நேசம் 33
அத்தியாயம் : 33
நேசமடி நேசம்
கண்மணிக்கு அறைக்குள் செல்லவே ஏனோ இனம் புரியா பதட்டம் வந்து அவளை வாட்டியது...அவளால் அந்த அறைக்குள் செல்ல முடியவில்லை... எல்லோரும் இருக்கும் வரை அவளுக்கு ஒன்றும் தோன்ற வில்லை...இந்த இரவும் நேற்றைய இரவு , இன்றைய மாலை முத்தமும் சேர்த்து அவளின் கை கால்கள் செயல் இழக்க செய்ய, அவன் மிரட்டியது வேறு நினைவுக்கு வர அறைக்குள் செல்லாமல் ஹாலில் நடை பழகி கொண்டு இருந்தாள்... அன்னம் வேறு அடுக்களையில் இருந்து எட்டி பார்க்க இவளோ வேகமாக போனை எடுத்து செவியில் வைத்து கொண்டு யாரை அழைக்கலாம் என நினைத்து வேகமாக தன் தங்கையின் எண்ணுக்கு அழைத்தாள்...
அவள் அனு ஆகிற்றே எடுக்க மாட்டாளே... அவள் தான் காதல் பாடம் போர்வைக்குள் குடி இருந்து கண்மணியின் கொழுந்தனார் படிப்பிக்க கண்மணியின் உடன் பிறப்பு படித்து கொண்டு இருக்கிறாளே....அவள் எப்படி இந்த இரவில் தன் அக்காவே ஆனாலும் போன் எடுப்பாள்...
இந்த நேரம் என்ன அவ போன் பிஸி யா இருக்கு என்று அந்த நொடி யோசித்தாலும் அவளால் யோசிக்க முடியாத படி கையில் தண்ணீர் பாட்டிலோடு வந்தவர் , "இந்த அம்மா கொண்டு போ "...என இரவு எங்கேனும் தண்ணீர் தாகம் எடுத்தாலோ என தன் மருமகள் கையில் அன்னம் திணிக்க அதற்கு மேல் இங்கே நிற்க முடியாது என்பதை உணர்ந்தவள் தன் கையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை இறுக்க பிடித்து கொண்டு பள்ளி அறைக்குள் பிரவேசிக்க இருக்கிறாள்...ஆம் சற்று நேரத்தில் தங்களுக்கு நடக்கும் முதல் இரவுக்கு பால் எடுத்து கொண்டு போகும் சடங்கு பதில் அது எல்லாம் மலையேறி போய் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டு போகிறாள் கண்மணி...
இருந்தும் அவள் மனச்சாட்சி அவன் தவறு செய்தானே அதற்கு தானே நாம செஞ்சோம் என அவளுக்கு துணை போக அவளுக்குள் தைரியம் வர பெற்று உள்ளே நுழைய அறை முழுவதும் இருட்டாகி இருக்க தன் கையில் இருக்கும் மொபைலை ஆன் செய்து கொண்டே கண்மணி உள்ளே நுழைய அவள் நுழைந்ததும் பின்னால் இருந்து கதவு தாள் இடப்பட்டது...
அந்த சத்தம் கேட்டு திரும்பிய அவள் முன் அந்த மொபைல் வெளிச்சத்தில் ஆஜானுபாகுவான உயரத்தில் அங்கே அவன் அவள் கணவன்...ஒரு கையில் பாட்டிலையும் மறு கையில் போனையும் பிடித்து இருந்தவள், திரும்பி அவனை ஏறிட்டு பார்க்கும் தாமதத்தில் அவளை பிடித்து தன்னருகே இழுத்து இருந்தான் வெற்றி...தன் மேலேயே மோதியவளை ஒரு கையால் தன்னோடு சேர்த்து இருக்க அவளின் கையில் உள்ள போனை பிடிங்கி அங்கே இருந்த டேபிளில் எறிந்தான் அது மிக சரியாக அங்கே போய் விழுந்தது...மறுகையில் இருக்கும் பாட்டிலையும் பிடுங்கி டேபிளில் எறிந்தான்...யார் செய்த புண்ணியமோ கீழே விழுந்தாலும் பாட்டில் திறக்காமல் அமைதியாக படுத்து உறங்கி கொண்டது...
