நேசம் 25
அத்தியாயம் : 25
நேசமடி நேசம்
சரவணன் தினமும் பேசி பேசி அனுவை கரைத்து வருகிறான்...அவளுக்கும் அவனிடத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் அவன் தினமும் தரும் அன்பு தொல்லைக்காகக் ஏங்கியும் அதை அவனிடம் வெளிப்படுத்தாமலும் திரிந்து வந்தவள் தீடிரென ஒரு பத்து நாட்களாக முறுக்கி கொள்கிறாள்...
அவனும் கேட்டு கேட்டு அலுத்து போய், "சொல்லு அனு மா ..சொன்னா தானே புரியும் "...என கேக்க தினமும் அவள் சிலுப்பி கொண்டு திரிவது பிடிக்காமல் வருத்தத்துடன் கேட்க ...அது அவளை தாக்கியதோ என்னவோ தன் மென் குரலில் , "அத்தான் சென்னை ல தான இருக்காங்க னு சொன்னீங்க ...ஏன் இதுவரை அக்காவை போய் பார்க்கல ...அவளும் அத்தானை பத்தி பேச்சு எடுத்தால் ஏனோ தானோ னு பதில் சொல்றா..அவங்க ரெண்டு பேர் இடையில் ஏதாவது சண்டையா "...என தன் மனதில் தோன்றிய வருத்தத்தை வெளிப்படுத்த தெரியாமல் அவனிடம் வெளிப்படுத்த சரவணனுக்கு விளங்கியது...
தன் அண்ணன், அண்ணியை பற்றிய விஷயம் அவளை சந்தேகம் கொள்ள வைத்து இருக்கிறது என்று ஆனாலும் தன் அண்ணன் ஆகிற்றே விட்டு கொடுக்க முடியாமல், " அவன் அங்கே கொஞ்சம் பிஸி மா ...அதான் அண்ணியை பார்க்க போகல "...என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்க்க எங்கே கண்மணியின் தங்கை அனு விட்டால் தானே , "ஏன் அத்தான் க்கு பிளாட் இருக்குல்ல அங்கே தங்க வைக்கலாம்ல இனியும் ஏன் என் அக்கா ஹாஸ்டல்ல தங்கி இருக்கணும்"... என மீண்டும் அவனை துளைத்து எடுக்க,
சரவணனோ நொந்து போய் விட்டான் என்றே கூற வேண்டும் தன் காதலியுடன் காதல் மொழி உரையாடலாம் என இவன் காத்து இருக்க அவள் வேறு டாபிக்கை எடுத்ததும் இல்லாமல் இவனிடம் பத்து நாட்களாக பாரா முகமாக திரிவதை தான் அவனுக்கு பொறுத்து கொள்ள முடியவில்லை...
சிறு பெண் என்றாலும் தன் அக்காவின் மீதும் அக்காவின் வாழ்க்கை மீது வைத்து இருக்கும் பாசத்தை உணர்ந்த சரவணன் அவளை நினைத்து மெச்சி தன்னை போல தான் அவளும் குடும்பத்தின் மீது பாசமாக இருக்கும் அவளின் மனநிலையை எண்ணி மகிழ்ச்சி அடைந்து அவளிடம் தான் பார்த்து கொள்வதாக கூறி சமாதானம் பேசினான்...
அப்போது தான் அவளும் மனதில் உள்ள பாரம் இறங்கிய போல உணர்ந்து பழைய படி அவனிடம் உரையாட அவனோ அவளை கிண்டல் செய்யும் விதத்தில் , "ஏன் டி உன்னை கல்யாணம் பண்ணனும் னா என் அண்ணனுக்கு குழந்தை பொறக்கனும் போல"... என கூறி சிரிக்க அவளும் அவன் கூற வந்ததன் அர்த்தம் புரிந்து சிரித்தாள்...
அவளோடு சற்று நேரம் உரையாடி முடித்தவன் நேரே அன்னத்திற்கு அழைக்க அவரோ விடாமல் அடித்து கொண்டு இருக்கும் போனை எடுக்க கூட சமயம் இல்லமால் மணியை வறுத்து எடுத்து கொண்டு இருந்தார்...
"என்ன நெனைச்சுட்டு இருக்க நீ சாப்பிடாம இருக்க என்ன அவன் வந்தா தான் சாப்பிடுவியா அவனை பார்க்காமல் சாப்பிட மாட்டியோ ...அவன் தான் சிலுப்பிட்டு போய்ட்டான் ல ...அதுக்கு நீ ஏன் பத்து நாளா மூஞ்சியை தூக்கி வெச்சிட்டு உக்கார்ந்து இருக்க..அவனுக்கு தான் யாரு மேலையும் அக்கறை இல்லை...உன் மேல இருக்கா இல்லை எங்க மேல இருக்கா...
