நேசம் 29
அத்தியாயம் : 29
நேசமடி நேசம்
அந்த பெண்ணை பெற்றோருடன் சேர்த்தி வைத்த பின் அவளுக்கு வேண்டிய முதலுதவி கொடுக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்...நாளை வந்து அவளிடம் விசாரித்து கொள்ளலாம் என நினைத்து இரு காவலரை அவர்கள் பாதுகாப்புக்கு இருத்தி விட்டு அவர்களுக்கு சமாதானம் கூறி விட்டு வீட்டுக்கு செல்ல தயாரானான்...
இப்படி நாள் முழுக்க வெற்றி ஓடி கொண்டு இருக்க அங்கே கண்மணி அவளின் கல்லூரியில் அதும் இப்போது வேறு அவளுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டு இருப்பதால் மதியம் நோயாளிகளை பார்வையிட அமர்ந்து இருக்கிறாள்...
என்ன தான் அவள், வேலையில் கண்ணும் கருத்தாய் இருந்தாலும் அவள் கண்ணில் இருந்து வெற்றி போக மாட்டேன் என்கிறான் ஆம் அவனின் அந்த தோற்றம் அவளை புரட்டி போட்டது என்றே கூறலாம்...
என்ன தான் காக்கி உடை அணிபவனை திருமணம் செய்ய மாட்டேன் என கூறினாலும் அவளின் உடலில் ஒரு போர் வீரனின் ரத்தமும் காக்கி சட்டையின் ஜீனும் கலந்து இருப்பதால் அவளால் அவனை பார்த்து வாயை பிளக்கமால் இருக்க முடியவில்லை...
காலையில் அவன் சென்றதும் கல்லூரிக்கு வந்த அவள் மதியம் ஆகியும் மந்திரித்து விட்ட கோழி போல திரிய அவளின் தோழிகளின் கிண்டல் கேலிக்கும் இரை ஆனாள் அது வேறு விஷயம்...
அவள் வெற்றியுடன் சென்றதில் அவள் தோழிகளுக்கு தங்கள் அறையை விட்டு சென்று விட்டாளே என்ற கவலை இருந்தாலும் இன்னும் இரு மாதத்தில் எல்லோரும் பிரிய தானே போகிறோம் என அவர்கள் மனதை தேற்றி கொண்டனர்..
மாலை அவள் வீட்டுக்கு செல்லும் போதும் அவள் மொத்த குடும்பமும் வீட்டில் இருந்தனர்....இரவு ட்ரையினுக்கு விஜயராஜன் மற்றும் கண்மணியின் அம்மா, அனு செல்ல போவதாக கூறினர்..அவள் செல்லும் போது அன்னம் அவர்களை வற்புறுத்தி கொண்டு இருந்தார்..."இன்னும் இரண்டு நாட்கள் தங்கி இருந்து விட்டு செல்லலாமே "...என கூற விஜயராஜன் அனுவின் படிப்பை காரணம் காட்டி டிக்கெட் புக் செய்து விட்டார்..
அவள் வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் ஆன பின்னும் அவன் வராமல் இருக்க சரியாக விஜயராஜன் குடும்பம் கிளம்ப போகும் அரை மணி நேரம் முன் வந்தான் வெற்றி ...வந்தவன் ஒரு பத்து நிமிடம் பொதுவாக எல்லோரிடமும் உரையாடியவன் அவளை ஒரு பார்வை கூட பார்க்காமல் இருக்க அவள் தான் அவனை பார்த்து கொண்டே இருந்தாள்...
அவன் கண்டுகொள்ளாமல் அவன் அறைக்குள் செல்ல , "கண்மணி போ மா மாப்பிளை க்கு என்ன வேணும்ன்னு கேளு மா"... என ஜானகி அவளை விரட்ட, தன் தாயின் கண் உருட்டலில் அவளும் அவன் பின்னாலே ஓடினாள்...
அங்கே போய் அவன் குளிக்க செல்ல இவள் அமைதியாக கட்டிலில் அமர்ந்தவள்," இப்போது நான் என்ன செய்ய ..அவனுக்கு முதுகா தேய்க்க முடியும் என்னை போய் போ போ என விரட்டி விட்டார்கள்"...என நெனைத்தவள் அங்கே இங்கே என வேடிக்கை பார்க்க தொடங்கி இருந்தாள்...