"நான் கூட வரமாட்டேன் னு நெனைச்சேன்...பரவாயில்ல என் பொண்டாட்டிக்கு தைரியம் தான்".... என கூறி கொண்டே, அவளின் இடையை பிடித்து அழுத்தம் கொடுக்க அவளது நிலையை சொல்லி மாளாது...ஆம் இவன் என்ன செய்கிறான் என்றே புலப்படாமல் அவளோ இருட்டில் திருத்திருவென தன் முட்டை கண்ணை விரித்து முழிப்பது அவன் உணரவில்லை என்றாலும் அவனால் அவளின் இதயம் துடிக்கும் ஓசையை துல்லியமாக உணர முடிந்தது....
அவனால் ஏன் என்று சொல்ல முடியாத இனிய படபடப்பு அவள் நெஞ்சில் குடியேற அவன் கைகள் அவளின் இடையில் அழுத்தத்தை கூட்டியது...
அவள் விலக முயற்சி செய்ய அவளால் முடியாமல் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து அவள் தன்னை விட்டு ஒரு அடி கூட நீங்க முடியாமல் அவன் அவளை இறுக்கி இருக்க அவளோ , "என்னை விடு"... என்ற குரல் அவளுக்கே கேட்கவில்லை...ஆனால் அவனுக்கு கேட்டு விட்டது...அவனுக்கு தான் அவளை விடுவதாக உத்தேசம் அவனுக்கு இல்லையே...சண்டை போட தான் அவளை பிடித்து வைத்து இருந்தான்...ஆனால் அவளின் அருகாமையும் அந்த இரவின் இருட்டும் கெஞ்சலே ஆனாலும் மனைவியின் கொஞ்சலாக அவனுக்கு மட்டும் கேக்க...தன் மனைவி முதன் முறையாக தன்னிடம் குரல் இறங்கி பேசும் போது அவனுக்கு மீண்டும் அவளிடம் முன்னேற தான் தோன்றியது...
ஆம் அந்த இருட்டும் அவன் நெருக்கமும் அவளுக்கு பயத்தை கொடுத்தது என்றே கூற வேண்டும் தன்னை அவன் ஏதோ செய்ய போகிறான் என்றே அவள் நினைத்து பயந்து இருக்க , அவனுக்கோ பயம் அவளது இயல்பு இது இல்லை என அறிந்தாலும் அவளின் நடுக்கத்தை அவனின் கை உணர தொடங்க அவனுக்குள் மேலும் முன்னேறினால் என்னவென்று தோன்ற தொடங்கி விட்டது...அதை செயல் படுத்தி பார்க்கவும் முடிவு செய்து விட்டான்..
கண்மணியால் மூச்சு விட கூட முடியாத படி அவளை மேலும் இறுக்கியவன் அவளின் செவியில்," உப்பு டீ குடிக்க வெச்ச உன்னை என்ன செய்யலாம்"....என அவளின் செவி மடலை தீண்டி கொண்டே கேக்க...அதுக்கு தான் அப்போவே முடிஞ்சதே என அவள் மனசாட்சி தேவை இல்லாமல் கூற அவளுக்கும் அவனிடம் அதற்கு தான் மாட்டி இருக்கிறோம் என தெரிந்தாலும் அந்த சமயம் அவளால் அவனிடம் சண்டை போட முடியவில்லை... எப்போதும் போல் வாயாட முடியவில்லை... அவனின் அருகாமை அவளை ஏதோ செய்தது... தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைந்து நிற்க அப்படியே சிலை போல வாய் பேசாமல் நின்று கொண்டு இருந்தாள்...
