நேசம் 27
அத்தியாயம் : 27
நேசமடி நேசம்
எல்லோர் கண்களும் அவன் மீது இருக்க அவனோ அந்த காக்கி சட்டை அணிந்தும் கொஞ்சம் திமிரும் கம்பீரமும் ஒரு சேர்ந்து அவன் கண்ணில் வெளிப்பட எல்லோரிடமும் விடை பெற்று கண்மணியை ஒரு பார்வை பார்க்க அவளோ வேகமாக தன் பார்வையை மாற்றி கொண்டு ரொம்பத்தான் போடா என்று மனதுக்குள் வைய அதை அவளின் முக பாவத்தை வைத்தே கணித்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்...அவன் அலுவலகம் சென்றான் நீண்ட நெடிய மூன்று மாதங்கள் கழிந்து அவன் உள்ளே நுழைகிறான்...
அங்கே பார்க்க விரும்பாத முதல் எதிரியை முதலாக கண்டும் விட்டான் வெற்றி..அது வேறு யாரும் அல்ல டேனியல்...டேனியலும் அவனை எதிர்பார்க்க வில்லை என்றாலும் எதிரே வந்து கொண்டு இருப்பவனிடத்தில் உரையாடும் பொருட்டு,
"என்ன வெற்றி இன்னிக்கு ஜாயின்னா"... என நக்கல் குரலில் உள்ளுக்குள் அவன் எதிரே வந்தது பிடிக்க வில்லை என்றாலும் மரியாதை நிமித்தமாக டேனியல் கேக்க ,
வெற்றியோ , "ஆமாம் இன்னொரு சஸ்பெண்ட் வாங்க வந்து இருக்கேன்..ஏன் நீ வாங்கி தருகிறாயா" ...என்று அதே நக்கல் குரலில் பதில் அளிக்க
"வெற்றி இப்போ நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க னு தெரியுமா நான் இப்போ ஆக்ட்டிங் கமிஷனர்"... என கூற டேனியலுக்கு மிக அருகில் வந்த வெற்றி, "இதோ பாரு நீ ஆக்ட்டிங் (நடிப்பு)மட்டும் தான் அதுனால கொஞ்சம் அடங்கு...உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. உன்னை அடக்க தான் வந்து இருக்கேன் சும்மா கத்திட்டு இப்போவே என்கிட்ட அடி வாங்கி எனக்கு சஸ்பெண்ட் வாங்கி கொடுத்துறாதே"... என திமிராக அதே சமயம் கம்பீரத்தோடு கத்தி கூச்சல் இடாமல் வெளியே பார்ப்பவர்களுக்கு இருவரும் பேசி கொள்வது போல இருக்க... அவனுக்கு நல்ல முறையில் திருப்பி கொடுத்து விட்டு அங்கே ஒருத்தன் நிற்பதை கூட கணக்கில் கொள்ளாமல் தான் அணிந்து இருந்த கூலர்ஸ் யை அவிழ்த்து பின் ஸ்டைலாக அவன் முகத்துக்கு நேரே ஒரு நொடி நின்று அதை மாற்றி விட்டு உள்ளே சென்றான்...திமிராக செல்லும் அவனை டேனியல் முறைத்து பார்த்து உனக்கு எல்லாம் எவ்வளவு பட்டாலும் இவன் திருந்த மாட்டான்...உனக்கு இருக்கு டா என மனதில் வன்மத்தை விதைத்து கொண்டே சென்றான் டேனியல்...
அங்கே அவனின் வரவுக்காக சில நல்ல உள்ளங்களுக்கும் காத்து கொண்டு தான் இருந்தனர்...சிலர் விசாரிக்க ஒரு சிலர் சல்யூட் செய்து அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அதை எல்லாம் சிறு தலையசைப்புடன் ஏற்று கொண்டே உள்ளே சென்றான்..
அங்கே அவன் அறைக்கு சென்றதும் அவனுக்காக சில வேலைகள் காத்து இருக்க அதை எல்லாம் அவன் முடிக்கவே அவனுக்கு மதியமாகி ஆகி விட்டது..அப்போது ஒரு வயதான தம்பதி வெளியில் இருந்து வெற்றியை காண வேண்டும் என்று கூறிக் கொண்டு இருக்க அந்த காவலர்கள் என்ன ஏது என்று விசாரித்து கொண்டு இருந்தனர்...
