நேசம் 35
அத்தியாயம் : 35
நேசமடி நேசம்
மறுநாள் காலை அவன் மார்பில் துயில் கொண்டு இருந்தாள் என்பதை விட அவன் அணைத்து படுத்து இருந்தான் என்றே கூற வேண்டும்...அவளும் அவனை அணைத்த படி தான் படுத்து கொண்டு இருந்தாள்....ஆனால் அவள் துயில் கலையும் போது அவன் மட்டுமே அவளை இறுக்கமாக அணைத்து இருப்பது போல அவளுக்கு தோன்றியது...மெல்ல அவனின் உறக்கம் கலையா வகையில் மெல்ல எழுந்தாள்...எழுந்தவளுக்கு தன் நிலையை கண்டதும் ஒரே வெக்கமாகி விட நேற்றைய இரவை அசை போட்டாள்...
அவளுக்கும் நேற்று இரவு அவன் தந்த முத்தத்தின் தித்திப்பு இன்னும் அவள் உதட்டில் தேங்கி இருப்பது போல தோன்ற தானும் தானே அதில் மூழ்கி இருந்தோம் அடுத்து அவன் நேற்று அவன் என்ன கூறினான் , " இனி தினமும் உன் இதழ் எனக்கு தேவை அதற்கு உன் அனுமதி இல்லை"... என்றல்லவா கூறினான்...அவன் கூறும் போது நான் ஏன் அமைதியாகி போனேன்...
அந்த அமைதி க்கு பரிசாக அவனின் முத்தத்தையும் அணைப்பையும் ஏன் பரிசாக வாங்கினேன் அதை மட்டுமா அவனிடம் இருந்து பரிசாக வாங்கினோம் காதலின் அச்சாரத்தை அல்லவா அதில் வாங்கினோம்...முதல் கூடலை அல்லவா பரிசாக பெற்றோம் என நினைக்கும் போதே நேற்றைய இரவு மனதுக்குள் வந்து போக அவள் முகம் செவ்வானம் ஆக சிவந்தது...ஆனால் அவனிடம் , அவனுக்காக அவள் படும் இந்த வெட்கம் அவளுக்கு புதிதாக தோன்றியது...
காதல் என்ற ஒன்று இருவருக்கும் இடையில்.....இருந்ததா ....இல்லையே.. நாங்கள் அதை உணர கூட இல்லையே....இருந்தும் தாம் ஏன் அவனுக்கு இயைந்து கொடுத்தோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடை இல்லை நேற்றைய இரவு வந்து முட்டுக்கட்டை போட நாணம் மட்டுமே அங்கு விடையானது என யோசித்து குழம்பி உறங்கும் அவனின் முகத்தை பார்த்து "நாம என்ன லவ் வா பண்றோம்.. அப்புறம் என்ன நேத்து இப்படி சண்டை தானே நான் நடக்கும் னு நெனைச்சேன் இப்படி ஆச்சே"... என நினைத்து கொண்டே பாவமாக அவனை பார்க்க உறக்கத்தில் ஆனாலும் அவளின் முதுகை அவன் வருட போனான் அந்த கள்வன்...
அவளோ இனி நான் இங்கு இருந்தால் அவன் எழுந்து கொள்வான் என்னால் அவனுடைய முகத்தை காண முடியாது வேண்டாம் என நாணிக்கொண்டே அவன் எழும் முன் சென்று விட்டாள்...
கண்மணியோ சந்தோசம், துக்கம் என இரண்டும் கலந்த கலவையில் தான் இருந்தாள் அவனிடம் சண்டை இட வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அவளுக்கு அவன் முகம் பார்க்கவே நாணம் தான் வந்தது அது தான் ஏன் என அவளுக்கு புரியவில்லை... அவனை குத்த வேண்டும் கத்த வேண்டும் என்று எல்லாம் நேற்று வரை புலம்பியவள் இன்று அவனின் முகம் ஏறிட்டு பார்ப்பதையே வெட்கம் ஆக எண்ணுகிறாள்... அதே சமயம் வேறு ஒரு சந்தேகம் கூட அவள் மனதில் உருவாகி கொண்டு இருந்தது...
இந்த புதிய மாற்றம் அவளுக்கே புதிதாக இருந்தும் எனினும் அவள் மனதின் ஓரத்தில் இவன் தான் கணவன் என்ற போதம் அவளுக்கு வந்தாலும் காதல் அவன் தன்னை காதலிக்கிறானா ...இல்லை வெறும் உடல் பசியை என்னிடம் தீர்த்து கொண்டானா என்ற கேள்வி அவள் மனதை வாட்டியது...ஏனெனில் அங்கே பேச்சுக்கு இடம் இன்றி போனதே...
ஆனால் அதை யோசிக்க கூட முடியவில்லை அது போல அவன் செய்து இருந்தால் இப்போது என்ன செய்வது கணவன் தானே ....அன்பில் தொடங்க வேண்டும் என்ற பந்தம் காமத்தில் கலந்து விட்டதா என அவள் நினைக்க அந்த நொடி அவளுக்கு நேற்றைய இரவு கசந்தது... சற்று நேரத்திற்கு முன் அந்தி வானமாய் சிவந்த அவளின் முகம் இப்போது வாடிய பயிரை போல சுணங்கியது...
