Share:
Notifications
Clear all

நேசம் 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 15

நேசமடி நேசம்

  

    இரு மனங்கள் விருப்பம் இல்லாமல் இணைந்த அவர்களின் வாழ்க்கையில்  முதல் நாளை சந்திக்க உள்ளனர்...வெற்றி அவள் அறையில் அவளுக்காக இல்லை அவளை தவிர வேறு யாரும் அங்கு வருவதற்கு இல்லையே அதனால் காத்து கொண்டு இருந்தான்...அந்த அறையில் அவர்களின் முதல் உரையாடல் நினைவில் வந்து போனது அதிலும் அந்த அறையில் உள்ள போட்டோக்களை மீண்டும் பார்த்து கொண்டு இருந்தான்...அந்த அறை முழுவதும் போட்டோக்கள் ஆக்கிரமித்து இருந்தன..எல்லாத்தையும் பொறுமையாக பார்த்து கொண்டு இருந்தவன் கண்களில் கட்டில் தென்ப்பட்டது பூக்களால் அலங்காரம் செய்ய பட்டு இருந்த அந்த கட்டிலின் ஒரு பக்கம் இனிப்புகளும் மறுபக்கமாக பழங்களும்,  பூக்கள் என அந்த அறையையே தங்கள் சுகந்தத்தால் நிரப்ப தன் நாசியில் அந்த சுகந்தத்தை நிரப்பியவன் , இது எல்லாம் என்ன பாடுபட போகுதோ அந்த ராங்கிக்காரி வந்தா என்ன செய்ய போறாளோ என  நினைத்தவன் அந்த அறையை மீண்டும் ஒரு முறை திமிராக பார்த்து அவளை நினைத்து ஒரு கேலி புன்னகையை சிந்தினான்....பின் அவளை பற்றி சிந்தித்து கொண்டே அவளின் படுக்கையில் அமர்ந்து இருந்த வெற்றி காலை நேரமாக எழுந்ததால் கண்கள் சொருக சிறிது நேரத்திலே உறங்கி இருந்தான்...

அங்கே ஜோராக கண்மணிக்கு அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது....அதிகம் கணம் இல்லாத சாப்ட் சில்க் புடவை உடுத்தி மல்லிகை பூ சூடி எளிய அலங்காரமும் அதே சமயம் அவளிடம் சில கேலி பேச்சுக்களும் அங்கே அவளை அலங்காரம் செய்து கொண்டு இருக்கும் திருமணமான பெண்களிடம் இருந்து ஒரு சில டிப்ஸ்கள் எல்லாம் இலவசமாக வாரி வழங்கி கொண்டு இருந்தனர்...அவர்களுக்கு தெரியாதே அங்கே நடக்க போவது முதல் இரவு அல்ல திருமணமானவுடன் நடக்க போகும் அவர்களின் முதல் போர் என்று...அவர்களோ அவளிடம் லைசன்ஸ் இல்லாமல் ஓபன் ஆக உரையாடிக் கொண்டும் அவளை கேலி செய்தும் சிரிக்க கண்மணியின் அவஸ்தையோ சொல்லி மாளாது...

அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை சிரிக்கவும் முடியவில்லை வெக்கப்படாமல் இருக்க முடியவில்லை
..வெக்கப்படவும் முடியாத ஒரு நிலைமையில் அவள் இருக்க அவளால் அங்கே ஒரு நிமிடம் இருக்க முடியவில்லை... அதற்குள் அலங்காரம் ஒரு வழியாக முடிய விட்டால் போதுமென்று வேகமாக எழுந்து விட்டாள் கண்மணி...

அவளின் செய்கையை கண்ட மற்றவர்கள் கொல்லென சிரித்துக் கொண்டே  ,"உனக்கு அதுக்குள்ள அவசரமா...மாப்பிளை கூட இவ்வளவு அவசர பட மாட்டாரு"..... என்று கேலி பேச கண்மணியோ அவர்களின் கேள்வியில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என புரிய கண்மணியும் அசடு வலிய சிரித்து வைத்தாள்....

அதன் பின் நல்ல நேரத்துக்குள் அவளிடம் சுண்ட காய்ச்சிய பாலை அவள் கையில் திணித்து அறைக்குள் கொண்டு போய் விட்டனர்...வரும் வழி எல்லாம் அவளை பாடாய் படுத்தி தான் கூட்டி கொண்டு வந்தனர்...அனைவரின் சிரிப்பு ஒலியும் கதவு திறக்கும் ஓசையும் கேட்ட வெற்றி கண்களை திறந்து பார்த்தான்.... உறக்க கலக்கத்தில் இருந்தவன் கண்களுக்கு கண்மணி தேவதையாக ஒளிர்ந்தாள் போல திறந்த கண் மூடாமல் பார்த்து கொண்டு இருந்தான்...

