நேசம் 18
நேசம் : 18
அன்னமோ நிறுத்துவதாக இல்லை என்பதை உணர்ந்த வேல்முருகன் , "ஹே போதும் டி அந்த புள்ளைக்கு காது வலிக்க போகுது...உன் பசங்க பெருமை பேச அந்த பொண்ணு தான் கிடைச்சுதா நீ போ மா"... என்று அனுப்பி வைத்தார்...அன்னமோ எனக்குன்னு பேச ஒரு ஆள் கிடைச்சா உங்களுக்கு மூக்கு வேர்த்துடுமே என்று அவரை தாளித்து கொண்டு மனதை ஆற்றினார் அன்னம்...
அவனின் அறைக்குள் சென்ற கண்மணிக்கு அங்கு கண்ட காட்சி அவளுக்கு தலை சுற்றியது...ஆம்...மணி ஒய்யாரமாக அவனின் படுக்கையில் அவன் அருகில் படுத்து இருக்க அதை பார்த்த அவளுக்கு அப்படியே அந்த பெட்டோடு இருவரையும் வெளியே துரத்தி விட்டால் என்ன என்று தான் தோன்றியது...
தோன்றியதை எல்லாம் நடத்த முடியாது அல்லவா உள்ளே நுழைந்து கதவை அடைத்தாள்...பின் அவன் புறம் திரும்பி அவனை கேலி செய்ய எண்ணி, "நீ மனுஷன் ங்க கூட எல்லாம் சேர மாட்டியா"... என்று கூறி கொண்டே , "ஹே போ ஹே போ"... என்று மணியை விரட்டினாள்...
மணியோ நீ யார் எங்க இரண்டு பேருக்கும் இடையில் அது மட்டும் இல்லாமல் இது என்னோட என்னோட பெட் என்பது போல குரைக்க மணியின் சத்தம் வேறு அவளுக்கு பயத்தை கொடுக்க, " இதோ பாரு முதலில் உன்னோட நாயை வெளில போக சொல்லு "...என்று மீண்டும் எச்சரித்தாள் கண்மணி...
அவள் சாதாரணமாக கூறினாலே அவன் செய்ய மாட்டான் இதில் வேறு அவளின் எச்சரிக்கை சுத்தமாக செய்ய மாட்டான் ...வெற்றி அவளிடம் , "போக சொல்லமாட்டேன் என்ன டி பண்ணுவ இல்லாட்டி என்ன பண்ணுவ "என்று எகிற
கண்மணிக்கு மூண்ட கோபத்தில் இரு டா மவனே..திமிரா பேசுற மவனே என நினைத்து , "அத்தை அத்தை பயமா இருக்கு காப்பாத்துங்க ...காப்பாத்துங்க"... என்று சும்மாவே கத்தினாள் கண்மணி...
இவள் எதுக்கு இப்படி கத்துகிறாள் என புரியாமல் வெற்றியும் மணியும் பார்க்க அதற்குள் அவர்களின் அறை தட்டப்பட்டது..."டேய் வெற்றி கதவை தொற டா... அம்மாடி கண்மணி என்ன ஆச்சு டா..." என்று எல்லாம் வெளியே அன்னம் மற்றும் வேல்முருகன் பதறி துடித்து கொண்டு இருந்தனர்...
இவளோ , "ஐயோ போ போ "...என்று கத்தி கொண்டே கதவை திறந்து, " அத்தை பயமா இருக்கு"... என்று நாயை காட்டி கூற நாயும் அவனும் ஒரே படுக்கையில் படுத்து கிடப்பதை பார்த்த அன்னம் , "ஹே மணி ஓடு ஓடு ...இனி இந்த ரூம்க்குள்ள கால் வை உன்னை பேசிக்கறேன்"... என நாயை விரட்டி விட்டார்...ஒரு பாவமும் செய்யாத மணி அன்னம் விரட்டியதில் ஓடி போய் அதனுடைய இடத்தில் போய் படுத்து கொண்டது...
"ஏன் டா வெற்றி அதுக்கு தான் அறிவில்லை உனக்குமா கண்மணி தான் பயப்படுறா ல "...என்று சலித்து கொண்டு மகனை திட்ட வெற்றியோ அன்னத்தையும் கண்மணியையும் ஒரு பார்வை பார்த்து, " இவளை ரொம்ப நம்புறீங்க மா ரூம்க்குள்ள என்ன நடந்தது தெரியாமல் நீங்க பேசிட்டு இருக்கீங்க"... என்று வெற்றி குறைப்பட்டு கூறினான்...
வேல்முருகனோ, " தம்பி எதுவேனா ஆகிட்டு போகுது அவ பழகிற வரைக்கும் மணி அங்கேயே இருக்கட்டும் பா "...என்று கூறி விட்டு இதுக்கு மேல் நின்றால் நம்ம மரியாதையை மகன் மருமகள் முன்னே கெடுத்து விடுவான் என அறிந்த வேல்முருகன் நைசாக கழண்டு கொண்டார்...அவனோ தன் முன்னால் ஓடி போகும் தந்தையை பார்த்து ஏதாவது சொல்லி ஓடிட்டே இருக்கிறீங்க இருங்க ஒரு நாள் என்கிட்ட மாட்டுவீங்க என்று நினைத்து கொண்டே மணி இருக்கும் இடம் நோக்கி வெற்றி சென்றான்....
அன்னம் தன் தலையில் அடித்து கொண்டே , "கருமம் அந்த பொண்ணு முன்னாடி என் மானத்தை வாங்குறான்...கல்யாணம் பண்ணி வைச்சாவது திருந்துவான்னு பார்த்தா இப்போதும் நாய் பின்னாடி போறான் பாரு...நீ வா மா அவன் கிடக்கிறான் "....என்று புலம்பி கொண்டே கண்மணியை அழைத்து சென்றார்...
