Share:
Notifications
Clear all

நேசம் 21

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 21

நேசமடி நேசம்

     சென்னைக்கு பயணப்பட்டு கொண்டு இருக்கும் அவனுக்கு அவனின் கை கார் ஸ்டியரிங் கில் இருந்தாலும், அவனின் கண்கள் சாலையை வெறித்தாலும் அவன் மனம் முழுவதும் அந்த இருவர் எப்படி மரணம் அடைந்தர் என்றே கேள்வியே மனதை குடைய வண்டியை விரைவாக சென்னை நோக்கி செலுத்தினான்...

ஏனெனில் முக்கிய குற்றவாளிகள் ஆன அவர்களை வைத்து மீதம் உள்ள இருவரை பிடித்து விடலாம் மற்றும் அவர்களை இதை செய்ய தூண்டியது யார் என்றும் முக்கியமாக அந்த ப்ரோக்கர் யார் என்றும் அறிந்து விடும் என்று எல்லாமே இப்போது நாசம் ஆகி விட்டது...அன்று கண்மணியை கடத்திய போது பிடிப்பட்டவர்களின் கேஸ் எப்படி செல்கிறது என்று அவனுக்கு இதுவரை தெரியாது...

அவன் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதால் அவனிடம் கேஸை பற்றி நரசிம்மன் விவாதிக்கவில்லை...அதே போல அவனை பற்றி முழுமையாக அறிந்த காரணத்தால் அவனை மெல்ல அந்த கேஸ்க்குள் நுழைய விட வில்லை...அன்றே வெற்றி அவரிடம் ஏதோ கூற வருவதற்குள் தான் இனி பார்த்து கொள்வதாக கூறி மறுத்து விட்டார்...

  நேரே கமிஷனர் நரசிம்மன் வீட்டுக்கு செல்ல அங்கே  பாதுகாப்பு க்கு நின்ற காவலர்கள் இவனை கண்டதும் சல்யூட் அதை ஏற்றவன் கமிஷனரை காண வேண்டும் என்று கூற அவர் மருத்துவமனையில் இருப்பதாக கூற அவனோ குழம்பி காவலர்களிடம் அவருக்கு என்ன ஆகிற்று என்று கேட்க அவர்கள் கூறிய பதிலை கேட்டு அதிர்ந்தான் வெற்றி...

ஆம் மூன்று நாட்கள் முன் ஈசீஆர் ரோட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஒரு மர்ம கார் ஒன்று மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விட்டது என்றும் தற்போது அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்று கூற வெற்றிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி யான சம்பவம் தான் என்றாலும் இவர் என்ன என்னிடம் கூட சொல்லவில்லை என்று நினைத்து கொண்டே காவலர்கள் கூறிய மருத்துவமனைக்கு விரைந்தான்...

அங்கேயும் அவரை காண அனுமதிக்கப்பட வில்லை விசிட்டிங் டயம் முடிந்தது என்று கூறி அங்கே இருந்த காவலர்கள் மறுத்ததால் அவர்களை முறைத்து கொண்டே மருத்துவமனையை விட்டு வெளியேறி இருந்தான் வெற்றி...அவனுக்கு எங்கோ ஏதோ சரி இல்லாதது போல எல்லாம் தோன்ற நேரே தன் நண்பன் சம்பத்தை காண சென்றான்....

சம்பத் வெற்றியின் நண்பன் என்பதை காட்டிலும் அவன் ஒரு நிருபர் ...எந்த பிரமுகர்கள் ஆனாலும் கிழித்து தொங்க விடும் பேனாக்காரன்... பேனாவை தன் வால் போல வைத்து கொண்டு தன் எழுத்துக்களால் பிரமுகர்களை அல்லல் பட வைத்து கொண்டு இருப்பவன்...அதனால் அவன் அனுபவிக்கும் இல்லல்களும் அதிகம் அது வேறு விஷயம்....வெற்றியின் சிறு வயது தோழன் என்பதால் இப்போது வரைக்கும் வெற்றி மட்டுமே சம்பத்துக்கு...

வெற்றி சம்பத் வீட்டின் காலிங் பெல்லை அடித்தான் .... ஒருமுறை அடித்து கதவு திறக்க படாத காரணத்தால் மீண்டும் மீண்டும் அடித்து கொண்டு இருந்தான் அவனுக்கு வேறு வழி இல்லை அடித்து தான் ஆக வேண்டும்...அப்போது தான் வேலை முடிந்து உறங்கி இருப்பான் போல சம்பத் காலிங் பெல் நிறுத்தாமல் அடித்து கொண்டே இருக்க லென்ஸின் மூலம் யார் என்று பார்க்க அங்கே வெற்றி நின்று கொண்டு இருப்பதை பார்த்து வேகமாக கதவை திறந்தான்...

