Share:
Notifications
Clear all

நேசம் 17

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 17

நேசமடி நேசம்

   விடியல் யாருக்கும் காத்து இராமல் பறவைகளின் ரீங்காரத்திலும் உறவினர்களின் சலசலப்பிலும் விடிய அந்த சத்தத்தில் துயில் கலைந்த வெற்றி தன் அருகில் படுத்து தனக்கு முதுகு காட்டி படுத்து இருக்கும் கண்மணியை வெறித்துக் கொண்டு இருந்தான்....மொத்தம் ஒரு ஐம்பது கிலோ தான் இருப்பாள் ஆனால் வாய் மட்டும்  அவளின் எடையில் பாதி இருக்கும் போல...என்ன பேச்சு பேசுறா மரியாதை னா எங்கே இருக்குன்னு கேப்பா போல...  என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே அவர்கள் படுத்து இருக்கும் அறையின் கதவு தட்டப்பட்டது...

அவள் எழுந்து கொள்வாளோ என நினைத்து ஒன்றும் அறியாதது போலவும் உறங்கி கொண்டு இருப்பது போல வெற்றி தன் கண்களை மூடி கொள்ள கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தவளுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை.... அதும் அவன் அருகில் படுத்து இருக்கும் அவனை கண்ட போது தான் அவளுக்கு எல்லாம் அவள் மூளைக்குள் மீண்டும் பதியப்பட அதற்கு எல்லாம் அவகாசம் இல்லை என்பது போல கதவு தட்ட பட்டு கொண்டே இருந்தது....

வேகமாக எழுந்தவள் தன் உடையை எல்லாம் கலைத்து விட்டு பூ எல்லாம் பிய்த்து அவன் மீதும் கட்டில் மீது எல்லாம் விதறி விட்டு வகிட்டில் வைத்து இருந்த குங்குமத்தை அளித்து விட்டு அவள் நெற்றியில் வைத்து இருக்கும் ஸ்டிக்கர் பொட்டை எடுத்து இதை என்ன செய்யலாம் என யோசித்து கொண்டே அவனை பார்க்க அவனோ உறக்கத்தின் பிடியில் இருப்பதை உணர்ந்தவள் அவள் இட்டு இருந்த பொட்டை எடுத்து அவனின் சட்டையில் வேகமாக ஒட்டினாள்... இதை எல்லாம் செய்து தானும் தமிழ் பொண்ணு தான் என்றும் தமிழ் படம் பார்த்து வளர்ந்தவள் தான் என்பதை அவனுக்கு நிரூபித்து கொண்டு இருந்தாள் கண்மணி...அவனுக்கு கண்களை திறக்காமலே அவள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதை தன் மனக்கண்ணில் கண்டு கொண்டு தான் இருந்தான்.... அவன் உறங்குவது போல நடித்தாலும் அவன் புருவம் கண்மணியை எண்ணி புருவம் மெச்சுவது போல உயர தான் செய்தது...

எல்லா சடங்குகளும் கழிந்த பெண் போல வெட்கப்பட்டு கொண்டே கதவை திறப்பது போல கதவை கண்மணி திறக்க அங்கே நின்ற அவளின் அத்தை கண்மணியின் நலுங்கிய ஆடையையும் அவளின் முகத்தையும் பார்த்து திருப்தி பட்டு  சிரித்து கொண்டே , "போய் குளிச்சிட்டு வா மா... இனி குளிக்காமல் வெளியே வர கூடாது மா ...சீக்கிரம் குளிச்சிட்டு வா வந்து மாப்பிளையை எழுப்பி காபி கொடு"... என்று கூறி விட்டு அவர் செல்ல அவர் சென்றால் போதும் என்று அவரின் முகம் பார்க்காமலேயே வெட்கப்பட்டு இருக்கும் அவளை தூரே இருந்து ஒரு சில பெண்களும் ஜானகியும் காண ஜானகியின் மனது குளிர்ந்து போனது ...தன் மகள் பெண்ணாக பிறந்ததில் முழுமை அடைந்து விட்டால் என எண்ணி அந்த தாயின் மனம் பூரிப்பு அடைந்தது....

அவர்களின் தலை மறைந்ததும் கதவை அடைத்தவள் தப்பிச்சோம் என்பது போல ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு வெற்றியை பார்க்க அங்கே வெற்றியின் கையில் அவள் அவன் சட்டையில் ஒட்டிய பொட்டை பார்த்து கொண்டே அவளையும் ஒரு பார்வை பார்த்து விட்டு குளிக்க சென்றான்...அவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டதா என நினைத்த கண்மணி அவன் முன்னால் அசடு வலிந்து கொண்டு இருந்தாள்....பின்ன அவனிடம் நேற்று இரவு வீராப்பு பேசியவள் இன்று இந்த வேலை செய்தால் அவன் பார்க்காமல் என்ன செய்வான்...ஒரு வழியாக அவள் வீட்டில் இருந்து கிளம்பி புதுமண தம்பதிகள் வெற்றியின் வீட்டை அடைந்தனர்...

