நேசம் 22
நேசம் : 22
இவரு எதுக்கு இந்த மானங் கெட்டவனுக்கு போய் இப்படி பணிஞ்சு பேசிட்டு இருக்காரு என்று அவர் மீது கோபம் எழுந்தாலும் அவர் தனது உயர் அதிகாரி என்றும் அவர் கேக்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்க வேண்டியது வெற்றியின் கடமை என்பதால், " சார் நான் ஒன்னும் தெளிவு இல்லாமல் இவரை கைது பண்ணல சார் ...நல்ல ஆதாரத்தோடு தான் நான் கைது பண்ணிட்டு வந்து இருக்கேன்"... என்று நெஞ்சை நிமிர்த்தி தான் ஒன்றும் பொய் உரைக்க வில்லை யாரிடமும் தலை வணங்க மாட்டேன் என திமிரோடு கூறினான்...
வெற்றியை பார்த்து நரசிம்மன், " என்ன ஆதாரம் மேன் நீ வெச்சு இருக்க" ...என்று தனக்கும் சில சமயம் பொறுமை இல்லாமல் போகும் என்பதை தன் முகத்தில் நிறுத்தி வெற்றியை முறைத்து கொண்ட கேட்டார்...இவர்களின் உரையாடல்களை எல்லாம் ஏதோ ஒரு கார்ட்டூன் சேனல் பார்ப்பது போல் கூலாக அவருக்கு வரவழைக்கப்பட்டு இருந்த காபியை குடித்து கொண்டே சிரித்து கொண்டு இருந்தார் அந்த பிரமுகர்...
அது வேறு வெற்றிக்கு கோபத்தை கொடுக்க கை முறுக்கி தன் கோபத்தை அடக்கி வேகமாக டேனியலை அழைத்து பைலை எடுத்து வர சொல்ல டேனியலும் வந்தான் ..கமிஷனர் அறைக்கு வந்த டேனியல் , "எந்த பைல் எனக்கு ஒன்னும் தெரியாது "...என்று கூற முன்னே கோபத்தில் இருந்தவன் டேனி உன்கிட்ட தான கொடுத்து இருந்தேன்"...என்று குரலில் அழுத்தத்தை கூட்டி கூற டேனியலோ , "என்ன டா சொல்ற ..நீ எதை பத்தி சொல்ற எனக்கு ஒன்னும் புரியல ..தேவை இல்லாமல் உன் விஷயத்தில் என்னை இழுக்காதே"...என்று முகத்தில் கடுமையோடு எல்லோர் முன்னிலையில் கை மலர்த்தி விட அந்த முக்கிய பிரமுகர் முன் வெற்றியை நாலு காட்டு காட்டினார் நரசிம்மன்..
"விடுங்க கமிஷனர் சார் தம்பி க்கு யாராவது தவறா தகவல் கொடுத்து இருப்பாங்க ..இதுக்கு எல்லாம் சத்தம் போடறதா ...தம்பி க்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவை படுது...பேசாமல் தம்பிக்கு கொஞ்ச நாள் லீவ் கொடுத்துடுங்க"... என்று நரசிம்மனுக்கே ஆர்டர் போட்டு விட்டு அங்கே அப்போதும் தான் தவறு ஒன்றும் செய்யவில்லை ஆனால் என் கை அருகில் இருந்தும் நீ குற்றவாளி என தெரிந்தும் என்னால் உன்னை கைது செய்ய முடிய வில்லை யே என்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு விரைப்பாய் நிற்ப்பவனை பார்த்து கொண்டே எழுந்த அவர் அவன் அருகில் வந்து , "தம்பி உன் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்து இருக்கு அது என்ன னு பார்த்துட்டு லீவ் எடுத்துட்டு சந்தோசமா இரு...சம்பளம் எல்லாம் வந்துரும் பா ...பயப்படாத "..
என்று நக்கலும் அடிக்க வெற்றி தன் மொபைலை எடுத்து பார்க்க அதில் கொஞ்சம் சாம்பல் போட்டோ ஒன்று மெசேஜ் வந்து இருந்தது...அதை பார்த்தவனுக்கு புரிந்தது தன் பைலை தான் எரித்து தனக்கு போட்டோ அனுப்பி இருப்பதை உணர்ந்தவனுக்கு எழுந்த கோபத்தில் தன் இடுப்பில் மாட்டி இருக்கும் தனது துப்பாக்கியை எடுத்து அந்த முக்கிய நபரின் தலையில் வைக்க போக அவரும் அசால்ட்டாக எதிர் கொண்டார்...உன்னால் செய்ய முடிந்ததை செய்துக்கோ உன்னால் என்னுடைய சட்டையின் நுனியை கூட தொட முடியாது என பார்வையாலும் வார்த்தையாலும் கூறி விட்டு, " இவன் சஸ்பெண்ட் ஆகலை நடக்கிறதே வேற "...என்று நரசிம்மனை மிரட்டி விட்டு சென்றார்...
