நேசம் 28
நேசம் : 28
பணம் சம்பாதிக்க திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தவன் தான் இந்த கண்ணியப்பன்..வேலை கிடைக்காமல் இருக்க பசி வயிற்றை தாக்க அருகில் இருக்கும் ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தவன் அங்கே பெரியோர்களால் நடக்கும் சொற்பொழிவை எல்லாம் கேட்டு எல்லாம் மனதில் வைத்தவன் நாளைடவில் மக்களுக்கு அதை போதிக்க அவன் வலையில் பலரும் விழுந்தனர்...
விழுந்தவர்களுக்கு தெரியவில்லை தாம் விழுந்தது சாக்கடை என்று எந்த கடவுளும் இதை செய் அதை செய் என நம்மை போல கோரிக்கை வைப்பது இல்லை நாம் தான் நீ எனக்கு இதை செய்தால் இதை செய்வேன் என அந்த கடவுளிடமே டீல் பேசும் ஆட்கள் இருக்கும் வேளையில் தெருவுக்கு தெரு புதிய சாமியார் முளைத்து விடுவார்கள் அப்படி முளைத்த கண்ணியப்பன் தான் பின்னாளில் பரமானந்தா ஆகி மக்களை வழி நடத்தி தன்னை கடவுளின் நேரடி தொண்டன் போல பாவித்து சுக வாழ்க்கை வாழ்ந்து வர சிறு பெண்கள் முதல் பெரியவர் வரை அவன் வலையில் விழ இவன் பெரிய ஆள் ஆகி விட்டான்..
சாமியாருக்கு எல்லா பக்கத்தில் இருந்தும் சிறிய புள்ளிகள் முதல் பெரிய இடம் வரை பரிச்சயம் இருந்ததால் இந்த ஐந்து வருடத்தில் ஒரு முடி சூடா மன்னன் ஆக வலம் வந்து கொண்டு இருக்கிறான்...அவன் ஏங்கி தவித்த வாழ்க்கை இப்போது கிடைக்க அவனின் கடைக்கண் பார்வை பெண்கள் மீதும் விழுந்தது அப்படி தான் அவனிடம் செல்லும் பெண்களை எல்லாம் அவன் வலையில் விழ வைத்து இருக்க அவனால் பாதிப்பு அடைந்தவர்கள் ஏராளம் ஆனால் வெளியே யாரும் சொல்வது இல்லை...அப்படி போலி சாமியாரின் பணக்கார அடிமை தான் இந்த அமைச்சர்...ஆனால் அடிமை என்பதை விட இருவரும் கூட்டாளிகள் என்பது பொருத்தம்...இங்கே வரும் பெண்களை வசியம் செய்து சில காலம் அனுபவித்து விட்டு நாடு கடத்துவது, அவர்களை விற்று பணம் சம்பாதித்து கொள்வது என வாழ்க்கையை உல்லாசமாக நடத்தி வருகிறார்கள்..
யார் இந்த மலர் வேந்தன் போஸ்டர் ஒட்டி கொண்டு கட்சியில் கோஷ்டி முழக்கம் போட்டு கொண்டும் அடி தடி, கட்ட பஞ்சாயத்து என முன்னேறி கொண்டு இருந்த மலர் வேந்தன் தீடிரென கண்ணியப்பன் பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் போதும் மலர் வேந்தன் வரும் தேர்தலில் ஜெயிப்பாய் என கூற அவனின் வாக்கு அதே போல எதிர்பாராத விதமாக பலித்து விட்டது...அதே போல சட்ட மன்ற தேர்தல் உறுப்பினர் பதவிக்கு போட்டி இடும் வாய்ப்பு தேடி வர அதை கெட்டியாக பிடித்து கொண்டு கள்ள ஒட்டு சகிதம் ஜெயித்து என்ன தான் அமைச்சர் ஆனாலும் தொட்டில் பழக்கம் விட்டு போகாதே அது தான் அடி தடி கட்ட பஞ்சாயத்து செய்து கொண்டும் தன் பதவியை மிக சரியாக தவறான வழியில் பயன் படுத்தி வருகிறார்...