அவனின் அறைக்குள் இருந்து வெளியே தெரிந்த ஜன்னல் வழியே பார்த்தவன் அவர்களின் பதட்டத்தை கண்டு இன்டெர்க்கோம் இல் அவர்களை உள்ளே விட சொன்னான்...அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த தம்பதியினர் வெற்றியின் முன் அமர்ந்து இருந்தனர்...
அவர்களின் முகம் அத்தனை வேதனையை வாரி பூசி இருந்தது பார்ப்பதற்கு இருவரும் வயதானவர்கள் போல இருந்தனர் ...இருவர் இடத்திலும் சிறு பதட்டம் தென்பட்டது..அதிலும் அந்த வயதான பெண் விடாமல் தன் சேலை தலைப்பால் முகத்தை மூடி அழுது கொண்டே இருந்தார்...அவர்கள் வந்து அமரும் முன் அவன் எல்லாம் கணித்து விட தன் தொண்டையை செருமி கொண்டு சொல்லுங்க என்ன விஷயம் என்னை எதுக்கு பார்க்க வந்து இருக்கீங்க என்று கேட்டான் வெற்றி...
அவர் தன் கையில் வைத்து இருக்கும் கம்பிளைன்ட் பேப்பர் மற்றும் ஒரு புகைப்படத்தை வெற்றியிடம் கொடுத்து, "சார் நீங்க தான் என் பொண்ணை கண்டு பிடிச்சு கொடுக்கணும்...தவம் இருந்து பெத்த பொண்ணு சார் காலேஜ் தான் படிச்சுட்டு இருக்கா நல்லா தான் போய்ட்டு இருந்தது தீடிரென போன வாரம் முதல் அவளை காணோம்.. நாங்க தேடாத இடம் இல்லை எங்கேயும் காணோம்".. என்று எல்லாம் கூற , "உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா".. என வெற்றி கேட்க, "எங்களுக்கு அந்த சாமியார் பரமானந்தா மீது தான் சார் சந்தேகம் அவரு தான் பொண்ணை கடத்தி வெச்சு இருக்காரோ னு சந்தேகம் சார் ...நாங்க அங்கே போனா அவரோட மடத்துக்குள்ள கூட எங்களை விடல சார்...போலீஸ் கம்பலைன்ட் கொடுக்கலாம் னு வந்தா கம்பலைன்ட் படிச்சு பார்த்துட்டு கிழிச்சு போட்டுடாங்க சார் "...என கூறி தழுதழுக்க அவர்கள் கூற வெற்றியோ , "எந்த ஸ்டேஷனில் நீங்க கம்பலைன்ட் கொடுத்தீங்க யார் செஞ்சது"... என்று எல்லாம் விசாரணை செய்து விட்டு, " சரி நான் பார்த்துக்கறேன் ...நீங்க போயிட்டு வாங்க".. என கூறி அனுப்பி வைத்தான்...
நேரே அந்த முதியவர் கூறிய போலீஸ் ஸ்டேஷன் க்கு செல்ல அங்கே இவனை கண்டதும் இவன் அதிரடிக்காரன் என்பதை அறிந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஆரம்பத்திலே சரண்டர் ஆகி விட்டனர்...அந்த போலி சாமியார் பற்றி எந்த கேஸ் வந்தாலும் எடுக்க கூடாது என்று மறைமுகமாக டேனியல் மிரட்டி வைத்து இருப்பதாக கூற எங்கே சென்றாலும் டேனியல் பெயர் அடி படுவதை உணர்ந்த வெற்றி இவனுக்கும் இதில் கூட்டு இருப்பது தெளிவாகி விட்டது...
யார் இந்த பரமானந்தா ...ஒரு போலி சாமியார் ...அவனை பற்றியும் அவனது லீலைகள் பற்றியும் நரசிம்மன் கூறியது நினைவு வந்தது....நரசிம்மனை டிஸ்சார்ஜ் செய்த அன்று முதல் வேலையாக அவரை தொடர்பு கொண்டு அவரை காண சென்றான் வெற்றி..
