நேசம் 30
நேசம் : 30
தான் கூறிய வாக்கு தான் அவனை இப்படி செய்ய வைத்தது என்றாலும் இவன் எப்படி எனக்கு முத்தம் கொடுக்கலாம் என முத்தம் கொடுத்து முடிந்தும் எறிந்து கொண்டு இருந்த அவள் இதழ்கள் கேள்வி கேட்க
முதுகு காட்டி படுத்து இருக்கும் அவனை தன் ஆத்திரம் தீர அவன் முதுகில் அடித்தாள் அவனோ எந்த வித எதிர்ப்பையும் வெளிப்படுத்த வில்லை...அவனிடம் இருந்து சீரான மூச்சு காற்று வர அப்போது தான் அவள் உணர்ந்தாள் அவன் உறங்கி விட்டான் என...
யானை தன் தலையில் மண் அள்ளி போட்டு கொள்வது போல அவள் வாயை கொடுத்து அவன் வாயின் ருசியை அறிந்து இப்போது உறக்கம் வாராமல் புலம்பி கொண்டு இருக்கிறாள்...மீண்டும் மீண்டும் அவள் இதழை தொட்டு பார்த்து கொண்டே நடந்தது கனவு தானா இல்லை நினைவா என புரியாமல் கண்களை மூடினாலே அவளுக்கு அவன் செய்தது நிழல் படம் போல குழம்பிய நிலையில் உறங்கியும் போனாள்..
வெற்றி க்கு சத்தியமாக அவளை தொட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை அவள் வம்பு இழுத்து கொண்டே இருக்க அவளை பயப்படுத்த வேண்டும் என்று நினைத்து தான் அவள் இழுத்ததும் அவளின் முகம் அவனின் முகமோடு உரச உரச அவனின் ஹார்மோன்கள் வேலை செய்ய தொடங்க அவள் மென் இதழ்கள் அவளை சுவைக்க வா என அழைப்பு விடுக்க சுவைத்தும் விட்டான்....அதன் பிறகு அவளை விடுவிக்க மனமின்றி தான் அவளை விட்டான்...
அதன் பிறகு அவள் முகத்தை அவனால் ஏறிட முடியவில்லை... மீண்டும் அவனுக்கு அவளின் இதழை ருசி பார்க்கும் அவா எழ அவளிடம் கத்தி விட்டும் அவளை மிரட்டி விட்டும் இனி இந்த அறைக்குள் வராதே என அவளை எச்சரித்து விட்டு படுத்து விட்டான்..
அந்த எச்சரிக்கை அவளுக்கு மட்டும் அல்ல அவனுக்கும் தான் இனி அவள் தன் அருகில் இருந்தால் தான் ஏதாவது ஏடாகூடமாக செய்து விடுவோம் என்ற பயத்தில் தான் அவன் அவ்வாறு கூறியது...
விடியல் யாருக்கும் காத்து இருக்காமல் அழகாக விடிய வெற்றி எழும் போது அவள் அவனருகில் இல்லை...அவனுக்கு ஒரு நிமிடம் பீதி அடைய வேகமாக அவன் அறையின் கதவை திறந்து பார்த்தான்... அங்கே அடுக்களையில் இருந்து அவளின் குரல் கேட்ட பின் தான் அவனுக்கு சமாதானம் ஆகியது...
கண்மணிக்கோ பாவம் அன்னம் காலையில் எழுந்தது முதல் அவர் அடுப்படியில் வேலை செய்வதை கண்ட அவள் நேரமாக எழுந்து குளித்து முடித்து வரும் போது துயில் கொள்ளும் அவனின் முகம் பார்க்க சாந்தமாக உறங்கி கொண்டு இருக்க , அதே சமயம் நேற்றிரவு நடந்த முதல் இதழ் ஒற்றலும் நியாபகத்துக்கு வர வேகமாக அடுக்களைக்குள் சென்றாள்..
அன்னத்திற்கு உதவி செய்து தர போக அங்கே அவரோ மறுத்து வந்தார் இவளும் விடப்படியாக நின்று உதவி செய்ய அன்னத்திற்கு சொல்லவா வேண்டும் வானுக்கும் பூமிக்கும் குதித்தார் என்றே கூற வேண்டும்...
எல்லாம் செய்து வெற்றி தயாராகி வரும் நேரம் அவளும் தயாராகி வர அவளுக்கும் சமயமும் ஆகி இருந்தது ...அவனை அவள் கண்டாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்....அதுமட்டுமின்றி இது நாள் வரை அவள் ஹாஸ்டலும் கல்லூரியும் அருகருகே இருப்பதால் அவளுக்கு பயண நேரம் இல்லமால் இருக்க இப்போ இங்கிருந்து ஒரு மணி நேரம் பயணம் அவளின் கல்லூரியை அடைய நேற்றே அவள் அரக்க பறக்க சென்றாள்...
