Share:
Notifications
Clear all

நேசம் 26

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நேசம் : 26

அவனும் தன் தாயின் கையால் உணவு உண்டு தனக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு மணியை அழைத்து கொண்டு செல்ல முற்பட அன்னமோ ,”போ டா போ பின்னாடியே வரேன் இரு ..” என கருவிக் கொண்டார்...

மணியும் வெற்றியும் காவலர் குடி இருப்பில் வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது ...ஆம் வேலையில் சேர்ந்தும் விட்டான்....முதல் வேலையாக தன் குருவான நரசிம்மனை பார்த்தும் விட்டான்...அவர் கூறிய செய்தி அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் அவரின் அறிவுரை படி அமைதி காக்க முடிவு செய்து இருக்கிறான்...

ஒரு நாள் அதிகாலை 6.30 மணிக்கு மணி விடாமல் குரைத்து கொண்டே இருந்தது...வெற்றி அங்கே காவலர் குடி இருப்பில் இருக்கும் ஜிம் க்கு சென்று இருக்க மணி கண்டது அவளை தான் கண்மணி ....அதும் ஒரு பையோடு அந்த குடி இருப்பின் வாயிலில் நின்று கொண்டு அங்கே இருந்த காவலரிடம் சண்டை கட்டி கொண்டு இருந்தாள்...

ஆம் அன்னம் அழைத்து ஒரு முகவரி கொடுத்து அங்கே அவளின் உடையை எல்லாம் கட்டி கொண்டு செல்ல சொன்னார்...இவள் அந்த முகவரியை கண்டதும் கண்மணிக்கு புரிந்து போனது அது அவனின் இடம் என்று அவளோ அன்னத்தின் ஆதர்ச மருமகள் ஆகிற்றே நேரே மறுக்க முடியாமல் தடுமாற அவரோ, "அங்கே போ டா கண்ணு நாங்களும் பின்னாடியே வரோம் "...என தேன் ஒழுக பேச அவளால் தலையை ஆட்டி சரி என கூறுவதை தவிர வேறு அவளுக்கு வேறு வழி தெரியவில்லை..விருப்பமே இல்லாமல் அங்கே சென்றாள்...

அங்கே இருக்கும் பாதுகாவலர் வேறு பாதுகாப்பு கருதி ,"யார் நீங்க..யாரை பார்க்கனும், எதுக்காக பார்க்கனும்"... என்று எல்லாம் அவளை தோண்டி துருவ கண்மணி பொறுமை இழக்க தொடங்கி விட்டாள்...அதில் வேறு மணி இவளை கண்ட சந்தோசத்திலா இல்லை அவளை வெறுப்பேற்றவா என தெரியவில்லை கத்தி கூச்சல் இட எல்லாம் சேர்ந்து இங்கே கண்மணி சலங்கை கட்டாமல் ஆட தொடங்கும் முன் வியர்வை வழிந்த பனியன் மற்றும் ட்ராக் சுய்ட் அணிந்து மலித்த சவரத்தில் கட்டை முறுக்கு மீசையும் போலீஸ் கட் செய்து இப்பொழுது தான் பார்க்க போலீஸ் போலவே காட்சி அளித்த வெற்றி அங்கே வெளியே நடந்து கொண்டு இருக்கும் சலசலப்பை கண்டு கொண்டே வந்தவன்...அவளை கண்டதும் இவள் எங்கே இங்கே அதும் காலையில் என்று யோசித்து கொண்டே வந்தவன்...

" ராமசாமி அவங்களை விடுங்க "...என கை அசைக்க அப்போது அவனை கண்டவள் அவனின் உடையோ முகமோ எதுவும் கருத்தில் கொள்ளவும் இல்லை ஏன் சரியாக பார்க்க கூட இல்லை நேரே அவன் அருகில் வந்தவள் அவனை முறைத்து பார்த்து ,"உனக்கு வர இத்தனை நேரமா நீ போலீஸ் னு ரொம்ப பண்ணாத "......என்று அந்த காவலர் செய்த வேலைக்கு எல்லாம் இவனிடம் அடிக்குரலில் சீர அவனோ அந்த காவலர் முன் ஒன்றும் பேசாமல், " வா போகலாம்"... என கூறி அவளை அழைத்து சென்றான் ....அவனுக்கு இவள் இங்கே வருவதே தெரியாது என்று கூறினால் இவள் நம்புவாளா ..மாட்டாளே...அதனால் அமைதியாக அவளுடன் சென்று கதவை திறந்தான்...

உள்ளே சென்ற அவளின் கண்ணில் பட்டது மணி vs மணி இருவரும் முட்டி கொள்ள எனக்கு முன்னாடியே வந்துட்டியா என்பது போல தான் கண்மணி பார்த்தாள்..