அன்னத்திற்கு சொல்லி மாளவில்லை அவர் கண்களுக்கு அவரின் மருமகளாய் வந்த அவரின் மகளை காண காண தெவிட்ட வில்லை...அதும் அவர்கள் பிளாட்டில் இருப்பதால் எதிர் வீட்டு ஆட்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்றே இருமுறை ஆலம் எடுத்து விட்டு மருமகளை உள்ளே விட்டார்...

பெண் பிள்ளைகள் இல்லாத அன்னத்திற்கு பெண் குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம் ஆக இருக்க வெற்றிக்கு வேலை கிடைத்தது முதல் நச்சரித்து கொண்டு இருக்கிறார்...அவன் பிடி கொடுக்காமலே இருக்க இறுதியில் கண்மணி கிடைக்க இனி விட்டால் மகனை பிடிக்க முடியாது என்று நினைத்து அவர் வீட்டின் மூத்த மகளை வரவேற்றார்...

அன்னம்," வா மா கண்ணு ...என்ன அழகா இருக்க தாயி ...கண்ணு பட்டுடும் னு தான்...அதுலயும் என் மருமக டாக்டர் ல அதான்  இரண்டு தடவை சுத்தி போட்டேன்"... என்று பாசமாகவும் பெருமையாகவும் பேச

கண்மணிக்கு அவரை மிகவும் பிடித்து போனது... வேல்முருகனோ தன் பங்கிற்கு, "அந்த பொண்னை இப்படி தான் நிக்க வெச்சிட்டு பேசிட்டு இருப்பியா நீ உள்ளே போய் ரெஸ்ட் எடு மா...அதுவே படிக்கிற பொண்ணு நீ போ மா...உனக்கு என்ன வேணுமானாலும் நீ எங்ககிட்ட கேளு மா...இது உன்னோட வீடு தான்...தயக்கமே வேண்டாம்"... என்று சிரித்து கொண்டே கூற அவளோ வேகமாக தலையை ஆட்டினாள்...

இவர்கள் மூவரின் சம்பாசனையை கண்ட வெற்றி மட்டும் சரவணனுக்கு வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது ...அதில் அன்னம் டாக்டர் என்று  கண்மணியை கூறி இருக்க பெருமை தாங்க முடியாமல் வெற்றியை ஒரு எக்களிப்புடன் பார்த்தாள் கண்மணி...

அவனுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் என்றே தோன்றியது...."ஆமா இவ பெரிய டாக்டரு பல்லை புடுங்கிறவ னு சொல்லுங்க'... என்று முணுமுணுத்து கொண்டே வெற்றி அவன் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டான்...அவன் கூடவே என்னமோ புது பெண் போல மணியும் அவன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டது...அவனுக்கு வெற்றி எங்கே தன்னை விட்டு சென்று விட்டான் என அவனிடம் தன் வருத்தத்தை தெரிவிக்க அவன் பின்னால் ஓடியது...

அதை பார்த்த கண்மணியின் முகம் மாற அதை கண்ட அன்னமோ, " நீ கண்டுக்காத மா அவன் அப்படி தான் கிறுக்கு பய என்ன பேசனும் னு தெரியாது...என்ன பண்ணனும் னு தெரியாது...அவனுக்கு பொறாமை மா நீ டாக்டர் ல அதான் "...என்று தன் மருமகளை தாங்கி பேச கண்மணி அவரின் அன்பில் விழுந்து விட்டால் என்றே கூற வேண்டும்...

அதோடு கண்மணி நிறுத்தாமல், "அத்தை அந்த நாய் "...என்று இழுக்க, " அதுவா மா அது உன் புருஷன் வளர்க்கற நாய் மா ...பேரு மணி...அவனை விட்டு இருக்கவே இருக்காது...இப்போ கூட பாரு அவனை பார்த்ததும் ஓடறதை "...என்று கூறி சிரிக்க கண்மணிக்கு சிரிப்பு வரவில்லை என்றாலும் சிரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்..

மேலும் நிறுத்தாமல் அன்னம் , வெற்றியின் புராணம் பாடி கொண்டு இருக்க அவளோ கேட்டு கொண்டு இருந்தாள்...அவளால் கேக்காமல் இருக்க முடியவில்லை இருந்தாலும் கேட்டு தானே ஆக வேண்டும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top