அதை நினைக்கும் போதே தலை சுற்றி தயார் ஆகி கொண்டு இருக்க இவனும் தயார் ஆகி வர இவர்களை இணைப்பதற்காக தானே அன்னம் இங்கே வந்து இருக்கிறார்...அதன் முதல் படியாக , "வெற்றி நீ போகும் போது கண்மணியையும் கூட்டிட்டு போ டா அவளுக்கு சமயம் ஆச்சு "...என்று கூறினார்..
அவனோ உணவு உண்டு கொண்டு இருந்தவன் அவர் கூறுவதற்கு பதிலே கூறாமல் உணவு உண்ண அந்நேரம் பார்த்து அவள் வந்து அமர்ந்தாள்....
அவனோ அவளை கண்டு கொள்ளாமல் உணவு உண்ண இவளோ மனதுக்குள், "நேத்து ந்யட் பண்றது எல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி சாப்பிடுறீயா "..என மனதுக்குள் அவனை சாட அது அவனுக்கு கேட்டதோ என்னவோ இங்கே வெற்றிக்கு புரை ஏறியது...
அன்னமோ வேகமாக தண்ணீர் எடுத்து கொடுக்க வெற்றி வேகமாக உண்டு விட்டு கிளம்ப போக , கண்மணி உண்டும் உண்ணாமலும் எழுந்தாள்...
இருவரையும் கண்ட அன்னம் , "வெற்றி அவளையும் கூட்டிட்டு போ டா "...என்று மீண்டும் ஒரு முறை கூற
"அம்மா போலீஸ் ஜீப் மா பர்சனல்க்கு யூஸ் பண்ண கூடாது மா...ஒரு டாக்ஸி புக் பன்றேன் அதுல போயிட்டு வர சொல்லுங்க "...என்று கூற
கண்மணி யோ மனதுக்குள் , "ஓ உன் வண்டியில் நான் வந்தா என்ன உன் வண்டி எறிஞ்சுடுமா "...என மனதுக்குள் வைதவள்..," வேணாம் அத்தை நான் பஸ் ல யே போய்க்கறேன் "...என கூறி அவனை ஒரு முறை முறைத்து விட்டு கிளம்பி விட்டாள்..
அவன் வெளியே வரும் போது அவனுக்கான வண்டியை டிரைவர் துடைத்து கொண்டு இருக்க இவன் வருவதை பார்த்ததும் அவர் வண்டியை எடுக்க அவனும் கிளம்பி விட்டான் தனக்கு முன்னால் விறு விறு வேங்கையென ஸ்பீடாக அவனை திட்டி கொண்டே நடந்து கொண்டு இருப்பவளை கடந்து தான் அவனது வாகனம் சென்றது அதை பார்த்து கண்மணி முறைக்க அவனின் கண்ணாடி தெளிவாக அதை படம் பிடித்து காட்டியது....
அவன் கவனித்தாலும் பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டான்... அவன் கூறுவது அவனளவில் சரி தான் அரசாங்க பொருளை தேவை இல்லாமல் தனி நபர் உபயோகிக்க கூடாது என்று தான் அவன் சஸ்பெண்ட்டில் இருந்த போது கூட இந்த வீட்டை அவன் உபயோகிக்க வில்லை...அந்த குணம் கொண்டவன் அதனால் தான் அன்னம் கூறும் போது மறுப்பு தெரிவித்ததும்...இதை எல்லாம் அவர்கள் இருவருக்கும் தெரியாதே..அன்னம் ஒரு புறம் அவனின் மனைவி ஒரு புறம் என வெற்றியை வசை பாடி கொண்டு இருந்தனர்...
ஆனால் அவனின் மனைவி இரவு முதலே அவன் மீது கோபத்தில் இருப்பவள் கண்களுக்கு இன்று காலை நடந்த விஷயமும் ஒரு சேர மனதில் ஏற்றி வைத்து இருப்பவளுக்கு இன்றைய நாளையும் அவன் கணவன் எடுத்து கொள்ள அவனை நினைக்க கூடாது என்று இருப்பவளுக்கு அவனை பற்றி நினைக்காமல் இருக்க முடியாமல் புலம்பி கொண்டு இருப்பவள் கண்களுக்கு வெற்றி ஒரு பெண்ணுடன் அவளை ஏற்ற மாட்டேன் என்று கூறிய அதே ஜீப்பில் ஒரு பெண்ணை ஏற்றி செல்வதை கண்டால் அவளுக்கு எப்படி இருக்கும்...அவள் கண்களில் தீப்பொறி பறக்குமா... இல்லை அந்த தீப்பொறியில் வெற்றியை எரித்து சாம்பல் ஆக்கி விடுவாளா....
நேசம் தொடரும்...
