Share:
Notifications
Clear all

நேசம் 23

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 23

நேசமடி நேசம்

  அலையோடு அலையாக சுருளும் தன் கேசத்தை ஒதுக்கி கொண்டே, காற்றில் அசைந்து ஆடும் அவள் அணிந்து இருந்த சுடிதாரின் துப்பட்டா காற்றில் பறக்க அதை ஒரு கையால் பிடித்து கொண்டே, பொன் அந்தி மறையும் நேரத்தில் அந்த ஆரஞ்சு வண்ண சூரியனே வெற்றியின் துணைவியின் அழகில் மயங்கி நாணி கோணி தன் இருப்பிடம் நோக்கி செல்ல முற்பட அவனை வார்த்தையால் வதைக்க துடிக்கும் அதரங்களை அடக்கி அவள் வெற்றியின் முன்னே நின்றாள் கண்மணி...

கண்மணிக்கு அந்த ஆர்ப்பரிக்கும் அலையோ அங்கே தூரமாக சுண்டல் சுண்டல் என கத்தி கொண்டு செல்லும் சிறுவனோ அங்கே அவளை சுற்றி இருக்கும் ஜனத்திரளோ ஏன் தன் அருகில் நிற்கும் தன் நண்பர்கள் படையோ எதுவும் அவள் கண்ணுக்கு புலப்படவில்லை...எப்போது அவள் அவனின் வாசத்தை உணர்ந்தால் என அவள் அறியாள்...ஆனால் அவள் கண்ணில் பட்டது எல்லாம் அவன்...அவளின் கணவன்...இப்போது அவளின் அவன் என்று கூறினால் நம்மை கூட பஸ்பம் ஆக்கி இருப்பாளோ என்னவோ ...

அவனை கண்டதும் அவனை பற்றிய எண்ணங்களே அவள் மூளைக்குள் சுழல இவன் எங்கே இங்கே வந்தான் அன்று நான் வீட்டுல இருந்து ஹாஸ்டல் க்கு கிளம்பும் போது கூட மூஞ்சியை திருப்பி கொண்டு சென்றவன் இப்போது அவள் பின்னால் வந்து நின்றாலோ அதும் இந்த பத்து நாட்களாக அவளுக்கு படிக்க இருந்ததால் அவள் ரூமை விட்டு வெளியேயே வராமல் இருக்க இன்று தான் அவளும் வெளியே வந்து கொஞ்சம் நல்ல காற்றை சுவாசிக்க கடற்கரைக்கு வந்தால் அவன் அவள் கணவன் என அழைக்கப்படும் அவன் அவள் முன்னே வந்து நின்றால் அவளுக்கு வேறு என்ன தோன்றும்... அவளை வேவு பார்க்கவே வந்து இருக்கிறான் என முடிவே செய்து கோபம் கொண்டு அவனை வெறுப்பேற்ற அவன் முன்னே நிற்கிறாள்...

இதுவும் ஒரு வகை காதலின் வாயில் தான் என அவன் முன்னே புசு புசுவென சூடான மூச்சு காற்றை வெளிவிட்டு கொண்டு இருக்கும் கண்மணி வெற்றிவேலுக்கு தெரியவில்லை... நீண்ட நாள் அவனை காணாததன் விளைவு தான் அவனை கண்டதும் தவறு தவறான சிந்தனைக்கு வழி வகுக்கிறது என்றும் தாலி கட்டியவனை பிடிக்காத அவளுக்கு அவன் கட்டிய தாலிக்கு மட்டும் விலையோ எங்கே சென்றாலும் தூக்கி பிடித்து கொண்டு செல்கிறாள்....

வெற்றிக்கு மனம் முழுவதும் அந்த கேஸை பற்றியே சுழன்று கொண்டு இருப்பதால் எப்படியாவது நரசிம்மனை காண வேண்டும் என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும் என்று எல்லாம் மனதில் கணக்கிட்டும் அதே சமயம் மனதில் எங்கோ சிறு வெறுமை எழ அதன் பொருட்டே அந்த முடிவிலா நீல நிற அழகிய சிற்பம் போன்று இருக்கும் அலைகடலை பார்த்து கொண்டு இருக்க தூரத்திலே கண்மணி தன் நண்பர்களுடன் அவனை கடந்து செல்வதை கண்டு விட்டான் வெற்றி...

இருந்தும் அவளிடம் போய் உரையாட வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றாலும் அவளின் செய்கைகளை கவனித்து கொண்டு தான் இருந்தான்...மனதில் அவளை பிடிக்கவில்லை என்றாலும் அவன் கண்களுக்கு அவளை காண பிடித்து இருக்கிறதோ என்னவோ விடாமல் அவளை பார்த்து கொண்டு இருந்தான்...

