நேசம் 16
நேசம் : 16
அவனின் முகத்திலே அவளின் முகமும் உரச அங்கே மூக்கும் மூக்கும் தடவி கொள்ள சூடான ரத்தம் பாய்ந்து வந்து முகத்தை சூடாக்க முதன் முதலாக ஆணின் வாசத்தை கண்மணியும் பெண்ணின் மென்மையை வெற்றியும் உணர உதடும் உதடும் இலேசாக தொட்டும் தொடாமலும் உரசி சென்றது...கரண்ட் ஷாக் கொடுத்தது போல ஒரு மின்னல் இருவரின் உடலிலும் பாய்ந்து ஓட, அதிலும் வெற்றியின் ஒரு கை அவனின் மார்பில் இருந்தது...
அவள் விழுந்த விசையில் அவளின் அங்கங்கள் பருவம் எய்த பின் அவள் அல்லாது வேறு யாரும் தொட்டு தீண்டிடாத அவளின் வதனங்களை அவனின் கை தீண்ட தன் மீது வந்து மோதிய அவளின் வதனங்களை தொட்டும் அதன் மென்மையை உணர்ந்தும் விட்டான் வெற்றி ....இதுவரை அவன் வாழ்வில் காணா பொக்கிஷத்தை, அவன் வாழ்வில் இது போல நடக்கும் என நினைத்து கூட பார்க்க முடியாத மென்மையை அவன் கைகள் உணர...அவனுக்கு புது வித அவஸ்தையை கொடுத்தாள் அவனின் மனையாள்...
அவனின் மற்றொரு கரமோ அவள் வந்தது முதல் நோட்டம் பார்த்து கொண்டு இருந்த அவளின் இடுப்பில் ஒரு அழுத்தம் கொடுத்து அவனின் விரல்கள் அவளின் இடையை வருடி கொடுக்க சத்தியமாக அவனால் அதற்கு மேல் முடியவில்லை...அவளும் அவளை அலங்காரம் செய்த பெண்களின் கேலி களை கேட்டு இருந்தவளோ ஒரு நிமிடம் அவனின் வருடலையும் அவனின் வாசத்தையும், அவனின் அருகாமையும் சுகித்தாள் என்றே கூற வேண்டும் அவனும் சுகித்து கொண்டு தான் இருந்தான் அதும் தன் கண்களை மூடிய படி அவனின் கரங்கள் அவளின் வெற்று இடையில் அத்து மீற தொடங்கி இருக்க வெளியே சில உறவினர்களின் பேச்சு சத்தம் கேட்க அதை உணர்ந்த இருவரும் அடித்து பிடித்து விலகினர்...
இருவரது மோனநிலையில் இருந்து முதலில் வெளியே வந்தவள் தான் என்ன அபத்தம் செய்ய இருந்தோம் என நினைத்து அவனை பார்க்க அவனோ அவளின் முகத்தையே பார்க்காமல் அந்த பக்கம் திரும்பி படுத்து கொண்டு இருந்தான்....இருந்தும் அவன் கட்டிலை விட்டு எழவில்லை....
அவனை பார்த்து கொண்டே வேகமாக தன் உடையை சரி செய்து தான் என்ன செய்ய இருந்தோம் அவன் தன்னை என்ன செய்தான் என்பதை நினைவு கூர்ந்தாள்... அவளுக்கு ஏதேதோ பாகங்கள் அவன் தீண்டியது போல இருக்க பொறுக்கி சைடு கேப் ல என்ன பண்ணிட்டான் பாரு என்று அவன் மீது மீண்டும் கோப முலாம் பூசியவள் இத்தனை நடந்தும் அவள் அடங்கினால் தானே, " எதுக்கு என்னோட பெட் ல படுத்து இருக்க "....என்று மீண்டும் வம்பை வளர்க்க அவனோ ஒன்றும் கூறாமல் திரும்பி படுக்க போனான்... ஆனால் அவள் நிறுத்துவதாக இல்லை..."நீ பெட் ல படுத்துட்டா நான் எங்கே படுக்கிறது இறங்கு "...என்று மறுபடியும் தொடங்கி வைத்தாள் ...
அவனோ எழுந்தவன் அவள் அருகில் மெல்ல நடந்து வந்தான்...அவன் நடந்து வர அவன் தீண்டிய பாகங்கள் எல்லாம் ஏதோ செய்ய மெல்ல அவள் அறியாமல் பின்னால் சென்றாள்...அவன் முன்னே நடக்க அவள் பின்னே சென்றாள்...
அவளின் பதட்டத்தையும் அவள் எதனால் பதட்ட படுகிறாள் என அறியாதவனா வெற்றி...அவள் பின்னால் செல்வதை பார்த்து அவனுக்குள் சிரிப்பு தான் மேலிட்டது மனதுக்குள்ளோ , "இவ்ளோ தானா டி நீ நான் கூடிய நீ பெரிய ராங்கி னு நினைச்சிட்டேன் னே "...என்று நினைத்து கொண்டே அவள் அருகில் வந்தவன் அதற்குள் அவளோ கதவின் ஓரத்தில் ஒன்றி இருக்க அவளின் உடலோடு உடல் மீண்டும் உரசும் படி தன் கையை தூக்க கண்மணியோ இவன் என்னை ஏதோ செய்து விடுவான் என்றே பயப்பட கண்களை இறுக மூடி கொண்டாள்...