அவளின் செவி மடலின் சூட்டை அவன் உதடுகள் உணர...அவனின் நெருக்கம் அவளுக்குள் புரியாத இன்ப அவஸ்தையை கொடுத்தாலும் அவனின் மூளை மேலும் முன்னேற துடிக்க நேற்று இன்றைய எதிர்பாரா முத்தமும் அவனது மூளையை கலங்கடிக்க , ஒரு கையால் அவளை இறுக்கி மற்றொரு கையால் அவளது பஞ்சு போன்ற மிருதுவான மூடியை அளந்தான்...
அவளுக்கும் உள்ளுக்குள் தவிப்புகள் இருந்தாலும் கண்களை மூடி அவள் அவனது தொடுகையில் கூசி சிலிர்க்க அப்போது அவளுக்கு தங்கபுஷ்பத்தின் முகம் வந்து போனது அப்போது அந்த இருட்டில் விருட்டென்று கண்களை திறந்த கண்மணிக்கு அவனிடம் தான் கேக்க வேண்டியது கேக்க வேண்டுமே...அதும் அவளது மூளையை குடைய , இதற்கு தானே நான் அவனை தண்டித்தேன் என நினைவு வர வேகமாக அவனிடம் இருந்து தன்னை விடுவிக்கும் பொருட்டு திமிறி கொண்டே, "என்னை விடு உனக்கு தான் யாரோ இருக்காங்களே உன் வண்டியில் கூட்டிட்டு போறதுக்கு ....ஊர் சுத்த ஒரு ஆள்...இப்படி கட்டி பிடிச்சு நிற்க, அந்த சமயம் பார்த்து வெக்கம் வந்தாலும் முத்தம் கொடுக்க நானா என்னை விடு".. என்று அவள் திமிர...
திமிரும் போது அவளின் தீண்டப்படாத பாகங்கள் எல்லாம் அவன் உடலில் அங்கே இங்கே என மோத அது வேறு அவனுக்கு அவஸ்தையை கூட்டினாலும் அது ஒன்றும் அவன் மூளைக்கு எட்ட வில்லை...அவனுக்கு எல்லாம் அவள் கூறியது தான் அவனுக்குள் ஓடி கொண்டு இருந்தது...அவள் கூறியதை எல்லாம் ரீவைண்ட் செய்து பார்க்க அவனுக்கு ஒன்று தான் விளங்கியது...ஆக மேடம் க்கு பொறாமை உணர்வு வந்துடுச்சு என அவனுக்கு தோன்றும் போதே அவனுக்கு அத்தனை நேரம் அவள் மேல் இருந்த கோபம் இப்போது இல்லை..பனியில் விழுந்த சூரியன் போல பாகு போல அவன் கைகள் அவள் மேனியில் உருகியது.....மாறாக ஏதோ ஒன்று அவனை தாக்கியதும் உண்மை.....
ஆம் அன்று அவள் கடலில் விளையாடும் போது தன் மனதில் எத்தனை உரிமை போராட்டம் நடந்ததோ அதே போல அவளுக்கும் இன்று என் மீது வந்து இருக்கு என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது...அன்று முதல் தான் அவன் அவளை வம்பு இழுப்பதை தவிர்த்து வந்தான்...திமிராக பதில் அளித்தாலும் அன்று தன் மனதில் இருப்பதை தான் வெளிப்படுத்தினான்...அன்றைய தினம் அவன் உள்ளும் மாற்றம் நிகழ்ந்தது என்னவோ உண்மை ...இன்னும் சற்று நேரம் அவள் அருகே இருந்தால் அவளை தூக்கி கொண்டு சென்றாலும் சென்று விடுவோம் என நினைத்து தான் அவன் வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்...அவள் கூட பிரகாஷ் பற்றி கூறவும் அவன் அவள் கூறுவதை மறுத்து தன் உரிமையை அங்கு நிலை நாட்டி விட்டே சென்றான்...