அதை கண்டுபிடித்த வெற்றியின் வேலையை தான் துக்க முடியாமல் சஸ்பெண்ட் செய்து விட்டு சென்றார்.. வெற்றியின் மனதில் எப்போதும் மலர் வேந்தனை பற்றி நல்ல எண்ணம் இல்லை என்றாலும் அவர் செய்யும் தீங்கை பற்றி தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலா தன் இயலாமையை எண்ணி வெறுத்தாலும் இப்போது அவர் செய்த குற்றங்களின் எண்ணிக்கையில் இந்த சாமியாரும் கூட்டு சேர்ந்து தான் வேலையை செய்து இருக்கிறார்கள் என நரசிம்மன் கூறியது இப்போது நினைவு வர நேரே அந்த மடத்தை நோக்கி விரைந்தது வெற்றியின் ஜீப்...
இப்படி எல்லாம் இருக்கும் போது தான் இன்று வந்த முதியவர் குடும்பமும் வெற்றி விசாரித்ததில் இந்த சாமியாரின் தீவிர விசிறியாக இருந்த அவர் தினமும் தவறாமல் தன் மகளையும் மனைவியையும் அழைத்து சென்று இருக்கிறார்...
அந்த ஆசிரமத்தின் அமைதியும் அந்த சாமியாரின் போதனைகள் எல்லாம் கலந்து அந்த பெண்ணை மயக்கி அந்த பெண் அந்த ஆசிரமத்தில் தங்கி விட்டார் ..பெற்றோர் அழைத்தும் வரவில்லை இதனால் தான் தன் மகளை இழந்து விடுவோமோ என நினைத்து அவர்கள் காவல் நிலையத்தை நாடி உள்ளனர்...
நேரே அந்த ஆசிரமத்துக்கு செல்ல அங்கே பஜனை நடந்து கொண்டு இருந்தது அந்த சத்தம் அந்த தெருவையே கலக்கி கொண்டு இருந்தது...வாயில் காவலர்கள் இவனை தடை செய்ய அடுத்த ஒரு நிமிடத்தில் அவர்கள் வாயில் ரத்தத்துடன் வாயில் கதவை திறந்து இருந்தனர்...வெற்றி தன் கையை முறுக்கிய படியே உள்ளே நுழைய அவன் கண்ணில் தென்பட்ட ரௌத்திரம் பெண்கள் என்ன இவங்களுக்கு கிள்ளு கீரைகளா என நினைத்து உள்ளே செல்ல அங்கே பஜனை நடந்து கொண்டு இருந்தது...
ஒரு புறம் உல்லாச நடனம் கூட நடந்து கொண்டு இருக்க காக்கி சட்டையை கண்டதும் அந்த மடத்தின் நிர்வாகி வந்தார் அவரிடம் அந்த போட்டோ வை காட்டி இந்த பெண் எங்கே என கேட்க ஒரு நொடி அவன் கண்கள் தடுமாறி , "இந்த பொண்ணா இங்கே வந்து தேடுறீங்க யார் இந்த பொண்ணு எனக்கு தெரியாதே இது மரியாதையான ஆட்கள் இருக்கும் தூய இடம் இந்த இடத்தில் நீங்க எல்லாம் வர கூடாது "..என பதறிய விழிகளை மறைத்து கொண்டே பேச தொடங்கியவர் இடைய பதட்டம் ஆகி வெற்றியிடம் குரல் உயர்த்தி பேச அவரின் தடுமாற்றம் அவனுக்கு புரிந்தது அவள் இங்கே தான் இருக்கிறாள் என்று...
அந்த பக்கம் பாட்டு இட்டு கொண்டு நடனம் ஆடி கொண்டு இருக்க அந்த சத்தம் வேறு வெற்றியை வெறி கிளப்பி இருக்க இந்த நிர்வாகி வேறு கத்த தொடங்க எல்லாம் சேர்ந்து கடுப்பானவன் தன் இடுப்பில் தூக்கி இருக்கும் துப்பாக்கியை எடுக்க அந்த நிர்வாகி கலவரம் அடைந்தார்...
