நேசம் 24
நேசம் : 24
அவனை உருத்து விழித்து கொண்டு இருந்தவள் விழிகள் எல்லோர் முன்னிலையில் தன்னை பார்க்கும் பார்வையின் அர்த்தம் அவள் ஒருத்திக்கு மட்டுமே புலப்பட அவள் கன்னம் செம்மையுற்று என்ன இவன் எல்லோர் முன்னாடியும் இப்படி பார்க்கிறான் என குறுகுறுக்கும் தன் உடலின் ஒவ்வொரு அணுவை அடக்க வழி தெரியாமல் அவன் மீதே தன் கோபத்தை காட்டி அவனை முறைத்தாள்...
அவனை பார்த்த பாயல், " என்ன பையா அப்படி பார்க்கிறீங்க நாங்க தான் உங்க மனைவியோட பிரின்ட்ஸ் "..என்று அந்த கூட்டத்தில் உள்ள அனைவரையும் அறிமுகம் செய்து வைக்க வெற்றி இலேசாக தன் இதழ் பிரித்து சிரித்தான்...கண்மணியோ அவன் சிரிப்பதை பார்த்து இவனுக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா என்பது போல பார்த்து வைத்தாள்...
"என்ன டி நீயும் அண்ணாவை பார்த்து இப்படி நிற்கிற"... என கேட்டாள் ஏஞ்சல்....
உடனே பாயல் , "ஏஞ்சலிடம் ஹே ஏஞ்சல் அது நீண்ட நாள் பிரிவு மா...அதான் பார்த்ததும் ரெண்டு பேரும் கண்ணாலே லவ் பண்ணிக்கிறாங்க..அப்படி தானே கண்மணி"... என கூறி சிரிக்க அங்கே உள்ள அனைவரும் அவளின் ஹிந்தி கலந்த தமிழில் சிரித்தனர்...
பிரகாஷ் மற்றும் அவனுடன் நிற்கும் அவள் ஆண் நண்பர்களுக்கு இவனை கண்டதும் போலீஸ் என தெரிய வர அந்த இருவரும் இரண்டு அடி தள்ளி நின்று மரியாதை கலந்த உணர்வில் ஒரு வணக்கம் வைத்து தள்ளி நின்று கொண்டனர்...
கண்மணியோ இதை எல்லாம் கவனிக்காமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு அவனும் அவளை தான் பார்த்து கொண்டு நின்றான்...
இருவரையும் கவனித்த பாயல் இருவருக்கும் தனிமை கொடுக்கும் எண்ணத்தில், " ஹே வாங்க கைஸ் நாம போகலாம் அவங்க ரொம்ப கழிச்சு மீட் பண்ணி இருக்காங்க...நாம போகலாம்"... என கூறி அவள் அந்த படையினரை கூட்டி அவர்களை விட்டு சற்று தொலைவிற்கு சென்று விட்டாள்...
அவர்கள் எல்லாம் சென்றதும் அவன் பார்வை மீண்டும் அவள் உடையிலே இருக்க பொறுக்கி என்று கூறி துப்பட்டாவை எடுத்து தன்னை சுற்றியவள் நேரே அவனை தாக்க தயாராகி," என்னை வேவு பார்க்க தான நீ வந்த" ...என்று அவனை பார்த்து கேள்வி கேட்க
அதை கேட்டதும் அவளின் செய்கையும் அவனை கடுப்பாக்க வெற்றியோ அவளை ஒரு முறை முறைத்து சுற்றி முற்றியும் பார்த்து அவளை கை பிடித்து இழுத்து சென்று ஆள் அரவம் அற்ற ஒரு இடத்தில் நிற்க வைத்து அவளின் உடையை காட்டி , "ஏன் டி அறிவே இல்லையா தண்ணி ல நனையனும் னா கொஞ்சம் டீஸண்ட் ஆன ட்ரெஸ் போட்டுட்டு வர கூடாது..இதுல தண்ணில வேற ஆட்டம் "...என்று அவன் கத்த கண்மணியோ மேலும் கீழும் தன் உடையை சரி பார்த்து கொண்டே அவன் சொல்வது உண்மை தான் போல என்று நினைத்து கொண்டே ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றவள் அந்த துப்பட்டவால் தன்னை சரியாக மற்றவர்களின் பார்வை தன் மீது பாடாமல் சரி செய்து தன்னை காத்து கொண்டவள்...
இப்போது அவன் கேட்டதுக்கு பதில் உரைக்காமல் கண்மணி அவனையே துளைத்து எடுக்க தொடங்கினாள்., "ஆமா நீ இங்கே செய்யற "...என கேட்க அவளின் செய்கைகளை கண்டு அவன் கண்கள் கொஞ்சம் மெச்ச,
உடனே "நீ என்ன இங்கே செய்யற"... என அவள் கேள்வியை அவளுக்கே அவன் திருப்பி படித்தான்...
"நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்லை நான் என் பிரின்ட்ஸ் கூட வந்தேன் "...என்று கூறிக் கொண்டே அவர்கள் எங்கே என கண்களாலேயே தேட அங்கே பிரகாஷ் மற்றும் அவளின் நண்பர்கள் வட்டம் தென் பட பிரகாஷ் யை கண்டதும் அவளுக்கு அவளின் குதர்க்கமான மூளை வேலை செய்த்து...,
வெற்றியை கோபப்படுத்தும் எண்ணத்தில், " அதோ அங்கே பாரு அவன் தான் என்னோட காதலன் "...என்று பிரகாஷ் அருகில் இல்லை என்பதை உறுதி வைத்து அவனிடம் பொய் உரைக்க அவனோ அவளையே அதும் அவள் கண்களை பார்த்து அவள் பொய் தான் உரைக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டு, "யாரு அவனா...அதும் உன்னோட லவ்வர் ...உனக்கு எல்லாம் ஒரு லவ்வர்...நீ அந்த அளவுக்கு எல்லாம் ஓர்த் இல்லை...".... என்று ஒரு நக்கல் குரலில் கூறி சிரித்தான் வெற்றி....
