Share:
Notifications
Clear all

நேசம் 31

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 31

நேசமடி நேசம்

வெற்றியின் வாகனம் நேரே மருத்துவமனைக்கு செல்ல அங்கே அந்த பெண் அமர்ந்து இருந்தாள்..அவளிடம் எப்படி நீ அங்கே சென்றாய் என விசாரிக்க, எப்போதும் செல்லும் அந்த மடத்திற்கு அன்றைய தினம் பார்த்து தன் தாயும் தந்தையும் வெளியே சென்று இருக்க தான் மட்டும் சென்றேன் அப்போது என்னை போல பல இளம் பெண்கள் அங்கே இருந்தனர்...ஒரு பொடி போல எல்லோர் மேலேயும் தூவினர்... நான் அந்த சமயம் அந்த நெடி பிடிக்காமல் மூக்கை மூட பாதி மயக்கம் ஆனேன்...

அங்கே உரையாடி கொண்டு இருப்பவர்களின் பேச்சு சத்தம் பாதி கேட்டது ஆம் அவர்கள் அந்த பெண்களை கடத்த முயற்சி செய்ய இந்த பெண் அந்த சமயம் மயக்கம் தெளிந்து அங்கிருந்து தப்பித்து போக பார்க்க அந்த பெண்ணை பிடித்து ஒரு அறைக்குள் அடைத்து வைத்து விட்டனர்...

இரண்டு நாட்களாக உணவு கொடுக்காமல் அவளை பட்டினி க்கு இட்டு கொலை செய்து அவளின் உறுப்புகளை எடுத்து விற்கலாம் என பிளான் செய்து இருக்க அப்போது தான் நீங்கள் என்னை காப்பாத்துனீங்க என அயர்வாக கூறி முடித்தாள்...

இது எல்லாம் இவன் விசாரித்து கொண்டு இருக்கும் போது டேனியலிடம் இருந்து அழைப்பு வந்தது வேகமாக தன்னை காண வரும் படி அதனால் அவர்களிடம் எப்போதும் வேண்டுமானாலும் விசாரணை நடக்கும் அதற்கு வர வேண்டும் என கூறி விட்டும் தனக்கு தெரியாமல் யார் வந்தாலும் உங்களை காண வந்தாலும் தன்னிடம் தெரிவிக்குமாறு தெரிவித்தான் மற்றும் அந்த பெண்ணின் தாய் மற்றும் தந்தையிடம் இது போல சாமி, பூதம் என கூறி நடக்க வேண்டாம் என அறிவுரை கூறி கிளம்பினான்...

அங்கே டேனியல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்...அவன் வாயை வைத்தே பேட்டி கொடுக்க வைப்பான் என சத்தியமாக எதிர்பார்க்க வில்லை...அதுமட்டுமின்றி அந்த சாமியார் வேறு இவனை நேற்று இரவு சந்தேகப்பட்டு பேச அதே போல அமைச்சரும் இவனை குடைய ஆரம்பித்து விட்டார்...அது தான் வெற்றிக்கும் வேண்டும் ...இதனால் வெற்றியின் மீது கடுங்கோபத்தில் டேனியல் இருக்க அந்த சமயம் வெற்றி அவன் அறைக்குள் வர,  "யாரை கேட்டு நீ அந்த மடத்துக்கு போன".. என்று கேட்டான்...

வெற்றியோ சோம்பல் முறிப்பது போல தன் கையை மேலே உயர்த்தி சோம்பல் முறித்து , "உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லி இருக்கேன் என் கிட்ட கேள்வி கேக்கிற வேலை வெச்சுக்காத னு இப்போ தானே ஆட்டம் தொடங்கி தானே இருக்கு அதுக்குள்ள முழிக்க ஆரம்பிச்சுட்ட இனியும் இருக்கு காத்து இரு..என்னோட எதிரி அவங்க இல்லை...நீ மட்டுமே...".....என்று வெற்றியிடமிருந்து திமிராக பதில் வந்தது...

