Share:
Notifications
Clear all

நேசம் 34

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நேசம் : 34

"என்ன சொல்ற நீ நான் யார் கூட போனதை நீ பார்த்த"...என்று புரியாதது போல அவள் விலங்கா மொழியில் அவள் செவி மடலை தீண்டிக் கொண்டே கேக்க...

அவளோ அவள் விளையாடுவதை உண்மை என நம்பி , "அந்த பொண்ணு தான் கொஞ்சம் குண்டா வெள்ளை அண்ட் ப்ளூ கலர் குர்தி போட்டு இருந்தாலே அவ கன்னத்தில் கூட ஒரு பெரிய மச்சம் இருக்கு ..நீ கூட அவ ஏதோ சொன்ன அப்ப சிரிச்ச"..என்று தான் ஒரு நொடியில் கண்டதை தெளிவாக தன் வாயாலே விளக்கி கொண்டு இருக்கிறோமே  என எரிச்சல் மிகுதியில் கூற அதும் அவனின் பிடி விடாமல் இருக்க அவனின் இதயத்தில் சாய்ந்து கொண்டு இதயத்தின் ஓசையை கேட்டு கொண்டே அவள் கூற, அவனுக்கு புரிந்து போனது தங்க புஸ்பத்தை தான் அவள் கூறுகிறாள் என புரிய அவனோ மேலும் அவளிடம் தொடர்ந்தான்...

" உனக்கு தான் என்னை பிடிக்காதே ...நான் யார் கூட சுத்தினாலும் உனக்கு என்ன"... என்று மேலும் அவளின் கோபத்தை தூண்டி விட

அவளோ நெஞ்சில் சாய்ந்து கொண்டு இருந்தவள் அவளின் சட்டையை கொத்தாக அவனின் மார்பு ரோமத்தை சேர்த்து பிடித்து இழுத்தவள் , "உன்னை எனக்கு பிடிக்கலை னு சொன்னாலும் நான் உன்னோட மனைவி...நீ வேற யாரையும் பார்கிறதை எல்லாம் என்னால பார்த்திட்டு இருக்க முடியாது..அப்போவே உன்னை பிடிச்சிட்டு இதே மாதிரி இழுத்துட்டு வரனும் னு தோணுச்சு ...தப்பிச்சிட்ட ..மவனே என்னை விட்டு வேற எங்கேயாவது உன் கண்ணு அந்த பக்கம் இந்த பக்கம் போச்சு முறைச்சு பார்க்க கண் இருக்காது "..என அவள் கூற அந்த இருட்டிலும் அவள் கண்களின் வெளிச்சத்தை அவள் வார்த்தையில் உணர்ந்தான்...

இதுவும் ஒரு வகை காதல் தான் சிறு குழந்தைகள் உண்டு ஒரு சில அவர்களுக்கு தேவை இல்லாத விளையாட்டு பொருட்களை அவர்கள் கையால் கூட தீண்ட மாட்டார்கள் அது எப்படி பட்ட விலை மதிப்பு ஆனாலும் ஆனால் அந்த பொருளை வேறு யாரேனும் தொட்டால் அந்த சமயம் பார்த்து அழுது புரண்டாவது அந்த பொருளை வாங்கி விடுவார்கள் ..தான் விளையாடவில்லை என்றாலும் பராவாயில்லை தனக்கு சொந்தமான பொருள் தனக்கு மட்டும் தான் என்ற நிலை பாடு அவர்களிடம் உண்டு அது போல தான் இதுவும் கண்மணி அவனை கணவனாக ஏற்று கொள்ளவில்லை என்றாலும் அவன் பார்வையோ அவனின் அருகாமையோ யாரேனும் பற்றி பிடித்தால் அது அவர்களால் உட்கொள்ள முடியாது இதுவும் கூட தன் மனதில் தன் கணவனை ஏற்றி வைத்தனால் தான் அவளால் கோபம் கொள்ள முடிகிறது என அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை... ஆனால் அவன் அதை உணர்ந்து விட்டான்....

