நேசம் 19
அத்தியாயம் : 19
நேசமடி நேசம்
கண்மணி , அன்னம் மற்றும் வேல்முருகன் ஒரு டாக்ஸி பிடித்து முதலில் கண்மணியின் வீட்டிற்கு சென்றனர்...அங்கே உள்ள அனைவரையும் பார்த்து விட்டு அங்கே சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியேறும் முன் கண்மணி நூறு தடவை ஜானகியை பார்த்து கொள்ளுமாறும் மருந்துகளை மிக சரியான நேரத்தில் கொடுக்குமாறும் அனுவிடம் சொல்லி விட்டு தான் கல்லூரி நோக்கி பயணம் ஆனாள்...
தன் மகள் செல்வதை பார்த்த ஜானகி மற்றும் விஜயராஜனுக்கு மகள் திருமணம் ஆன ஒரு வாரத்திலே மகள் பொறுப்பானவள் ஆக மாறி விட்டாளா என அதிசயமே....ஆம் எப்போதும் இல்லமால் இந்த முறை இவ்வளவு பொறுப்பாக மாறி அவர்களுக்கே அறிவுரை கூறும் மகளை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தார்..ஆம் திருமணம் முடிந்தால் நல்லதோ, கெட்டதோ தன் மக்கள் செய்யும் சிறு மாற்றம் கூட திருமணங்கள் ஆனவுடன் தான் என பெற்றவர்கள் நினைப்பர்..அதே போன்றதொரு மனநிலையில் தான் ஜானகி இருந்தார்...
என்ன இருந்தாலும் மகளிடம் ஒரு தாயாய் சொல்ல வேண்டிய கடமைகளை கூறினார்..."கண்மணி அம்மா சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கு ல பார்த்து நடந்துக்கோ.. அம்மா பேரை கெடுத்திடாதே அங்கே போனா படிப்பே கதி னு கெடக்காமல் மாப்பிளையையும் கவனிச்சுக்கோ"... என்று கூற சரி சரி என பூம்பூம் மாடு போல தலையை மட்டும் ஆட்டினாள்...என்னமோ ஜானகி க்கு தன் மாப்பிளை வந்த நேரம் என் பொண்ணை சரி செய்து விட்டாரே என நம்பிக்கையில் இருந்தார்...பாவம் அவருக்கு தெரியவில்லை அவரது மருமகனின் நிலைமை...
அவர்களின் கார் சென்னை நோக்கி பயணம் ஆகி கொண்டு இருக்க கண்மணியோ என்ன இவனை காலையில் இருந்தே காணோம் ...கூட அந்த நாயை கூட காணோம் என்ற கேள்வி எழுந்து அவள் மனதை அரித்துக் கொண்டே இருந்தது....அவன் எங்கே போனால் எனக்கு என்ன என்று அவள் வெளிப்பார்வைக்கு நினைத்தாலும் உள்ளே அவன் எங்கே சென்றான் என்ற கேள்வி எழுந்தது உண்மை...
கண்மணிக்கு வெற்றியை பற்றிய நியாபகம் வர இரண்டு நாள் முன் நடந்த சம்பவமும் இணைந்து அவள் கண் முன்னே வந்து போனது...
இரண்டு நாள் முன் காலை கண்மணி எழுந்து குளித்து முடித்து விட்டு ஈரமான தலையை துவாலை கொண்டு துடைத்து கொண்டே துவாலைக்குள் தன் முடியை கட்டி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்...யாரும் இல்லா அந்த வீட்டில் வெற்றி ஜிம் க்கு சென்று இருக்க அன்னம் மற்றும் வேல்முருகன் கோவிலுக்கு சென்று இருந்தனர்...அந்த வீட்டின் எதிரெதிர் துருவங்கள் ஆன கண்மணியும் மணியும் நேருக்கு நேர் தங்கள் பார்வையை பரிமாறி பார்வையாலேயே ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர்...
அப்போது கண்மணியின் வாய் எப்போதும் போல சும்மா இருக்கமால் ஒரு படி மேலே போய், " என்ன பார்க்கிற கண்ணை நோண்டி புடுவேன் எல்லாம் அவனை சொல்லனும் உனக்கு வந்த வாழ்வை பாரேன்..உனக்கு னு ஒரு பெட், உனக்கு எல்லாம் ஒரு தனி இடம் ....வாழ்வு தான் ...எப்படியோ உன்னை துரத்திட்டேன் இனி அவனையும் உன்கிட்டேயே தள்ளிடறேன் நீயே வெச்சுக்கோ...அவன் எல்லாம் ஜிம் க்கு போய் என்ன செய்ய போறான்...சும்மா தானே இருக்கான்".....என்று வம்பு பேசி கொண்டே வெற்றியை இது தான் சாக்கு என்று திட்டி கொண்டே இருந்தாள் கண்மணி பொறுமையாக கேட்டு கொண்டு இருந்த மணி வெற்றியை பற்றி அவள் கூறுவதை கேட்ட மணி ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து, குரைத்து மேலேயும் கீழேயும் தாவி குதித்து அவளை பார்த்து தான் கோபத்தை காட்ட...
கண்மணியோ , "என்ன முறைக்கிற...உனக்கு எல்லாம் பால் கேக்குதா"... என்று எல்லாம் மேலும் வளர்த்து கொண்டே போனாள்.... சில சமயங்களில் மட்டுமே கட்டி வைத்து இருக்கும் மணியை பெரும்பாலும் வீட்டில் அவிழ்த்தே வைத்து இருப்பர் ...ஆனால் கண்மணி வந்தது முதல் மணியை விலங்கு இட்டு பூட்டி வைத்து இருக்க அது வேறு மணிக்கு கடுப்பை கொடுத்து இருந்தது...