அவளோ எப்படி துரத்தினேன் னு பார்த்தியா என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்து கொண்டே அவருடன் நடந்து சென்றாள்... இரு டி ஒரு நாள் எங்க கிட்ட உனக்கு இருக்கு வந்த உடனே உன் வேலையை காட்டிட்ட ல நானும் இதுக்கு பதில் தருவேன் என்று கருவி கொண்டான் வெற்றி...
கண்மணிக்கு அந்த வீட்டில் வெள்ளந்தி மனிதர்கள் ஆன தன் மாமியாரை யும் மாமனாரையும் மிகவும் பிடித்து இருக்க சரவணன் மட்டும் கண்மணியின் முகம் கூட பார்க்காமல் நழுவி கொண்டு இருந்தான்...அது ஏன் என சரவணனுக்கே புரியவில்லை... அது அவனுக்கு அனுவை அவன் காதலிப்பதாலோ இல்லை கண்மணி அனுவின் அக்கா ஆனதாலோ தன் அண்ணனின் மனைவி என்றோ ஏதோ ஒன்று சரவணனுக்கு கண்மணியிடம் இருந்து அவனை ஒதுக்கி நிறுத்தி இருந்தது....அதற்காக அவளை கண்டு கொள்ளாமல் எல்லாம் இருக்க மாட்டான்...அதற்காக அவளிடம் குலைந்து கொண்டும் இருக்க மாட்டான்....சாதாரணமாக இருப்பான் கண்மணிக்கும் அவனை கவனித்து கொண்டே இருக்க சமயம் இல்லாததாலும் அவள் கண்கள் முழுவதும் வெற்றியின் மீதே இருப்பதாலும் அவள் அவனின் ஒத்துக்கத்தை கவனிக்க வில்லை...
மொத்தத்தில் அந்த வீட்டில் எல்லோரையும் கண்மணிக்கு பிடித்து இருக்க அவளுக்கு பிடிக்காத இரு நபர்கள் இருந்தனர்... ஒன்று அந்த வீட்டின் மூத்த பிள்ளை வெற்றி இரண்டாவது அவன் வளர்த்தும் அந்த வீட்டின் மூன்றாவது மகன் என இவர்களால் கொண்டாடப்படும் மணி...
அவளுக்கு அந்த நாயை கண்டது முதல் பிடிக்கவில்லை அதும் நாய்க்கு போய் மணி என பெயர் வைத்து இருக்க அதும் அவளை கேலி செய்யவே நாய்க்கு இந்த பெயரை வைத்து இருப்பதாக அவள் எண்ணினாள்...அவனுக்கு மணியை பிடிப்பதால் என்னவோ கண்மணிக்கு மணியை பிடிக்கவில்லை...
தன் தாயின் முந்தானை யை பிடித்து கொண்டு திரிபவளை பார்த்து வம்பு செய்ய நினைத்த வெற்றி, " மணி மணி கம் ஹீயர் "...என அவள் வெற்றியை தாண்டி போகும் போது அழைக்க கண்மணி திரும்பி பார்க்கும் முன் மணி வெற்றியின் மடியில் அமர்ந்து இருக்கும்...அந்த காட்சியை பார்க்க பார்க்க அவளுக்கு பொங்கும் அவன் இல்லா சமயத்தில் அவனை என்னவெல்லாம் கூறி திட்ட வேண்டுமோ அதை எல்லாம் மணியை திட்டி மனதை ஆற்றி கொள்வாள்...
கண்மணியும் மாமியாரும் பழகிய ஒரு சில நாட்களில் லே மிகவும் நெருக்கமாகி விட்டனர்...கண்மணி திருமணத்திற்காக பத்து தினங்களே விடுமுறை எடுத்து இருப்பதால் இன்னும் மூன்று நாட்களில் கண்மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டும்...அவள் படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதமே இருக்க அதும் அவளுக்கு ட்ரைன்ங் பீரியட் அவள் சென்றே ஆக வேண்டும்...
அவளும் வெற்றியின் வீட்டில் இருந்த இந்த ஒரு வாரத்தில் மாமியாருக்கு தகுந்த மருமகளாக இருந்தாள்... குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கணவனை வளைக்காமல் அவள் மாமியார் , மாமனார் ரை வளைத்து விட்டாள் என்றே கூற வேண்டும்...ஒரு நாள் கண்மணி மற்றும் வெற்றி தம்பதியினர் குல தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து விட்டு வந்தனர்...
அவள் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது வெற்றி எங்கோ வெளியில் சென்று இருக்க அப்பாடா தப்பித்தோம் இனி இவன் முகத்தை பார்க்க தேவை இல்லை என மகிழ்ச்சியுடன் கண்மணி சென்னை செல்ல ஆயத்தம் ஆனாள்...சரவணன் பெங்களூர் சென்று இருக்க அவளுடன் சென்னைக்கு துணைக்கு வருவதாக கூறி அன்னம் மற்றும் வேல்முருகன் வெற்றிக்கு முன்பு ரெடி ஆகி காத்து இருந்தனர்...
அவள் எவ்வளவோ கூறி பார்த்தும் அவர்கள் கேக்காத காரணத்தினால் அவளும் விட்டு விட்டாள்.... ஆனால் சென்னையில் அடுத்த ஆப்பு கண்மணிக்கு காத்து இருக்கிறது என தெரியாமல் கண்மணி தன் உடமைகளை எடுத்து வைத்து கொண்டு இருக்கிறாள்...
நேசம் தொடரும்...