அன்று அவன் வேலையில் சேர போகும் அன்று அவனுக்கு அவளை காண வேண்டும் போல தோன்ற ஆனால் அவனாக அவளிடம் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த ஏதோ தடை செய்ய எதிர்பாராத விதமாக அவளே வந்து இருந்தாள்...அவன் தான் வெளிப்படுத்த முயற்சிக்கவே இல்லையே... பிறகு எப்படி அவனால் எதிர்பார்க்க முடியும்...இருந்தும் அன்றைய தினம் அவள் வந்து இருந்தாள்...
அவளை கண்டது உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தாலும் வெளியே முறுக்கி கொண்டு தான் இருந்தான்...மஞ்ச கயிறு மேஜிக் பெண்களுக்கு மட்டும் தான் வேலை செய்யுமா ஆண்களுக்கு வேலை செய்யாதா ஆம் செய்யும் என இங்கே நிரூபிக்கிறான் நம் வெற்றி... அந்த அதிரடிக்காரனை கண்மணி சாய்த்து விட்டாள் என்றே கூற வேண்டும்...
அதும் முதல் பார்வையிலே இவன் ஒரு திருட்டு பூனையாக இருந்தான் என்றால் யாருக்காவது நம்ப தோன்றுமா அது தான் உண்மை அதும் அவளை முதன் முதலாக தலை முதல் கால் வரை பார்த்தானோ மனதுக்குள் அன்றே அவளின் முகம் ஒட்டி விட்டது...ஆனால் அவள் திமிர் பேசவும் தான் அவனும் திமிராக பதில் அளித்து விட்டு வந்துவிட்டான்... அதிலும் அவன் பிடிக்கவில்லை என்று தான் கூறவேண்டும் என அவன் நினைத்து இருக்க அவனின் உதடு அந்நேரம் பார்த்து அவனின் மனதில் இருப்பதை அழகாக வெளிப்படுத்தியது...அவளை பிடித்து இருக்கிறது என்று... அன்று தான் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தோம் என்று நினைத்தாலும் , அன்று கயவர்களால் அவள் துரத்தப்பட்டு அவன் கையால் அவள் காப்பாற்ற படும் போது மயக்கத்தில் அவள் முகத்தை பார்த்து தான் வாழ்ந்தால் இவளுடன் தான் வாழ வேண்டும் என தோன்றியது...
திருமணம் ஆனாலும் அவள் விருப்பம் இல்லாமல் மேற்கொண்டு முன்னேற கூடாது என்று தன் மனதில் எழுந்த உணர்வுகளை உள்ளே புதைத்து வைத்து இருந்தான்...வெளியே சொன்னால் இவள் நர்த்தனம் ஆடி விடுவாளே... ஏதாவது ஒரு சிறு அறிகுறி அவளிடம் இருந்து வெளிப்படட்டும் என்றே அவன் காத்து இருக்க அன்று கடற்கரை யில் இருவரும் உரையாடி கொள்ளும் போது அவன் கூறியதை கேட்டு அவள் ஊமையாக இருப்பதை பார்த்தும் அவள் கன்னம் சிவப்பதை பார்த்தும் அங்கே நான் மட்டுமே இதை காண வேண்டும் அனுபவிக்க வேண்டும் என கூறி விட்டு வந்துவிட்டான்...அதும் தன் உள்ளத்தில் இருந்தே அதை வெளிப்படுத்தினான்...இப்படியெல்லாம் மனக்கோட்டை அவன் கட்டி இருந்தாலும் அவளிடம் திமிராகவே இருந்தான்...
ஆனாலும் தான் நினைப்பது எல்லாம் சரி தானா என அவளிடம் சோதித்து பார்க்க மனம் விரும்பியது...என் மனதில் எழுந்த உணர்வு குவியல் எல்லாம் ஒன்று தானா அது சரி தானா ...அவளுக்கும் அது போல ஏதாவது தன்னிடம் ஏற்பட்டு உள்ளதா என சோதித்து பார்க்க மனம் விரும்பியது...