அப்போது குளித்து இறங்கியவன் போலீஸ் உடல்கட்டை அவளுக்கு காட்டும் விதமாக வெற்று மார்போடு வெளியே வர அவளோ மீண்டும் தன் வாயை திறக்க தயாரானாள்..அவளுக்கோ என்ன நான் காலை முதல் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் என முழிக்க அவனோ அவளது பார்வையை ஏற்றாலும் ஒன்றும் கூறாமல் தயாராக அவளுக்கு கோபம் கிளர்த்து எழ அவனை பார்த்து முறைத்து கொண்டே வெளியே சென்று விட்டாள்..
அவளுக்கு சிறு தாழ்வு மனப்பான்மை தான் அவனை பார்கிறோமே என்று இருந்தாலும் அவளின் அந்த எண்ணத்தையும் அவனின் மேல் கோப விதையாக தூவினாள்...
சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் எல்லோருடன் அமர்ந்து உணவு உண்டு விட்டு விஜயராஜன் குடும்பத்தை ரயில் ஏற்றி விட்டு விட்டு வந்தான் ...சிறிது நேரம் மணியுடன் சமயத்தை போக்கியவன் கொஞ்ச நேரம் கழித்து படுக்கைக்கு சென்றான்... அங்கே அவன் மேல் உள்ள கோபத்தை முகத்தில் சூடி படுத்து இருந்தவளுக்கு அவனிடம் வம்பு இழுக்காமல் இருக்க முடியவில்லை...
அவள் அருகே படுக்கையில் படுத்த அவன் அவள் புறமாய் திரும்ப கண்மணி வேண்டும் என்றே , "இந்த வீட்ல வேற ரூம் இல்லை ...அதுல அத்தை மாமா படுத்து இருக்காங்க ..இல்லாட்டி நான் அங்கே போய் படுத்து இருப்பேன்...உன்னை ஒரே கட்டிலில் ஒரே ரூம் இல் சகிச்சுக்க வேண்டி இருக்காது "...என்று வேண்டும் என்றே அவன் அவள் பார்க்கும் போது எல்லாம் கண்டு கொள்ளாமல் சென்றதற்கு அவன் மேல் வன்மம் கொண்டு வேண்டும் என்றே தான் என்ன பேசுகிறோம் என விளங்காமல் இது போல கூற
அவனோ அவளிடம் மட்டும் மொத்த திமிரையும் குத்தகைக்கு எடுத்தவன் சும்மா இருப்பானா அவள் கூறுவதை கேட்டவனுக்கு அவள் மேல் கோபம் எழ, தன் அருகில் படுத்து கொண்டே முகத்தை மட்டும் திருப்பி வம்பு இழுத்து கொண்டு இருந்தவளை தன் ஒரு கையால் அவள் இடையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து இழுத்து முகத்தோடு முகம் உரசி அவனின் மூச்சு காற்று மிக நெருக்கமாக அவளின் முகத்தில் பட இத்தனை நேரம் பேசிய அவளது இதழை சிறை செய்தான்...
முதலில் என்ன நடக்கிறது என்று புலப்படாமல் அவள் அவனிடம் இருந்து விலக விலக முடியாத படி அவள் இதழை சிறை செய்ய அவனின் அழுத்தமான முத்தம் அவளின் கண்களை சொருக வைக்க அவனும் அவளின் இதழின் ருசி அவனை கட்டி இழுக்க கோபம் என்ற போர்வைக்குள் அவளின் இதழில் தன் தேடலை தொடங்கி மிக நெருக்கமாக சிறை செய்து விட்டே அவளை விட்டான்...அவளுக்கு ஒரு நொடி சீரான மூச்சு காற்று தடை பட பின் மூச்சை உள் இழுத்து விட்ட பின் தான் அவளுக்கு நிலைமை சரி ஆகியது...என்னை இவன் என்ன செய்தான் என்ற கோபம் எழ,
அவள் அவனை பார்த்து , "பொறுக்கி "...என தொடங்கும் முன் வெற்றி, " இதையும் சகிச்சிட்டு இரு....நாளையில் இருந்து இந்த ரூம் குள்ள வந்த நீ முடிஞ்ச ...சகிச்சிட்டு இருக்கறலாம் "...என முணுமுணுத்து விட்டு அவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்...