அந்த நபர் சென்ற உடன் வெற்றி டேனியலின் சட்டையை பிடித்து அவனின் முகத்திலே ஒரு குத்து விட்டான் அவன் அடித்த அடியில் கண்ணின் கீழே இருந்து ரத்தம் வழிய டேனியல் எதிர்த்து அடிக்கும் முன் தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து டேனியலின் நெற்றி பொட்டில் வைக்க டேனியலும் அதை எதிர் கொண்டு நின்றான்... இருவரும் நின்று கொண்டு இருப்பதை பார்த்து டேனியலை சமாதானம் செய்து அனுப்பி வைத்த நரசிம்மன் வெற்றியை வெளுத்து கட்டினார்... ஆம் அவருக்கு கோபம் தன் கண் முன்னே இப்படி ஒழுங்கீனமாக நடந்து விட்டானே என்று அவருக்கு அவனின் மீது கோபம் எழுந்தது...
"மிஸ்டர் என் முன்னாடி நீங்க எப்படி இது மாதிரி நடந்துக்கலாம் ...என்ன மனசில பெரிய குஸ்தி வீரன் னு நெனைப்பா அவரு ஒரு போலீஸ் உன்னை மாதிரி ..என்ன நினைச்சிட்டு இருக்க நிதானம் இல்லாமல் நடந்துக்குற ..ஒரு போலீஸ்க்கு தேவை நிதானம் அது உன்கிட்ட இல்லை "... என்று கண் முன் தெரியாமல் கடிந்தார் நரசிம்மன்...
அவன் ஏதோ கூற வர "ஆதாரம் எங்கே"... என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை சாம்பல் போட்டோவை யா காட்டவா முடியும் என நினைத்து அமைதியாக இருந்தான்...
அவனின் ஒழுக்க கேடுக்கும் கீழ் படியாமைக்கும் சேர்த்து அவனுக்கு மூன்று மாதம் சஸ்பெண்ட் கிடைத்தது...
ஏனெனில் வெற்றி அந்த நபரை பற்றிய எல்லா ரகசியங்களை எல்லாம் தன் நண்பனாக இருந்த டேனியலிடம் தெரிவித்து இருக்க அவனும் எல்லாம் கேட்டு எந்த இடத்தில் வெற்றிக்கு தலை குனிவை வரவைக்க முடியுமோ அங்கே வைத்து விட்டான்...அவன் சேகரித்த ஆதாரங்கள் அனைத்தும் கனகச்சிதமாக அந்த மனிதருக்கு தள்ளி அவரிடம் பாராட்டை பெற்று சில பண முடிப்பை பெற்று இப்போது நரசிம்மன் முன்பும் நல்லவனாகி விட்டான்...
அவனோ தான் நேர்மையாக இருந்ததற்கு கிடைத்த முதல் பரிசு அதும் துரோகம்... நம்பிக்கை தூரோகத்திற்கு கிடைத்த வெகுமதி என்று எல்லாம் ஒரு வாரம் மது போதையில் இருந்தான் வெற்றி...யாரையும் பார்க்க பிடிக்காமல் தண்ணியில் குளித்து குடித்து கொண்டு இருந்தான்...
ஒரு வாரம் கழித்து நரசிம்மன் அவனின் மொபைலிற்கு அழைத்தார்...அவன் எடுக்காமல் இருக்கவே ஒரு நாள் இரவு பத்து மணிக்கு மப்டியில் அவன் தங்கி இருந்த குடியிருப்புக்கு வந்தார்...
வந்தவர் அவனை பார்த்து , "என்ன பாட்டில் கணக்கு கம்மியா இருக்கு...கடைல கிடைக்கலை யா ...நான் வாங்கி தரவா"... என நக்கல் கேள்வி கேட்டு அங்கே அவனின் எதிரே அமர்ந்தார்...
கண்கள் நிலை இழந்து சிவந்து அதீத போதையில் இருந்தாலும் தான் ஸ்டெடி என்பது போல அமர்ந்து இருந்தவனை கண்டு அவன் கையில் இருந்த பாட்டிலை பிடிங்கி அவரும் அங்கே இருந்த கிளாஸ் எடுத்து ஊற்றி, "ஏன் டா மட்ட சரக்கா வாங்கி வெச்சு இருக்க...மிலிட்டரி சரக்கு இல்லை "...என்று கூற அவனோ முறைத்தான்....என்னை சஸ்பெண்ட் பண்ணினதும் இல்லாமல் என்கூடயே உக்கார்ந்து சரக்கு அடிக்கறதை பாரு என்று முறைத்து கொண்டு இருந்தான் வெற்றி...
"என்ன டா ரவுடி வந்ததில் இருந்து முறைச்சிட்டே இருக்க என்ன நெனைச்சுட்டு இருக்க நீ நினைக்கிற மாதிரி நாலு பேப்பரை ஆதாரம் னு நீட்டினா அந்த ஆளை அர்ரெஸ்ட் பண்ணலாம் னா... நீ மனசுக்குள்ள நினைக்கறது முன்னாடி நான் அதை முடிச்சுடுவான்...அந்த ஆளை பத்தி உனக்கு தெரியாது..பல சமயங்களில் இது போல ஆட்களிடம் நாம் இறங்கி தான் செல்ல வேண்டி இருக்கிறது....தகுந்த சமயம் வரும் போது அவனை பிடிக்கலாம்...எங்கே டா போக போறான் இவங்க கிட்ட எல்லாம் சிங்கமா கண் முன்னாடி நிக்கறதை விட புலியா மாறி பதுங்கி நின்னு அடிக்கணும் அப்போ தான் எதிரிகள் நமக்கு கிடைப்பாங்க டா"... என்று கூற பதில் ஏதும் கூறாமல் அமர்ந்து இருந்தான்...