வெற்றியின் மனதில் அவள் மனைவி உள் நுழைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்து விட்டது... அதுவே நேற்று இரவு கோபம் என்ற பூ சூடி அவள் இதழை புசித்தான்...இன்று மாலையும் ருசித்தான்....இதோ இப்போது அவளை புசிக்க தயாராக இருக்கிறான்... இனி அவனுக்கு வேறு ஒன்றும் யோசிக்க தேவை இல்லையே..அன்றே வெற்றி அவள் கோபம் என்னும் பூ சூடி இருந்தாலும் நீ எனக்கு மட்டும் தான் என்று தெளிவாக அவனுக்கு விளக்கி விட்டாளே...

  அவளது காதலை அவளும் கூறவில்லை...அவனும் கூறவில்லை... ஆனால் அவன் உணர்ந்து கொண்டு இருக்கிறான்...அவளும் உணர்ந்து இருக்கிறாள்...ஆனால் இருவருக்குமே எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை... இருவருக்கும் தங்கள் மனதில் உள்ளதை புரிய வைக்க முயற்சியும் செய்யவில்லை...அவனுக்கு அவளது அருகாமை சுகமான இன்பமாய் இருக்க அப்படியே சாய்ந்து கொள்ளடி என் பெண்ணே என அவனும் விட்டுவிட்டான்...

அவளும் விடாமல் அவனை திட்டி புலம்பி கொண்டே இருந்தவள் தீடிரென அவன் அணிந்து இருந்த சட்டையை கொத்தாக பிடித்து, " அதுனால தான் டா உனக்கு நான் டீ ல உப்பு போட்டேன்... இனி எனக்கு பிடிக்காததை செஞ்ச இது மாதிரி தான் பண்ணுவேன் "..என்று கூற கொண்டே இருந்தவளை இதற்கு மேலும் எனக்கு பொறுமை இல்லையடி பெண்ணே என நினைத்து அவளை பிடித்து இருந்த படியே அவளை ஒரு அடி தூக்க அவள் அதை எதிர்பார்க்கவில்லை...

அவன் தூக்கிய அடுத்த நொடி அவளின் இதழ் அவன் வசம் ஆனது...ஆம் அவளின் இதழை சுவைத்து கொண்டு இருந்தான் வெற்றி...சுவைத்து கொண்டு இருந்தவன் மூச்சுக்காக அவள் போராடும் வேளையில் அவளை விட்டு , "என்ன டீ ல உப்பு சரியா இருக்கா "...என்று கூறி அவளை இறக்கி விட்டான்... மீண்டும் அவன் இதழ் யுத்தம் தொடங்க அவனின் வன்மையான முத்தத்தில் அவள் தான் துவண்டாள்...

துவண்டவளை இறக்கி விட மனமின்றி அவளை தூக்கி இருட்டிலே தட்டு தடுமாறி கட்டிலை அடைந்தான் வெற்றி...

கட்டிலில் அவளை கிடத்தியவன் அவள் மேல் சரிந்து அவள் செவியில் , "தினமும் நீ எனக்கு உப்பு டீ தனது நான் அதை குடிச்சாலும் பரவாயில்லை... நீ எனக்கு வேணும்...நான் அன்னிக்கே சொன்ன மாதிரி நீ எனக்கு மட்டும் தான்... உனக்கு பிடிக்காட்டியும் எனக்கு தான்.. பிடிச்சாலும் எனக்கு தான்.."... என்று  கூறி அவளை இறுக அணைத்தவன் கைகள் அவளின் உடலில் அத்துமீற தொடங்க அவனின் சொல்லும் செயலும் அவளுக்கு திக்பிரமை பிடித்தவள் போல வாயே திறக்காமல் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை கொடுத்தாள்... இளமையின் தவிப்பை அவளுள் தேட தொடங்கியவனுக்கும் தனக்கு இவளை பிடிக்காது என்று கூறினோம் என்றோ இவளை இந்த அறைக்குள் வர வேணாம் என கூறினோம் என்று ஒன்றும் தோன்றவில்லை...அது எல்லாம் எங்கே  தான் தன்னுடைய மனதை வெளிப்படுத்தி விடுவோமோ என நினைத்து தான் அவ்வாறு கூறியது...உண்மையில் அது அல்லவே...அவனின் குட்டு தான் இன்று வெளிப்பட்டு விட்டதே....