"என்ன டா மாப்பிளை நீ மட்டும் வந்து இருக்க தங்கச்சி எங்கே "...என்று சிரித்த முகத்துடன் கேட்க , அவனின் சட்டையை பிடித்த வெற்றி, " ஏன் டா கல்யாணத்துக்கு வரல"... என்று உரிமையாக கோபப்பட அவனோ, " என்ன டா கல்யாணம் பிடிக்கலை னு சொல்லிட்டு கல்யாணத்துக்கு வரல னு கோபப்படுற".. என்று சம்பத் கூறி சிரிக்க வெற்றியும் "போடா"... என்று அங்கே இருந்த தலையணை எடுத்து அடித்து விட்டு தான் அங்கே அமர்ந்தான்..

சம்பத், வெற்றியிடம் கண்மணியை பற்றி விசாரிக்க அவனோ ஏனோ தானோ என்று அவ காலேஜ் சென்று விட்டாள் என கூறினான்... சம்பத் , "நீ இங்கே வர மாதிரி இருந்தா இங்கேயே தங்கச்சியும் கொண்டு வந்து இருக்கலாமே டா "என கூற வெற்றியோ , "அவளையா ...இங்கேயா உனக்கு அவளை பத்தி தெரியாது டா ...அவள் ஒரு ராங்கி டா"... என்று சலித்து கொண்டான் சம்பத் அவன் கூறுவதை கேட்டு பலமாக சிரித்தான்...

"உனக்கு என்னை பார்த்தா சிரிப்பா இருக்குல".. என கூறிய வெற்றி தான் வந்த நோக்கத்தை பற்றி வெற்றி சம்பத்திடம் கூறியவன் தன்னுடைய சந்தேகங்களையும் அவனிடம் விவரித்தான்..

அதை எல்லாம் கேட்ட சம்பத்தோ,  "கமிஷனருக்கு நடந்தது விபத்து இல்லை...திட்டமிடப்பட்ட விபத்து"... என்று ஒரு குண்டை அழுங்காமல் எடுத்து வெற்றியின் தலையில் இறக்கி கொண்டே அவனுக்கு வேண்டி டீ தயாரித்து கொண்டு இருந்தான்...

வெற்றியோ அவனை அதிர்ச்சியாக பார்க்க , "ஆமாம் இப்போ யார் போனாலும் கமிஷனரை பார்க்க விட மாட்டாங்க அவரை அவங்க கஸ்டடி ல வெச்சு இருக்காங்க "...என்று கூற வெற்றியோ , "என்ன டா சொல்ற ...அவரை கஸ்டடி ல வெச்சு என்ன ஆக போகுது "..என்று வெற்றி கேட்டான்...

"ஆமா டா அவருக்கு மூன்று நாள் முன்னாடி விபத்து ஆகுது...இன்னிக்கு அந்த இரண்டு பேர் ஜெயில்ல செத்து இருக்காங்க எப்படி எங்கேயோ இடிக்கல..அவருக்கு ஏதோ தெரிஞ்சு இருக்கு அதான் அவரை தூக்கிட்டாங்க என்று கூற இப்போ ஆக்ஷன் கமிஷனர் யார் தெரியுமா என்று கேட்ட சம்பத்திடம் அந்த டேனியல் தான்...உனக்கும் அவனுக்கும் தான் ஆகாதே "...என்று எல்லாம் என்னமோ சம்பத் தான் போலீஸ் போல எல்லா விவரங்களை வெற்றிக்கு வாரி வழங்க வெற்றிக்கு டேனியல் என்ற பேரை கேட்டதும் தீயை வாரி இறைத்தது போல இருந்தது...

  டேனியல் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தவன் குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெற்று  அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆக பதவியில் இருப்பவன்...டேனியல்  நண்பனாக இருந்து தன் பொறாமை குணத்தால் வெற்றியின் முதுகில் குத்தியவன் அவனால் தான் சஸ்பெண்ட் வாங்கப்பட்டான் வெற்றி...ஆம் டேனியலுக்கு எப்படி வெற்றி மட்டும் இப்படி இருக்கிறான் அவனுக்கு பதிவு உயர்வும் எல்லாம் கிடைக்கிறது என்று எல்லாம் அவனுக்கு பொறாமை அதுமட்டுமின்றி வெற்றியும் விக்ரமும் சேர்ந்து தான் போலீஸ் ட்ரைனிங் சமயம் எல்லாம் சேர்ந்து தான் இருந்தனர்...வெற்றி அவனை உண்மையான நண்பனாக நினைத்து இருந்தான் ஆனால் அவன் இது போல செய்வான் என வெற்றி எதிர் பார்க்கவில்லை...அவனை நினைக்கும் போது இப்போதும் அந்த நாள் நினைவு வந்து போனது...