அதுவோ முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து இருந்தாலும் வெற்றியோ, "இங்கே எதுக்கு வந்த"... என்று கேட்க அவளுக்கு இங்கே வர விருப்பம் இல்லை என்றாலும் இந்த நாயின் முன்னே என்னை கேள்வி கேக்கிறாயா என கோபம் கொண்டு, "நீ தானே என் புருசன் இங்கே வராம வேற எங்கே போக சொல்ற".. என்று அந்த வீட்டில் தன்னுடைய உரிமையை நிலைநாட்ட தன் கையில் இருக்கும் பையை எடுத்து அங்கே இருக்கும் சோபாவில் எறிந்து விட்டு அங்கேயே அமர்ந்தாள்...

அவள் கூறியதை பார்த்து மனதுக்குள் அவளுக்கு மகிழ்ச்சி எழாமல் இல்லை....முகத்தில் எதையும் பிரதிபலிக்காமல் இரு நொடி அவளை உற்று நோக்கி விட்டு தன் அறைக்கு செல்ல போகும் முன் , "அக்கா".. என்ற குரல் கொடுத்தாள் அனு...

வெற்றி, கண்மணி இருவரும் வாயிலை நோக்க அங்கே அவர்களின் குடும்பமே ஒரு படையாக வந்து இருந்தனர்...ஆம் இரு வீட்டுக்கு ஆள்கள் படையாக வந்து இருந்தனர்...வயதான விஜயராஜன் முதல் உடல் சரி ஆகி வரும் ஜானகி வரை வந்து இருந்தார்...இவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக எதிர்பார்க்க வில்லை என கண்மணி மற்றும் வெற்றியின் முகமே கூறியது...

அன்னம் தான் மகள் முதன் முறையாக தனியாக குடித்தனம் நடத்த போகிறாள் நீங்க இல்லைனா எப்படி என அழைத்து வந்து இருந்தார்...அவருக்கு ஒரு பயம் மகன் எங்கே நாயை இழுத்து கொண்டு சென்று விடுவானோ என்று அதுமட்டுமின்றி கண்மணி வீட்டு ஆட்களை கண்டால் கண்மணியும் கொஞ்சம் அமைதி ஆவாளே என்று தான் ...இருவரையும் சுற்றி ஒரு வேலி கட்ட முடிவு செய்து விட்டார்...

"என்ன கண்மணி மாப்பிளை நிக்குறாரு நீ உக்கார்ந்து இருக்கே போய் மாப்பிள்ளைக்கு தேவையானதை கவனி"... என தாத்தாவும், ஜானிகியும் கூற எல்லோரையும் ஒரே நேரத்தில்  பார்க்கவும் கண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாக எழுந்து வெற்றியின் அருகில் போய் நின்று கொண்டாள்...

அதன் பின் நடந்தது ஒன்றும் கண்மணிக்கு நினைவு இல்லை அன்னம் கண்மணியை அழைத்து பால் காய்ச்ச கொண்டு போக வேல் முருகனோ வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல், "ஹே இது கவர்மெண்ட் வீடு டி உன் பையன் ஒன்னும் கட்டல"... என்று கூற விஜயராஜன் முன் எதுவும் பேசமுடியாமல், "அது எல்லாம் நாங்க பார்த்துக்கறோம் ங்க "....என்று கண்களை உருட்டி கூற அவரோ அதற்கு பின் அன்னத்தை பார்க்க வில்லை... உணவு சமைத்து எல்லோருக்கும் பரிமாற அனுவும் கூட மாட தன் வருங்கால மாமியாருக்கு உதவி செய்ய அவருக்கு அனுவை பிடித்து விட்டது...ஆனால் அனுவுக்கு சரவணன் மட்டும் வரவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் தன் அக்கா பின்னாடியே சுற்றி கொண்டு இருந்தாள்...ஜானகிக்கு தன் மகளை அவரின் சொந்த மகள் போல பாவிக்கும் அன்னத்தை கண்டு அவருக்கு உச்சி குளிர்ந்து தான் போனது...

வெற்றியும் சிறிது நேரம் விஜயராஜன் மற்றும் ஜானகி, தன் தந்தையுடன் உரையாடி விட்டு ரெடி ஆக சென்றான்...

அடுத்த அரைமணி நேரத்தில் ரெடி ஆகி வந்தவனை மொத்த குடும்பமே அதிசயமாக பார்த்தது...அதிலும் காக்கி பிடிக்காத கண்மணி கூட தன் கணவனை சைட் அடித்தால் என்றும் இமைக்காமல் பார்த்தால் என்றும் இந்த இடத்தில் பதிவு செய்தே ஆக வேண்டும்...

ஆம் படிய தலை வாரி ,முறுக்கு மீசையை முறுக்கி தன் புஜங்கள் இறுகி தெரியும் அளவுக்கு அவன் அணிந்து இருந்த அந்த காக்கி சட்டை அவனுக்கு மிக பொருத்தமாக இருக்க காக்கி இட்டாலே கம்பீரம் வந்து விடும் போல.. ஆம் தயார் ஆகி விட்டான் மிக கம்பீரமாக வெற்றி வேல் DCP(டெபுட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ்)...எதிரிகளை சூறையாட வீறுகொண்ட வேங்கையாக கிளம்பி விட்டான்....

நேசம் தொடரும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top