காதல் காட்டாற்று வெள்ளம் போன்றதாமே கரை புரண்டு ஒடுமாமே அது போல இருவருக்கும் இடையில் கரை புரண்டு ஓட தொடங்கியது...அதில் நீ நான் பேதம் இல்லாமல் இருவரும் முத்து குளிக்க தயாராகினர்...

அவளும் அவனிடம் தன்னை கொடுத்து கொண்டு தான் இருக்கிறாள் அவள் உணர்ந்தே...என்ன நடக்கிறது இங்கே என அவள் மூளைக்கு சிந்திக்கும் அனுமதியை சிறிது நேரம் தடுத்து வைத்து இருந்தான் போலும் அவனின் தொடுகையில் கரையத்தான் தொடங்கி இருந்தாள் கண்மணி...

அந்த அதிரடிக்காரனுக்கு எல்லாமே அவசரம் போலும் அவள் எந்த விஷயத்தை எல்லாம் அவள் எதிர்பதமாக செய்ய நினைக்கிறாளோ அதை எல்லாம் முறியடித்து அவன் நினைத்ததை அவன் செய்ய வேண்டும் என்று நினைப்பான்...

ஆம் அவர்களின் திருமணம் முதல் அவர்களுக்குள் கடைசியாக  நடந்த  முத்தம் வரை எல்லாமே அப்படி தான் அவள் ஒன்று நினைத்து இருக்க அவன் ஒன்றை செய்து இருப்பான்..மனதில் வேறு ஒன்றை நினைத்து கொண்டு இருக்கிறான் என யார் அறிந்தார்...ஆனால் ஆழ்மனதில் உள்ள காதலின் துளி நீர் தான் இப்போது வடிகால் இல்லமால் அவர்களுக்குள் ஊற்று எடுத்து கொண்டு இருக்கிறது... அது தான் இன்றும் அவர்களுக்குள் நடந்து கொண்டு இருப்பதும்...

விருப்புக்கும் வெறுப்புக்கும் நூலிழை தான் வித்தியாசம் அது போல அவர்கள் வெறுப்புக்கு இடையில் இருந்த நூலிழையை அறுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறான் வெற்றி...

அவளுக்கு அவன் தன்னிடம் அத்து மீறுவதை காணும் போதும் உணரும் போதும் அவளால் தடுக்க முடியவில்லை... அவளும் குழைந்தாள் என்றே கூற வேண்டும்...இறுதியில் அவள் கண் மூடி அவள் உருக எது நடக்க கூடாது என்று நினைத்து இருந்தாலோ அது நடந்தே விட்டது...வெற்றியின் அதிரடியில் அவள் பயந்து போக மென்மையை கையில் எடுக்க வன்மையும் மென்மையுமாய் அவர்களின் கூடல் அரங்கேறியது...

ஆனால் இந்த கட்டிலில் கிடந்தது முதல் இருவருக்கும் இடையில்  வார்த்தை போர் தட்டுப்பாடு ஏற்பட்டு  உணர்வுகளுக்கு உண்டான இளமை போர் உண்டானது...

அந்த போர் முடிவில் இருவரும் வெற்றி பெற அயற்சியில் அவளை தன் மார்பில் படுக்க வைத்து துயில் கொண்டு இருக்கிறான் வெற்றி...

கணவன் மனைவி உறவு என்பது அவ்வளவு எளிதில் வெட்டி முறிப்பதற்கு அல்லவே....அதற்கு வடிகால் ஆன காதல் களியாட்டத்தை அவளுள் அவன் விதைத்து விட்டான்...

அவள் தடுத்தும் அவன் நினைத்ததை நடத்தி காட்டியவனுக்கு கண்மணி என்ன பதில் உரைப்பாள்...காதலோ இருவரும் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் கூட சண்டை இடாமல் சுமுகமாக உரையாடி கொள்ளாத இருவர் தம்மில் இருட்டில் நடக்க கூடாதது அந்த இருட்டிலே நடந்து விட்டதே என அவனை தன் முட்டை கண்களாலேயே எரிப்பாளா....நாளைய விடியல் இருவருக்கும் எப்படி இருக்கும்...

நேசம் தொடரும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top