டேனியலின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவம் ஆட , "வெற்றி "....என்று கத்த, "ஹே நிறுத்து டா பணத்துக்கு வேண்டி தானே அந்த இந்த கேவலமான வேலையை பார்க்கிற...நாட்டுக்கு வேலை பாரு டா னா கண்ட என்று நிறுத்தி நாய்க்கு வேலை பார்த்துட்டு இருக்க...யாருக்கும் தெரியாது னு நீ நெனைச்சுட்டு இருக்க உன் வாயால நீ செஞ்ச தப்பை எல்லாம் நான் சொல்ல வைக்கல என் பேரு வெற்றி இல்லை வரட்டா "...என கூறி வெளியே வந்து விட்டான்...டேனியலோ முகம் கருகி எந்த சைடு போனாலும் பாந்தாடுகிறானே என நினைத்து கொண்டு இருக்கும் போதே அமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது "என்ன யா தம்பி உனக்கு நல்ல போஸ்ட் ல போட்டு அழகு பார்த்தா ...என் கால்லயே கடிக்க வர "..என்று கேட்க

"இல்லை சார் அது வந்து அந்த வெற்றி"... என்று மென்று முழுங்கி கூற ,"எங்கே யா நீ தான் செஞ்சன்னு டிவில போட்டு கத்திட்டு இருக்கான் ...இதுல நீ இப்படி சொல்ற "...என்று கேட்க

"ரொம்ப தொல்லை பண்ணினா அவன் கையில பிடிச்சு வெச்சு இருக்கானே அந்த பொண்ணை கொன்னுடு "...என்று கூலாக கூற அவனோ , "இல்லை சார் இப்போ ஒன்னும் செய்ய முடியாது இப்போ தீடிரென செஞ்சா மாட்டிப்போம்...மீடியா மொத்தம் அந்த பொண்ணு பின்னாடி தான் சார் இருக்கு"... என்று டேனியல் கூறுவதை யோசித்து பார்த்த அமைச்சர் அவன் கூறுவதும் சரி என்று பட , "உனக்கு ஆள் வேணும் னா நம்ம பசங்களை கூப்பிட்டுக்கோ, அவங்க தின்னுட்டு சும்மா தான் இருக்காங்க...எனக்கு டெல்லி வரை போகனும் நான் திரும்பி வர பத்து நாள் ஆகும் அதுக்குள்ள இந்த பிரச்சனை அடங்கி இருக்கனும்"... என்று கூறி விட்டு

"டேனி  அப்போ யார் பிரச்சனை யாக இருக்காங்களோ அவங்களை அழிச்சிடு யா"...... என்று கூறி வைத்து விட்டார் மலர் வேந்தன்...டேனியல் என்ன செய்து வெற்றியை எப்படி அடக்கலாம் என யோசிக்க அவன் கண் முன்னே வந்தது வெற்றியின் மனைவி கண்மணி...

ஆம் புத்தம் புது மலரை தூக்கினால் அவன் கொஞ்சம் அடங்குவான் இல்லையேல் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து அவளை பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கினான் டேனியல்...

இது போல காக்கி உடை அணிந்து நாட்டுக்கு துரோகம் செய்யும் கயவர்கள் அழியும் காலம் எப்போது...பொது மக்களை காக்க வேண்டிய இவர்கள் கயவர்கள் உடன் கூட்டு சேர்ந்து பொது மக்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் இவனை போன்றவர்கள் அழியும் காலம் வருமா...

வெற்றி நேரே நரசிம்மனை காண செல்ல துணைக்கு ஆள் இருந்தாலும் அவர் வேலையை அவரே செய்து பழகியவர் வேறு ஒருவர் துணையோடு நடை பழகி கொண்டு இருந்தார்.." என்ன டா போலீஸ் ஜாய்ண்ட்  பண்ணின அன்னிக்கே வேலையை காட்டிட்ட போல...குட்..இப்படி தான் இருக்கணும் ...டேனியல் முகம் இருண்டு இருக்குமே என கூறி சிரித்து விட்டு...ஏன் டா உன் பொண்டாட்டியை என் கண்ணில காட்ட மாட்டியா"... என்று பட படவென பாராட்டு பத்திரமும் அதே சமயம் ஒரு நக்கல் கேள்வியோடு முடித்தார்...