அவரின் கலவரத்தை கண்டு நக்கலாக சிரித்தவன் அந்த நிர்வாகியின் தோளில் கை இட, " இதோ பாருங்க எங்க சாமிஜீ தெரிஞ்சா உங்க கதை முடிஞ்சுடும் "...என்று கூறும் முன் துப்பாக்கி யை உயர்த்தி வானத்தில் சுட்டு இருந்தான்...அடுத்த நொடி பாட்டு நடனம் எல்லாம் நின்று அங்கே இருந்த ஒரு 100 பேரும் அமைதியாக வெற்றி தன் குரலை உயர்த்தி இன்னும் இரண்டு நிமிஷம் சமயம் தருவேன் அதுக்குள்ள இங்கே யாராவது நின்னுட்டு இருந்தா மொத்தமா அள்ளி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்”... என கூறி துப்பாக்கியை தூக்கி நிர்வாகியின் முக அளவை அளக்க அவருக்கு வியர்க்க தொடங்க அங்கே நிற்பவர்கள் பீதியில் தெறிக்க தொடங்கினர்...
அடுத்த ஒரு நிமிடத்தில் அந்த அரங்கம் காலி ஆகி இருக்க துப்பாக்கி யை மூக்கில் வைத்து நிர்வாகியின் சுவாசத்தை தடை செய்து இருக்கும் வெற்றி இப்போது அந்த நிர்வாகியிடம் அந்த பொண்ணு எங்கே என்று மீண்டும் கேக்க அந்த விழிகள் பதில் சொன்னது அந்த பெண் இருக்கும் இடம்...
அந்த அறையை நோக்கி விரைய அங்கே உணவின்றி படுக்க வைக்கப்பட்டு இருந்தாள்.. அவளை தொட்ட வெற்றி அவளிடம் அசைவு இல்லை அவள் மயங்கி இருக்கிறாள் என அறிய அவளை இந்த நிலையில் நிறுத்தி இருக்கும் அந்த நிர்வாகியை ஒரு அறைய அந்த ஆள் துப்பாக்கி யை கண்டது முதல் பீதியில் இருந்தவன் அறைந்ததும் தூரே போய் விழ தன் போனை எடுத்து சில எண்களுக்கு அழைத்தான்...அதன் படி ஒரு ஆம்புலன்ஸ் வந்தது அந்த பெண் மற்றும் அவர்களின் பெற்றோர் கள் விரைந்து வந்து இருந்தனர்...
அங்கே ஊடகத்தில் இருந்து சிலர் வந்து இருந்தனர் ...விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்து இருந்தான் டேனியல் ..அவன் வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து இருந்தது... அந்த பெண் ஆம்புலன்ஸ் இல் இருக்க அங்கே அந்த பெண்ணின் பெற்றோர் வெற்றியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்...
சம்பவங்களை எல்லாம் கண்டு கொண்டே வந்த டேனியல் , "யாரை கேட்டு இங்கே வந்த "...என்று அடிக்குரலில் சீர அங்கே ஊடகவியலாளர்களுடன் நிற்கும் சம்பத் வேகமாக ஓடி வந்து, " எப்படி dcp சார் இவங்களை பிடிச்சிங்க.. இது நாள் வரை யாரும் செய்யாத காரியத்தை செய்து இருக்கீங்க “...என்று எல்லாம் மைக் அருகில் வைத்து கொண்டு கேக்க, டேனியல் வேகமாக வாயை மூடி கொண்டான்..
வெற்றியோ , "நானும் ஆக்ட்டிங் கமிஷனர் சாரும் இன்னிக்கு எடுத்த இந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடித்து விட்டோம் ..கம்பலைன்ட் வந்ததால் மட்டுமே நாங்கள் இங்கே வந்தோம் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்த கமிஷனர் க்கு நன்றிகள்"... என எல்லோர் முன்னும் கூற டேனியல் அனைவர் முன்னிலையில் தலை அசைத்து , "தவறு எங்கே நடந்தாலும் காவல்துறை அந்த இடத்தில் இருக்கும் "...என எப்போதும் கூறும் கருத்தை பதிவு செய்து விட்டு மனதுக்குள் வெற்றி யை வைது கொண்டு இருந்தான்...ஆனால் சம்பத் டேனியலிடம் விடாமல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டு இருந்தான்...
அவன் செய்தது போல முதுகில் குத்தி எதிரி ஆட்களுக்கு அவன் மீது சந்தேக புள்ளி வரும் படி செய்து விட்டான் வேற்றி வேல்...
நேசம் தொடரும்...
