நேசம் 32
நேசம் : 32
கண்மணிக்கு இப்போது என்ன தான் பிரச்சனை என அவளுக்கே தெரியவில்லை... அவன் தன்னை அழைத்து செல்ல வில்லை என்றா இல்லை வேறு ஒரு பெண்ணை அழைத்து செல்வதை கண்டா இல்லை அவள் அறியாள்...ஏதோ ஒன்று அவளை தாக்கியது...உனக்கு தான் அவனை பிடிக்கலை ல என மனசாட்சி குத்தினாலும் அது எப்படி அவன் செய்யலாம் என்றே வாதிட்டு கொண்டு இருந்தாள்....இதுவும் ஒரு வகை காதலின் அறிகுறியோ தனக்கு சொந்தமான பொருள் தனக்கு வேண்டாம் என்றாலும் வேறு யாரும் உபயோகிப்பதை பொறுத்து கொள்ள முடியாது அல்லவா அது போல அவனை பிடிக்கவில்லை என இவள் கூறிக்கொண்டு திரிந்தாலும் அவனை வேறு ஒரு பெண்ணோடு அவளால் இணைத்து பார்க்க முடியவில்லை...கண் மூடினால் அவளுக்கு அவளுடன் அவன் மட்டுமே தெரிகிறான்...வேறு யாரும் தெரிய கூடாது என்ற கோபமும் வருகிறது இதற்கு எல்லாம் பதில் என்னவோ...
தனது வேலை எல்லாம் முடிந்து வீட்டுக்கு வர அங்கே அவனின் அம்மா டிவி பார்த்து கொண்டு இருந்தார்...மணியோ இவனை கண்டதும் ஓடி வந்தது... கண்கள் அவளை தான் தேடியது...அவளை காணாமல் சுற்றியும் முற்றியும் பார்த்து கொண்டே அவளை காணாததாலும் வேலை முடிந்து வந்தவனுக்கு ஒரே அலுப்பாகவும் இருக்க , "அம்மா டீ குடு மா "...என கேட்டு அமர அவன் அதற்குள் மடியில் ஓடி வந்து தாவியது மணி...அவனும் மணியின் செவியில் , "அவ எங்கே டா"... என்று கேக்க அதுவோ அறையை காட்டிக்கொண்டே குரைக்க வெற்றியும் மணியின் முதுகை மிருதுவாக தடவி கொடுத்து கொண்டு இருந்தான்...
அன்னமோ மருமகள் முகம் வந்தது முதல் சரி இல்லை என்பதை உணர்ந்தவர் தன் மகனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், " கண்மணி இங்கே வா மா "...என்று உரக்க அழைத்தார்...
கண்மணியோ அவர் அழைத்த மறுநிமிடம் வர அவனை கண்டதும் வண்டியில் இருவரும் சென்றது தான் நியாபகத்தில் வர அவனை ஏறிட்டு பார்க்காமல் அன்னத்தை பார்க்க , "மா வெற்றி க்கு ஒரு டீ போடு மா கேக்கிறான் "...என்று கூற...அவனோ அவள் பார்ப்பாளா மாட்டாளா என நாயை கொஞ்சி கொண்டே அவளை ஏறிட அவள் எங்கே கவனித்தாள் தானே...
வெற்றியோ மனதுக்குள் இவளுக்கு இது எல்லாம் தெரியுமா என்ற கேள்வியோடு அவளை பார்க்கும் முன் அவள் சென்று விட்டாள்...
அவன் மீது முதலிலே கடுப்பில் இருப்பவளுக்கு அவனை என்ன செய்யலாம் என கடுப்பில் இருப்பவளுக்கு டீ வைக்க சொல்லி அருமையான ஐடியா கொடுத்து இருக்கும் தன் மாமியாரை மனதுக்குள் பாராட்டி அடுக்களைக்குள் சென்று அங்கே மூன்று கப் டீ தயாரித்தவள் அவனின் கப்பில் மட்டும் சக்கரை க்கு பதில் உப்பை இட்டு விட்டாள்...
