நேசம் 20
நேசம் : 20
அன்னமோ இரண்டு வினாடிகள் திக்பிரம்மை பிடித்தது போல் பார்த்தவர் கதவை திறந்து வெச்சிட்டு இரண்டும் பண்ற வேலையை பாரு...யாராவது பார்த்தா என்ன ஆகிறது என்று நினைத்தவர் , "ஹம்க்கும் "...என்று கதவை தட்டி சப்தம் செய்து அப்போது தான் உள்ளே வருவது போல, " அம்மாடி கண்ணு"... என்று அழைத்து கொண்டே உள்ளே வர வேல்முருகனோ குனிந்த தலை நிமிராமல் தலையை சொரிந்து கொண்டு நிற்பதை பார்த்த அன்னம், "ரொம்ப சொரியாதீங்க ..மண்டைல இருக்கிற நாலு முடியும் வெளியே வந்திட போகுது ...நீங்க என்னமோ யோக்கியன் மாதிரி "...என்று முணுமுணுக்க வேல்முருகனோ, " ஆமா போடி என்னை சொல்லல னா உனக்கு தூக்கம் வராது "...என்று கூறி விட்டு உள்ளே செல்ல இவர்கள் வருவதை கண்ட அவர்கள் பதறி துடித்து இருவரும் விலகினர்...
அன்னமோ கண்டும் காணாமலும் உள்ளே செல்ல போக முற்பட, "அயோ பார்த்துட்டாங்களே"... என்ற பதட்டத்திலும் கை கால்கள் நடுக்கம் கொடுக்க யாரின் முகமும் காணாமல் கண்மணி வேகமாக அறைக்குள் ஓடி விட்டாள்..மணியோ அங்கே இருந்த எல்லோரையும் வேடிக்கை பார்க்க தன் மகனும் தன் முகத்தை பார்க்காமல் பதட்டத்தில் தவிர்க்கிறான் என்பதை உணர்ந்த அன்னம், " டேய் மணியா ...நீ என்ன இங்கே வேடிக்கை பார்த்துட்டு இருக்க...குடுத்த பால் இன்னும் குடிக்கலை... என்ன பண்ற நீ போய் குடி போ "...
என்று மணியை விரட்ட மணியும் போய் அதன் இடத்தில் அமர்ந்து சமர்த்து பிள்ளையாக பாலை குடித்தது..
வெற்றியோ என்ன நடந்துச்சு இப்போ என் மானம் போச்சே என்று மனதுக்குள் நினைத்து கொண்டு இருக்க , வெளியே முகத்தை வெளிக்காட்டாமல் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான்...அன்னம் டீயுடன் வந்து , "இந்த டீயை குடிப்பா "...என்று நீட்ட வெற்றியோ தன் தாயை நிமிர்ந்து பார்க்க தாயோ அவன் எதிர்பார்த்தது போல ஒரு விஷம புன்னகையை சிந்தினார்...வெற்றியோ அவரின் விசமத்தை கண்டும் காணாமலும் டீயை வாங்கி குடிக்க தொடங்கினான்..."ஆமா கல்யாணம் வேணாம் னு சொல்றது...இப்போ பண்றதை பாரு"...என்று முணுமுணுத்து விட்டே அவர் நகர்ந்தார்...அது அவன் காதில் தெளிவாக கேக்க , அது அவனின் தன்மானம் சீண்டி விட வீட்டில் உள்ள அனைவரையும் தவிர்த்தான் மணி உள்பட...
அங்கே கண்மணி ஒரு அரை மணி நேரத்திற்கு வெளியே வரவே இல்லை...அவனின் வாசம் அறைக்குள் சென்றும் அவள் உடலில் இருப்பது போலவே உணர்ந்தாள்.....வேகமாக எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்க அவன் கிட்ட போய் கெஞ்சிட்டு நின்னுட்டு இப்போ வந்து கண்ணாடியை பாரு என அவள் முகம் பார்க்கும் கண்ணாடியில் அவளின் மனசாட்சி பதில் அளிக்க அவளும் அவனை தவிர்க்க தொடங்கினாள்...
இருவரின் ஒத்துக்கத்தை கண்ட பெரியவர்கள் இருவரும் இப்போ என்ன இவங்க ஒன்னா சேர்ந்த மாதிரியும் , அப்போ சண்டை வந்த மாதிரில்ல ரெண்டும் சிலிர்த்து கிட்டு சுத்ததுங்க என்று அவர்கள் நினைத்து கொண்டனர்...
இதை எல்லாம் எண்ணி கொண்டு அவள் பயணப்பட்டதில் சென்னையில் அவளின் ஹாஸ்டல் விரைவாக வே வந்தது அங்கே அவளை வாயிலிலே வரவேற்க அவளின் இரு தோழிகள் காத்து கொண்டு இருந்தனர்...ஒருத்தி பாயல் பேரை போலவே வடநாட்டுக்காரி தான் ...அச்சு அசல் கோதுமை உண்பவள் வேறு கோதுமை நிறத்தவள்....அடுத்தவள் ஏஞ்சல் கன்னியாகுமரி யில் இருந்து வந்து இங்கே தங்கி படித்து கொண்டு இருக்கிறாள்...ஏஞ்சலின் அப்பா ஒரு மருத்துவர் ஆனதால் இவளையும் டாக்டர் ஆக்கி பார்க்கவே அவளை படிக்க வைக்க அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தன் தந்தைக்கு வேண்டி படித்து வருகிறாள்...