அங்கே அவரை கண்ட கோலம் அவனுக்கு உள்ளுக்குள் கலங்க, கை, கால்கள் எல்லாம் அடி பட்டு இருக்க எப்படியும் எழ மூன்று மாதம் ஆகும் இந்நிலையில் கூட அவர் வெற்றியை கண்டு கூலாக , "என்ன யங் மேன் வேலைக்கு சேர போற.... இனி ஒருத்தனையும் விடாத"...என்று கூற
அவனோ நீங்க தான் நான் பார்த்து கொள்கிறேன் னு சொன்னீங்களே அது இது தானா என கேட்டான்...அவரோ அதற்கு பதில் அளிக்காமல், " இதோ அந்த கேஸ் ல ரெண்டு பேர் இறந்தாங்களே அது திட்டமிட்ட கொலை...ஆமா நம்ம டிப்பார்ட்மெண்ட் ல இருக்குறவங்க தான் இதுக்கு கூட்டு"... என அவர் ஆரம்பிக்கும் முன்னே அவன் கூறினான் , "இது டேனியல் வேலை தான் "...என அவன் கூற
"ஆமாம் ...அவனுக்கும் இதுல உடந்தை இருக்கு... இது சங்கிலி போல தொடர்பு இருக்கு இதை தோண்ட தோண்ட நிறைய விஷயங்கள் பற்றி நமக்கு கிடைக்குது அதுல முக்கியமான ரெண்டு பேர் பரமானந்தா மற்றும் நீ நினைச்ச மாதிரி மருத்துவ துறை அமைச்சர் மலர் வேந்தன் தான்... மலர் வேந்தன் என்ற பெயரை கேட்டதும் வெற்றியின் கை முஷ்டி இறுகியது...மலர் வேந்தனை பத்தி உனக்கு நான் சொல்லி தெரியணும் னு இல்லை அவரை கைது செய்ய போய் தான் நீ சஸ்பெண்ட் வாங்கின ...
இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆசிரமம் பேர் ல பெண்களை கடத்துதல், அவங்களை வெளிநாட்டு க்கு விற்பனை செய்யறது, இறந்த உடல்களில் இருந்து உடல் பாகங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுத்து விற்பது என செய்து வருகின்றனர்....பொண்ணுங்களை பிடிக்கிறது சாமி னா கடத்துறது அந்த அமைச்சர் என அழகா காய் நகர்த்திட்டு இருக்காங்க...அவங்களை எதிர்க்க யாரும் முன் வரல இப்போ வரைக்கும்...அன்னிக்கு உனக்கு ஏதாவது ஆகிடும் னு தான் நான் ஒதுங்கி போ னு சொன்னேன் அந்த அமைச்சர் உன்னை மிரட்டல் விடுத்தது னால தான் நான் அதை செய்தேன்...
அதுக்கு அப்புறம் அன்னிக்கு 20 இளம் பெண்களை கடத்தி முயற்சி செய்ததும் அவங்க தான் ...கைதான இரண்டு பேரை விசாரணை செஞ்சதில் அவங்க சொல்லிட்டாங்க...அதுக்கு அப்புறம் தான் அந்த ரெண்டு பேர் இறந்து போய் இருக்காங்க... அவங்க இறந்ததும் நான் எப்படி என நேரிடையாக தலை இட்டதும் மலர் வேந்தன் அந்த கேஸை எடுக்க விடாமல் செஞ்சார்... நானும் அவருக்கு தெரியாமல் உன்னை மாதிரி ஆதாரம் தேட தொடங்கிய பின் தான் எனக்கு இப்படி ஆச்சு... அதுக்கு பின் தான் எனக்கும் டேனியல் மீது சந்தேகம் வந்தது அவன் தான் இங்கே நடக்கும் விஷயத்தை அவனிடம் கூறி நமக்கு நேர்மையா இல்லாமல் அவங்களுக்கு நேர்மையா இருக்கான்...என்கிட்டயும் இப்போ வரை நல்லவன் வேஷம் போட்டுட்டு இருக்கான்...எனக்கு அவன் மீது சந்தேகம் னு அவனுக்கு தெரியாது...அதனால் அவனிடம் எதையும் நான் கேட்கவில்லை அதற்கு முன் எனக்கு இப்படி அடி பட்டு விட்டது "...என அவர் கூறினார்...
அவர் கூறுவதை எல்லாம் கேட்டு முடித்தவன் யார் இந்த சாமியார் என கேட்க அவனை பற்றியும் விவரிக்க தொடங்கினார் நரசிம்மன்...