ஆம் அவனுக்கு தான் தன்னை பிடிக்காதே என்ற சுய பச்சாதாபம் மேல் எழுந்தது...அவனை மற்றும் சொல்லி பயன் இல்லையே...தானும் தானே அவனுடன் இயைந்தோம் என மொத்தத்தில் பல் டாக்டர் பல் இருந்தும் பேசா மடந்தையாக குழம்பி இருந்தாள்...
இருவருக்குள்ளும் நேசம் இருக்கிறது...அதை புரிந்து கொள்ள தான் இருவரும் முயலவில்லை... அதை இருவரும் வெளிப்படுத்தாமலும் இருக்க அதும் நேற்றைய சூழலில் மொத்தமாக குழம்பி இருந்தாள் கண்மணி...அன்னம் கேட்ட கேள்விக்கு எல்லாம் இயந்திர கதியாக பதில் அளித்து கொண்டு அவருக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள்...
உறக்கத்தில் இருந்து எழுந்த வெற்றிக்கு நேற்றைய இரவு நினைவில் வந்து போக காலையிலே அவளை காண வேண்டும் என்ற ஆவல் வந்தது...ஆம் அவன் அவளிடம் விருப்பத்துடன் தானே இயைந்தான்....அவனுக்கு அவளை போல சிறிது கூட குழப்பம் இல்லையே...
அவளுக்கும் நேற்று நடந்ததில் விருப்பம் போல தானே இருந்தது என நினைக்க அதே சமயம் தான் ஏதேனும் அவளுக்கு விருப்பம் இல்லாமல் நடந்து விட்டோமோ என ஒரு கலக்கம் அவனுள் எழுந்தது...இருந்தாலும் என்ன கலக்கம் நான் அவளின் கணவன் தானே வேறு யாரோ அல்லவே பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டான் வெற்றி...
வேகமாக குளித்து தயாராகி வந்தவன் கண்களுக்கு அங்கே தோசை வார்க்கும் மனைவி தென்பட்டாள்... அதும் தலை குளித்து அந்த முடியை மொத்தம் துண்டில் பொதிந்து அவள் அணிந்து இருந்த சுடிதாரின் உபயம் ஆக நேற்று தொட்டு தடவிய அவளது முதுகு அரை நிலவாக அவனுக்கு காட்சி அளிக்க அவன் கண்கள் அவள் முதுகில் நிலைத்தது...அங்கே சிறு வட்ட வடிவில் அவனின் கைரேகை அவளின் வெண்ணிற முதுகில் பதிந்து இருந்த காதல் ஆவேசத்தின் உச்சத்தில் இருந்த போது கொடுத்த அழுத்தம் அவளின் முதுகில் கண்டு ஒரு இளம் முறுவல் சிறிதாக வெளியே வந்தது யாரும் காணா வகையில்..
இவன் தான் அங்கே நின்று வழிந்து கொண்டு இருக்கிறானே தவிர அவளிடம் இருந்து சிறு துளி கூட அவள் பார்வை அவன் மீது பதிய வில்லை...
அவள் முகத்தை காண வேண்டும் என தோன்ற , "அம்மா டிபன் ரெடியா"... என கேட்டு கொண்டே அடுக்களைக்குள் வர அவளோ அவனை ஏறிட்டு கூட பார்க்க வில்லை...விட்டால் தோசையோடு தோசையாக வார்த்து போய் விடுவாள் போல அப்போதும் அவனால் அவள் திருமுகத்தை காண முடியவில்லை..அவனின் குரல் அவளின் செவியை மட்டும் வேகமாக சூடாக்கியது...
அவன் கேட்ட கேள்விக்கு அன்னம் தான் , "ஆச்சு பா சாப்பிடு".... பதில் அளித்தார்...பின் வேகமாக காலை உணவை பரிமாறினார்.....அப்போது வேகமாக அவளின் புத்தகத்தை எல்லாம் எடுத்து வைத்தவளுக்கு ஏஞ்சல் க்கு வாங்கி வைத்த பரிசு நினைவு வர இன்று அவளின் பிறந்த நாள் இன்று மாலை பார்ட்டி ஹாஸ்டலில் உள்ளது என்று வேறு கூறினாலே என நினைத்து வேகமாக தயாராகி வெளியே வந்தாள் கண்மணி...
எல்லோருக்கும் பொதுவாக, " அத்தை இன்னிக்கு என்னோட ப்ரென்ட் ஏஞ்சல்க்கு பிறந்த நாள் நான் காலேஜ் முடிச்சிட்டு ஹாஸ்டல் போயிட்டு தான் வீட்டுக்கு வருவேன்"... என கண்மணி அன்னத்திடம் கூறுவது போல எல்லோரிடமும் கூற அவரும் சரி என்று கூறி விட்டார்...நடை பயிற்சி முடித்து வந்த வேல்முருகனும் இவர்களின் பேச்சை கேட்டு , "என்ன மா பிறந்த நாள் பங்சன்னா "...என கேட்க "ஆமாம் மாமா"... என கூற அந்த வீட்டில் இரு அங்கங்கள் ஆன மணியும், வெற்றியும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டியதாகி போனது..