இந்நிலையில் தான் இவள் வம்பு செய்து கொண்டு இருக்க ட்ரெயின் செய்யப்பட்டு இருக்கும் மணி ஒரே இழுவையில் அதன் சங்கிலியை அவிழ்த்து விட்டது...இவளிடம் பாய்ந்து ஓடி வந்தது...இதை அவள் எதிர்பார்க்கவில்லை என அவள் முகமே காட்டி கொடுத்தது... அவள் கண்டு உள்ளது எல்லாம் தெருவில் வளரும் நாய்கள் மணியின் ஆவேசம் அவள் எதிர்பார்க்கவில்லை...
மணி குரைக்கும் சத்தம் கேட்டே பயந்தவள் மணி அதை கட்டி வைத்து இருக்கும் சங்கிலியை அவிழ்க்க மணியின் ஆக்ரோஷத்தை கண்டவள் பயந்து ஓட தொடங்கினாள் "காப்பாத்துங்க ...காப்பாத்துங்க..."என்று கூற கத்தி ஓடி கதவை திறக்க போக அதே சமயம் மிக சரியாக ஜிம் இல் இருந்து வீட்டுக்கு வந்த வெற்றி கதவை திறக்கவும் இவள் ஓடி வந்து இவன் மீது மோதவும் சரியாக இருந்தது...
தன் மேல் ஓடி வந்து மோதியவளின் இடையோடு கை கோர்த்து அவளை தாங்கி பிடிக்க கண்மணி அவனை கட்டி கொண்டு விடாமல் , "என்னை விடாத பிடிச்சுக்கோ... பிடிச்சுக்கோ "...என்று அவனை கூறிக்கொண்டும் அவனை கட்டி கொண்டும் அவனின் கால் மீது ஏறி நின்று அவனின் கழுத்தில் கை கோர்த்து தன்னை காப்பாற்றும் படி கெஞ்ச அதற்குள் ஓடி வந்த மணியும் அவனிடம் குரைத்து கொண்டே அவளை பற்றிய குற்ற பத்திரிக்கை யை வாசித்தது...
அவளை பிடித்து பிடியை விடாமலே அவளை பார்த்து வெற்றி முறைக்க , "அவளோ நான் ஒன்னும் செய்யல உன் நாய் தான் என் மேல பாய்ஞ்சு வந்துச்சு"... என்று நாயை பார்த்து முறைத்து கொண்டே வெற்றியிடம் கூறினாள்...வெற்றிக்கு நன்றாக புரிந்தது இவள் மீது தான் தவறு என்று...ஆனால் அவனால் திட்ட கூட முடியவில்லை அவள் அவனை பிடித்த பிடி அது போல ...
வெற்றிக்கு நிலைமையோ மோசமாகி இருந்தது... அவளை மணியிடம் இருந்து காப்பதற்காகவே அவளின் இடையை பிடித்து இருந்தாலும் இவளோ மணியின் மீதுள்ள பயத்தின் மீது அவனின் கால் மீதே ஏறி கழுத்தை கட்டி கொண்டு இருக்க அவளின் நெருக்கம் அவனை ஏதோ செய்ய அவனின் முகத்தின் அருகே அவளின் முகமும் அவளின் மூச்சு காற்று அவனின் செவிமடலை தீண்ட அப்போது தான் குளித்து வந்து இருக்கும் அவளின் கூந்தல் முழுவதும் துவாலைக்குள் குடி கொண்டு இருக்க அதில் இருந்து வெளியே வந்த நீர் அவளின் முதுகில் பட்டு தெறித்து அவளின் இடையை பிடித்து இருக்கும் அவனின் கையில் பட அவளின் நெருக்கம் தந்த குளுமை அவனை இம்சிக்க அவளை மேலும் நெருக்கினான்...
கண்மணிக்கும் ஜிம்மில் இருந்து அப்படியே வியர்த்த உடலோடு வந்தவனுக்கு அவளின் குளுமை எப்படி ஒரு இனிமையை அளித்ததோ பிறந்தது முதல் ஆணின் நெருக்கத்தை உணராத அவளுக்கும் அவனின் வாசம் இம்சித்தது... அவளால் பிடியை விட்டு விலகவும் முடியாமல் அந்த இறுக்கம் எனக்கு எப்போதும் வேண்டும் என நினைக்கும் அவளின் உடலுக்கு என்ன பதில் அளிக்க என தெரியாமல் கண்களை இறுக மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள்...
இவர்களின் போஸை பார்த்து கொண்டு இருந்த மணியோ சகிக்க முடியாமல் கத்திக் கொண்டே இருக்க அது இவர்கள் காதில் கேட்டால் தானே....அதற்குள் கோவிலுக்கு சென்று வீட்டுக்குள் நுழைந்த அன்னம் மற்றும் வேல்முருகனின் கண்களுக்கு விருந்து ஆகினர் வெற்றியும் கண்மணியும்.....
வேல்முருகன் மற்றும் அன்னம் வாய் பிளந்து அந்த காட்சியை காண வேல்முருகன் தலையை சொரிந்து கொண்டு நின்றார்...அவரால் வேறு என்ன செய்ய இயலும்...இருந்தாலும் அவர் மனதில் பிடிக்கலை கல்யாணம் வேணாம் னு சொல்லிட்டு இப்போ இப்படி நிக்கிறான் என்ற கேள்வி எழாமல் இல்லை...அவர் வயதுக்கு இது எல்லாம் வெளியே கூற முடியுமா...