இவர்கள் மூவரும் இணை பிரியா தோழிகள் மூவரும் பல் மருத்துவத்தை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர்...பாயல் வடநாட்டில் இருந்து வந்ததால் அவளின் அப்பாவி தனத்தை கண்டும் அவளின் குணத்தை கண்டும் கண்மணிக்கு பிடித்து போய் விட விரைவில் மூவரும் ஜோடியாகி விட்டனர்...
காரில் இருந்து இறங்கிய அவளை மற்ற இரு தோழிகளும் மொய்த்து கொள்ள அவர்களின் நட்பை கண்டு சிரித்து பெரியவர்கள் அவர்களின் சம்பாசனையை கேட்டு கொண்டு இருந்தனர் ...இருபக்கமும் நலம் விசாரித்து விட்டு அன்னம் மற்றும் வேல் முருகனை கண்மணி அறிமுகப்படுத்தி வைக்க இளசுகளும் வணக்கம் தெரிவித்து அவர்கள் இருவரையும் சேர்த்து அழைத்து கொண்டு ஒரு ஹோட்டலில் உணவு வாங்கி கொடுத்து அவர்கள் மூவரையும் பத்திரமாக ஹாஸ்டலில் விட்டுவிட்டு அவர்கள் கிளம்பினர்....
அங்கே வீட்டில் யாரும் இல்லாமல் இருப்பதை கண்டு காலையிலே அன்னம் அவனிடத்தில் அவளுக்கு காலேஜ் செல்ல வேண்டும் விட்டுவிட்டு வா என்று கூற அவனோ முடியாது எனக்கு வேலை இருக்கு என்று கூறி அதிகாலையிலேயே விறைப்பாக நாயை இழுத்து கொண்டு வெளியே சென்று விட்டான்..
அன்னம் தலையில் அடித்து கொண்டு, "இது எல்லாம் திருந்தாத கேஸ்... நாயை இழுத்துட்டு போறதை பாரு...இவனுக்கு மொதல இந்த சஸ்பென்ஸன் முடியனும் ...வீட்டுக்குள்ள உக்கார்ந்து நம்ம உயிரை வாங்கிறது"... என்று புலம்பி கொண்டே அன்னம் மற்றும் வேல்முருகன் அவள் மறுத்தும் அவளை தனியே விட மனமில்லாமல் கூடவே வருகிறோம் என்று கூறினர்...
வீட்டுக்கு அவர்கள் வரும் நேரம் அவனின் மடியில் மணி அமர்ந்து இருக்க அவன் டிவி பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து முகத்தை திருப்பி கொண்டு சென்றார் அன்னம்... அவருக்கு கட்டின மனைவியை பாதுகாப்பாக கொண்டு போய் விடாமல் இருக்கும் இவனுக்கு என்ன அப்படி என்ன அலுவல் டிவி பார்ப்பதா என்று கடுப்புடன் திரிந்து கொண்டு இருந்தார்...வேல்முருகனுக்கு வருத்தம் இருந்தாலும் அவன் விசயத்தில் தலை இட கூடாது என்று ஒதுங்கி விட்டார்..
தன் தாய், தந்தையின் முக மாறுதலை கண்டாலும் காணாதது போல டிவியை மாற்றி கொண்டே வெறித்து கொண்டு இருந்தவன் கண்களுக்கு ஒரு செய்தி சேனலை கண்டவன் அதில் ஒளி பரப்பி கொண்டு இருந்த செய்தியை கண்டு அதிர்ச்சி ஆனான்...
" ஒரு மாதத்திற்கு முன் இருபது பெண்களை கடத்திய கும்பலில் சிறையில் அடைத்து வைக்க பட்ட இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் ..எலக்ட்ரிக் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டனர்"..என்பதே அந்த செய்தி ஆகும்...
அதை கண்டவனுக்கு அதிர்ச்சி அது எப்படி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதே அவனின் சந்தேகம்...மேலும் அன்றைய தினம் இருவர் மட்டுமே பிடிபட்டு இருக்க மீதம் இருவர் பிடிப்படவே இல்லை...போலீஸ் துறையோ இருவரை பிடிக்க தனிப்படை அமைத்து இருக்கிறது என்ற விஷயம் மட்டும் செய்திகளில் உலா வந்தது...ஆனால் இது நாள் வரை அந்த தனிப்படையினர் அந்த கும்பலை பிடித்தார்களா என்பது சந்தேகமே... இப்படி இருக்க அதில் முக்கிய நபர்கள் இருவரும் தற்கொலை செய்தது வேறு அவனுக்கு சந்தேகத்தை கொடுக்க தன் போனை எடுத்து நரசிம்மனுக்கு அழைத்தான்...
அவரின் போன் கிடைக்கவே இல்லை தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்றே வர வெற்றியின் மனதில் ஏதோ சரி இல்லை என்றே தோன்றியது... நேரே அவன் அறைக்கு சென்றவன் அவனுக்கு வேண்டிய உடைகளை எடுத்து வைத்து கொண்டு தன் தாய் தந்தையிடம் "சென்னை போறேன் ".....என்று மட்டும் கூறி விட்டு வெளியேறினான்...
நேசம் தொடரும்....