மயில் வண்ண  புடவை உடுத்தி பூ சூடி பால் தம்பளர் உடன் கண்மணி நிற்க அவனின் கண்களோ அவளை ஆராய்ந்து கொண்டே இருந்தது...அதிலும் அந்த மயில் வண்ண நிற புடவையின் மடிப்பில் சிறிதளவு ஒரு பளீர் நிற இடை தென்பட வெற்றியின் கைகளில் அந்த வெண்ணிற இடையின் வலுவலுப்பை மீண்டும் உணர்வது போல இருக்க மீண்டும் தொட்டு பார்த்து விட மாட்டோம் மா என்று ஒரு ஏக்கம் அவனுள் எழ தன் கைகளை தடவி பார்த்து கொண்டான்...அதிலும் அவன் கண்கள் வேறு அவளின் இடையில் இருந்து வெளியே வருவேனா என்று இருக்க கண்களை மாற்றாமல் அங்கேயே பார்வையை பதித்து இருந்தான்....

அவளை உள்ளே விட்ட பெண்கள், " கதவை சாத்திக்கோ டி அவசரத்துல அப்படியே போய்டாத "...என்று கேலி செய்து சிரித்து விட்டே அங்கிருந்து சென்றனர்...

அவர்கள் சென்றதும் கதவை அடைத்த கண்மணி ஒரு கையில் உள்ள தம்பளருடன் திரும்ப அவனின் பார்வை தன்னை மேய்வதை தன் மூன்றாம் கண் மூலம் அறிந்தவள் அதிலும் அவன் பார்வை அவளின் இடையில் இருப்பதை உணர்ந்தவள் புடவையை ஒரு கையால் சரி செய்து கொண்டே முறைத்தாள்..."பார்க்கிறான் பாரு பொறுக்கி கண்ணை நோண்டனும் "...என்று மனதில் திட்டி கொண்டே வந்தவள் என்ன இவன் இப்படி பார்க்கிறான் நம்ம ட்ரெஸ் சரி இல்லையோ என நினைத்து ஒன்றிற்கு இரு தடவை சரி பார்த்து கொண்டே வந்தாள் கண்மணி வெற்றிவேல்...

அவள் முறைப்பதை கண்டதும் அவனுக்கு புரிந்து போனது அவள் ஏன் முறைக்கிறாள் என்று இருந்தாலும் அவளிடம் எல்லாம் என்னால் ஒப்பு கொள்ள முடியாது என்பது போல திமிராக அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவளை கண்டுகொள்ளாமல் இருக்க அவன் அருகே வந்தவளோ , அவன் என் இடுப்பை பார்த்ததே தவறு அதிலும் என்னோட படுக்கையில் படுத்து இருக்கிறாயா என்று கோபத்துடன் அவன் அருகே வந்தவள் தன் கையில் இருக்கும் பால் தம்பளரை அருகில் உள்ள டேபிளில் வைத்தவள் அவனை சொடக்கு இட்டு அழைத்தாள்... அவள் சொடக்கு இட்ட அவள் அழைத்ததில் அவனின் உள்ளே கோபம் வரும் நரம்பு வேகமாக துடிக்க அதும் அவள் நிறுத்தாமல் அவன் முகத்துக்கு நேரே அவள் கைகளை கொண்டு சொடுக்கு இட்டு கொண்டே இருக்க  "பொறுக்கி "...என முணுமுணுத்தாள் அவனுக்கு அதுக்கு மேல் பொறுமை இல்லமால் கோபம் வந்து அவளின் சொடக்கும் கையை பிடித்து விட்டான்...

அவனின் பிடி தான் அவளுக்கு தெரியுமே அதனால், " விடு டா என்னை"... என்று கூற அவனோ விடாமல் அவள் கையை இறுக பற்றி இருந்தான்..."விடு டா விடு டா பொறுக்கி "என்று மீண்டும் கத்த... அவளின் கையை பிடித்து அழுத்ததுடன் வெற்றி இழுத்தான்...அவனின் ஒரு இழுவையிலே படுக்கையில் படுத்து இருந்தவன் மீது பூமாலையாக விழ எதிர்பாராமல் விழுந்தவள் ஒரு நொடி நிலை தடுமாறி விட்டாள்... அதற்குள் எல்லாமே நடந்து விட்டது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top