டேனியல் ராஜ் கூட இருந்து குழி பறிக்க நினைத்தவன் நினைத்தது மட்டுமின்றி அதை செய்து முடித்தவன்...அவனுக்கு முதல் எதிரியே வெற்றி தான் என்பது வெற்றிக்கு சஸ்பெண்ட் கிடைத்த பின் தான் தெரியும் முதல் சஸ்பெண்ட் என்பது அவன் வாழ்வில் மறக்க முடியாதது...

வெற்றிக்கு ஒரு முக்கிய பிரமுகர் மீது சில காலமாகவே சந்தேகம் அந்த சமயத்தில் தொடர் குழந்தைகள் கடத்தல் நடந்து கொண்டு இருக்க அந்த கடத்தலுக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று ஒரு சந்தேகம் எழ அவருக்கு எதிரான ஆவணங்களை எல்லாம் திரட்டி கொண்டு இருந்தான் அவன் மனதில் கணக்கிட்டது போல் அந்த நபர் தான் முக்கிய குற்றவாளி ஆக இருக்க வெற்றி அதிர்ந்து தான் போனான்...

இந்த விஷயத்தை எல்லாம் ஒரு நாள் டேனியலிடம் விவாதிக்கும் போது அவனாலும் நம்ப முடியவில்லை... "என்ன வெற்றி சொல்ற"... என்று நம்பாமல் தான் கேட்டான்...வெற்றி திரட்டிய ஆவணத்தை எல்லாம் காட்ட டேனியலும் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான்...."டேனி நீ இந்த பைலை உன்கிட்ட வெச்சு இரு நான் நாளைக்கு அவனை கைது செய்துட்டு வரும் போது நீ என்கிட்ட தந்தா போதும் நான் இப்போ ஒரு விழாக்கு போகனும்...இப்போ என் கையில் இருக்கிறது பாதுகாப்பு இல்லை".. என்று கூற டேனியலும் "சரி "..என்று  கூறிஅந்த கோப்பை வாங்கி வைத்தான்...

ஆம் வெற்றி ஒரு முக்கிய பிரமுகரை கைது செய்ய தான் அவருக்கு எதிரான எல்லா ஆவணங்களையும் திரட்டி  அந்த கோப்பில் தான் வைத்து இருந்தான்...மறுநாள் காலை அந்த பிரமுகரை பிடிக்க  கைது செய்ய வெற்றி அந்த பிரமுகர் வீட்டுக்கு சென்றான்... அந்த அந்த பிரமுகரோ ஒன்றும் அறியாதது போல , "எந்த அடிப்படையில்  என்னை கைது செய்யறீங்க ".....என்று கூலாக கால் மேல் கால் இட்டு அமர்ந்து இருந்து கொண்டு கேட்டார்...

வெற்றியோ அவர் செய்த ஈன செயல்களை எல்லாம் பட்டியல் இட, அவர் கேட்ட ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறினான் வெற்றி...

அந்த பிரமுகரும் ஒரு நக்கல்  சிரிப்பினூடே ,"சரி வாங்க போகலாம்"..அவனுடன் காரில் ஏறினார்....வெற்றி கமிஷனர் அலுவலகம் செல்ல அங்கே கமிஷனர் வந்து அந்த முக்கிய நபரை வரவேற்று அமர வைத்தனர்..."என்ன சார் நீங்க இங்க வந்து இருக்கீங்க ஏதாவது விஷயமா"... என்று நரசிம்மன் கேட்டார்...

நலம் விசாரித்து விட்டு , "தம்பி ஏதோ என்னை அர்ரெஸ்ட் பண்ணிட்டு வந்ததா சொன்னாரு எதுக்கு னு கேட்டேன் ...இங்கே வந்தா சொல்றேன் னு சொன்னாரு அதான் வந்தேன்"....என்க

அதை கேட்ட கமிஷனர் நரசிம்மன் வெற்றியை பார்த்து, " என்கிட்ட இதை பத்தி தெரிவிக்காமல் நீ எப்படி இந்த முடிவுக்கு வருவ மேன்... என்ன நினைச்சிட்டு இருக்க...யாரை கேட்டு இவரை நீ அர்ரெஸ்ட் பண்ணிட்டு வந்த"... என்று அந்த முக்கிய பிரமுகரை பற்றி தெரிந்ததால் நரசிம்மன் வெற்றியின் மீது தன் கோபத்தை காட்டினார்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top