தாலும் அதே சமயம் இது எல்லாம் பொய்யோ என்பது போல அவளுக்கு அந்த நினைவு சுட அப்படியே அந்த டேபிளில் தலை சாய்த்து படுத்து கொண்டாள்...
அந்த நேரம் பார்த்து பிறந்தநாள் அழகி ஏஞ்சல் அவள் அறைக்குள் வர , "என்ன டி இப்படி படுத்து இருக்க"... என்று கூற பிறந்த நாள் பெண்ணை பார்த்ததும் அவளுக்கு வேண்டி அவள் வாங்கி வைத்து இருந்த பரிசை கொடுத்து அவளை வாழ்த்திய கண்மணி , "ஏஞ்சல் ஐ வாழ்த்த ஏஞ்சலோ வா டி ஹாஸ்டல் போகலாம் "...:என அழைக்க அதற்குள் ஏஞ்சல் க்கு வாங்கிய கேக்கோடு பாயல் வர மூவரும் ஹோஸ்டலை அடைந்தனர்...
நண்பர்களுக்கு தன் வருத்தம் தெரிய கூடாது என்று அவர்களிடம் சிரித்து உரையாடி அவர்களுக்கு துளி சந்தேகம் எழும்பாத வகையில் கண்மணி அங்கே தான் வால் தனத்தை அவிழ்த்து விட்டு கொண்டு இருந்தாள்...மூவரும் கூட்டணி சேர சமயம் போனதே தெரியவில்லை...
கண்மணியை கடத்த அங்கே காலை முதல் அவள் பின்னால் சுற்றிய கும்பல் அங்கே ஹாஸ்டலில் இருப்பதை அறிந்து அவளை தூக்க ஒரு ஆம்னி வேனில் காத்து இருந்தனர்... ஆம் இன்று இரவு அவளை தூக்க அவளுக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டு உள்ளது...
மாலை 6.30 மணிக்கு தன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வெற்றிக்கு மூடிய கதவுகளும் இருட்டு அடைந்த வீடே அவன் கண்களுக்கு விருந்து ஆக மணி மட்டும் குரைத்து கொண்டு இருந்தது...
அவன் வீட்டுக்குள் வந்ததும் தான் அவனுக்கு அப்போது தான் வீட்டு ஆட்களை பற்றிய நியாபகம் வர அன்னத்தை அழைத்த வெற்றி தன் தாயும் தந்தையும் வீட்டிற்கு சென்று விட்டார்கள் எனவும் கூற அன்னம் ஆயிரம் முறை கண்மணியை பார்த்து கொள்ளுமாறு கூற அவனோ, " ஹ்ம்ம் ஹ்ம்ம் "...என்று கூறியே போனை வைத்து விட்டு ரெபிரஷ் ஆக சென்றான்...
ரெபிரஷ் ஆகி வந்தவன் சிறிது நேரம் டிவி யை ஆன் செய்தான் மொபைலை நோண்டினான்...மணியை அருகே அமர்த்தி அவனோடு சிறிது நேரம் சமயம் கழித்தான்... ஆனாலும் மனதுக்குள் ஏதோ நெருடல் என்னவென்று வெற்றிக்கு சொல்ல தெரியவில்லை ஏதோ சரி இல்லை என அவனின் ஆள் மனம் சொல்லியது...அவனுக்கு அவளை காண வேண்டும் என தோன்ற வெளியே வேறு இருட்டி பெரிய சத்தத்துடன் இடி இடிக்க இவ இத்தனை நேரம் என்ன செய்கிறாள் என அவள் போனுக்கு அழைக்க அது வேறு தொடர்பு எல்லை க்கு அப்பால் என்று வந்தது...மேலும் போனை எடுத்து யாருக்கோ அழைக்க அவர் கூறிய செய்தி கேட்டவன் தன் விழியை சுருக்கி ஆலோசனை செய்தவன் சரி நான் வரேன் என்றான்....
ஊரில் உள்ள பெண்கள் அனைவரையும் காப்பாற்ற துடிக்கும் வெற்றிக்கு...கண்மணியை கடத்த போவது தெரிந்தால் வெற்றி என்ன செய்வான்...இல்லை இன்னும் அரை மணி நேரத்தில் தான் கடத்த பட போகிறோம் என அவள் அறிந்தால் என்ன ஆகும்?????...
நேசம் தொடரும்....