அவனின் ஏளனம் வேறு அவளை எரிச்சல் ஆக்கியது..." ஏன் எனக்கு என்ன குறைச்சல் "...என்று திருப்பி அவனிடமே கேட்டாள்...
மூக்கு நுனி சிவந்து அந்த சூரிய ஒளி கற்றைகள் அவள் முகத்தில் பட்டும் படாமலும் காற்றிலும் கடல் நீரிலும் கலைந்த அவள் கூந்தல் கற்றை முகத்தில் பட்டு இருக்க அவளின் கோலி குண்டு கண்கள் அவனிடம் கோபத்தை காட்ட அவனின் பார்வையும் விடாமல் அவளை கொன்றது...
தான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லாமல் அவன் கண்கள் தன்னை மேய்வதை காணும் போது அவளுக்குள் ஏதோ செய்ய அவள் முகம் சூடாவதை அவள் உணர்ந்தாள்...வேகமாக கன்னத்தை அவன் காண கூடாது என கன்னம் தேய்த்தவளை அவள் கன்னம் சூடானதை கண்டு விட்டான் என்பதை அறிந்தவளுக்கு அவனை திட்ட கூட முடியாமல் நாணம் வந்து தடுத்தது...
எப்போதும் படபடக்கும் சரவெடி இன்று அமைதி பூங்கா ஆக மாறி அவனோ இது என்ன இவ பேசாமல் இருக்கா இது சரி வராதே என நினைத்து தான் பார்த்ததும் கன்னம் சிவந்ததை எண்ணி ஆணாய் ஒரு கணவனாய் அவள் மீது கர்வம் கொண்டு , " இது தான் நீ.
இது எப்போ ஆனாலும் எனக்கு மட்டும் தான் "...என அவளின் சூடான கன்னத்தை சுட்டு காட்டி கூற அவள் அதிர்ந்து விட்டாள் என்றே கூறலாம் அவள் எதிர்பார்த்தது வேறு அவன் கூற விழைவது வேறு என்பதை உணர்ந்து அவனிடம் வாயாட முடியாமல் அவள் வாய் அவள் பேச்சை கேக்காமல் அமைதியாக வாயை பிளந்து அவனை பார்க்க அவளை கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்த வெற்றி, "அதுனால வேற எவனையாச்சும் காட்டி அவன் தான் என் காதலன் சொல்லி என்னை வெறுப்பேத்தலாம் னு நினைச்ச இந்த வேலை எல்லாம் என்கிட்ட வேலைக்கே ஆகாது ...அதுனால நல்லா படிச்சு பல்ல புடுங்குற வேலையை மட்டும் பாரு...அப்புறம் உன்னை எனக்கு பிடிக்காது தான் ஆனால் கட்டின பொண்டாட்டி வேற ஒருத்தனை பிடிச்சு இருக்கு னு சொல்ற பொய்யை எல்லாம் நான் நம்ப மாட்டேன்..அது நீயே சொன்னாலும்...அது மட்டுமில்ல இப்போ உன் கன்னம் சூடாச்சே அது என்கிட்ட மட்டும் தான் உனக்கு வரும் னு எனக்கு புரியும்...வேற ஒருத்தன் கிட்ட உனக்கு வராது னும் எனக்கு தெரியும்...புரியுதா ".....என்று நிறுத்தி நிதானமாக அவளிடம் மட்டும் எப்போதும் வெளிப்படுத்தும் அந்த திமிர் குரலில் வெளிப்படுத்த அவளுக்கு சற்று அவன் உண்மையை கண்டுபிடித்து விட்டானே என்று அவமானமாக இருந்தாலும் அவன் தன்னை புரிந்து கொண்டானோ என்ற ஒரு நல்ல எண்ணமும் தோன்றாமல் இல்லை....
அவனுக்கோ அவள் கூற வந்தது பிடிக்கவில்லை என்றாலும் ஏன் பிடிக்கவில்லை என காரணமும் அவனுக்கு தோன்ற வில்லை..ஏதோ கூற தொடங்கிய வெற்றி ஏதோ கூறி அங்கே தன் உரிமையை அவளிடம் நிலை நாட்டி விட்டான்...அவனுக்கும் இந்த பத்து நாட்களாக சம்பத் கூட இருந்தாலும் தான் வளர்த்த மணி இல்லாததாலும் தன் குடும்பம் இல்லாததாலும் வெறுமை சூழ இருந்தவன் தான் தாலி கட்டிய (கண்)மணியை கண்டதில் அவன் மனது கொஞ்சம் அமைதியாகி அவளுடன் அமர்ந்து இருக்கிறான்...அவளும் அவன் தன்னிடம் உரிமையாக பேசியதையும், உரிமையாக கண்டித்ததையும் எண்ணி அதை விட முக்கியமாக அவன் அவள் மீது வைத்து இருந்த நம்பிக்கை அவளை கொஞ்சம் அசைத்து பார்த்தது என்றே கூறலாம்....
இங்கே இவர்கள் இருவரும் அமர்ந்து கடலை வெறித்து கொண்டு இருக்க அங்கே சரவணனும், அனுவும் போன் மூலம் இருவரும் கடலை வறுத்து கொண்டு இருந்தனர்....
நேசம் தொடரும்....