அவளும் அவளின் தோழிகள் , நண்பர்கள் அனைவரும் கடற்கரையில் நடப்பதும் அலையில் தங்கள் காலை நனைப்பதுமாக விளையாடிக் கொண்டு இருக்க இவன் அவர்களை அல்ல அவளை இவன் கண்கள் மேய்ந்தது என்னவோ உண்மை தான் ...

அதும் அவன் கண்கள் அலை ஆர்ப்பரித்து வரும் போது இங்கே இவள் தன் இதழ்களை குவித்து ஹே என்று ஆர்ப்பரித்து கொண்டே அலையை நோக்கி ஓடி சென்றவள் அலை வந்து மோதியதும் எதிர்பாராமல் கண்மணி கீழே விழுந்து எழ முழுவதுமாக நனைந்து விட்டாள்...அவள் விழவும் அவள் தோழிகள் அனைவரும் விழுந்து விட்டனர்...பின் எழ முயற்சி செய்ய முடியாமல் வேகமாக வந்த அந்த சிறு அலையின் தாக்கத்தில் மொத்த தோழிகளும் விழுந்து விளையாடி கொண்டு இருந்தனர்...

இதை எல்லாம் கண்டு கொண்டு இருந்த வெற்றியின் கண்களோ அவளை மேய , அவளின் நனைந்த ஆடை வேறு அவளின் உடலோடு உடல் ஒட்டி இருக்க இங்கே அவளின் கோஷ்டிகளை கண்டு கண்களால் ரசித்து கொண்டு இருந்தவன் கண்களோ அவளின் உடலில் ஒரு இடம் விடாமல் கண்களாலேயே மேய்ந்தது..அன்று மணியை கண்டு பயந்து தன் மீது தாவும் போது அவனை தீண்டிய அவளது பாகங்களை எல்லாம் இப்போது கண்களாலேயே அவன் வருடி ரசித்து கொண்டு இருக்க அவன் அருகே அமர்ந்து பூ விற்று கொண்டு இருக்கும் ஒரு அம்மா , "ஹே பாப்பா ரொம்ப உள்ள போகாத "...என்று குரல் கொடுக்கும் போது தான் வெற்றி தன்னிலை பெற்றான்...

அப்போது தான் அவனுக்கும் அது பொதுவெளி என்றும் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என தன் மனதுக்குள் தன்னையே கொட்டி தான் என்ன ஒரு பார்வை அவளை பார்த்தோம் அதும் என் கண்கள் எங்கே எல்லாம் மேய்ந்தன அது போல தானே எல்லோரும் அவளை நோட்டம் விட்டு இருப்பார்கள் என்று அவள் மீது அவனுக்கு கோபம் தான் வந்தது...தரதரவென அவளை இழுத்து வந்துவிடலாமா என அவன் கை பரபரத்தது...என்ன தான் அவளை பிடிக்கவில்லை என்றாலும் கட்டிய மனைவியை வேறு யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் அவனுக்குள் எழாமல் இல்லை...வெற்றி எழ வேறு முயற்சி செய்து விட்டான்..

அதற்குள் பிரகாஷ் கண்மணியை அழைக்க அவளும் தன் நனைந்த ஆடைகளை சரி செய்த படியே அவன் பின்னாலே சென்றாள்... அழைத்த அவனையும் கண்மணியையும் பார்த்து கொண்டே வெற்றி அவன் அமர்ந்த இடத்தில் மறுபடியும் அமர்ந்து விட்டான்...அப்படி செல்லும் போது தான் யாரோ தன்னையே நோட்டம் விடுவது போல இருக்க ஏதோ ஒரு உந்து விசை கண்மணியை தாக்க கண்மணி திரும்பி பார்த்தாள்...

அவள் பார்க்கிறாள் என்பதை உணர்ந்ததும் வெற்றி தன் பார்வையை மாற்றி விட்டான் என்ன தான் போலீஸ் ஆக இருந்தாலும் கண்மணி என்று வரும் போது வெற்றி ஒரு திருடன் தான் போல...அப்போது தான் அவள் கண்கள் அவனை கண்டதும் அவனை போல கண்டதும் திரும்பமால் தைரியமாக அவனை நோக்கி வந்து விட்டாள்...

தன் முன்னே நனைந்து கொண்டும் அதே சமயம் அவளின் படைகளோடு தன்னை உருத்து விழித்து கொண்டு இருப்பவளை கண்டதும் அவனுக்கு இயல்பாக அவளை காணும் போது வரும் திமிர் அவன் கண்களில் வெளிப்பட, தன் சட்டை காலரை தூக்கி விட்டு அமர்ந்த வெற்றி தன் கையில் ஒட்டி இருந்த கடல் மண்ணை தட்டி கொண்டே அவளை அருகில் நிற்பவர்களை எல்லாம் கவனிக்காமல் அவளை இஞ்ச் பை இஞ்ச் ஆக தலை முதல் கால் வரை அளவிட, அவன் பார்வையில் அருகில் நின்று கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை போலும்..ஆனால் அவளுக்கு தெரியாமல் போகாதே...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top