முதலில் டீயை கொண்டு போய் தன் மாமியார், மாமனார்க்கு சிரித்த முகத்தோடு கொண்டு போய் கொடுத்தவள் அதற்குள் உடை மாற்றி வந்தவனுக்கு டீயை கொண்டு வர அவளை பார்க்காமல் மொபைலை பார்த்து கொண்டே டீ யை எடுக்க முகத்தை கவனித்து இருந்தால் அவன் பிழைத்து இருப்பான்...
ஆனால் அங்கே அவனின் அப்பா வேறு நல்ல டீ என மருமகளை புகழ்ந்து மனைவியை கேலி செய்து குடித்து கொண்டு இருக்க அன்னம் வேறு சரவணன் அழைத்தான் என்று மொபைலை எடுத்து நகர்ந்து விட்டார்...தன் தந்தை ஆர்வமாக குடிப்பதை கண்டு அவனுக்கும், "ஓ நல்லா தான் செஞ்சு இருப்பா போல "..என நினைத்து கொண்டே ஒரு ஆர்வத்தில் என்ன இருந்தாலும் தன் மனைவி அல்லவா அந்த டீ கப் யை எடுத்தான்...
வெற்றி எடுத்து வாயில் வைப்பதற்குள் ஒரு போன் வர அவனும் போனில் பேச தொடங்கி விட்டான்... இவளும் இப்போது குடிப்பான் என காத்து இருக்க போனில் அவன் உரையாடுவது வேறு அவளுக்கு பொறுமையை இழக்க செய்ய அதற்குள் வேல்முருகன் நடை பயிற்சி செய்ய வெளியே சென்று விட்டார்...அந்த ஹாலில் யாரும் இல்லை...அவள் மட்டும் காத்து இருக்க போன் முடிந்ததும் அவன் நிமிர்ந்து அவளை பார்க்க அவள் பார்வையை மாற்றி விட்டாள்...இரண்டு முறை வெற்றியை காப்பாற்றிய தெய்வம் மூன்றாவது முறை அவனை சோதித்து விட்டார்...
ஆம் வெற்றி வாயின் அருகே கொண்டு போய் அவளின் கணவனுக்காக பாசமாக தயாரித்த உப்பு கலந்த டீயை சுவைக்க வாயில் வைக்க முடியாத அளவுக்கு அவனின் தர்ம பத்தினி கலந்து இருந்தாள்... ஒரு கப் டீக்கு அரை கப் உப்பு இட்டு இருப்பாள் போலும்...ஒரு வாய் குடித்தவன் மூளைக்குள் நாடி நரம்புகள் எல்லாம் பின்னி பிணைவது போல இருக்க வேகமாக ஓடி சென்றவன் வாஷ் பேசனில் துப்பி முகம் எல்லாம் கழுவினான்..வாந்தி வருவது போல இருக்க குடலே வெளியே வரும் அளவுக்கு இருமி கொண்டு இருந்தான்....அவனுக்கு இனியும் அதன் சுவை இருப்பது போலவே இருக்க மீண்டும் மீண்டும் தன் வாயை கழுவினான்..
அவன் குடித்து விட்டான் என்பதையும் அவனின் முக மாறுதலையும் கண்டவள் அவன் படும் துன்பத்தை மிக மகிழ்ச்சியாக வேடிக்கை பார்த்து, உனக்கு வேற பொண்ணு கேக்குதா என நினைத்து அவனை நோக்கி ஒரு பழி வாங்கிய உணர்வோடு சிரிக்க, முகம் கழுவி அவன் திரும்ப அவளை பார்க்கும் அவள் இருந்தால் தானே ஒரே ஓட்டமாக ஓடி அன்னத்திடம் போய் நின்று கொண்டாள்...அப்போதும் அவன் கையில் சிக்கவில்லை...