அவனோ அவளை நெருங்கி நின்று தன் கையை உயர்த்தி கதவின் தாழ்ப்பாளை திறக்க போக தன்னை ஏதோ செய்ய தான் போகிறான் என நினைத்து பயந்து கண்ணை மூடி இருந்தவள் கண்களை திறந்து கதவை அவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று கண்களை உயர்த்தி மேலே பார்க்க அவனின் செய்கையை பார்த்ததும், " என்ன பண்ற யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க".. என்று வாய் விட்டு கேட்டே விட்டாள் கண்மணி...
அவனோ , "கேக்கட்டுமே "....என்று நக்கல் குரலில் பதில் அளிக்க அவளோ தன் அருகே நின்று கதவை திறக்க முயற்சி செய்பவனிடம் இனி பேசி பிராயோசனம் இல்லை என நினைத்து மார்பில் கை வைத்து அவனை தள்ளி விட்டாள்....
அவளால் ஒரு அடி மட்டுமே அவளால் அவனை நகர்த்த முடிந்தது...அவனோ என்ன என்பது போல பார்க்க கண்மணியோ, "என்ன நீ பாட்டுக்கு கதவை திறக்கிற யாராவது பார்த்தா தப்பா நினைச்சுட்டாங்க னா"... என்று கோபத்துடன் கேட்டாள்... அவள் கூற வந்தது என் அருகில் நெருங்கி நின்று கொண்டே கதவை இந்த நேரத்தில் திறந்தால் யாராவது நம்மை பார்த்து விட்டாலோ என்று எல்லாம் நினைத்து தான் அவள் கூறியது...
அது மட்டுமின்றி சற்று முன் நடந்த நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்து அவளை குழப்பி விட்டு இருக்க ஒரு மாதிரி மன நிலையில் தான் அவள் இருந்தாள்...
அவனோ கூலாக , "நினைக்க என்ன இருக்கு உன் தாத்தா கிட்ட நான் பேசிட்டு வரேன் "...என்க
கண்மணியோ தாத்தா என்றதும் பதட்டத்தில் , "என்ன பேச போற தாத்தா கிட்ட அதும் இந்த நேரத்தில் "....என்று கேட்டு அவனின் பதிலை எதிர்பார்த்து புரியாமல் குழம்பி நின்றவளை பார்த்து கொண்டே , "உங்க பேத்தி ரூம்ல்ல படுக்க இடம் இல்லை னு சொல்லிட்டா ...அதான் உங்க ரூம்ல்ல படுக்கலாம் னு வந்தேன் னு சொல்ல போறேன் "....என்று கூறிக்கொண்டே கதவை திறக்க போக
அவன் கூறியதை கேட்டவளோ அவன் அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்தவள் அவனுக்கு முன்பு கதவின் அருகில் போய் நின்று, " போய் படுத்து தொலை இந்த சமயத்துல என் மானத்தை வாங்கி தொலைக்காத".. என்று முகத்தை அஷ்டகோணல் ஆக்கி கூறினாள்... வெற்றியோ அவளை பார்த்து ஒரு நக்கல் சிரிப்புடன் அப்படி வா டி ராங்கி என நினைத்து வெளியே அவளை வெறுப்பு ஏற்ற , " சரி நீ கெஞ்சி கேக்கறதனால அதும் நீயே உன் வாயால சொல்றதனால படுக்கிறேன்...வேணும்னா நீயும் படுத்துக்கோ ...நான் உன்னை மாதிரி இல்லை "...என்று அவளை பார்த்து கேலி குரலில் கூறியவன் சென்று அவள் கண் முன்பே படுத்து கால் மேல் கால் இட்டு கால்லை ஆட்டி கொண்டே விசில் அடித்து படுத்து கொண்டான் வெற்றி....
அவனை பார்க்க பார்க்க கண்மணிக்கு கோபம் கிளர்த்து கொண்டு வர நேரே அவன் அருகில் வந்தாள் அவனோ என்ன தாத்தாவை கூப்பிட்டடா என்பது போல கதவை பார்க்க அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை யே என்னை இப்படி படுத்துறானே என நினைத்து , "ரொம்ப சந்தோசப்படாத...என் கிட்ட சிக்குவ நீ"... என்று வாய் விட்டே கூறினாள் கண்மணி...
அவனோ அவளின் கோபத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் ," அதை அப்போ பார்த்துக்கலாம் இப்போ லைட் ஆஃப் பண்ணு "...என்று கூறி அவளை ஆஃப் ஆக்கினான் வெற்றி..
வெற்றி மீது வெறி ஏற அவனை ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறோமே என்ற கோபம் வர அங்கே சுண்ட காச்சிய பாலை கண்டவள் இவனுக்கு எல்லாம் பால் ஒரு கேடா என நினைத்து அந்த பாலை குடித்து தன் கோபத்தை தணித்தவள் இன்னிக்கு நீ ஜெயிச்சுட்ட னு நினைக்காத நாளைக்கு முதல் உனக்கு இருக்கு டா என்று கருவி கொண்டே அந்த பெட்டின் ஓரத்தில் படுத்து கொண்டாள்...
விடியல் வெற்றிக்கு எப்படி இருக்கும்???..கண்மணி அவளின் வேலையை காட்டுவாளா....
நேசம் தொடரும்.....