அவனோ சிரித்து கொண்டே ," உங்க கிட்ட பழகின விஷயம் தான் சார் "...என்று கூற மனைவி என்றதும் இன்று கண்மணி அவனுடைய வாகனத்தில் ஏற்ற மாட்டேன் என்று கூறியதும் அவள் பார்த்த பார்வையும் நேற்று இரவு அவன் ருசித்த அவளது உதடுகள் துடித்து இன்று அவனை கண்களாலேயே கடிக்க தயாராக இருந்த அவளின் முகம் இந்நேரம் நியபாகத்துக்கு வர ஒரு சிறிய இளம் முறுவல் கூட சேர்ந்து , "கூட்டிட்டு வரேன் சார்"... என்று கூறி கொண்டே கம்பீரமாக அவர் முன்னால் பாறை போல நின்றவன் மனைவி என்ற சொல் கேட்டதும் முகத்தில் சிறு நகை தோன்ற அதை அவர் கண்டு விட்டார்..

அவரோ அவனின் முறுவலை கண்டு சிரித்து, " என்ன டா உனக்கு சிரிக்க எல்லாம் சொல்லி கொடுத்தாளா என் பொண்ணு...உனக்கு சிரிக்க எல்லாம் வருதே"...என்று கேலி செய்ய

அவனோ விட்டால் இவர் என்னை வம்பு செய்வார் என நினைத்து வேகமாக பேச்சை மாற்றினான்...

"சார் அவங்க குறி வைப்பதே இளம் வயது சிறு பெண்களை தான் சார் "...என கூற அப்போ ஒன்னு பண்ணு டா ஒரு லேடி போலீஸ் யை கூப்பிட்டுக்கோ...உன்கூட அவங்க எப்போதும் இருக்கட்டும்...அவங்களை வெச்சு எல்லா காலேஜ் ல யும் மானிட்டர் பண்ணுங்க".....என்று கூற அவனுக்கும் அது சரியாக பட்டது...ஏனெனில் அந்த பெண் கூறும் போது கூட காலேஜ் பெண்கள் பலர் அவங்க வலையில் விழுந்து இருக்காங்க என்று கூற அதை எல்லாம் மனதில் வைத்து அவர் கூறியதை ஏற்று சிறிது நேரம் உரையாடி விட்டு சென்றான்..

தங்கபுஷ்பம் ஏட்டு  அவரை தான் தன் தேவைக்கு துணையாக அவரை அழைத்து கூட்டி சென்று கொண்டு இருக்கிறான்...அவனுக்கு ஒரு சந்தேகம் கூட பெண்களை யாரேனும் அவர்கள் வலையில் வீழ்த்துகின்றனரா என..அதுக்காக அவரை மப்டியில் கூட்டி மிக பெரிய கல்லூரி முன் நின்று வைக்க வேண்டி அழைத்து செல்கிறான்....அப்போது தான் ஒரு பேருந்து நிறுத்தத்தில் வியர்வை வழிந்து நின்று கொண்டு இருந்தாள் கண்மணி...

அவள் கண்களுக்கு சூரிய ஒளி வெளிச்சத்தில் எதுவும் தெரியவில்லை என்றாலும் வெற்றியின் வாகனம் மட்டும் மிக சரியாக தெரிந்தது...அதும் அவனும் அவனுடன் ஒரு பெண்ணும்...வேகமாக அந்த பெண்ணை இவள் கண்கள் ஆராய்ந்தது...பெண்களுக்கே உள்ள இயல்பான குணத்தில் தன் கண்ணில் பட்ட ஒரு நொடியில் தங்கபுஷ்பத்தை அளந்து விட்டாள்....அதற்குள் அவளுக்கு அவன் மீது கோபமும் கிளர்த்து கொண்டு எழுந்தது....

   இவன் வண்டியில் ஒரு பெண் பயணிப்பதை பார்த்து கண்மணி,  "காலையில் என்ன பேச்சு பேசின இப்போ ஒரு பொண்ணு கூட ஊரா சுத்தற "...என கடுப்பு ஆனவள் கிடைத்த பஸ்சில் ஏறி விட்டாள்... கூட்ட மிகுதியில் நொந்து நூடுல்ஸ் ஆகி கண்மணி வீட்டுக்கு வர அங்கே அன்னம் மணியை குளிப்பாட்டி துடைத்து கொண்டு இருந்தார்...

கண்மணி வீட்டுக்குள் வந்தவள் அன்னத்தையும் , வேல்முருகனை கண்டவள் அமைதியாகி அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டாள்...அன்னம் காலையில் மகன் செய்த செயல் பிடிக்காமல் தான் இப்படி நடந்து கொள்கிறாளோ என்னவோ பார்த்து கொள்ளலாம் என நினைத்து விட்டார்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top