இவ்வளவு ஏன் கட்டின பொண்டாட்டி அங்கே இருக்காளே அவளை போய் பார்க்கணும் னு அவனுக்கு தோணுச்சா"... என அவர் நாயை பார்த்து கத்த
பேப்பர் படித்து கொண்டே நடக்கும் கூத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த வேல் முருகன், " நாய் பதில் சொல்ல போற மாதிரி ல அதுகிட்ட சண்டைக்கு போய்ட்டு இருக்கா "...என தலையில் அடித்து கொண்டே அடுத்த பக்கத்தை திருப்பி, " அன்னம் போன் அடிக்குது பாரு அதை எடு முதல அவனை அப்புறம் திட்டிக்கலாம்"... என கூற அன்னமோ அவரை பார்த்து முறைத்து கொண்டே , "நக்கலு இருங்க வந்து வெச்சுக்கறேன் "...என கூறிக்கொண்டே போனை எடுத்தார்...
சரவணனோ வெற்றியை பற்றி விசாரிக்க, "அவன் எங்கே இருக்கான் னு எனக்கு என்ன தெரியும் "..என அலுத்து போய் அன்னம் கூறினான்...
சரவணனோ விடாமல் , "ஏன் மா அவன் தான் இப்படி இருக்கான் னா நீங்க விட்டுடுவீங்களா"...ஒன்றுமே தெரியாதது போல மேலும் தொடர்ந்த சரவணன், "அதான் அவன் சென்னை ல தானே இருக்கான் இன்னும் அண்ணி ஏன் ஹாஸ்டல் ல இருக்கணும்...ரெண்டு பேரும் ஏன் தனியா இருக்காங்க...உங்களுக்கு வெற்றியை பத்தி நல்லா தெரியும்... இப்படியே போனா அவன் ஒரு நாள் அண்ணியை பார்த்து யாருன்னு கேக்க போறான் பார்த்துக்கோங்க "...என்று தன் தாயிடம் அவங்களை தனி குடித்தனம் வைக்குமாறு அழுத்தம் கொடுத்து கூற அவரும் அவன் கூறியதை பற்றி யோசிக்க ஆரம்பித்தார்...
மேலும் அவன் நிறுத்தாமல் , "அண்ணி வீட்ல பாவம் மா கஷ்டப்பட்டு தானே கல்யாணம் பண்ணி கொடுத்து இருப்பாங்க ...இவங்க வெட்டிட்டு நிக்கறது அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சு னா...அவங்க அம்மா க்கு வேற உடம்பு சரி இல்லை அவங்க தாத்தாவோ வயசான ஆளு...பாவம் அந்த அனு சின்ன பொண்ணு "....என்று தான் யாருக்காக இவ்வளவு நேரம் தாயிடம் உரையாடுவதோ தன்னவளை இணைத்து கூறிய பின் தான் சரவணனுக்கு மூச்சே வந்தது என கூறலாம்...
அன்னத்திற்க்கும் அவன் கூற வருவது புலப்படுவதால் அவர் யோசிக்க தொடங்கி விட்டார்....சரவணனோ அழைத்த வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என எதிர்பார்க்க வில்லை என்றாலும் இனி தன் அம்மா பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை யில் போனை வைத்து விட்டான்....
அடுத்த இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்தான் வெற்றி ...நீண்ட நாள் கழித்து வந்து இருக்கிறானே என மகிழ்ச்சியை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவனை பிடிப்பிடியென பிடித்து கொண்டார் அன்னம்...அவனோ அவர் பேச்சை தட்டி கழிக்கும் விதத்தில் , "நாளைக்கு வேலைக்கு போகனும் என்னோட யூனிஃபார்ம் எங்கே தேய்ச்சு வெச்சியா"... என தன் அம்மாவை ஏவி கொண்டே தான் நாளை முதல் வேலைக்கு செல்ல போவதையும் இதுக்கு மேல ஒன்னும் பேசுவதற்கு ஒன்னும் இல்லை என்பது போல மணியிடம் சென்றான் வெற்றி...
அன்று அவசரத்தில் தான் மணியை விட்டு சென்றது மணி வேறு அவன் வந்ததும் என்னமோ புது மனைவி நீண்ட நாள் காணாத மனைவியை பார்த்து முகத்தை திருப்புவது போல திருப்பி கொண்டு சுத்த அவனோ , "ஹே மணி இங்கே வா".. என அழைக்க அதுவோ திருப்பி கொண்டு சென்றது...
இவனோ பின்னால் சென்று மணியை சமாதானப்படுத்த இந்த நிகழ்வை கண்ட அன்னத்திற்கு எங்கே போய் முட்டி கொள்ளலாம் இருந்தது... "பொண்டாட்டியை பார்க்க துப்பில்லை இதுல நாயை கொஞ்சிட்டு இருக்கான்".. என முணுமுணுத்து இவனை இப்படியே விட்டால் ஆகாது என முடிவே கட்டி விட்டார்..அவனுக்கு தன் தாய் கூறுவதை கேட்டாலும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்து கொண்டு இருந்தான்...
இனி என்ன ஆனாலும் சரி இரண்டு பேரும் ஒரே வீட்டுல இருந்து ஆகணும் அதுக்கு நான் வழி பன்றேன் யாரு கிட்ட நான் அன்னலக்ஷ்மி டா மவனே என மனதுக்குள் கருவிக் கொண்டே மகனின் உடைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தார்..