அவனோ இது இவள் செய்த வேலை தான் என அவனுக்கு தெளிவாக புரிய, " அடியே செய்யறதை எல்லாம் செய்துட்டு ஓடியா போற எப்படி இருந்தாலும் என்கிட்ட சிக்குவ டி "...என நினைத்து உப்பு கரித்த தன் வாயை தண்ணீர் விட்டு கழுவி கொண்டே இருந்தவன் ...
ஆத்திரம் தாளாமல் முதன் முறையாக, "கண்மணி"... என்று அழைக்க அவளோ காது கேக்காதது போல அன்னத்தோடு நின்று கொண்டு இருந்தாள்... இந்த வீட்டில் முதன் முறையாக அவன் விளிக்க அதை கேட்ட அன்னமோ ஒரு நொடி தன் மகன் தானா அழைத்தது என சந்தோசித்து இதற்கு தானே நான் ஆசை பட்டேன் என நினைத்து மருமகளிடம் செய்கை மூலம் போக சொல்லி விரட்ட அவளோ தன் மாமியார் முன் ஒன்னும் சொல்ல முடியாமல் மெல்ல ஹாலிற்கு வந்தவளை இழுத்து கொண்டு உள்ளே சென்றான்...
இழுத்து சென்றவன் தன் வாயின் உப்பு கரித்த உமிழ் நீரை அவளுக்கு ருசி பார்க்க கொடுத்து விட்டே அவனின் ஆத்திரம் அடங்க அவனின் தீடீர் தாக்குதலில் நிலை இழந்தவள் செவியில், " இன்னிக்கு ந்யட் இந்த ரூம்குள்ள வந்திடாத ...வந்தா நீ முடிஞ்ச"... என்று நேற்று கூறிய அதே வார்த்தைகளை அவளிடம் கூறி விட்டு அவன் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான்... கண்மணி எப்படி அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் என அவள் அறியாள்...வெளியே வந்தவளுக்கு நா வரள வேகமாக தண்ணீரை எடுத்து எடுத்து குடிக்க , வெளியே செல்லும் மகனையும் நோட்டம் விட்டவர் கண்மணியையும் பார்த்து இவங்களுக்கு என்ன ஆச்சு என யோசித்தார்....அவன் கூப்பிட்டு என்ன சொன்னான்...இப்படி இருக்கா அவன் வேற முறைச்சிட்டு போறான்...இதுங்க திருந்தாதுங்க என்று புலம்பி கொண்டே டிவி சீரியலை காண தொடங்கினார் அன்னம்...
இரவு உணவு முடியும் வரை அவன் அவள் புறம் திரும்பாமல் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது போல அமர்ந்து இருந்தான் வெற்றி...இரவு ஆனதும் கண்மணிக்கு நேற்றைய இரவும் இன்றும் அவள் வம்பு வளர்த்து வைத்து இருப்பது நினைவு வர அன்னம் பின்னாலே பசை போல சுற்றி திரிந்தாள்... அவரும் மருமகள் தன் மீது பாச மிகுதியில் தான் தன் பின்னாலே சுற்றி கொண்டு இருக்கிறாளோ என நினைத்த அவரோ , " போ மா போய் தூங்கு".... என்று விரட்ட வேண்டியதாகி போனது...
அங்கே அவன் அவளை ஒரு வழி செய்ய அவளுக்காக காத்து இருந்தான்...அவளுக்கோ தயக்கம் அவன் வேறு அறைக்குள் வர கூடாது என்றல்லவா கூறி இருக்கிறான் என்று தேவை இல்லாத சமயத்தில் நேற்று அவன் கோபத்துடன் கூறியதும் இன்று மாலை கூறியது எல்லாம் இந்த தருணத்தில் நியாபகம் வர போக வேண்டுமா வேணாமா என யோசித்து பார்க்கும் போதே இன்றைய செயல் பூதாகரமாக அவள் கண் முன் வந்து போனது...அதுமட்டுமின்றி அவன் அவளுக்கு அளித்த அந்த முரட்டு முத்தம்....எல்லாம் சேர்ந்து தன் கையை பிசைந்து கொண்டு இருந்தாள் கண்மணி...
நேசம் தொடரும்......