மேலும் அவர் நிறுத்தாமல், "நானும் உன்னை மாதிரி நெஞ்சை நிமிர்த்தி சுத்திட்டு இருந்தவன் தான் அதுனால நான் இழந்தது இரண்டு பேர் ...இப்போ நான் தனிமரம்...உனக்கும் அதே நிலைமை வரக்கூடாது னு தான் நான் சொல்றேன் "...என்று மென்மையில் முடித்தார்...மேலும் ஆசானாக சில அறிவுரைகளை வழங்க அவனும் கேட்டு கொண்டான்...வெற்றி மனதுக்குள் டேனியலை பற்றிய வன்மத்தை வளர்த்தி வைத்து இருந்தாலும் வெளியே அவரிடம் கூட சொல்லவில்லை... அதே போல அவனை வைத்தே இந்த கேஸ்சை மறுபடியும் எடுத்து முடிப்பேன்...என்று மனதுக்குள் தனக்கு தானே சவால் விட்டு கொண்டான் வெற்றி...
டேனியலை பற்றி நினைத்ததும் கழிந்து போன மோசமான நினைவுகள் வந்து போனது தான் மிச்சம் ஆனது...மேலும் டேனியலின் மீது அவனுக்கு சந்தேகம் வந்து கொண்டே தான் இருந்தது...அவன் தான் நரசிம்மனின் விபத்துக்கு காரணம் ஆக இருப்பானோ என சந்தேகம் எழாமல் இல்லை...அதை விரைவாக கண்டு பிடிக்க வேண்டும் என நினைத்து கொண்டான்...
நாட்கள் அதிரடியாக நகர வெற்றி சென்னைக்கு வந்து பத்து நாட்கள் ஆகி விட்டன..இந்த பத்து நாட்களும் அவனால் நரசிம்மனை காண முடியவில்லை... ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது என்று கூறுவதை உருவாக்கி கொண்டு இருந்தார்கள் என்றே கூற வேண்டும்...பாதுகாப்பு காரணம் அது இது என்று கூறி மறுத்து விட்டனர்...அவனும் இன்னும் எத்தனை நாட்களுக்கு என நினைத்து காத்து இருந்தான் ஏனெனில் அவனுக்கு அடுத்த வாரம் முதல் அவன் வேலையில் மறுபடியும் சேர வேண்டும் என்பதால் அவன் அப்போது பார்த்து கொள்ளலாம் என நினைத்து விட்டான்...
இந்த பத்து தினங்களும் வெற்றிக்கு கண்மணியின் நினைவு வரவில்லை... அதே போல அவளிடம் கேட்டால் யார் அவன் என்ற கேள்வியை முன் வைத்து கொண்டு அவளின் தோழிகளுடன் சென்னையில் மெரினா பீச் இல் சுற்றிக் கொண்டு இருக்கிறாள்..அவளுடன் அவளின் தோழிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வந்து உள்ளனர்...அவளுடன் அவளை காதலிப்பதாக சொல்லி திரிந்த பிரகாஷ் யும் அவர்களுடன் வந்து இருந்தான்...அவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்று தெரிந்ததும் சில நாள் தேவ தாஸ் ஆக சுற்றி திரிந்தவன் இப்போது சரி ஆகி விட்டான்...இப்போது அவனும் வந்து இருக்க எல்லோரும் அமர்ந்து உரையாடி கொண்டு இருந்தனர்...
அங்கே இருக்கும் பத்தாயிரம் பேரில் கூட்ட நெரிசல் மிக்க ஜன நெருக்கடியில் அவள் கண்களுக்கு மட்டும் வெற்றி எப்படி தெரிந்தானோ என்னவோ மொபைலை நோண்டி கொண்டு இருக்கும் வெற்றி கண்ணில் பட்டான்... வெற்றி அவளை கவனிக்கவில்லை...அவனை கண்டதும் இவளுக்கு முதலில் இவன் எதுக்கு வந்து இருக்கான் இங்கே என யோசித்தவள் அதிர்ச்சி என்னை வேவு பார்க்க தான் இவன் வந்து இருக்கிறான் என இவளே முடிவு கட்டி விட்டாள்....இவனை என்ன செய்கிறேன் பார் என நினைத்து கொண்டு அவளும் அவள் நண்பர் வட்டமும் இதோ இப்போது வெற்றியின் முன்னே நின்று கொண்டு இருக்கின்றனர்...கண்மணி மட்டும் வெற்றியின் கண்களை சந்தித்து இருவரும் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதி கத்தி போல குத்த காத்து கொண்டு இருக்கின்றன....
நேசம் தொடரும்...
